வெற்றியே மெய்
தோல்வியோ பொய்
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை
தேர்தலில் வெல்லும்
தோல்வி அடையும் எனப் பொய் பேசுகிறார்கள்
நம்பாதீர்கள் அஞ்சாதீர்கள்
சைவத்தின் முன்னெடுப்பை முடக்க முயல்கிறார்கள்
பொய்யர் கூறும் மெய்யே தோல்வி
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்
மெய்யாகக் கற்பிக்கும் பொய்யரின் கூற்று கூற்றுவன்.
சிவனை வழிபடுவதாகக் கூறுவர்
மாறாக வேறு தெய்வங்களை உள்ளார்ந்து வழிபடுவர்
சைவ மேம்பாட்டை விழைவதாகக் கூறுவர்
மாற்று நெறியாருடன் கை கோர்ப்பர்.
சைவத்தை அழிப்பதை நோக்கமாகக் கொள்வர்
மெய் கூறுவதாக நடிக்கும் பொய்யரை நம்பாதீர்
தம் காதற் பெண்டிரின் ஆசைக்கு இணங்கித்
திருக்கேதீச்சரத் திருக்கோயில் அலுவலக அறைக்குள்
கோபுர வாயிலில்
திட்டமிட்டே பல மாதங்களாகச்
சிலுவையைத் தொங்க விட்டோர் மெய்யரா? பொய்யரா?
தமிழ்தேசிய சைவ மக்கள் பேரவை தேர்தலில் தோற்க வேண்டும் எனப் பொய் பேசுபவர் இத்தகைய பொய்யரே.
பாம்புக்கு அஞ்சேன்.
பொய்யருக்கு அஞ்சேன்
சிவனை வழிபடுவதாகப் போக்குக் காட்டுபவரைக் கண்டால் அஞ்சுவேன்.
மாணிக்கவாசகர் சொல்கிறார்.
புற்றில்வா ளரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல்
கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
இங்ஙனம்
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
No comments:
Post a Comment