Monday, May 25, 2020

மன்னார் நகரம் பிர்தேச செயலகம்

இயேசு அழைக்கிறார் 
கிறித்தவத்துக்கு மதம் மாறுங்கள்

நாங்கள் மதம் மாற மாட்டோம்
மாறவே மாற மாட்டோம்

ஆத்திரேலியாவின் தெற்கிலுள்ள தாசுமானியாத் தீவின் பழங்குடிகள், அறுபது எழுபது ஆண்டுகளாக இவ்வாறு தொடர்ந்து மதம் மாற மறுத்து வந்ததால் மதம் மாற்றிகள் பழங்குடிகள் அனைவரையும் சுட்டுக் கொன்றனர்.

இன்று பழங்குடிகள் அங்கு இல்லை 
அவர்கள் மொழியில்லை 
அவர்கள் பண்பாடு இல்லை 
அவர்கள் இருந்த இடத்தில் வெள்ளையர்கள் ஆங்கிலேயர்கள் கிறித்தவர்கள் வாழ்கிறார்கள்.

மனித வரலாற்றில் மிகச் சோகமான வரலாறு தாசுமானியா இனப் படுகொலை வரலாறு.

500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னார்த் தீவு முழுவதும் சைவர்கள். வேற்று மதத்தவர் ஒருவர்கூட இல்லை.

முதலில் மன்னார்த் தீவுக்குப் போர்த்துக்கேயப் படைகள் வந்தன. யாழ்ப்பாண அரசை வீழ்த்தும் நோக்குடன் வந்தன.

அவர்களைத் தொடர்ந்து சரியாக 478 ஆண்டுகளுக்கு முன்னர், புன்னைக்காயலில் இருந்தும் தூத்துக்குடியிலிருந்தும் வந்தவன் சவேரியார் (Francis Xavier).

மன்னார்த் தீவுச் சைவர்களை மதம் மாறுமாறு சவேரியார் வலியுறுத்தினான். 

பெரும்பாலோர் மறுத்தனர். ஒருசிலர் சோற்றுக்கும் சீலைக்கும் மதம் மாறுவதாகக் கூறினர். புறத்தே மதம் மாறியதாகக் காட்டினர். வீட்டுக்கு வந்ததும் சைவசமயத்தை கடைப்பிடித்தனர். மிக மிகச் சிலரே விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே முழுமையாக மதம் மாறினர்.

மதம் மாற மறுத்தோரையும்
மதம் மாறியதாக் கூறிப் பின்னர் சைவ நெறிகளைப் பின்பற்றியோரையும்

உதைத்தனர் சுடுமணலில் புரட்டினர்
பதைக்கப் பதைக்க உடலை
வதைத்தனர் வண்டில் சில்லில் கட்டி உருட்டினர்
சிதைத்தனர் மன்னார்த் தீவுச் சைவ வம்சத்தை.

ஏற்கனவே இந்தியாவின் கோவா மாநிலத்தில் இவ்வாறு உதைக்கவும் சிதைக்கவும் வதைக்கவும் புதைக்கவும் சவேரியார் ஆணை பெற்றிருந்தார். 

போத்துக்கேய மன்னன் அவருக்கு ஆணை வழங்கி இருந்தார். சவேரியாரின் கொடுமைகளை விளக்கி Goa Inquisition என்ற தலைப்பில் நூற்றுக்கணக்கான வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவின் கோவாவைப் பின்பற்றி இலங்கையின் மன்னார்த் தீவிலும் சவேரியார் உதைத்தான் வதைத்தான் சிதைத்தான் புதைத்தான். இது Mannar Inquisition. 

மன்னார்த் தீவின் கிழக்கே அண்மையில் கண்ட புதைகுழி எச்சங்கள் 400 ஆண்டுகளுக்கு மேலாகப் பழமையானவை என ஆய்வுகூடங்கள் தெரிவித்ததாகச் செய்திகள் வந்தன. Mannar Inquisition புதைகுழிகளோ?

மதமாற்றச் செய்தியை மன்னார்த் தீவுச் சைவர்கள் யாழ்ப்பாண அரசுக்குத் தெரிவித்தனர். அக்காலத்தில் ஆண்ட முதலாம் சங்கிலியன் படை அனுப்பினான்.

மதம் மாற மறுத்த, மதம் மாறுவதாகப் போக்குக் காட்டிய சைவர்களைக் காப்பாற்றினான். மதம் மாறிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரையும் சவேரியாருடன் தூத்துக்குடியிலிருந்தும் இருந்தும் புன்னக்காயல் இருந்தும் வந்த உதவியாளர்களையும் பாதிரிமார்களையும் சங்கிலியன் படை வெட்டி வீழ்த்தியது. சவேரியார் படகு வழியாகத் தூத்துக்குடிக்குத் தப்பியோடினான்.

இறந்தவர்களைச் சைவ சமய முறையில் சங்கிலி மன்னன் எரித்தான்.

100% சைவர் வாழ்ந்த மன்னார்த் தீவு.
இன்று 15% சைவக் குடும்பங்கள்

மன்னார் தீவுப் பிரதேச செயலகப் பிரிவின் சமயப் பகுப்பைப் பாருங்கள்.
மன்னார் மொத்தக் குடும்பங்கள் 20,362.
மன்னார் சைவக் குடும்பங்கள் 3025 = 15%
மன்னார் கிறித்தவக் குடும்பங்கள் 9976 = 49%
மன்னார் முகமதியக் குடும்பங்கள் 7356 = 36%
மன்னார் புத்தக் குடும்பங்கள் 5

மன்னார் மக்கள் தொகை மொத்தம் 72,343
மன்னார் சைவ மக்கள் தொகை 9666
மன்னார் கிறித்தவக் மக்கள் தொகை 33358
மன்னார் முகமதிய மக்கள் தொகை 29308
மன்னார் புத்த மக்கள் தொகை 11

மன்னார் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.6
மன்னார் சைவக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.2
மன்னார் கிறித்தவக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.3
மன்னார் முகமதியக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 4.0
மன்னார் புத்தக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 2.2

மன்னார்ப் பிரதேச செயலகப் பிரிவின் நிலதாரிப் பிரிவுகளில் சைவக் குடும்பங்கள்

ம/48 தலைமன்னார்வடக்கு 42
ம/50 தலைமன்னார்துறைமேற்கு 42
ம/51 தலைமன்னார்துறைகிழக்கு 145
ம/52 தலைமன்னார் 150
ம/53 கட்டுக்காரன்குடியிருப்பு 22
ம/54 துள்ளுகுடியிருப்பு 40
ம/55 பேசாலைமேற்கு 192
ம/56 பேசாலைதெற்கு 12
ம/57 பேசாலைவடக்கு 9
ம/58 சிறுதோப்பு 225
ம/59 பெரியகரிசல் 7
ம/60 ஓலைத்தொடுவாய் 49
ம/62 தோட்டவெளி 8
ம/63 எருக்கலம்பிட்டிமேற்கு 43
ம/68 தாராபுரம்மேற்கு 19
ம/69 தாராபுரம்கிழக்கு 4
ம/70 தாழ்வுபாடு 13
ம/71 பட்டித்தோட்டம் 214
ம/72 எழுத்தூர் 408
ம/73 தெற்கணை 119
ம/74 ஏமில்நகர் 34
ம/75 சாவற்காடு 59
ம/76 பனங்காட்டுக்கொட்டுமேற்கு 59
ம/77 பனங்காட்டுக்கொட்டுக்கிழக்கு 3
ம/78 சின்னக்கடை 81
ம/79 புறக்கோட்டை 32
ம/80 பெரியகடை 61
ம/81 சோனகர்தெரு 182
ம/82 உப்புக்குளம்வடக்கு 171
ம/83 உப்புக்குளம்தெற்கு 45
ம/85 பள்ளிமுனைமேற்கு 10
ம/86 திருக்கேதீச்சரம் 172
ம/87 பெரியநாவல்குளம் 14
ம/88 நாகதாழ்வு 67
ம/89 நீலசேனை 51
ம/90 கள்ளிக்கட்டைக்காடு 7
ம/91 புதுக்கமம் 48
ம/92 உயிலங்குளம் 40
ம/93 மாதோட்டம் 73
ம/94 வண்ணாமோட்டை 18
ம/95 உயிர்த்தராசன்குளம் 19
ம/96 பரப்புக்கண்டல் 16

3025 சைவ குடும்பங்கள்
2020 நாடாளுமன்றத் தேர்தலில்
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் வெற்றிக்கு இவர்களே நாற்றங்கால்கள்.

வீடு வீடாகச் செல்வோம்
திருநீற்றுப் பையுடன் செல்வோம்

ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களுக்கு நெற்றிகளில் நீறிடுவோம்.
தேர்தல் சின்னமான கோடாரியின் படம் கொடுப்போம்
ஐங்கரன் சர்மா தலைமையிலான வேட்பாளர் பட்டியலைக் கொடுப்போம்.
வாக்கு விருப்பு வாக்கு என வாக்களிக்கும் முறைமையை விளக்குவோம்.
இவ்வாறு ஒரு முறையல்ல மூன்று முறைகள் ஒவ்வொரு வீட்டுக்கும் போவோம் 
சைவ வாக்குகளைத் திரட்டுவோம்

அடாத்தாக அரச காணியில் குகைக்கோயில் அமைப்பு
அடாத்தாகப் பாலாவின் கரைகள் நிலங்கள் ஆக்கிரமிப்பு
உலூர்தம்மாள் தேவாலயத்தைக் கட்டிய அமைப்பு
திருக்கேதீச்சர வளைவு உடைப்பு

மன்னார்த் தீவுப் பிரதேச செயலகப் பிரிவில் நிகழ்ந்தவை. 478 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சவேரியாரின் Mannar Inquisition நிகழ்வுக்கு முன்னோட்டமா?

மீண்டும் உதைக்காமல் 
பதைபதைக்க வதைக்காமல் 
உயிரைச் சிதைக்காமல் 
சைவர்களை உயிரோடு புதைக்காமல்
காப்போம்.

தமிழ்தேசிய சைவ மக்கள் பேரவையின் வேட்பாளர்களுக்கு 
மன்னார் தீவு முழுவதிலும் உள்ள சைவ வாக்குகள் வெற்றிக்கு வழி கோலும்.

நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை

No comments: