Monday, May 25, 2020

துணுக்காய் பிரதேச செயலகம்

அடக்க முடியாதவர்கள்
நாம் யார்க்கும் குடியல்லோம்
அடங்க மறுத்தவர்கள்
அடங்காப் பற்றினர்
வன்னி நிலத்தவர்.

மலைகள் குன்றுகள் மிகக்குறைவான நிலப்பரப்பு
ஆறுகள் நீரோடைகள் அங்கங்கே மழை கால வெள்ளத்தை கடலுக்குள் இட்டுச் செல்லும்.

மண்டைக்கல் ஆறு 
பாலி ஆறு 
பறங்கி ஆறு 
நாய் ஆறு 
இவை நான்கும் வன்னிக் குன்றுகளின் மழை வெள்ளத்தை வட கடலுக்குள் அடித்துச் செல்வன. கோடையில் நீரோடையாவன.

புகழ்பெற்ற சைவ மன்னன் 2150 ஆண்டுகளுக்கு முன் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்தவன் எல்லாளன்.

பாலி ஆற்றுக்கு குறுக்கே தடுப்பணை கட்டினான். நீரைத் தேக்கினான். பாலி வாவி எனப் பெயரிட்டான் மேற்கே முழங்காவில் வரை தோட்டங்களில் உணவு உற்பத்தியைப் பெருக்கினான். (1909 Henry Parker, Ancient Ceylon, ,695 pp.; C S Navaratnam, Vanni and the Vanniyas).

பாலி வாவியின் இன்றைய பெயர் வவுனிக்குளம். நீர்ப் பாய்ச்சல் தோட்டங்களகல் சோழர் காலத் தொல்லியல் கூறுகள் இடிந்த கற்களாக வெளிப்பாடுகளாக நிறைந்து காணப்படும் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவு.

1990களில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் போர்க்கால ஒதுக்கிடமாக இருந்த மல்லாவி. இன்று தோட்டக்காரனும் தேன் வேட்டைக்காரனும் வாழ்விடமாகக் கொண்ட ஊர். நெடுந்தீவு மக்கள் குடியேறிய பெருநிலம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒன்று துணுக்காய்.

இலங்கை
வடக்கு மாகாணம்
முல்லைத்தீவு மாவட்டம்

2517 சகிமீ பரப்பளவு.
136,623 மக்கள் தொகை.
44120 குடும்பங்கள்

75% சைவர்
11% கிறித்தவர்
6% முகமதியர்
8% புத்தர்

633 ஊர்கள்
136 நிலதாரி பிரிவுகள் ,
6 பிரதேச செயலகப் பிரிவுகள்
4 பிரதேச சபைகள்.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 20 நிலதாரிப் பிரிவுகள்.

2018 அறிக்கைக்கு அமைய  12466 மக்கள் தொகை. 4055 குடும்பங்கள் இவர்களில் 11389 சைவர் 3719 குடும்பங்களாக.

91% சைவக் குடும்பங்கள். 9% கிருத்தவ குடும்பங்கள். முகமதியரோ புத்தரோ துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் வாழ்வதில்லை.

போருக்கு முன்பு துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் கிறித்தவர்கள் மிக மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள்.

இன்று அவர்கள் தொகை 9% ஆக உயர்ந்ததன் காரணம் மதமாற்றிகளே. மழைக்காலக் காளான் போல் போருக்குப் பின் வந்த சூழ்நிலையில் மதமாற்றிச் சபைகள் துணுக்காய் எங்கும் குடிகொண்டன. ஒவ்வொரு நிலதாரிப் பிரிவிலும் பலரை மதம் மாற்றினர்.

துணுக்காயின் பதினைந்து நிலதாரிப் பிரிவின் பெயர்களும் ஒவ்வொன்றிலும் உள்ள சைவக் குடும்பங்களின் எண்ணிக்கையும்.

துணுக்காய் 232
கல்விளான் 176
உயிலங்குளம் 86
யோகபுரம் மேற்கு 147
மல்லாவி 295
யோகபுரம் நடு 208
திருநகர் 199
புற்றுவெட்டுவான் 91
அமைதிபுரம் 95
அம்பலப்பெருமாள்குளம் 100
ஆலங்குளம் 206
தேராங்கண்டல் 269
யோகபுரம் கிழக்கு 125
புகழேந்தி நகர் 171
பாரதி நகர் 218
அனிஞ்சியன்குளம் 609
தெண்ணியான்குளம் 107
பழையமுறிகண்டி 45
ஐயன்கன்குளம் 217
கோட்டைகட்டியகுளம் 123
மொத்தம் 3719.

ஒவ்வொரு வீடாகச் செல்வோம்
ஒவ்வொரு கதவாகத் தட்டுவோம்
ஒவ்வொரு வாக்காளரையும் சந்திப்போம்

ஒவ்வொரு வீட்டின் படியிலும் ஏறும் பொழுது
தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சியின் வாக்கு எண்ணிக்கையும் ஏறும்.

வீடு அடங்கலைத் தளத்தினர்
ஊர் அடங்கலைத் தளர்த்தினர்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள் குறித்தனர்

புறப்படுவோம் தேர்தல் களம் நோக்கி
புறப்படுவோம் துணுக்காய் நோக்கி 
எல்லாளன் கட்டிய குளம் நோக்கி 
எல்லாளன் அமைத்த சிவ பூமியின் வாக்காளர் வளம் நோக்கி
3719 வீடுகளுக்கும் செல்வோம் 

அனைத்து வாக்குகளையும் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சியின் வேட்பாளருக்குப் பெற்றுக் கொடுப்போம்.

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை

No comments: