Sunday, July 12, 2020

மன்னார் அழிப்புகள் 2009க்குப் பின்

2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம்முடிந்தபின்னர் மன்னாரில் நடந்த கத்தோலிக்க பாதிரிகளால் தூண்டப்பட்ட மத அடிப்படைவாத வன்முறைகள் பின்வருவன. கேதீச்சர  வளைவுடைப்புஒரு Isolated ஆன சம்பவமல்ல. 1. 2013 ல் பொன்தீவு கண்டலில் புலிகளால்விரட்டப்பட்ட முஸ்லீம்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முற்பட்டபோது அத்திட்டத்தைதடுக்க பாதிரிகள் மார்க்கஸ், சுரேஷ் ஆகியோர் கத்தோலிக்கஊரையே கூட்டிவந்து நானாட்டான் பிரதேச செயலகத்தை கல்லெறிந்து தாக்கினார்கள்.அப்போதைய பிரதேச செயலாளர் காஷ்மீர் சந்திரய்யா தன்னை தாக்க எறிந்த கல்லை இப்போதும்நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறார். வழக்கு எதுவும் பாதிரிகளுக்கெதிராகபதியப்படவில்லை. 2. 2010ல் நறுவிலிக்குளத்திலிருந்த Assemblyof God  கிறிஸ்தவ குடிசைத்தேவாலயம் கத்தோலிக்க பாதிரிகளின் தூண்டுதலால்எரிக்கப்பட்டது.3. 2016ல் புதுக்குடியிருப்பு அரசகாணிகளில் குடியேற்றப்பட்ட யாழ்ப்பாணம் நெல்லியான் ஊரைச்சேர்ந்த தாழ்த்தப்பட்ட சைவகுடும்பங்களின் 2 குடிசைகள் கத்தோலிக்கரால்கொழுத்தப்பட்டு குடியிருப்பு தடுக்கப்பட்டது. 4. 2013ல் அச்சன்குளத்திலிருந்தகாளிகோவில் கத்தோலிக்கரால்  தாக்கப்பட்டு  அழிக்கப்பட்டது. 5. 2014ல் அரிப்பு முத்துமாரியம்மன்கோவில் கத்தோலிக்கரால் சேதமாக்கப்பட்டது. 6. கற்கிடந்த குளத்தில்வசித்துவந்த கந்தசாமி குடும்பத்தை மார்க்கஸ் பாதிரியார் செய்வினை சூனியம்செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஊரைவிட்டே கலைக்க முயன்றார். 7. எருவிட்டான் வழிபாட்டுஇடத்திலிருந்த சூலத்தை நானாட்டான் பங்குத்தந்தையின் உத்தரவில் இன்பம் என்றகத்தோலிக்கர் புடுங்கி அகற்றினார்.8. 2017ல் நானாட்டான்-புதுக்குடியிருப்பு பிள்ளையார் கோயில் சூழலிலிருந்த விநாயகர் சிலை கத்தோலிக்கரால்உடைக்கப்பட்டது. 9. நறுவிலிக்குளம் இந்துஇடுகாட்டுக்கு பாதை போடுவதற்கு கத்தோலிக்கர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 10. 2016ல் வெள்ளாங்குளம்சந்தியிலிருந்த விநாயகர் சிலை கத்தோலிக்கரால்  உடைத்து  கடலில்எறியப்பட்டது. 11.2018 தலைமன்னார் பிள்ளையார் சிலைகத்தோலிக்கரால் உடைப்பு.12. 2018 உயிலங்குளம் சந்தி பிளாளையார்சிலை கத்தோலிக்கரால் உடைப்பு.13. 2018 தள்ளாடி விமானப்படை ஓடுபாதைமுன்னாலிருந்த பிள்ளையார் சிலை கத்தோலிக்கரால் உடைப்பு. 14. 2018 சிவராத்திரி வாரத்தில்மன்னார்-புதுக்குடியிருப்பு சிவன்கோயில் லிங்கம் கத்தோலிக்கரால் உடைத்துதிருடப்பட்டது. 

-- 

இரகுபதி (சுதாராணி)

வைகாசி 17 2051 (30 5 2020)
மறவன்புலவு சாவகச்சேரி இலங்கை

அன்புக்குரிய அனிருத்தர் அவர்களுக்கு
வணக்கம்.

நெஞ்சம் கனத்துக் கண்கள் பனித்து எழுதுகிறேன்.

10 சிறந்த மனிதர்கள் நடுவே பதினோராவது மனிதர் அல்ல நீங்கள். பல நூறு கலைஞர்கள் நடுவே அவர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக முன்னோடியாக இருக்கின்ற கலைஞர் நீங்கள்.
மேடைகளில் உங்கள் வாசிப்புகள் என்னை மயக்கும் பொழுதெல்லாம் உங்களை ஈந்த பெற்றோரை நான் மதிப்புடன் நினைப்பதுண்டு.

மேடைகளில் அவைகளில் அரங்குகளில் முந்தி இருக்கின்ற பெருமையை உங்களுக்குத் தந்தோர் உங்கள் பெற்றோர்.

தந்தையின் கடமை தன் மகனை வளர்ப்பது மட்டுமா?
அவையிலே முந்தி இருக்க செய்கின்ற மாபெரும் பணியைத் தந்தையார் செய்கிறார் என வள்ளுவர் கூறி, அவ்வாறான தந்தையரே இலக்கணமாக வாழ்கின்றார்கள் என்கிறார்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (குறள் 67).

மு.வரதராசன் விளக்கம்:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் தன் மகனுக்கு ஊட்டி வளர்க்கின்ற தந்தையரை, சான்றோன் ஆக்கும் தந்தையரை, சங்கப்புலவர் பொன்முடியார் கூறுவார்.

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (புறநானூறு பாடல் 312)

தந்தைக்கு இலக்கணமாக வாழ்ந்த உங்கள் அருமைத் தந்தையாரை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். 

மென்மையானவர் மேன்மையானவர் இனிமையானவர் பண்பட்ட நெஞ்சினர்.

நல்ல மகனாக சிறந்த பண்பாளராக கலைகளின் பெட்டகமாக கூர்ந்த வழக்குரைஞராக சிறந்த இல்லத் தலைவனாக உங்களை உருவாக்கிய உங்கள் தந்தையாரை நினைக்கும் தொறும் வியந்து மகிழ்வேன்.

அவர் உங்களை விட்டுப் பிரிந்தார் என அறிந்தேன். நெஞ்சம் கனத்தது. கண்கள் பனித்தன. ஆறுதல் சொல்ல உடன் இல்லையே என வருந்தினேன்.

இள வயதிலேயே கலைமாமணி விருது பெற்ற நீங்கள் விரைவில் கலையுலகில் ஒளிர்ந்து பத்ம விருதுகளைத் தில்லியில் பெறுகின்ற நாளே உங்கள் தந்தையாருக்கு நீங்கள் ஆற்றும் நன்றிக் கடன் நாள் ஆகும்.

பரதநாட்டியக் கலை உலகு பெற்ற ஒளிர்மணியாகி, தலைசிறந்த மாணவர்களை உருவாக்கிய உங்கள் தாயார், நாட்டிய நன்னூல் யாத்த புலவரை அடுத்து, கரணங்களைச் செதுக்கிய சிற்பிகளை அடுத்து, தஞ்சை நால்வர் காலங்களை அடுத்து, இன்றைய தலைமுறையில் நாங்களெல்லாம்  மதிக்கவும் அவர் காலத்தில் வாழ்ந்தோம் அவரோடு பணிபுரிந்தோம் என்ற பெருமை அடையவும் வரலாற்றில் வாழ்பவர்.

காரியம் யாவிலும் கைகொடுத்த தன் அருமைக் கணவரை இழந்து நிற்கும் இவ்வேளையில் என் நெஞ்சார்ந்த இரங்கலை அவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனத்தைத் தேற்றிக்கொண்டு ஆறுதலாக இருங்கள்.

நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கும் இறைவன் அருள் உங்கள் தந்தையாருக்கும் உங்கள் இல்லத்தில் அனைவருக்கும் கிடைக்கும்.
நன்றி 
வணக்கம் 
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
காந்தளகம் யாழ்ப்பாணம்-சென்னை

மன்னார் 24,000 முகமதிய வாக்குகள்

Mannar District Total population (2011) 99063 (2019) 163,023 8 year growth by 8%
Mannar (2011) 50,937 (2019) 72,399  8 year growth by 5%
Manthai west (2011) 14,630 (2019) 26,212  8 year growth by 10%
Madu (2011) 7,631 (2019) 13,284  8 year growth by 9%
Musali (2011) 8,009 (2019) 29,421  8 year growth by 33%
Nanaddan (2011) 17,844 (2019) 21,767  8 year growth by 3%

Mannar District Total population (2011) 99063 (2019) 163,023 8 year growth by 8%  
Christian - (2011) 56,932 (57.48%), (2019) 65,611 (40%) growth rate in 8 years 2%
Hindu - (2011) 23,464 (23.69%), (2019) 27,557 (17%) growth rate in 8 years 2%
Muslim (2011) 16,553 (16.71%), (2019) 68,996 (42%) growth rate in 8 years 40%
Buddhist (2011) 2,066 (2.09%), (2019) 859 (0.5%) growth rate in 8 years (minus) -7%

National average for under 19 is 33%. 
So a safe estimate will be 30% for under 18. 

Voter eligibility Age over 18.
Mannar district population age under 18 
= safe estimate 28 to 30% 

Mannar (2019) 72,399 voters (70%)  50,679
Manthai west (2019) 26,212 voters (70%) 18,348
Madu (2019) 13,284  voters (70%) 9,299
Musali (2019) 29,421  voters (70%) 20,595
Nanaddan (2019) 21,767 voters (70%) 15,237
Total (2019) 163,023 voters (70%) 114,158 

Christian - (2019) 65,611 (40%) voters (70%) 45,927
Hindu - (2019) 27,557 (17%) voters (70%) 19,290
Muslim (2019) 68,996 (42%) voters (70%) 48,297
Buddhist (2019) 859 voters (70%) 601
Total (2019) 163,023 voters (70%) 114,158

Assistant Election Commissioner, Mannar district has announced that 88,742 voters are registered in Mannar district, a deficit of 25,416 voters (114,158-88742 = 25,416)

Entrant population during 2011 to 1019 (8years) into 
1 Mannar town DS division 13,312
2 Manthai west DS division 9,222
3 Madu DS division 4,422
4 Musali DS division 20,131
5 Nanaddan DS division 1,278 

1 Christian 0
2 Hindu 0
3 Muslim 49,795
4 Buddhist  (minus)-2414

35,000 (70% of 49,795) voters entered during these 8 years. Because of the deficit of arund 25,000 voters, it appears that only  around 10,000 entrant Muslm voters are now registered in the district.

Estimated Total Muslim votes in Mannar district
(2011) 16,553 + (growth at 2%) 2648 = 19,201
70% = 13,441
+ 10,000 entrant vote
Total estimated Muslim votes around 24,000

குருபரன் பதிவில்..

தமிழரசுக்கட்சி அதன் ஆரம்பத்திலிருந்தே மதசார்பற்ற கட்சியாக இருந்தது. இப்போ மறவன்புலவு சச்சி , யோகேஸ்வரன், சுமந்திரன் ( vice president Methodist Church, Sri Lanka ) என்று மத சார்பானவர்கள் கோலோச்சுகிறார்கள்

தமிழரசுகட்சி தானே குண்டு வைக்குமாம். பின் தானே கண்டுபிடிக்குமாம். மறவன்புலவு சச்சி சைவர்களுக்கு வாக்கு என்பார். உடனே சுமந்த்திரனின் ஆங்கிலிக்கன்/மெதடிஸ்ட் அடிவருடிகள் கிறிஸ்தவர்களுக்கே வாக்கு என்பார்கள். உடனே ஆர்னோல்ட் தரப்பில் சிலர் கத்தோலிக்கர்களுகே வாக்குஎன்பார்கள். தமிழர்களை கூறுபோட்டு வாக்கு வேட்டையாடும் தமிழரசுக் கட்சிஒருதோற்கடிக்கப்படவேண்டிய தீயசக்தி

நேற்று Elijah Hoole தனது பதிவில் கஜேந்திரகுமார் அண்ணன் சுமந்திரன் சேரின் மத அடையாளத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்வதாக சொல்லியிருந்தார். அதனை நான் கண்டித்து பதிவிட்டிருந்தேன். பின்னர் அவர் தனது தவறை ஏற்றுக்கொண்டு பதிவை திருத்தியிருந்தார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.
ஆனால் அப்படி ஒரு பிரச்சாரம் வேறு சிலரால் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். ஆதாரத்திற்கு ஒரு படமும் இணைத்திருந்தார். அது மறவன்புலவு சச்சிதானந்தன் உடையதாக இருக்கலாம் என நான் சந்தேகம் வெளியிட்டேன். எனது தான் என அவரே உறுதிப்படுத்தியுள்ளார். சச்சிதானந்தன் முன்னணிக்காரர் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. நன்றி.

2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி வெளியிட்ட எட்டுப் பக்க நூல் ஒட்டியே மேலே உள்ள படம். முழுப் பக்கங்களையும் படிக்க விழைவோர் +94772754864 புலனத்துக்குச் செய்தி அனுப்புக நன்றி

நேர்மையாக பேசி பழகுங்கள் Elijah Hoole. இது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மறவன்புலவு விடுத்த அறிக்கை போல் உள்ளது. Don't accuse people on rumours. You are better than this.

மறவன் புலவு காரனை நான் கண்டால் கட்டாயம் காறி துப்புவேன்

இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி வெளியிட்ட எட்டுப் பக்க நூல் ஒட்டியே அதன் அட்டையே மேல் உள்ள படம்.
தமிழரசுக்கட்சியின் நடுவண் குழுவில் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். தமிழரசுக் கட்சித் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவரது மகன் மற்றும் திரு கனகசபாபதி அவர்கள் எனது இல்லம் வந்த பொழுது தமிழரசுக்கட்சியின் நடுவண் குழுவில் நான் இருக்கிறேனா? என அவரிடம் கேட்டேன். அதைத் தீர்மானிப்பவர் திரு குலநாயகம். அவர் விரும்பியவர்களுக்கு அறிவித்தல் அனுப்புகிறார் எனத் திரு மாவை அவர்கள் என்னிடம் கூறினார்கள். இதுவரை ஒரு கூட்டத்தில் கூட நான் கலந்து கொள்ளவில்லை.
1961 அறப் போருக்காகச் சென்னையில் உள்ள தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய காலம் தொடக்கம்,
1961 அறப்போரில் ஒரே ஒருநாள் கலந்துகொண்ட காலம் ஊடாக,
திரு திருச்செல்வம் அமைச்சராக இருந்த காலத்தில் 1966இல் அவருக்குத் தனி உதவியாளராக இருந்த காலத்தின் ஊடாக,
13 ஆண்டுகள் திரு செல்வநாயகம் அவர்களுடன் மொழிபெயர்ப்பாளராக உதவியாளராக அவர் சொல்லும் பணிகளைச் செய்பவராக (1963-1976)
அவர் இறந்த பின்பு அவருக்கு 108 அடி உயர நினைவு துணை அமைக்கும் பணியில் ஈடுபட்டவனாக
1977 தொடக்கம் 1989 வரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினராக இருந்த காலங்களில் ஊடாக
தமிழ்த் தேசியத்துடன் இணைந்து பணி புரிந்திருக்கிறேன்.
அண்மைக் காலத்தில் தமிழரசுக்கட்சியின் நடுவண் குழுவில் இருந்தேனா இல்லையா என்பதைத் திரு குலநாயகம் அவர்களிடம் கேட்டுத் தெரிந்த பின்பு நீங்கள் பதிவிடுவதே பொருத்தமானது. நன்றி

என் முகத்தில் காறித் துப்புதல் உங்களுக்கு மன நிறைவு கிடைக்குமாயின்
யாழ் மாவட்டத்தில் நீங்கள் சொல்லும் இடத்திற்கு வருகிறேன். என் முகத்தைக் காட்டுகிறேன்.
காறித்துப்புமக மகிழ்ச்சி அடைவேன்.

Both Arnold and Saravanabhavan should be defeated.
மணிவண்ணனை 'இந்துவின் மைந்தன்' என்று முன்னிறுத்திய முன்னணி ஆதரவாளர்களை நீங்கள் கண்டதில்லையா? (அவரது பாடசாலையைச் சொன்னார்கள் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்). As always these things are quite subtle.
எனது பதிவின் கீழ்ப்பாதியையும் போட்டிருந்தால் நியாயபூர்வமாக இருந்திருக்கும். எனது பதிவு சுமந்திரன் தோற்பது/வெல்வதைப் பற்றியதல்ல. தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தற்போது நடக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றைப் பற்றியது.

இந்த கருத்தை மிகுந்த தயக்கதிற்கு பின்னரே பகிர்கின்றேன். ஏனெனில் இதனை இந்துத்துவா என சிலர் திரிபு செய்யக்கூடும். யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியை மையப்படுத்திய ஆங்கிலிக்கன்/ மெதடிஸ்ட் மேட்டுக்குடி அரசியல் உண்டு. அதில் கதிர்காமர்கள் , ஹூல்கள் ஏன் நிர்மலா ராஜசிங்கம் குடும்பம் கூட உண்டு. இவைஅனைத்தும் சுமந்திரன் பின்னால் திரண்டிருக்கின்றன.

இதனை பதிவு செய்த Hoole என்பவர் இரத்தினஜீவன் Hoole குடும்பத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த Hoole குடும்பத்திற்கு தமிழ் மக்களை சாதிரீதியாக மதரீதியாக பிரிக்கும் உள்நோக்கம் இருப்பது புலப்படுகிறது. ஒரு வகையான உளவியற்சிக்கலில் அவதிப்படுகிறார்கள் என்றே நம்புகிறேன்.
28 ஜுன் 2018 இல் "UNHRC Or UNSC? Government Intransigence Feeds ITAK’s Militancy & Foolishness " என்ற தலைப்பில் துஷ்யந்தி Hoole என்ற பெண் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் (https://www.colombotelegraph.com/index.php/unhrc-or-unsc-government-intransigence-feeds-itaks-militancy-foolishness/)
இக்கட்டுரையில் UNHRC, UNSC பற்றி எழுதிய விடயங்களை விட கஜேந்திரகுமாரின் தனிப்பட்ட விடயங்களை பற்றி எழுதிய விடயங்களே அதிகம்.
கஜேந்திரகுமார் திருமணம் செய்துள்ளார் என்பதனை பற்றிய gossip பை வைத்து இக்கட்டுரையை இந்தப் பெண் எழுதியிருந்தார்.
கஜேந்திரகுமாரை scion of the Hindu Ponnamabalam family என்று எழுதிவிட்டு, A day or two ago, he married a Christian divorcee என்று எழுதியுள்ளார். கஜேந்திரகுமார் திருமணம் செய்ததற்கும் UNHRC, UNSC க்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆக இந்து கஜேந்திரகுமார் கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்தார் என்ற பூராயத்திற்கு அதிகமாக இக் கட்டுரையில் வேறொன்றும் இல்லை.
இது gossip பை வைத்து எழுதியது என்று ஏன் சொல்கிறேன் என்றால். கஜேந்திரகுமார் திருமணம் செய்த பெண் ஒரு சைவப் பெண். கஜேந்திரகுமாரைக் காட்டிலும் சைவ மதத்தை அதிகமாகப் பின்பற்றுவர்.

m Vettivelu
இந்த Elijah Hoole இற்குப் புறொட்டஸ்தாந்து கிறீஸ்தவர்களின் அரசியல வரலாறு தெரியாதுபோல் இருக்கிறது. 1920களில் பண்டாரநாயக்க இலங்கைக்கு சமஷ்டி அமைப்புத்தான் பொருத்தமானது என்ற பிரசாரத்தினை இலங்கையிலும், யாழ்ப்பாணத்திலும் செய்துவந்த காலத்தில், வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி தமிழருக்குப் பொருத்தமற்றது என்றும், அது இந்துக்களின் மேலாதிக்கத்தினை வடக்குக் கிழக்கில் நிலைநாட்டிவிடும் எனவும் கூறி, இலங்கைக்கு ஒற்றை ஆட்சிதான் பொருத்தமானது எனப் புறொட்டஸ்தாந்து கற்றோரான இரத்தினம் என்பவர் தென்னிலங்கையின் பிரபல ஆங்கில ஊடகத்தில் கட்டுரை எழுதியிருந்தார்.இவரது மனைவியின் பெயரில்தான் யாழ் பல்கலைக் கழகத்திற்குப் பின்னால் ஈவ்லின் ரத்தினம் அமைப்பு அமைந்துள்ளது. அன்று புறொட்டஸதாந்து கிறீஸ்தவர்கள் சமஷ்டி ஆட்சி முறையை எதிர்த்து, ஒற்றை ஆட்சியைத்தான் ஆதரித்து வந்தனர். இப்படி சமஷ்டி ஆட்சி தமிழருக்குப் பொருத்தமற்றது என சுதந்திரத்திற்கு முன்னர் நிராகரித்திருந்த புறொட்டஸ்தாந்து கிறீஸ்தவர்கள் சுதந்திரத்தின் பின்னர் தமிழர்கள் தனி நாடு அமைக்கும் அரசியல் பாதையில் செல்வதைத் தடுக்க, சி. ஐ. ஏயினது திட்டத்திற் அமைவாக புறொட்ஸ்தாந்து கிறீஸ்தவரான செல்வநாயகத்தின் தலைமையில் தமிழரசுக் கட்சியை 1949ஆம் ஆண்டில் ஆரம்பித்துச் செயற்பட்டனர். முன்னர் சமஷ்டிக் கொள்கையை நிராகரித்திருந்த புறொட்டஸ்தாந்து கிறீஸ்தவர்கள், பின்னர் சமஷ்டிக கொள்கையையுடைய தமிழரசுக் கட்சியினர் ஆகினர். தமிழரசுக் கட்சி அன்றுமுதல் இன்றுவரை அமெரிக்காவின் நலன்களைப் பேண மிகவும் தந்திரோபாயமாகச் செயற்பட்டுத்தான் வருகிறது. அது தமிழர்கள் தனி நாட்டினை அமைப்பதையும் தந்திரோபாய ரீதியாக முறியடித்துத்தான் வந்துள்ளது. எந்தவொரு புறொட்டஸ்தாந்து கிறீஸ்தவரும் ஆயுதம் தாங்கிப் போராட புலிகளில் இணையவில்லை என்பதை அவதானிப்பது மிக முக்கியமானது. அவாகளுடைய போதகர்கள் செய்து வந்த பிரசாரத்தினை கேட்டவர்களுக்கு இது ஏன் என்பது புரியும். இவைகளைச் சரியாக அறிந்தால், அங்கிலிக்கன் சேர்ச்சினைச் சேர்ந்த குடும்பத்தினரான Elijah Hoole இனதும், சுமந்திரனதும் கொள்கைகளைச் சுலபமாக விளங்கிக்கொள்ள முடியும்.

தன் நாடு அமைக்கும் ஆயுதப்போராட்ட காலத்தில் புறொட்டஸ்தாந்து போதகர்கள் கிறீஸ்தவர்களை புலிகளுடன் இணையக் கூடாது எனப் போதித்து வந்தனர். எந்த ஆயுதக் குழுக்களுடனும் இணைந்து, போரில் ஈடுபட வேண்டாம் என்றுதான் போதித்து வந்திருந்தனர். எத்தனை புநொட்டஸதாந்து கிறீஸ்தவர்கள் இயக்கங்களில் 1984 இன்பின்னர் இணைந்து செயற்பட்டு வந்தனர் என்பதைக் கூறுங்கள் பார்க்கலாம்? கத்தோலிக்கரைப் பொறுத்தமட்டில், கீழ் மட்டக் கத்தோலிக்கர் தம்மை விடுதலைப் போராட்டத்துடன் இணைத்த நிலையில், உயர் சாதிப் பாதிரிகளுக்கு அவர்களைச் சேரவேண்டாம் எனக் கூற முடியாது போய்விட்டது.

தமிழ் தேசிய அரசியலினுள் மதத்தை புகுத்தும் கேவலமான வேலையை செய்வது டபிழரசு கட்சி தான். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஆர்னள்டுக்கு எதிராக மதவாதம் பூசிய சுவரொட்டிகளை அவரது ஆதரவாளர்களே சில பகுதிகளில் ஒட்டி குறித்த மதம் ஒன்றின் ஆதரவை வேண்டினார்கள். அது போல அப்படியான பிரசாரமும் நடந்த்து .
வட்டுக்கோட்டை ஆயர் தியாகராஜா மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெளிப்படையாகவே தமது தேவாலயங்களில் மதத்தை முன்னிலைப்படுத்தி சுமந்திரனுக்கு வாக்கு போடுமாறு கேட்டார்கள்( சுமந்திரன் தென்னிந்திய திருச்சபை இல்லாத போதிலும் ).
திருமதி தியாகராஜா , ஒரு ஆயரின் பாரியார் எனும் பொறுப்புணர்வில் இருந்து விலகி, பகிரங்கமாக தனது முகநூலில் சுமந்திரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்(2015 தேர்தல்)
அது போல
“இந்துக்களை “ பாதுகாக்க இந்தியா நேரடியாக தலையிட வேண்டும் என கட்சித்தலைமை டீலிற்ககாக சுமந்திரனுடன் தற்போது கைகோர்த்து நிற்கும் சந்தர்ப்பவாதியான சிரிதரன் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

நீதியரசர் சிவசுப்பிரமணியம்

நீதியரசர் சிவசுப்பிரமணியம் பதவி விலகினார்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

திருக்கோயிலில் பூசை.
அடியவர் வழிபட வருகிறார்கள்.
வழிபடுகிறார்கள்.
நம்பிக்கை அவர்களுடைய சொத்து.
கடவுள் மீதுள்ள நம்பிக்கையை வளர்க்க வளர்க்க தன்னம்பிக்கையும் வளரும்.
என் உள்ளத்துள் சிவன் புகுந்தார்,
எனக்கு நல்லன நல்லதாகக் கிடைக்கின்றது.

என் உளமே புகுந்த அதனால் 
ஆசறு நல்ல நல்ல 
அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே 
என்றார் ஞானசம்பந்தர்.

வழிபடுவோர்க்குத் திருக்கோயில் எனவே
வழிபாடுவோரே ஆட்சி செய்ய வேண்டும்.

வழிபடுவோர் உறுப்பினராக வேண்டும்.
சபை அல்லது சங்கம் அல்லது அமைப்பு ஆக வேண்டும்.

தமக்குள் தலைவர் செயலாளர் அறங்காவலர் ஆகியோரைத் தெரியவேண்டும். வழிபடுவோர் திருக்கோயிலை ஆள வேண்டும்.

சைவக் கோயில்களுக்கு இந்தக் கொள்கையை இந்த நடைமுறையைக் கொண்டு வர அரசு விரும்பியது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தமிழர் பங்களிப்பின்றிச் சிங்கள புத்த மேலாதிக்க அரசியலமைப்பை 1972இல் நிறைவேற்றி ஆட்சி செய்தவர் சிறீமாவோமாவோ பண்டாரநாயக்கா.

அவரது அமைச்சரவையில் குமாரசூரியர் அஞ்சல் துறை அமைச்சர். இந்தக் கொள்கையைச் சட்ட வரைவு ஆக்கி சைவர்களிடையே கருத்துக் கேட்க விரும்பியது சிறிமாவோ அரசு.

இச் சட்ட வரைவின் நகல் ஒன்றை அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கு அரசு அனுப்பியது. அக்காலத்தில் அவ்வமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் சிவசுப்பிரமணியம். பிற பொறுப்புகளில் இருந்தவர்கள் அரசுக் கொள்கை சார்ந்த கே சி தங்கராசா போன்றோர்.

உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்கலாம். அரசுக்குப் பதில் சொல்லலாம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தினர் கருதினர். உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டினர்.

கூட்ட அறிவித்தலின் படி ஒன்றை எனக்குக் காட்டினார். சட்ட வரைவு ஒன்றின் படியையும் தந்தார். கொம்பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்கம் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்ற உறுப்பினராக இருந்த ஐ தி சம்பந்தன்.

அதிர்ச்சி, வியப்பு, சினம் என்னை மேவியது. சட்ட வரைவின் வரிகளை ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க உடலில் பதற்றம் பெருகியது. கொடுமை என்றேன் சம்பந்தனிடம்.

அவரும் அவ்வாறே கருதினார். விவேகானந்த சபையின் கந்தசாமி, திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் நமசிவாயம், நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றப் பேரின்பநாயகம் எனச் சிலர் இச்சட்ட வரைவால் எழக் கூடிய தீமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதாக என்னிடம் சம்பந்தன் கூறினார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தில் பெரும்பான்மையோர் சட்ட வரைவை ஆதரித்து அரசுக்குக் கருத்துக்கூற இருப்பதாகவும் சம்பந்தன் கூறினார்.

வழிபாட்டு இடங்களில் உள்ள சில பூசகரால் சில அறங்காவலரால் முறைகேடுகள் நிகழ்வதை பல நூற்றாண்டுகளாகப் பார்த்து வருகிறோம். 

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒப்பவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் சமூகம் திணறிக் கொண்டிருந்தது.

வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் செல்லும் வழிபாட்டு இடங்களில் முறைகேடு. இவை மகாவீரர் புத்தர் இயேசு பிரான் முகமது நபி போன்றோரின் கவனத்தை ஈர்த்ததால் அவர்கள் கடுமையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். வழிபாட்டு இடங்களைத் தூயதாக்க முயன்று தோல்விகளையே சந்தித்தமை வரலாறு.

சிறீமாவோ அரசின் முயற்சி ஒரே கல்லில் இரு காய்களை வீழ்த்துவது. 

சைவ வழிபாட்டு இடங்களை மக்களிடம் ஒப்படைப்பது முதலாவது. 

சைவ வழிபாட்டு இடங்களில் சைவர்கள் அல்லாதோர் பெரும்பான்மையாக வழிபடும் திருக்கோயில்களில் சைவர்களை நீக்கிச் சைவர் அல்லாதவர்களைப் புகுத்திச் சைவத்துக்கு புறம்பான திருவுருவங்களையும் வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் புகுத்துவது இரண்டாவது. 

சிலாபத்தில் முன்னேச்சரம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சைவத் திருக்கோயில்களில் வழிபட வருவோர் சைவ சமயத்தவர் அல்லாதவரே.

அகில இலங்கை இந்து மாமன்றம் அரசுக்குத் துணை போகும் என்ற செய்தியைச் சம்பந்தன் என்னிடம் சொன்னார். ஏன் என்னிடம் சொன்னார் என எனக்குப் புரியவில்லை. ஏனெனில் நான் இந்து மாமன்றத்தின் உறுப்பினர் அல்லன். இதைச் சம்பந்தனிடம் சொன்னேன். சச்சி ஏதாவது செய்வோம். அகில இலங்கை இந்து மாமன்றம் சட்ட வரைவுக்கு ஆதரவு கொடுக்க கூடாது என்றார் என்னிடம் அவர்.

தோராயமாக எழுபத்தைந்து இந்து இளைஞர் மன்றங்களை உறுப்பினராகக் கொண்ட இலங்கை இந்து இளைஞர் பேரவைத் தலைமைச் செயலாளராக இருந்தேன். மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத் தலைவர் சிவநேசராசா பேரவைக்கும் தலைவர்.

கட்டுபெத்தை பொறியியல் கல்லூரி மாணவர் கரவெட்டியைச் சேர்ந்த ஞானானந்தன். ஓய்வு நேரங்களில் எனக்கு உதவிக்கு வருவார். அவரிடம் சட்டவரைவு பற்றிக் கூறினேன்.

அகில இலங்கை இந்து மாமன்றக் கூட்டம் நடக்கும் நாளில் நேரத்தில் இடத்தில் போராட்டம் ஒன்றை நடத்துவோமா? எனக் கேட்டேன்.

20 மாணவர்கள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி வளாகத்தில் கூடினோம். ஒவ்வொருவர் கையில் ஓர் அட்டை. எல்லோரும் வேட்டியும் சட்டையும் அணிந்து இருந்தோம். சட்ட வரைவின் படியைக் கையில் எடுத்தோம்.

ஒருவர் பின் ஒருவராக அட்டையைக் கையில் பிடித்தவாறு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தை நோக்கி வரிசையாக ஒழுங்காக நடந்து சென்றோம்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கூட்டம் அங்கு நடந்து கொண்டிருந்தது. தோராயமாக நாற்பது அல்லது ஐம்பது பேர் அங்கு இருந்தனர். நீதியரசர் சிவசுப்பிரமணியம் தலைமையில் கூட்டம்.

 கே சி தங்கராசா அங்கு இருந்தார். எனக்குத் தெரிந்தவர் பலர் இருந்தனர். சம்பந்தன் இருந்தார். கந்தசாமி இருந்தார். நமசிவாயம் இருந்தார். சண்முகராசா இருந்தார். இன்னும் பலர் இருந்தனர்.

20 மாணவர்களும் பல்கலைக்கழக மட்டத்தில் பயில்வோர். பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, கொழும்புப் பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரி சார்ந்த மாணவர்கள் அந்த வரிசையில் இருந்தனர்.

அனைவரும் ஞானனந்தனின் நண்பர்கள். அக்காலத்தில் சட்டக் கல்லூரியில் பயின்ற கரவெட்டியைச் சேர்ந்த கந்தையா நீலகண்டன் அந்த வரிசையில் வந்தார். வரிசை முதல்வனான என்னிடம் ஒரு கையில் அட்டை இருந்தது. மறுகையில் சட்ட வரைவின் படி இருந்தது. சட்டைப் பையில் தீப்பெட்டி ஒன்றும் இருந்தது.

கூட்டத்தைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தோம். குரல் எழுப்பி முழங்கினோம். வலம்வந்து முடிந்ததும் தலைவரின் இருக்கைக்குப் பின்னே நான் நின்றேன். சட்ட வரைவின் படியைக் கையில் எடுத்தேன். தீப்பெட்டியை எடுத்து அந்தச் சட்ட வரைவைத் தீயிட்டுக் கொளுத்தினேன்.

இதுவே போதும். நீங்கள் இவ்விடத்தை விட்டுப் போங்கள். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனச் சம்பந்தனும் கந்தசாமியும் என்னிடம் கூறினர்.

மாணவர்களை அழைத்துச் சென்றேன். தேனீர்க் கடையில் தேனீர் அருந்தினோம் . அனைவருக்கும் நன்றி கூறினேன் அவர்கள் கலைந்து சென்றனர்.

ஞானானந்தன் இப்பொழுது ஆத்திரேலியாவில் இருக்கிறார். சம்பந்தன் பிரித்தானியாவில் இருக்கிறார் கந்தசாமியும் பேரின்பநாயகமும் ஏழாலையில் இருக்கிறனர். சண்முகராசா, நமசிவாயம் , நீலகண்டன் காலமாயினர்.

மறுநாள் சம்பந்தன் என்னை அழைத்தார். சச்சி உங்களுக்கு நன்றி என்றார். சட்ட வரைவை ஏற்பதில்லை என அகில இலங்கை இந்து மாமன்றம் தீர்மானித்தது. ஏற்க வேண்டும் என வலியுறுத்திய தலைவர் நீதியரசர் சிவசுப்பிரமணியம் தன் தலைமைப் பதவியிலிருந்து நேற்று இரவே விட்டு விலகினார்.

பெரும்பான்மையினர் ஆதரவுடன் சட்ட வரைவை ஏற்றுக் கொள்ளலாம் எனக் கருதி வந்த சிவசுப்பிரமணியம் தங்கராசா போன்றோர் ஏமாற்றம் அடைந்ததனர். சச்சி  நீங்களே காரணம். மாணவர்களே காரணம். உங்கள் போராட்டத்தை நாங்கள் எடுத்துக் காட்டினோம்.

மனம் உடைந்த தலைவர் நேற்று இரவே பதவியை விட்டு விலகினார் என்றார் சம்பந்தன்.

அன்று அந்தக் கூட்டத்தில் எரிந்த சட்டவரைவு மீண்டும் இன்றுவரை உயிர் பெறவே இல்லை. தமிழ்த்தேசிய சைவ மக்கள் இருக்கும் வரை இத்தகைய சட்ட வரைவுகள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளப்படா.

10 கோடி சைவத் தமிழ் நெஞ்சங்கள்

நெஞ்சம் பதைபதைத்தது
உள்ளம் உடைந்தது
மனம் புண்ணாயது
உடல் நடுங்கியது
செவிகளில் வேப்பெண்ணை 
கண்களில் நீர்த் தாரை 
மூக்குக்குள் சாக்கடை 
கைவிரல்களில் படபடப்பு 
கால்கள் தடுமாறின

உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தோராயமாகப் 10 கோடி சைவத் தமிழரின் மனோநிலையை உடல்நிலையை மேலே கூறினேன்.

ஏவிளம்பி ஆண்டின் மகா சிவராத்திரி நாளுக்கு முந்தைய நாள்களில் திருக்கேதீச்சரத்தில் நிகழ்ந்த கொடுமையைக் கேட்ட நேரிலும் காணொலிகளிலும் பார்த்த 10 கோடி சைவத் தமிழர்களின் மனோநிலையையும் உடல்நிலையையும் மேலே கூறினேன்.

மதமாற்றச் சபைகளே கொடுமையானவை கத்தோலிக்கர் சைவத் தமிழருக்கு இணக்கமானவர்.  கத்தோலிக்கம் வேறு அல்ல சைவம் வேறு அல்ல. இரண்டுமே தமிழருக்கு அடையாளங்கள். 

கத்தோலிக்கம் மீது குற்றம் சாட்டுபவர்கள் சைவத் தீவிரவாதிகள் சைவ மதவாதிகள் தமிழரிடையே இணக்கத்தைப் போக்கிப் பிணக்கை வளர்ப்போர் என்றெல்லாம் குற்றம் சாட்டிய சைவப் பெருமக்கள் பலர் ஏவிளம்பி மகா சிவராத்திரி காலத்தில் தங்கள் மனதில் இருந்த அக்கருத்தைப் புரட்டிப் போட்டனர்.

சைவத் தீவிரவாதிகள் சைவ மதவாதிகள் என்றெல்லாம் யாரைச் சுட்டினார்களோ அவர்கள் தங்களைத் தாங்களே சுட்டத் தொடங்கினர். அவர்களே சைவத் தமிழ்த் தீவிரவாதிகளாக மதவாதிகளாக மாறினார்

ஏவிளம்பி மகாசிவராத்திரி திருக்கேதீச்சர நிகழ்வு வன்னித் தேர்தல் மாவட்டச் சைவத் தமிழர்களைப் புரட்டிப்போட்டது.

யார் யாருக்கு வாக்களித்தோம். தமிழர் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்றுதானே வாக்களித்தோம். நாம் வாக்களித்துத் தேர்வாகி நாடாளுமன்றத்துக்கு சென்றவர்களே தமிழரைக் கூறு போடுவார்கள் சைவத்தையும் கத்தோலிக்கத்தையும் மோத விடுவார்கள் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை.

2020 மே மூன்றாம் நாள் திங்கட்கிழமை 
கொழும்பில் அலரி மாளிகையில் கூட்டம் 
பிரதமர் அழைத்துக் கூட்டம்.

தமிழர் தரப்பில் திரு சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகிப் பதவிக்காலம் முடிந்தவர்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் அக் கூட்டத்திற்குச் செல்கிறார்கள்.

மன்னார் மாவட்ட சைவத்தமிழ் வாக்காளர் வாக்களித்துத் தேர்வு ஆகியோரும் அக்கூட்டத்தில் பங்குபற்றுகிறார்கள்.

அரசியலமைப்பு பொருளாதாரம் மருத்துவம் காணாமல் போனோர் படை வைத்துள்ள வேளாண் நிலங்கள் கடவைகளில் மக்கள் படும் துயரம் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் படும் அவலங்கள் ஆளுநரின் விடுப்பு இவற்றையெல்லாம் அக்கூட்டத்தில் தமிழர் சார்பில் பேசுகிறார்கள்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வாழ்கின்ற 160,000க்கும் கூடுதலான சைவ வாக்காளர் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நினைவிலும் நீங்காத திருக்கேதீச்சரம் ஏவிளம்பி மகா சிவராத்திரி நிகழ்வுகள், தொடர்ந்த அவலங்கள் இவற்றை யாராவது பேசினார்களா?

மன்னார் மாவட்டச் சைவத்தமிழ் வாக்காளரின் வாக்குகளைப்பெற்றுத் தேர்வான சைவ சமயம் சார்ந்தவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்களே!

வன்னியின் 160,000 சைவத் தமிழ் வாக்காளர்களின்
நெஞ்சம் பதைபதைத்த நிகழ்வு 
உடல் நடுங்கிய நிகழ்வு 
காதைப் பொத்திக்கொண்ட நிகழ்வு 
கண்களைக் குளமாக்கிய நிகழ்வு.

எனினும் வன்னித் தேர்தல் மாவட்ட 160,000 சைவத் தமிழ் வாக்காளப் பெருமக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எவரும் அக்கூட்டத்தில் இல்லை. 

இணக்கத்தை விரும்பி வாக்களித்தோர் இடையே பிணக்குகளை வளர்த்து ஊதிப் பெரிதாக்கிய கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அக்கூட்டத்தில் இருந்தார்கள். சைவத் தமிழ் வாக்காளர்களுக்காகப் பேசுமாறு அவர்களிடம் எதிர்பார்ப்பது பொருத்தமில்லை.

மன்னார் மாவட்டச் சைவத்தமிழ் வாக்குகளைப் பெற்றுத் தேர்வான சைவ சமயத்தவரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். வன்னித் தேர்தல் மாவட்டத்தின் 160,000 சைவத் தமிழ் நெஞ்சங்களின் பதைபதைப்பை அக் கூட்டத்தில் எடுத்துக் கூறுமாறு சைவத் தமிழர் அவரிடம் எதிர்பார்ப்பது தவறா?

மன்னார் மாவட்ட சைவத்தமிழ் வாக்காளரே சிந்தியுங்கள். சைவ தமிழருக்குக் குரல் கொடுக்கக்கூடிய ஒருவர் நாடாளுமன்றத்தில் இல்லாததாலேயே உலகின் 10 கோடி சைவத் தமிழ் நெஞ்சங்களை வன்னித் தேர்தல் மாவட்டத்தின்160,000 சைவத் தமிழ் வாக்காளரின் உள்ளங்களை உடைத்துச் சுக்குநூறாக்கிய நிகழ்வை இத்தகைய கூட்டங்களில் எடுத்துக் கூறலாம், தீர்வு காணலாம்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சைவத் தமிழர்கள் செட்டிகுளத்தில் ஆயில் என் 
புதுக்குடியிருப்பில் 
சிதம்பரபுத்தில் 
சிலாவத்துறையில் 
மூன்றாம்பிட்டியில் 
வண்ணான்குளத்தில் 
முருங்கனில் 
தலைமன்னாரில் 
கற்குளத்தில் 
கற்கடந்தகுளத்தில் 
குஞ்சுக்குளத்தில் 
வெள்ளாங்குளத்தில் 
திருக்கேதீச்ரத்தில் ஆயில் என்
இன்னும் நான் சொல்லாத பற்பல ஊர்களில் ஆயில் என்
மத மாற்றிகளாலும்
மத மாற்றிகள் கையோங்கிய கட்சிகளாலும் 
கத்தோலிக்கராலும் அடையும் 
துன்பங்கள் 
துயரங்கள் 
தொல்லைகள் 
சிக்கல்கள் 
இவற்றை எடுத்துச் சொல்ல 
சைவத்தமிழ் ஈடுபாடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 
வன்னித் தேர்தல் மாவட்டத்திற்குக் காலத்தின் கட்டாயம்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 50,000 சைவத்தமிழ் வீடுகளுக்கும் செல்வோம் 
அவர்கள் நெற்றியில் திருநீறு அணிவிப்போம்
தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சியின் சின்னமான கோடரிச் சின்னத்தின் படத்தைக் கொடுப்போம் 
வேட்பாளர் பட்டியலைக் கொடுப்போம் 
வாக்களிக்கும் முறையைச் சொல்லிக் கொடுப்போம்

வாக்குகளைச் சேகரிப்போம்
வெல்வோம் வெல்வோம் 

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

வன்னி மண் தந்த வாழ்வு

வன்னி மண் தந்த வாழ்வு
இந்த மண். இந்தக் காற்று. இந்த வானம். இந்த நீரோடை. இதில் பூத்த மக்கள். மலர்த்து விரிந்த பண்புகள். சிறந்து முகிழ்ந்த இயல்புகள். காலம் காலமாகக் கூர்மையாகி வந்த கற்பனைகள்.

மண்ணோடு கலந்த நம்பிக்கைகள். மனத்தைச் செம்மையாக்கிய நெறிகள். வாழ்வுக்கு இனிமை சேர்த்த தோழமைகள். தோழமைகள் முகிழ்த்ததால் காதல் நெறி.

பிறந்தோம். தமிழ் மொழி பயின்றோம். பின்னெல்லாம் காதலில் சிறந்தோம். சிவன் சேவடியே சேர்ந்தோம். (காரைக்காலம்மை)

என்ன இல்லை? என்ன வேண்டும்? எது குறை? எல்லாமே பெற்றோம். எதுவுமே குறையில்லை.

புறத் திணிப்பு
நீ முட்டாள். நீ மடையன். நீ அறிவில்லாதவன். என்னைப் பார். என் வளர்ச்சி பார். என் உயர்ச்சி பார்.

உன் வாழ்வியலைக் கைவிடு. பண்பாட்டைப் புறந்தள்ளு. நெறிகளை ஒதுக்கி வை. என் பின்னே வா. என்னைப் பின்பற்று. நான் வாழ்வு தருவேன். ஒளி ஏற்றுவேன். நெறி காட்டுவேன்.

இவை கொடுமைகள். இந்த மண்ணின் மீது திணித்த, திணித்துக் கொண்டிருக்கிற, திணிக்கப் போகிற கொடுமைகள்.

சவால்
வாழ்வதா? வீழ்வதா? சவால்களாக எதிர்கொண்டன. சந்திப்பதா? பணிவதா?

செய்வதா? செத்து மடிவதா? வினாக்களாக முன்னின்றன. பதிலடி கொடுப்பதா? படுத்து உறங்குவதா?

இவை இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் முன்னுள்ள சவால்கள். தமிழும் சைவமும் காலம் காலமாக எதிர்கொள்ளும் சவால்கள்.

கல்லோடு கட்டிக் கடலில் தள்ளிய சவால். நீற்றறையில் அடைத்த சவால். யானையால் மிதித்த சவால். (அப்பர்)

திருமடத்தைத் தீயிட்டுக் கொளுத்திய சவால். (சம்பந்தர்)

ஈனர், எத்தர்
இவர்களை எத்தர் என்றோம், ஈனர் என்றோம் (சம்பந்தர்). இவர்கள் நெறிகள் இந்த மண்ணுக்கு ஏற்றதல்ல என்றோம். புறந்தள்ளினோம்.

புத்தராய்ச் சில புனைதுகில் அணிபவரை எத்தர் என்றோம். அல்லல் சேர் சமணரை ஈனர் என்றோம். நாத்தழும்பேற நாத்திகம் பேசியோரை விரட்டினோம். சவால்களைச் சந்தித்தோம். எத்தனை, ஈனனை, நாத்தழும்பானை ஓட ஓட விரட்டினோம். அனைத்து முனைகளிலும் அரண் அமைத்தோம்.

சோழர்
இந்த மண் ஈந்த நெறிகள். இந்த மக்கள் செதுக்கிய நம்பிக்கைகள். இந்த இயற்கை தந்த கற்பனைகள் மீண்டும் நமக்காயின. அடுத்த ஓராயிரம் ஆண்டுகள் நாம் அமைத்த அரண் நமக்குக் காப்பாயது. நன்றி சோழர்கள்.

முகலாயர்
700 ஆண்டுகளின் முன்னர், முகலாயர் அனுப்பிய மாலிக் கபூர் தமிழையும் சைவத்தையும் சிதைத்தான். கோயில்களை இடித்தான்.கொள்ளையடித்தான்.

சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமான் கோயிலில் 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக வழிபடமுடியவில்லை. மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பல ஆண்டுகளாக அடியவர் போகமுடியவில்லை.

யாழ்ப்பாண அரசு
60 ஆண்டுகள் நீடித்த இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொணர்ந்தோம். மீண்டும் சைவம் நிலைபெற்றது. நெறிகள் மீளமைந்தன. தமிழப் பண்பாடு தன் இயல்பான வழித்தடத்தில் பயணித்தது. (நன்றி நாயக்கர் அரசு, யாழ்ப்பாண அரசு).

மேனாட்டார்
400ஆண்டுகளின் முன் திருக்கேதீச்சரம் கோயிலை அழித்து ஒழித்தனர். திருக்கோணேச்சரம் மண்ணோடு மண்ணாயது. ஈழத்தின் பண்பாட்டுச் செல்வத்தை, தமிழ்த் தேசியத்தை, மொழி வளத்தை, நம்பிக்கை நெறிகளைச் சிதைக்க மேனாட்டார் முயன்றனர்.

ஆடி அமாவாசை விரதம். வாழை இலையில் உணவருந்தி வெளியே வீசினால் தெரிந்துவிடும் என, விரதமிருந்து, வாழையிலை விரித்துச் சாப்பிட்டுக் கூரை இறப்பில் செருகிக் கைகழுவினோம்.

வீட்டுக்கு ஒரு மாடு இறைச்சிக்குக் கேட்டபொழுது, கொடுக்க மறுத்தோம். வீடுகளை விற்று, இரவோடிரவாக அக்கரை சென்றோம். புலம்பெயர்ந்து பண்பாடு பேணினோம், போற்றினோம்.

ஆறுமுக நாவலர்
காரைக்காலம்மை, அப்பர், தமிழ் ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார் எனக் காலம் தந்த வீரர்கள், போராளிகள் வரிசையில் மண் காக்க, மண்ணின் மரபு பேண, மொழி காக்க, நெறி போற்ற வீறு கொண்டெழுந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலர்.

காரைக்காலம்மைக்குக் காடவர்கோன். தமிழ் ஞானசம்பந்தருக்கு ஆதித்த சோழன். மணிவாசகருக்கு அரிமர்த்தனன். சேக்கிழாருக்குக் குலோத்துங்கன். ஆறுமுக நாவலருக்கு இராமநாதன்.

இராமநாதன்
கல்வி கற்ற தமிழருக்கு இலங்கைச் சட்ட சபையில் பேராளர் யார்? இராமநாதனை அனுப்புவோம் என்றார் ஆறுமுக நாவலர். கிறித்தோபர் பிரிட்டோவை அனுப்புவோம் என்றனர் ஆங்கில அரசின் அடிவருடிகள்.

1879 மே 22ஆம் நாள் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆறுமுக நாவலர் ஆற்றிய உரையே இராமநாதன் சட்ட சபைக்குத் தேர்வாகக் காரணம்.

கிறித்தவத் திணிப்பைக் கடுமையாக எதிர்த்தவர் ஆறுமுக நாவலர். அதனால் பிரிட்டோவை நிராகரித்தார். இராமநாதனை ஆதரித்தார்.

சிவ சேனையின் கோரிக்கை

2016 ஐப்பசியில் சிவ சேனையின் தொடக்க நிகழ்வு. மூன்று முடிபுகளை எடுத்தோம். அவற்றுள் ஒன்று:

இலங்கையில் எந்த மூலையில் நடைபெறும் எந்த ஒரு தேர்தலிலும், ஊர்ச் சங்கமாயிலென், கிராம சபையாயிலென், உள்ளூராட்சிச் சபையாயிலென், மாகாண சபையாயிலென், நாடாளுமன்றத் தேர்தலாயிலென், குடியரசுத் தலைவர் தேர்தலாயினென், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாயிலென், தமிழ்ச் சைவ வாக்காளர், தமிழ்ச் சைவ வேட்பாளருக்கோ, தமிழ்ச் சைவ நன்மை பேணும் வேட்பாளருக்கோ, கட்சிக்கோ மட்டுமே எந்தச் சூழலிலும் எந்த நெருக்குவாரத்தையும் மீறி, எந்தக் கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி வாக்களிக்கவேண்டும் எனக் கோருவது என முடிபு செய்தோம். ஒரு மனதாக முடிபு செய்தோம்.

இலங்கையில் அகில இலங்கை இந்து மாமன்றம் தொடங்கி, நூற்றுக் கணக்கான தமிழச் சைவ நலன் பேண் அமைப்புகள் உள. அவற்றுள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில அமைப்புகளே இத்தகைய கோரிக்கையை வைக்கும் முடிபுகள் கொண்டன.

இந்த மண் தமிழ்ச் சைவ மண். புத்தர் முதன் முதலாக இலங்கையில் கால்வைத்த நாள் தைப் பூச நாள்.

தமிழும் சைவமும் மணக்கும் விழா நாள். தமிழர் இலங்கையின் தென்கோடியில் கூடயிருந்த நாள். முருகனுக்கு விழா நாள். (மகாவமிசம் படிக்க)

புத்தம் வந்தது, பாளி வந்தது.
சமணம் வந்தது, பிராகிருதம் வந்தது.
நம்பூதிரிகள் வந்தனர், வடமொழி வந்தது.
இசுலாம் வந்தது, அரபு வந்தது.
கிறித்தவம் வந்தது, இலத்தீன், போர்த்துக்கேயம், ஒல்லாந்தம், ஆங்கிலேயம் வந்தன.

தமிழ்ச் சைவர் இந்த வந்தேறிகளின் இலக்கு. மதம் மாற்றுவதே இந்த வந்தேறிகளின் இலக்கு. தமிழரின் மரபுவழித் தாயகத்தைத் தமதாக்குவதே இந்த வந்தேறிகளின் இலக்குஇவர்களின் மேலாதிக்க முயற்சியை மீறிச் தமிழும் சைவமும் வாழ்கிறது.

தமிழும் சைவமும் தொடர்ந்து வாழ, வளர, தேமதுரத் தமிழோசை பரவ, மேன்மை கொள் சைவ நீதி வழங்க, இவை பின்னிப்பிணைந்த தமிழ்த் தேசியம் செழிக்க, தமிழ்ச் சைவ வேட்பாளர்களுக்கே தமிழ்ச் சைவ வாக்காளர் வாக்களிக்கவேண்டும்.   

தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சிக்கே வாக்களிப்போம்.
வெல்வோம் வெல்வோம்.

நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை

மருத்துவர் கதிர்காமநாதன்

அடிமரத்தில் மாம்பழம்.
பறித்துச் சுவைத்தான் சிறுவன். 
இனிப்பாக இருந்தது. 
மற்றொரு பழம் மெல்லிய கிளையில் மேலே நுனியில் தொங்கிக் கொண்டிருந்தது!
எட்டி எட்டிப் பறிக்க முயன்றான்.
எட்டவில்லை. தொங்கித் தொங்கி முயன்றான்.
பறிக்க முடியவில்லை.
அந்தப் பழம் புளிக்கும் என விட்டு அகன்றான்.
எட்டாப் பழம் புளிக்குமா?
தன் இயலாமையை தன் ஆற்றாமையை தன் திறமையின்மையை, 
இனிப்பையே புளிப்பாக்கித் தன்மனத்தைத் தேற்றிக் கொண்டான்.

மல்லிகைப் பூவின் நறுமணம்.
மயக்கும் உணர்வைத் திருமணத்தில்.
என் வீட்டுத் தோட்டத்தில் எல்லாமே மல்லிகை.
நாள்தோறும் நீர் பாய்ச்சி வளர்க்கிறேன்.
எனக்கு அயலவர் எல்லை மதிலுக்கு அப்பால் மல்லிகை வளர்க்கிறார். அவரோடு எனக்குச் சில முரண்பாடுகள். அவர் நல்லவர் வல்லவர். ஆயினும் எனக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடுகள்.
மாற்றுக் கருத்து உள்ளவர் வீட்டு மல்லிகை சாக்கடையாக நாறுமா? நறுமணமாகப் பூக்குமா?
மாற்றான் தோட்டத்து மல்லிகையின் நறுமணமும் அதே அளவே.

சிவபெருமான் திருக்கழுத்தில் பாம்பு. பாம்பைக் கவ்வும் நோக்கம் கருடனுக்கு. சிவபெருமான் திருக்கழுத்தில் பாம்புக்குப் பாதுகாப்பு.

தன்னைக் கவ்வ முயலும் கருடனைப் பாம்பு கேட்டது, "கருடா சௌக்கியமா?"

"இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே. கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது."

கவிஞர் கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகளிலிருந்து எடுத்தேன்.

தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சி எனக்கு இனிக்கும் மாம்பழம்.
தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி நீர் வார்த்து, உரமிட்டு நான் வளர்க்க முயலும் மல்லிகை.
தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி சிவனின் திருக்கழுத்தில் பாதுகாப்பாக இருக்கும் பாம்பு.

எனக்கு எட்டாத மாம்பழம் புளிக்குமா? 
மாற்றான் தோட்டத்து மல்லிகை நறுமணம் தர மறுக்குமா?
இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் அனைவரும் நலமாக இருப்போமா? இல்லையா?

என் அருமைத் தம்பி இராசகுமாரன் 
பரந்த அறிவுள்ளவர்.
தனம் குறைந்தவர்.
தளர்வறியா மனத்தர்.
நிறைந்த நெஞ்சினர்.
சைவத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கையாளர்.
மன்னாரின் சைவ முன்னேற்றத்திற்கு உழைப்பவர். மதிநுட்பத்தால் சொல்கிறார், 
மருத்துவர் கதிர்காமநாதன் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என.
அந்தக் கருத்தை நான் வரவேற்பேன்.

சைவ மக்களின் வாக்குகளைச் சிதறவிடாமல் 
சிவன் கழுத்தில் பாம்பாகத் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி இருப்பதால் 
சைவத் தமிழரின் எதிர்காலம் வன்னித் தேர்தல் மாவட்டம் முழுவதும் கிடைக்கும் சைவத் தமிழரின் வாக்குகளால் ஒளிமயமாகும்.

வீடு வீடாகச் செல்வோம்.
கோடரிச் சின்னத்துக்கு வாக்குகளைச் சேகரிப்போம்.
தமிழ்தேசிய சைவ மக்கள் கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம் 

வெல்வோம் வெல்வோம் 

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

சங்கிலியன் 401ஆவது ஆண்டு

சங்கிலியன் 401ஆவது ஆண்டு நினைவு நாள்

சங்கிலி மன்னனின் நீத்தார் கடன் நிகழ்வுகள் நீர்நிலைகளில் நடைபெற உள்ளன. 

வடக்கே கீரிமலை தொடக்கம் தெற்கே கதிர்காமம் வரை 
மேற்கே உடைப்புத் தொடக்கம் கிழக்கே கல்முனை வரை பல்வேறு ஊர்களில் ஆறுகள் குளங்களில் கடல் ஓரத்தில் மன்னன் சங்கிலியனுக்கு நீத்தார் கடன் செய்யப் பலர் முன்வந்துள்ளனர்.

தீநுண்மி பரவாமல் தடுப்பதற்காகச் சமூக இடைவெளியைக் கருத்தில்கொண்டு நீத்தார் கடன் நிகழ்வுகளில் ஒருவர் அல்லது இருவர் பங்கேற்பர்.

வெள்ளிக்கிழமை 12.06.2020 காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பு சங்கிலியன் சிலைக்கு மாலை அணிவிக்க ஏணி வசதிகளை யாழ் மாநகரசபை செய்துள்ளது.

மாலை அணிவித்த பின் யமுனா ஏரி சென்று பூத்தூவி வழிபட மூத்த குடிமக்கள் வருவர்.

சனிக்கிழமை காலை 9 மணிக்குக் கீரிமலைக் கடற்கரை தொடக்கம் கதிர்காமம் மாணிக்க கங்கை வரை இலங்கை முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் நீத்தார் கடன் நிகழ்வுகள் நடைபெறும். சைவ சமய முறைப்படி நடைபெறும் இந்நிகழ்வுகளில் சைவக் குருமார் பங்கேற்பர்.

இல்லத்தில் இருந்தவாரே இந்த ஆண்டு சங்கிலியன் நினைவை நீத்தார் கடன்களை மேற்கொள்ளுமாறு சைவத் தமிழ் அன்பர்களைகக் கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டமாகக் கூடி நீத்தார் கடன்களைச் செய்வது பொருத்தமானதல்ல. தீநுண்மி பரவலைத் தடுப்போம். 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

தீயை அணைப்போம் யாழ் நாகவிகாரை

நான்கு வகையான எரிபொருள்கள்.
தீ பற்றினால் உடனே எரியக் கூடியன.
நான்குமே சடசடவென எரிந்து சாம்பலாகக் கூடியன.

ஒவ்வொரு எரிபொருளும் தனித்தனிக் குதமாக தனித்தனிக் களஞ்சியமாக.
நான்கு குதங்களும் ஒரே வளாகத்துள்.

குதங்களை அமைத்தவர்கள் செம்மையாக அமைக்கவில்லை.
அங்கங்கே சிறு ஒழுக்கு இருக்கும், சிறு கசிவு இருக்கும், சிறு ஊறல் இருக்கும்.

கசியும் எந்த இடத்திலோ ஒழுகும் எந்த இடத்திலோ ஊறும் எந்த இடத்திலோ சிறிய தீப்பொறி பற்றினாலே போதும். அந்தக் குதம் சாம்பலாகும். அருகிலுள்ள குதம் சேதமாகும். அதுக்கு அடுத்த குதம் அழியும். நான்காவதும் நாசமாகும்.

தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ விளங்கியோ விளங்காமலோ தீப்பொறி ஒன்றை ஒருவர் அந்தக் குதங்களின் நடுவே வீசுவராயின் வீசுபவரையும் சேர்த்து எரிபொருள் குதங்கள் வெடிக்கும். தீ நாக்குகள் சுவாலையாகும். தீப் பொறிகள் பறக்கும். அனைத்தும் எரிந்து விடும். அழிந்துவிடும்.

இலங்கைத் தீவுக்கும் எரிபொருள் குத வளாகத்துக்கும் வேறுபாடு இல்லை.  ஒரே தீவுக்குள் வாழ்ந்தாலும் நான்கு சமயத்தவரும் தனித் தனித் தீவாக வாழ்கின்றனர்.

சமயத்தவர் நால்வருக்குமே மனக்குறைகள் உள. அவையே கசிவுகளாவும் ஒழுக்குகளாகவும் ஊறல்களாகவும் உள.

தீப்பெட்டி களையும் தீப்பந்தங்களை ஏந்தியவாறு நான்கு சமயங்களில் உள்ளவர்களும் அலைகின்றானர். எரிபொருள் குதங்களுக்கு அருகில் இருக்கிறோமே என்ற கவலை இல்லாமல் அலைகின்றனர்.

 9 6 2020 செவ்வாய்க்கிழமை இரவு ஒன்பது மணியளவில் ஆரியகுளம் சந்தியை முகப்பாக கொண்ட யாழ்ப்பாணம் நாக விகாரையின் புத்தர் சிலையைக் காத்த கண்ணாடிகளை உடைத்தவர்கள் தீப் பெட்டிகளையும் தீக்குச்சிகளையும் தீப்பந்தத்தையும் எரிபொருள் குதங்கள் அருகே கொண்டு சென்றவர்கள்.

கசிவுகளும் ஒழுக்குகளும் ஊறல்களும் நிறைந்த எரிபொருள் குதங்கள் அருகே தீப்பந்தத்தை எடுத்துச் செல்லாதீர்கள் எனச் சொல்வது நான்கு சமயச் சான்றோர் கடன்.

அவரவர் சமய எல்லைகளுக்குள் அவரவர் வாழ்வதே இன்றைய காலத்தின் கட்டாயம். சமய நம்பிக்கைகளைக் குலைத்து வெறுப்பையும் வேதனையையும் உருவாக்கி வளர்க்கும் எவரின் நடவடிக்கைகளும் மீண்டும் இலங்கைத் தீவை வன்முறைக் காடாக்கும்.

அரசும் மதகுருமார்களும் பொதுமக்களும் தங்கள் சமய எல்லைகளுக்குள் வாழ்வதற்கு உரிய வழிவகைகளை எடுத்து நோக்காவிட்டால் வெறுப்பையும் வேதனையையும் வேகமாக வளர்க்கும் தீப் பந்தங்கள் ஆக எரிபொருள் குதங்கள் அருகே மாறுகின்றனர்.

சைவர்களும் புத்தர்களும் இணக்கமாக வாழவேண்டும். சைவர்களை அரவணைத்துச் செல்லப் புத்தர் முயல்வார்களாக. இப் பாரிய பொறுப்பு பெரும்பான்மை எண்ணிக்கையில் தீவில் வாழ்கின்ற புத்தருக்கு உண்டு. 

யாழ்ப்பாணம் நாக விகாரைக்குச் சென்றேன். சேதம் ஏற்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தேன். இணக்கமாக வாழ்வதற்கு அனைவரும் முயல வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன்.

மன்னாரில் 18,700 சைவ வாக்குகள்

மன்னார் மாவட்டத்தில் 88,842 வாக்காளர் வாக்களிக்கலாம் என மன்னார் மாவட்டத் தேர்தல் துணை ஆணையர் வெளியிட்டிருந்த அறிக்கையை ஊடகங்களில் பார்த்தேன். 

2012ஆம் ஆண்டு இலங்கை அரசின் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையின் மன்னார் மாவட்டத்தில் மக்கள் தொகை 99,570.

2019ஆம் ஆண்டு மன்னாரின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகள் தயாரித்த மக்கள் தொகை அறிக்கைகளில் மன்னார் மாவட்ட மக்கள்தொகை 162,906.

ஒன்பது ஆண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் 99,570 + 63,336 = 162,906.

24,027 சைவர் தொகை + 3,463 (1.6%) = 27,490 ஆகியது.
57,205 கிறித்தவர் தொகை + 8,425 (1.6%) = 65,630 ஆகியது.
16,512 முகமதியர் தொகை + 52,415 (35%) = 68,927 ஆகியது.
1,809 புத்தர் தொகை -950 (-6%) = 859 ஆகியது.

2011ல் 24.13% ஆக இருந்த சைவர் 2019இல் 16.87% ஆகக் குறைந்தனர்.
2011இல் 57.45% ஆக இருந்த கிறித்தவர் 2019இல் 40.3% ஆகக் குறைந்தனர்.
2011இல் 16.58% ஆக இருந்த முகமதியர் 2019இல் 42.3% ஆகப் பெருகினர்.
2011-இல் 1.8% ஆக இருந்த புத்தர் 2019இல் 0.52% ஆகக் குறைந்தனர்.

மன்னாரின் மக்கள் தொகையில் 25% தொடக்கம் 28% வரை 18 வயதுக்குக் குறைந்தோர்.

எனவே 2019 பிரதேச செயலர் பிரிவுகளின் மக்கள் தொகை மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய 120,000 பேர் வாக்களிக்கத் தகுதி உடையவர்.

எனினும் 88,842 பேரே வாக்காளராக உள்ளதாக மன்னார் மாவட்டத் தேர்தல் துணை ஆணையர் கூறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகையில் 28% மக்கள் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் தோராயமாக 30,000 பேர் வாக்காளர்களாகப் பதியவில்லை எனத் தெரிகிறதே?

சைவர்களுள் 90% மக்கள் வாக்காளராகப் பதிந்திருப்பர் என்று மதிப்பிடலாம். 

27,490 சைவர்களுள், 18 வயதுக்குக் குறைந்தோர் தோராயமாக 7,000 பேர் எனில் 

20,500 சைவ வாக்காளர்களுள் 90% பதிவாகி இருந்தால் மன்னாரில் 18,000 சைவர்கள் வாக்காளராக இருப்பார்கள் என்று மதிப்பிடலாம்.

இணையத்திலும் பிரதேச செயலகங்களிலும் நான் பெற்ற தகவல்களே மேற்காணும் எனது மதிப்பீடுகளுக்குத் தளங்கள்.

இந்த மதிப்பீட்டுக்கு அமைய ஒவ்வொரு நிலதாரிப் பிரிவிலும் சைவர்களுள் 65% வாக்காளராக இருப்பர் என மதிப்பிட்டு அந்த வாக்குகள் அனைத்தையும் தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சிக்குப் பெற்றாக வேண்டும்.

முசலிப் பிரதேச செயலகப் பிரிவில் 207 சைவர். ஆகக் குறைந்தது 170 வாக்குகள் அங்கே தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சிக்காக் காத்திருக்கின்றன. வேறு எவருக்கும் அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 3899 சைவர்கள். இவர்களுள் ஆகக்குறைந்தது 2,700 வாக்குகள் உள்ளன. அவற்றை முழுமையாகப் பெறுவதற்குத் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சித் தொண்டர்கள் வீடுவீடாகச் செல்லவேண்டும் வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்க.

மடு பிரதேச செயலகப்பிரிவில் 5188 சைவர்கள் வாழ்கின்றனர். ஆகக் குறைந்தது 3,500 சைவ வாக்குகள் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சிக்காக மடுவில் காத்திருக்கின்றன. தொண்டர்களே வீடுவீடாகச் செல்லுங்கள் வாக்கு சிதற விடாமல் பார்த்துக் கொள்க.

மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 8,470 சைவர்கள் வாழ்கிறார்கள். ஆகக்குறைந்தது 5,750 சைவ வாக்குகள் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பாளருக்குக் காத்திருக்கின்றன. தொண்டர்களே வீடுவீடாகச் செல்லுங்கள். ஆத்திமோட்டை, கூரை போன்ற சில கிராமங்களில் சைவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.

மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் 9,666 சைவர்கள் வாழ்கின்றனர். ஆகக் குறைந்தது 6,500 சைவ வாக்குகள் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பாளருக்குக் காத்திருக்கின்றன.

முசலியில் 170 வாக்குகள் 
நானாட்டானில் 2,700 வாக்குகள் 
மடுவில் 3,500 வாக்குகள் 
மாந்தை மேற்கில் 5,750 வாக்குகள் 
மன்னார் நகரத்தில் 6,500 வாக்குகள் 
தோராயமாக 18,700 வாக்குகள் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பாளருக்குக் காத்திருக்கின்றன.

வீடு வீடாகச் செல்வோம்
திருநீறு அணிவிப்போம்
கோடரிச் சின்னம் காட்டுவோம் 
வேட்பாளர் பட்டியல் கொடுப்போம் 
விருப்பு வாக்கு முறையைச் சொல்லிக் கொடுப்போம் 

வெல்வோம் வெல்வோம் 

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
சிவ சேனை

சைவத்துக்கு முன்னுரிமை

முல்லைத்தீவில் மருத்துவராக இருக்கிறார்.
மருத்துவ நிலையம் ஒன்றை அமைத்துச் செவ்வனே நடத்தி வருகிறார்.

முல்லைத்தீவில் மருத்துவர் சிவமோகன் ஆற்றும் பணிகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மருத்துவப் பணிகளுக்கு அப்பால் தான் சார்ந்த சமூகத்திற்கு, தன் நேரத்தையும் அறிவையும் திறமையையும் பயன்படுத்த, மக்களின் சார்பாக இலங்கை நாடாளுமன்றத்திலும் உறுப்புரிமை பெற்றுப் பணிபுரிந்திருக்கிறார் மருத்துவர் சிவமோகன்.

அவர் பெயரிலேயே புதைந்திருக்கும் சைவத்தின் மாட்சி சிவபெருமானின் ஆட்சி.

எனவே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சைவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என அவர் கூறியிருக்க வேண்டும் அவ்வாறு அவர் கூறவில்லை.

கத்தோலிக்கருடைய நன்மையைப் பேணுவேன். இயேசு இறைத்தூதர் எனத் தன்னைத் தானே அழைத்துக் கொண்டாலும் அல்ல அல்ல இயேசு கடவுள் சிவபெருமான் அவருக்கு ஒப்பான கடவுள் என இயேசுவையும் அவமதிப்பேன். சிவபெருமானையும் அவமதிப்பேன் நாடாளுமன்றத்தில் இவ்வாறு பேசுவேன் என்றவர் செல்வம் அடைக்கலநாதன்.

செல்வம் அடைக்கலநாதன் சாள்ஸ் நிர்மலநாதன் வடமாகாணசபை உறுப்பினர் தினேசுவரன் போன்றோர் கத்தோலிக்கர் நலம்பெற முனைப்புடன் செயலாற்றுகின்றனர்.

முகமதியர்களின் நலனைப் பேணுவோம். இருப்பைப் பாதுகாப்போம். பெருக்கத்தை உறுதி செய்வோம். புதிய குடியேற்றங்களை அமைப்போம் என்று முனைப்புடன் பணியாற்றுவோர் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காதர் மசுத்தான் இரிசாத்தர் பதியுதீன் ஆகியோர்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சைவ மக்களுக்காக குரல் கொடுப்பேன் என மருத்துவர் சிவமோகன் ஒருமுறையேனும் சொன்னதில்லை. 

திருக்கேதீச்சர வளைவு உடைப்பை நேரில் பார்த்துச் செப்பனிட அக்கால இந்து சமய விவகார அமைச்சர் மாண்புமிகு மனோ கணேசன் அவர்கள் மன்னார் மாவட்டம் வரவேண்டும் என்கிறார். மன்னார் ஆயர் அவரைச் சந்திக்கத் தவிர்க்கிறார். செல்வம் அடைக்கலநாதன் சாள்ஸ் நிர்மலநாதன் இருவரும் அமைச்சரை மன்னாருக்கு வர விடாமல் தடுக்கிறார்கள்.

வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் சைவர்களுக்காகத் தலையிடவில்லை. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏறத்தாழ 5,000 வாக்குகளை மன்னார் மாவட்டத்தில் பெற்று வெற்றி பெற்ற மருத்துவர் சிவமோகன் சைவர் நலம் பேண மாண்புமிகு மனோ கணேசனை அழைத்து வரவே இல்லை.

சைவத்தின் மாட்சியாகச் சிவபெருமானின் ஆட்சியாகத் தனது பெயரைச் சிவமோகன் என வைத்திருப்பவரைப் பாராட்ட வேண்டும். ஆனால் சைவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். 

திருக்கேதீச்சர வளைவு உடைந்த பின்பு எத்தனை முறை அவர் திருக்கேதீச்சரம் வந்தார்? நிலையை பார்வையிட்டார்? வளைவை மீண்டும் கட்டுவதற்குரிய வழிகளைக் கையாண்டார்? என யாராவது எனக்குச் சொல்ல முடியுமா?

மன்னார் மாவட்டத்தில் உள்ள சைவத் திருக்கோயில்களுக்கு மருத்துவர் சிவமோகன் நிதி ஒதுக்கினார் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினருக்கு மக்கள் வரிப்பணத்தில் ஒதுக்கும் நிதியை அனைத்துச் சமயக் கோயில்களுக்கும்  பங்கிடுகிறார்கள். சைவர்களுக்கும் ஒதுக்குகிறார்கள். இதை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் செய்வார். மருத்துவர் சிவமோகனின் நாடாளுமன்ற நிதி ஒதுக்கீட்டில் கத்தோலிக்க கிருத்தவ திருக்கோயில்களும் நன்மை பெறவில்லையா?

மருத்துவர் சிவமோகன் சைவ வாக்குகளைத் தேடி வவுனியாச் சைவ அமைப்புகளின் தலைவர்களிடம் சென்றிருக்கிறார். மன்னார்ச் சைவ அமைப்புகளின் தலைவர்களிடம் கோரியிருக்கிறார்.

வேம்பையும் பாம்பையும் வழிபடும் உங்களுக்கு விவேகானந்தர் சிலை ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், செட்டிகுளம் சைவரிடம் கேட்டபோது மருத்துவர் சிவமோகன் தலையிட்டாரா? விவேகானந்தர் சிலை அமையவேண்டும் என்று வாதிட்டாரா?

வீட்டுக்கு வாக்களித்தோம் சைவர்களின் கேட்டுக்கு வாக்களித்தோம் எனச் செட்டிகுளம் சைவர்கள் அழுதுகொண்டு அரற்றுகின்றனர்.

திருக்கேதீச்சர வளைவு உடைப்பில் தளையிட்டோரைப் பிணையில் எடுத்தவர்களின் பெயர்களைப் பார்த்தபின்பு,  வீட்டுக்கு வாக்களித்தோமா? சைவர்களின் கேட்டுக்கு வாக்களித்தோமா? திருக்கேதீச்சர வளைவிக்கும் தள்ளாடிப் பிள்ளையார் கோவிலுக்கும்  மூன்றாம் பிட்டி அம்மன் கோயிலுக்கும்  வெள்ளாங்குளம் பிள்ளையார் கோவிலுக்கும்  நானாட்டான்  அரிப்பு  சிலாவத்துறை  சைவ வழிபாட்டு இடங்களுக்கும் வேட்டுவைக்க வாக்களித்தோமா? என மன்னார் மாவட்டச் சைவர்கள் ஆற்றாது அழுத கண்ணீர் விட்டு அழுதார்கள்.

வவுனியா நகரத்தில் செட்டிகுளத்தில் மாந்தை மேற்கில் மன்னார் நகரத்தில் நானாட்டானில் முசலியில் மடுவில் வாழ்கின்ற சைவப் பெருமக்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுக்கு வாக்களித்தோமே சைவர்களின் கேட்டுக்கு வாக்களித்தோமே சைவ வழிபாட்டு இடங்களை வேட்டுவைக்க வாக்களித்தோமே எனத் தங்கள் தவறை உணர்ந்து கொண்டார்கள். தலையில் அடித்துக் கொண்டார்கள்.

திருக்கேதீச்சரப் பெருமானை வழிபட்டனர். மன்னார் மாவட்டச் சைவ குருமார் ஒன்றியத்திடம் சென்றார்கள். எங்களைக் கைவிடாதீர்கள் எனக்கேட்டனர்.

சைவர்களுக்குத் தனியான நாடாளுமன்ற உறுப்பினர் தேவை எனக் கேட்டார்கள். வீட்டுக் கட்சியிடம் கேட்டோம். மறுத்தார்கள். எனவே தனியாகப் போட்டியிடுகிறோம் எனத் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சியை அமைத்தனர்.

சைவ மக்கள் வேண்டுகோளுக்கமைய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சைவர்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுக்க ஆவன செய்தனர்.

வன்னித் தேர்தல் மாவட்டச் சைவர்களே
மன்னார் மாவட்டச் சைவர்களே

எங்களுக்குள் ஆயிரம் பிணக்குகள் இருக்கும் 
ஆயிரம் குறைகள் இருக்கும்
ஆயிரம் சில்லெடுப்புகள் இருக்கும்

எங்களுக்குள் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு குற்றம் கண்டு கொண்டு இருப்பதற்குரிய நேரம் தேர்தல் நேரம் அல்ல.

சைவ சமயத்தை அழிக்க நினைக்கும் எதிரிகள் 
நிதி வளத்தால் 
ஆளணி வளத்தால் 
அமைப்பு வளத்தால் 
ஒற்றுமை வளத்தால்
உரம் ஏறி உருக்கொண்டு
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 
சைவர்களை 
வேரோடும் வேர் மண்ணோடும்
அழித்து ஒழித்துப் புதைக்கக் 
கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பிணக்குகளை மறந்து இணக்கமாகவும்
குறைகளை மறந்து நிறைவாகவும்
சில்லெடுப்புகளை மறந்து சிலிர்த்து எழுந்து
சைவர்களாக ஒன்றிணைய வேண்டியதே 
காலத்தின் கட்டாயம்.

தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சியினர் இலங்கை வரலாற்றில் முதல் முதலாகச் சைவ சமயத்தை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

கிருத்தவ தேவாலயங்களிலும் முகமதிய மசூதிகளிலும் தீர்மானிக்கிறார்கள். தெற்கே புத்தபிக்குகள் வீடுவீடாகச் செல்கிறார்கள். புத்த சமயத்தைக் காக்க வாக்களிக்குமாறு கேட்கிறார்கள்.

புத்த பிக்குகளின் வழிகாட்டல்களைப் புத்த சமய மக்கள் ஏற்கிறார்கள் .

பாதிரியாரின் வழிகாட்டல்களைக் கிறித்தவ மக்கள் ஏற்கிறார்கள் 

இமாம்களின் வழிகாட்டல்களை முகமதியர்கள் ஏற்கிறார்கள்

சைவக் குருமார் எங்களை வழிகாட்ட முன்வந்திருக்கிறார். வியப்பிலும் வியப்பு. ஏனெனில் திருக்கோயிலுக்கு வெளியே எந்த விவகாரத்திலும் எப்பொழுதும் தலையிடாதவர்கள்.

சைவத்துக்கு தமிழுக்கு தமிழ் தேசியத்திற்கு ஆபத்து என்றதும் புத்த பிக்குகளைப் போல் பாதிரியார்களைப் போல் இமாம்களைப் போலச் சைவக் குருமார்களும் முன்வந்திருக்கிறார்கள்.

பிணக்குகளை மறப்போம் 
குற்றம் கடிதலைக் கைவிடுவோம் 
சைவத்துக்கு முன்னுரிமை அளிப்போம் 
சிவபெருமானை நம்புவோம் 
திருநீற்றைப் பெருமையாகக் கொள்வோம்.

சைவ சமயத்தைச் சார்ந்த சைவப் பேராளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம்.

வீட்டுக்கு வாக்களிப்பது சைவத்தின் கேட்டுக்கு வாக்களிப்பதை ஒக்கும். வீட்டுக்கு வாக்களிப்பது சைவ வழிபாட்டு இடங்களை வேட்டு வைப்பதை ஒக்கும்.

கோடரிச் சின்னத்திற்கு வாக்களிப்போம்
சைவத்தின் மாட்சியை மீட்டெடுப்போம் 

வெல்வோம் வெல்வோம் 

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

சாவித்திரி சென்னை ஐந்து கோடி

ஆனி 27, 2051 சனி (11.07.2020)
1 இந்தியாவில் உள்ள இந்துக்களை மதம் மாற்றுவதற்கும்
2 இந்துக் கோயில்களைச் சாத்தான் கோயில்கள் எனக் கூறுவதற்கும்
3 திருநீறு அணிவது தவறானது
4 பொட்டு வைப்பது தவறானது
5 பூ வைப்பது தவறானது
எனக் கூறுவதற்கும்
6 தமிழ்ப் பெயர்களை மாற்றி இலத்தீன் சார் ஆங்கிலப் பெயர்களை வைப்பதற்கும்
7 மதம் மாற்றுவதற்கும்
ஆக
2020 ஜனவரி தொடக்கம் 2020 மார்ச் மாதம் வரையான மூன்று மாத காலப்பகுதியில்
இலங்கை ரூபா 5 கோடிக்குச் சமமான இந்திய ரூபாய் நன்கொடையாகப் பெற்றிருக்கிறார்கள்.
யார்?
திருமதி சாவித்திரி சுமந்திரன் தெற்கு ஆசியப் பிராந்திய செயலாளராகப் பணிபுரியும் அமைப்பான மதம் மாற்றுவதற்கான அனைத்துலக மாணவர் அமைப்பின் International Fellowship of Evangelical Students இந்தியச் சார்பு நிறுவனம். Union of Evangelical Students of India.
இந்தியாவுக்கு வருகிறார்
இந்தியாவுக்குப் பணம் அனுப்புகிறார்
இந்திய மரபுகளை உடைக்கிறார்
இந்தியக் கோயில்களைத் சாத்தான்களின் கோயில்கள் என்கிறார்
ஆபிரகாமியப் பெயர்களைப் புகுத்துகிறார்
ஆபிரகாமிய மதங்களைப் புகுத்துகிறார்
ஆபிரகாமிய மரபுகளைப் புகுத்துகிறார்
இச்செயல்களை உங்களால் தடுக்க முடியாதா?
உங்கள் ஊரவர்
உங்கள் நாட்டவர்
உங்கள் இனத்தவர்
தமிழரான திருமதி சாவித்திரி சுமந்திரன்
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு சுமந்திரன் அவர்களின் துணைவியார் அவர்களே இச்செயல்களைச் செய்கிறார்கள்.
உங்களால் தடுத்து நிறுத்த முடியாதா?
நாங்கள் இந்துக்களாக வாழ விரும்புகிறோம்
இந்துக்களாகத் தொடர விரும்புகிறோம்
இந்துக் கோயில்களைப் பாதுகாக்க விரும்புகிறோம்
எங்களைத் தடுப்பவர் உங்கள் நாட்டவர்
என இந்திய இந்து அமைப்புகள் என்னிடம் நேரடியாகக் கேட்கிறார்கள்.
இலங்கையில் குடியரசுத் தலைவரின் தொல்லியல் செயலணியைத் தடுக்கவேண்டும் என உங்கள் சார்பில் மருத்துவர் சத்தியலிங்கம் கேட்கிறார்.
இலங்கை இந்துக்களைக் காப்பாற்ற இந்தியா வர வேண்டும் என மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேட்கிறார்.
இந்தியா இல்லாமல் தீர்வுகள் கிட்டாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சிவஞானம் கூறுகிறார்.
இந்திய மரபுகளை அழித்துக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியின் சுமந்திரனின் மனைவியைத் தடுக்க முடியாத நீங்கள்
எப்படி எங்களிடம் உதவி கேட்கலாம் என இந்திய இந்து அமைப்புகள் என்னிடம் கேட்கிறார்கள்.
Savithri, Regional Secretary, International Fellowship of Evangelical Students, International Services, 5 Blue Boar Street, Oxford OX1 4EE United Kingdom
+44 (0)1865 263777 info@ifesworld.org
Union Of Evangelical Students Of India, 19/10, Millers Road, Kilpauk, Chennai – 10, Tamil Nadu +91 44 2643 3754, info@uesi.in
UESI Seeks To Evangelize Post-Matric Students In India, Nurture Them As Disciples Of The Lord Jesus Christ, That They May Serve The Church And The Society.
UESI received from donors 20.7 million Indian rupees (51 million in Sri Lankan rupees) during Jan 2020 to March 2020.
Allen Christopher, INR 32,635 SLR 81,587
P B 486 PENNANT HILLS NSW 1715, Australia
Rex Christopher, INR 32,635 SLR 82,587
P B 486 PENNANT HILLS NSW 1715, Australia
Suresh G and Rajula J Chandran, INR 185,354
6405 Tara Place, Clarksville, Maryland 21029 , United States
UK Friends of UESI, INR 183,354 SLR 463,385
5 Oagwood Rd, Henleage, Bristol, BS9 4NP, UK , United Kingdom
MEANS, INR 29,090 SLR 72,725
P O Box 1578, South Wales, PA 19484, United States of America
Overseas Friends of UESI, INR 19,102,926 SLR 47,757,325
10570, Glen Drive, North Royalton, OH - 44133, United States of America
Daniel T, INR 19,746 SLR 49,365
41, Rockbluff Place, NW Calgary, AB T3G 5B1, Canada
Bennet P. John, 14,258 SLR 35,645
3404 Noblessa Way, Rancho Cordova, CA 9567-6931 , United States of America
Suthakar L Sunkari, 28,692 SLR 71,730
685 Hillswick Circle, Folsom, CA 956308472 , United States of America
Friends of UESI Australia INR 454,978 SLR 1,137,445
P B 486 PENNANT HILLS NSW 1715, Australia
IFES INR 200,831 SLR 502,077
5 Blue Boar, Street, OXFORD, OX1 4EE , United Kingdom
Jayanthi Jacob INR 570,420 SLR 1,426,050
982 La Mesa Ter Unit, E Sunnyvale, CA 94070 , United States of America
Total INR 20,783,132 SLR 51,957,830
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
Navaratnavel Sangarappillai, Kethis Arumainayakam மற்றும் 20 பேர்
3 கருத்துக்கள்
15 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

சிறுமைச் செருக்கரின் காவி

ஆனி 11, 2051 சனி (11.07.2020)
காவியோடு பிறந்தவர்
தொப்புள்கொடியை நீக்க முன்பே
காவிப் போர்வையைக் கண்ட தாதியர்
இவர் ஓர் அதிசயப் பிறவி என்றனர்
பிறப்போடு வந்த காவி
இறக்கும் வரை தன்னோடு இருக்கும்
இறந்த பின்னும் தன்னோடு தொடரும்
என்று நம்புபவர் கம்பவாரிதி ஜெயராஜ்
மற்றவர்கள் எல்லாம்
திடீரெனக் காவிச் சட்டை போடுகிறவர்கள்
என்று கண்டுபிடித்துள்ளார்
உண்மைதான்
அவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும்
பிறந்து வளர்ந்த பின்புதான்
காவிச் சட்டை போடுகிறார்கள்.
அவர் மட்டுமே
பிறக்கும்போதே காவி ஆடையோடு பிறந்தவர்
அதிசயப்பிறவி.
பிரமச்சரியம்
இல்லறம்
வானப்பிரஸ்தம்
சந்நியாசம்
என்று
நான்கு நிலைகளை
மனிதருக்கு விதித்து உள்ளார்கள்
எனவேதான் என்னைப்பார்த்து
மனிதர் என்கின்றார்
அவர் அதிசயப்பிறவி
மனிதரல்ல.
பிரம்மச்சரியத்தில் இருந்தேன்
இல்லறத்தில் இருந்தேன்
வானப்பிரஸ்தத்துக்கு வந்திருக்கிறேன்
அரைவாசி காவி
அரைவாசி வெள்ளையாக
துறவு நிலை வந்தால்
முழுமையாகக் காவி உடை அணிவேன்.
அவரைப் போல
அதிசயப் பிறவியாகப்
பிரம்மச்சரியத்தில் கம்பு சுத்த வில்லை
இல்லறத்தில் கம்பு சுத்த வில்லை
வானப்பிரஸ்தத்தில் கம்பு சுத்தவில்லை
சன்னியாசியாக இருந்துகொண்டே கம்பு சுத்த வில்லை.
கம்பு சுத்தியதான குற்றச்சாட்டுகளை
என்னைப்பற்றி எவரும் எழுதவில்லை.
காலையில் பட்டிமன்றத்தில்
வாலி சிறந்தவன்
இராமன் அம்பு விட்டது பிழை
என்பார்.
மாலைப் பட்டிமன்றத்தில்
வாலி மோசமானவன்
இராமன் அம்பு எய்தது சரி
என்பார்.
அவரே கம்பவாரிதி.
கம்பன் கழகத்தின் பொறுப்பாளராக
நீதியரசர் விக்னேஸ்வரன் இருந்தார்.
இவர் தயவில்
இருந்ததாக நினைத்துக்கொண்டு
அவரை நீக்கினாரா?.
சிறுமைச் செருக்கர்
கம்பவாரிதி.
விக்னேஸ்வரன்
முதலமைச்சர் ஆக வேண்டும்
என்று முறியாய் முறிந்தார்.
விக்னேஸ்வரன்
தாடியும் திருநீறும் கொண்டவர்
என்று இப்பொழுது கிண்டல் செய்கிறார்.
இவர் அழைத்துக்
கம்பர் விழாவிற்கு
முதலமைச்சராக வரவில்லை
என்று ஒரே ஒரு கோபமே காரணமோ?
நான் அறிவியல் மாணவன்
தமிழையும் எழுதுவேன்
அறிவியலைத் தமிழில் எழுதுவேன்.
ஆங்கிலச்சொல் கலக்காமல் எழுதுவேன்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக
எட்டாம் ஒன்பதாம் வகுப்பு
இலங்கை மாணவர்கள்
எனது கட்டுரையைத்
தமிழ் மொழிப் பாட நூலில்
படித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டு மாணவர்களின் பாடநூலில்
திருமுறைகளுக்கான எனது பங்களிப்பு
எட்டாம் ஒன்பதாம் வகுப்பு
மாணவர்களுக்குப்
பாடநூல் வழி சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இவர் எழுத்தில் பேச்சில்
ஆங்கிலம் விரவி வரும்
வடமொழி விரவி வரும்
சீற் என்ற சொல் தமிழா?
நோபோல் தமிழா
அவற்றுக்குத் தமிழ் இல்லையா?
இவர் எழுதி
எந்தக் கட்டுரையானது
எவராவது
பாடநூலில் வைத்திருக்கிறார்களா?
சத்தில்லாத எழுத்தரே கம்பவாரிதி.
காலை ஒன்று பேசுவார்
மாலை ஒன்று பேசுவார்
முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவார்.
கிண்டலும் கேலியுமாகப் பேசுவார்.
சுவை இருக்கும்
ஆனால் சத்து இருக்காது.
குடிகாரன் பேச்சு எனத்
தொடங்கும் பழமொழியை
நினைவூட்டுபவர்.
பேசத் தொடங்கும் பொழுது
எதை நோக்கிப் பேசுவாரோ
அதே தலைப்பில்
பேச்சை முடிக்கத் தெரியாதாவர்.
தலைப்பை ஒட்டி பேசத் தெரியாதவன்
பேச்சாளனே அல்ல
எனப் பலமுறை
பேராசிரியர் அசஞா
என்னிடம் கூறியிருக்கிறார்
மெல்லத் தமிழினிச் சாகும்
என்று பேதை ஒருவன் பிதற்றினாள்
எனப் பாரதியார் சொல்லுவார்.
தொலைந்து போகும்
தமிழ்ச் சாதி
எனப் பிதற்றும் அந்தப் பேதையே
கம்பவாரிதி ஜெயராஜ்
அவரை விடுங்கள்
பெறுமதி அற்ற பேச்சாளர்.
காசுக்கும் காதுக்கும் அலைபவர்
காசு கிடைக்கும் இடத்தில்
குடி கொள்பவர்.
காசாசையால் கலைத்ததால்
கொழும்பில் ஊன்றியவர்.
சுமந்திரன் கம்பர் விழாவைக்
கொழும்பில் நடத்தக்
காசு கொடுத்து இருப்பாரோ?
நன்றிக் கடனாக
நாயாய்க் குரைக்கிறாரோ?
கம்பவாரிதி ஜெயராஜ்
காசேதான் கடவுளடா.
Jegan Nathan, இரா. செந்தில் மற்றும் 3 பேர்
1 கருத்து
2 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்