Sunday, July 12, 2020

மன்னாரில் 18,700 சைவ வாக்குகள்

மன்னார் மாவட்டத்தில் 88,842 வாக்காளர் வாக்களிக்கலாம் என மன்னார் மாவட்டத் தேர்தல் துணை ஆணையர் வெளியிட்டிருந்த அறிக்கையை ஊடகங்களில் பார்த்தேன். 

2012ஆம் ஆண்டு இலங்கை அரசின் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையின் மன்னார் மாவட்டத்தில் மக்கள் தொகை 99,570.

2019ஆம் ஆண்டு மன்னாரின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகள் தயாரித்த மக்கள் தொகை அறிக்கைகளில் மன்னார் மாவட்ட மக்கள்தொகை 162,906.

ஒன்பது ஆண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் 99,570 + 63,336 = 162,906.

24,027 சைவர் தொகை + 3,463 (1.6%) = 27,490 ஆகியது.
57,205 கிறித்தவர் தொகை + 8,425 (1.6%) = 65,630 ஆகியது.
16,512 முகமதியர் தொகை + 52,415 (35%) = 68,927 ஆகியது.
1,809 புத்தர் தொகை -950 (-6%) = 859 ஆகியது.

2011ல் 24.13% ஆக இருந்த சைவர் 2019இல் 16.87% ஆகக் குறைந்தனர்.
2011இல் 57.45% ஆக இருந்த கிறித்தவர் 2019இல் 40.3% ஆகக் குறைந்தனர்.
2011இல் 16.58% ஆக இருந்த முகமதியர் 2019இல் 42.3% ஆகப் பெருகினர்.
2011-இல் 1.8% ஆக இருந்த புத்தர் 2019இல் 0.52% ஆகக் குறைந்தனர்.

மன்னாரின் மக்கள் தொகையில் 25% தொடக்கம் 28% வரை 18 வயதுக்குக் குறைந்தோர்.

எனவே 2019 பிரதேச செயலர் பிரிவுகளின் மக்கள் தொகை மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய 120,000 பேர் வாக்களிக்கத் தகுதி உடையவர்.

எனினும் 88,842 பேரே வாக்காளராக உள்ளதாக மன்னார் மாவட்டத் தேர்தல் துணை ஆணையர் கூறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகையில் 28% மக்கள் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் தோராயமாக 30,000 பேர் வாக்காளர்களாகப் பதியவில்லை எனத் தெரிகிறதே?

சைவர்களுள் 90% மக்கள் வாக்காளராகப் பதிந்திருப்பர் என்று மதிப்பிடலாம். 

27,490 சைவர்களுள், 18 வயதுக்குக் குறைந்தோர் தோராயமாக 7,000 பேர் எனில் 

20,500 சைவ வாக்காளர்களுள் 90% பதிவாகி இருந்தால் மன்னாரில் 18,000 சைவர்கள் வாக்காளராக இருப்பார்கள் என்று மதிப்பிடலாம்.

இணையத்திலும் பிரதேச செயலகங்களிலும் நான் பெற்ற தகவல்களே மேற்காணும் எனது மதிப்பீடுகளுக்குத் தளங்கள்.

இந்த மதிப்பீட்டுக்கு அமைய ஒவ்வொரு நிலதாரிப் பிரிவிலும் சைவர்களுள் 65% வாக்காளராக இருப்பர் என மதிப்பிட்டு அந்த வாக்குகள் அனைத்தையும் தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சிக்குப் பெற்றாக வேண்டும்.

முசலிப் பிரதேச செயலகப் பிரிவில் 207 சைவர். ஆகக் குறைந்தது 170 வாக்குகள் அங்கே தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சிக்காக் காத்திருக்கின்றன. வேறு எவருக்கும் அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 3899 சைவர்கள். இவர்களுள் ஆகக்குறைந்தது 2,700 வாக்குகள் உள்ளன. அவற்றை முழுமையாகப் பெறுவதற்குத் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சித் தொண்டர்கள் வீடுவீடாகச் செல்லவேண்டும் வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்க.

மடு பிரதேச செயலகப்பிரிவில் 5188 சைவர்கள் வாழ்கின்றனர். ஆகக் குறைந்தது 3,500 சைவ வாக்குகள் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சிக்காக மடுவில் காத்திருக்கின்றன. தொண்டர்களே வீடுவீடாகச் செல்லுங்கள் வாக்கு சிதற விடாமல் பார்த்துக் கொள்க.

மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 8,470 சைவர்கள் வாழ்கிறார்கள். ஆகக்குறைந்தது 5,750 சைவ வாக்குகள் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பாளருக்குக் காத்திருக்கின்றன. தொண்டர்களே வீடுவீடாகச் செல்லுங்கள். ஆத்திமோட்டை, கூரை போன்ற சில கிராமங்களில் சைவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.

மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் 9,666 சைவர்கள் வாழ்கின்றனர். ஆகக் குறைந்தது 6,500 சைவ வாக்குகள் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பாளருக்குக் காத்திருக்கின்றன.

முசலியில் 170 வாக்குகள் 
நானாட்டானில் 2,700 வாக்குகள் 
மடுவில் 3,500 வாக்குகள் 
மாந்தை மேற்கில் 5,750 வாக்குகள் 
மன்னார் நகரத்தில் 6,500 வாக்குகள் 
தோராயமாக 18,700 வாக்குகள் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பாளருக்குக் காத்திருக்கின்றன.

வீடு வீடாகச் செல்வோம்
திருநீறு அணிவிப்போம்
கோடரிச் சின்னம் காட்டுவோம் 
வேட்பாளர் பட்டியல் கொடுப்போம் 
விருப்பு வாக்கு முறையைச் சொல்லிக் கொடுப்போம் 

வெல்வோம் வெல்வோம் 

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
சிவ சேனை

No comments: