Sunday, December 24, 2017

இராசா திரையரங்கார் தியாகராசனார்

தெற்கு ஏமன் நாடு. தலைநகரம் ஏடன். கடைத் தெருவில் நடக்கிறேன். வட இந்தியரின் துணிக் கடை.
என்னுடன் நடந்து வந்த மலையாள நண்பர் சொன்னார், இந்தத் துணிக் கடைக்கு ஒரு வரலாறு உண்டு”.
ஆர்வத்துடன், “என்ன வரலாறு? எனக் கேட்டேன்.
“இது கூர்ச்சரத்தார் ஒருவரின் கடை. இங்குதான் அம்பானி கணக்கு எழுதிப் பழகினார். பகலில் பிரஞ்சுக் கம்பனியில் பணி. இரவில் துணிக் கடைக்குக் கணக்கு எழுதுவார்.
“பக்கத்திலே பரவீன்பாய் தாக்கர், இரிலையன்சு வணிகம் என்ற பெயரில் கைக்கடிகாரம் படப்பிடிப்புக் கருவி விற்பனையில் ஓகோ எனப் பணக்காரராய் இருந்தார். பென்சுக் காரும் வைத்திருந்தார்.
பிற்காத்தில் இரிலையன்சு நிறுவனத்தைக் கட்டியெழுப்பி, இந்தியாவின் கோடிகோடீச்சுரர்களுள் ஒருவராகிய, அம்பானியின் எளிமையான தொடக்கம் 1953இல் இந்த ஏடன் தெருக்களில் என என் மலையாள நண்பர் சொன்னார்.
ஏடன் கடைத் தெருவில் மெய்சிலிர்த்து நின்றேன்.
1973ஆம் ஆண்டு. ஓர் அமெரிக்க நாட்டு இளைஞன், பல்கலைப் படிப்பு முடித்தவன். 20 வயதைத் தாண்டியவன். தாடியும் கம்பலை உடையுமாய்த் தில்லியில் இருந்து இமயமலை அடிவாரம் நோக்கி நடக்கிறான்.
ஆன்ம ஈடேற்றக் குருவைத் தேடுகிறான். திட்டி விரட்டும் ஞானிகளைிடை வாழ்கிறான். ஆப்பிள் பழங்களை ஞானிகள் இவன் மீது எறிந்து விரட்டுவர். ஆன்ம நாட்டத்தில் திளைக்கிறான்.
அமெரிக்கா திரும்புகிறான். காலப்போக்கில் அவன் தலைமை தாங்கிய வணிக நிறுவனத்தின் பெயர் ஆப்பிள். உலகின் கோடிகோடீச்சுரர்களுள் ஒருவனாக இறக்கிறான்.
அவனே ஆப்பிள் நிறுவனத் தலைவன், வழிகாட்டி, இசுடீவன் யொப்சர். கம் இந்தியாவுக்கு நன்றி உடையதாக இருக்கவேண்டும். அவர்கள் உலகுக்குத் தந்ததே சுழியம். அதுவே கணிணியில் கரு என நன்றி உணர்வோடு சொல்பவர் இசுடீவன் யொப்சர்.
படித்து நான் மெய்சிலிர்ப்பேன்.
தெருத் தெருவாகச் செய்தித் தாள் விற்ற மாணவன் உலகம் போற்றும் தொழிநுட்பக் கண்டுபிடிப்புகளின் பிதாமகனான தொமசு அல்வா எடிசன். 1847இல் பிறந்தவர், தனது 21ஆவது வயதில்1868இல் தன் முதல் கண்டுபிடிப்பால் தேர்தலில் வாக்களுக்கும் முறையை எளிதாக்கினார்.
அவர் வாழ்க்கை வரலாற்றைப் படித்து மெய்சிலிர்ப்பேன்.
அறைக்குள் நுழைகிறேன். சொகுசுக்குச் சொகுசு, வசதிக்கு வசதி, தொழிநுட்பத் திறன் எதிலுமே குறையாத அறை.
அந்த அறைக்குள் பழைய ஈருருளி. காட்சிப் பொருளாக.
என்னை அழைத்துச் சென்ற உதவியாளரிடம் கேட்கிறேன், “ஏன் இங்கே இந்த ஈருருளி?
“ஐயாவின் நினைவுப் பொருள். சென்னைக்கு வந்த புதிதில், இதே சைதாப்பேட்டையில், ஐயாவும் அவர் அண்ணனும் தெருத் தெருவாகச் செய்தித் தாள் கொண்டு சென்று விற்ற ஈருருளி. நினைவுக்குத் தன் அறையில் வைத்திருக்கிறார் என உதவியாளர் சொன்னார்.
இந்தியா வெங்கும் பல்வேறு வணிகத் தளங்களில் அகக் கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டி, விரைந்து வளரும் தமிழகத்தை உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவராகிய, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர், செவாலியர், முதுமுனைவர், கவிச்சக்கரவர்த்தி, கலைமாமணி, தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்,  தென்னிந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்  வி. ஜி. சந்தோசம் அண்ணாச்சியின் அறையே அந்த அறை.
நான் மெய்சிலிர்த்து நின்றேன். அவர் என் அருமை நண்பராதல் நான் வாழ்வில் பெற்ற பேறு.
அத்தகைய நண்பர் ஒருவரே யாழ்ப்பாணத்தின் எசுரிஆர். அவரை என் நட்பு வட்டத்தில் கொண்டேன் என்பதால் எனக்குப் பெருமை. ஏன்?
அமெரிக்கா, ஒகையோ, மிலானில் 1850களில் தொமசு அல்வா எடிசன் செய்தித் தாள்களை விற்று வாழ்வைத் தொடங்கியவர்.
தெற்கு ஏமன் தலைநகர் ஏடனில் 1950களில் துணிக் கடையில் இரவுக் கணக்கு எழுதி வாழ்வைத் தொடங்கியவர் மும்பையின் இரிலையன்சு அம்பானி.
சென்னை, தைாப்பேட்டையில் 1950களில் தெருத் தெருவாகச் செய்தித் தாள் விற்று வாழ்வைத் தொடங்கியவர் சென்னையின் சந்தோசம் அண்ணாச்சி.
அமெரிக்காவில் எருமைப் பால் விற்றுப் பின்னர், இந்திய இமய அடிவாரத்தில் கம்பலை உடையுடன் ஞானத் தேடலில் திளைத்தவர் ஆப்பிளின் இசுடீவன் யொப்சர்.
1950களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்தில் மரத்தடியில் பலகைக் கடை விரித்துத் தோடம்பழம் விற்று வாழ்வைத் தொடங்கியவர் சின்னத்துரை தியாகராசா என்ற எசுரிஆர்.
யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடத்த முற்பட்டு, 1973 பிற்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இலங்கை அரசு மாநாட்டுக்குத் தடை விதித்திருந்த காலம்.
அரசின் கெடுபிடிகளை மீறி மாநாட்டை நடாத்தும் உறுதியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன், வண. பிதா தனிநாயகம் அடிகளார், திருமதி புனிதம் திருச்செல்வம், வி. எசு. துரைரைசா ஆகியோருடன் இணைந்து நான் பணியாற்றினேன்.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நான் தனியனாக இருந்தேன். மற்றவர்கள் வந்து போவார்கள்.
என்னைக் கண்டால் தூர விலகினர் பலர். என்னை ஆர அணைத்து ஆதரவு தந்தனர் சிலர். முன் பின் தெரியாத அந்த முகங்களுள் ஒருவர் எசுரிஆர். அவர் அப்பொழுது திரைப் பட விநியோகத்தில் முன்னணியில் இருந்தார். செல்வந்தராக இருந்தார். மாநாடு நடத்த நிதி வழங்கினார், வண்டியை ஓட்டுநருடன் தந்தார், தன் மாளிகை வீட்டில் வெளிநாட்டவரைத் தங்க வைத்தார். அனைத்துப் பேராளர்களுக்கும் தன் வீட்டில் உணவு விருந்தோம்பினார்.  
அரசின் தடைகள் ஒருபுறம். அரச அலுவலர் புறக்கணிப்பு மறுபுறம்.
என்னைப் பார்த்து அஞ்சி விலகியோர் ஒருபுறம். மாநாட்டைக் குழப்ப வேண்டும் என்ற அரசு சார் தமிழர் மறுபுறம்.
இவற்றை மீறி, அச்சமில்லை எனத் தமிழுணர்வு பீறிட, மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஆதரவு அளித்த பெருந்தகை எசுரிஆர்.
அவருடைய அண்ணன் 1950களில் பேருந்து நிலைய ஓரத்தில் நடத்திய இராசா கூல் பார் கடையை நன்றாக அறிவேன்.
அங்கேயே இவர் இரவில் கணக்கு எழுதத் தொடங்கினார். என் தந்தையாரைப் போலவே காசோலை எழுதுவதற்காக ஆங்கில அரிவரியைப் படித்தார்.
திரையரங்குகளில் கழிவாகும் படச் சுருள் வெட்டுகளை எடுத்து ஒட்டுவார். தானே இணக்கிய கருவியில் வெள்ளை வேட்டித் திரையில் வீட்டில் ‘திரைப் படம் ஓட்டுவார்.
பகலில் தோடம்பழ வியாபாரம். இரவில் ஒட்டல் பொட்டலலான படச் சுருள் ஒட்டித் திரை ஓட்டம்.
எடிசனுக்கும் அம்பானிக்கும் சந்தோசம் அண்ணாச்சிக்கும் இசுடீவன் யொப்சருக்கும் இருந்த தன் முனைப்பு, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை, நினைத்ததை முடிப்பவன் என்ற இறுக்கமான மன உறுதி, இவை எசுரிஆரின் வளர்ச்சியின் அடித்தளங்கள்.
உயிரோடு கலந்து, ஊனோடு நனைந்து, உள்ளத்தோடு பிணைந்த தமிழ் உணர்வு, சைவ நெறிப் பிடிப்பு அவரின் எசுரிஆரின் பண்பாட்டுத் தளங்கள்.
1974க்குப் பின்னர் எம் நட்பு வளர்ந்தது. ஒருவர் மேல் மற்றவர் கொண்ட மதிப்புணர்வு மிகுந்தது. கேண்மைக்கு இலக்கணமாயது.கெழுதகைமைக்கு உருவகமானது.
அண்மையில் அன்னாரது யாழ்ப்பாண இல்லம் சென்றிருந்தேன். செல்லும் வாய்ப்பை உருவாக்கியவர் இலண்டன் இரஞ்சன். எசுரிஆரையும் அவர்தம் அருமை மக்களையும் கண்டேன்.
பலதையும் பேசினோம்.
சோனியின் கபுசிக்கி கயிசா, இரிலையன்சின் அம்பானி, ஆப்பிளின் இசுடடீவன், கொழும்பின் விரிவி தெய்வநாயகத்தார் எனச் சாதனையாளரின் வாழ்க்கை வரலாறுகள் உலகுக்குத் தெரியுமாறு நூல்களாயின” எனச் சொன்னேன்.
அந்த எடுத்துக் காட்டுகளே பலரை ஊக்குவிக்கின்றன” என்றேன்.
“யாழ்ப்பாணம் ஈந்த சாதனையாளர், தொழில் முனைவோர், வெற்றியாளர் வாழ்க்கை வரலாறுகள் மிக மிகக் குறைவு” என்றேன்.
“பலகைக் கடையில் இருந்து பட மாளிகைகள் வரை உயர்ந்த வரலாறு யாருக்குத் தெரியும்?
“தமிழகத் திரை உலகில் உங்களின் செல்வாக்கு, செல்வநாயகம் தொடக்கம் “ஈழ அரசியலாரிடம் உங்களின் செல்வாக்கு யாருக்குத் தெரியும்?
சைவ உலகுக்கு நீங்கள் ஆற்றிய அரும் பணிகள் யாருக்குத் தெரியும்?
உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள்” என்றேன்.
என் தாழ்மையான உரிமை சார்ந்த வேண்டுகோளை ஏற்றார். இந்த நூல் அதன் விளைவு.
தமிழில் வந்தால் தமிழரே தெரிந்து கொள்வர். சிங்களத்தில் ஆங்கிலத்தில் உலக மொழிகளில் உங்கள் வாழ்க்கை வரலாறு வெளிவரவேண்டும்.
எடிசனுக்கோ, அம்பானிக்கோ, சந்தோசம் அண்ணாச்சிக்கோ, விரிவி தெய்வநாயகத்தாருக்கோ, இசுடீவனுக்கோ உள்ள சிறப்புகளெல்லாம் உங்களுக்கும் உள. அவற்றுக்கு மேலும் உங்களிடம் உள.
அவர்களுக்கு இருந்த பரந்த வாய்ப்புகள் உங்களுக்கும் இருந்தால் அவர்களை விடச் சிறந்த சாதனையாளராக இருந்திருப்பீர்கள்.
பல்லாண்டு பல்லாண்டு நலமாகப் புகழுடன் வாழ்ந்து உலகுக்குப் பயனுறுத்த, நீங்கள் நாள்தொறும் நீங்கா நினைவுடன் போற்றும் வண்ணை அருள்மிகு கதிரேசப் பெருமானார் அருளுண்டு. 
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

09 மார்கழி 2048 (24.12.2017)

Thursday, December 21, 2017

காங்கேயன்துறையில் இருந்து சிதம்பரத்துக்குக் கப்பல் 2009

ஈழம்-தமிழகம் தொடர்பு சிதம்பரத்தில் ஈழத் தமிழர் வழிபாடு
TamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கட்டுரைகள்



Page 1 of 1 • Share • Actions
View previous topic View next topic Go down
HOT ஈழம்-தமிழகம் தொடர்பு சிதம்பரத்தில் ஈழத் தமிழர் வழிபாடு
Post by Tamil on Thu Sep 12, 2013 7:51 am



திருவாதிரை நாளன்று, ஈழத் தமிழர் சிதம்பரத்திற்கு வந்து, வழிபட வசதி செய்துதவுக

ஈழத் தமிழர்கள், ஆண்டுதோறும் மார்கழித் திருவாதிரைக்கு ஈழத்திலிருந்து சிதம்பரத்திற்கு வந்து, வழிபட்டுச் செல்வது நெடுங்கால வழக்கு.

இவ்வாறு வரும் பயணிகளின் தங்குமிடமாக, ஈழத் தமிழர்களின் மடங்களும் வீடுகளும் சிதம்பரத்தில் இன்றும் விரவிக் கிடக்கின்றன.

வழிபாட்டுப் பயணத்திற்காகச் சிதம்பரத்திற்கு ஆண்டுதோறும் வந்து அந்த மடங்களில் தங்கி, வழிபாட்டுக் கடமைகளை ஆற்றி, மீண்டும் ஈழம் செல்வதற்காக, சிதம்பரத்தில், மாலைகட்டித் தெரு, ஞானப்பிரகாசர் குளக்கரை ஆகிய இடங்களில் பல்வேறு மடாலயங்களை ஈழத்தவர் கட்டி வைத்திருக்கிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக ஈழத்தில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக அங்கிருந்து சிதம்பரத்திற்கு வந்து வழிபட்டுச் செல்வோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்தது.

ஈழத்தில் போர் ஓய்ந்துவிட்டது. இந்தத் தொய்வு மாறுமுன், இயல்பான வாழ்க்கையைச் சிறிதளவேனும் மக்கள் நாடுகிறார்கள்.

முன்பு, ஆண்டொன்றுக்கு ஐந்தாயிரம் பேர் வரை சிதம்பரத்திற்கு வந்து போவார்கள். விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே கடந்த சில ஆண்டுகளாகச் சிதம்பரத்துக்கு வந்து போகிறார்கள். ஈழத்திலிருந்து பிற நாடுகளுக்கு அகதிகளாகப் புலம்பெயர்Èதோரும் தமிழக அகதி முகாம்களில் உள்ள ஈழத்தவர்களும் இப்பொழுது மார்கழித் திருவாதிரைக்காகச் சிதம்பரம் வந்து போகிறார்கள்.

ஈழத்தில் இருப்பவர்கள் இந்த ஆண்டு, சிதம்பரத்திற்கு வந்து, பத்து நாள் திருவிழாவிலும், இறுதி நாளான திருவாதிரைச் சிறப்பு வழிபாட்டிலும் கலந்துகொள்ள விரும்புகிறார்கள்.

பின்வரும் இடர்கள் அவர்களுக்கு உள்ளன.

1. ஈழத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, தலைநகரான கொழும்புக்குப் போனால் மட்டுமே கடவுச் சீட்டையும் இந்திய நுழைவு அனுமதியையும் விமானச் சீட்டையும் பெற முடியும்.

2. ஈழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொழும்புக்குப் போவதற்குப் பல இடங்களில் பாதுகாப்புத் தடைகள் உள்ளன.

3. அவற்றையும் கடந்து, கொழும்புக்குச் செல்லும் சிலருக்கும் அங்கே தங்கும் வீடுகளிலும் விடுதிகளிலும் காவல் துறையின் பாதுகாப்புக் கெடுபிடிகள் உள்ளன.

4. கடவுச் சீட்டு மற்றும் இந்திய நுழைவு அனுமதிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டி உள்ளது.

5. திருவாதிரையை ஒட்டிய பத்து நாள் திருவிழாவிற்காக மலையகத்திலும் இருந்தும், கொழும்பில் இருந்தும் தமிழர்கள் வரவிருப்பதால், விமானத்தில் இடப்பதிவு குதிரைக் கொம்பாக உள்ளது.

6. விமானத்தில் திருச்சிக்கோ, சென்னைக்கோ வந்து, அங்கிருந்து சிதம்பரத்திற்குப் பயணிக்க வேண்டும். மீண்டும் கொழும்புக்குச் சென்று, பாதுகாப்புக் கெடுபிடிகளைக் கடந்து தத்தம் இடங்களுக்குத் திரும்ப வேண்டும். 

அம்பாறை-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,200 கிமீ.

மட்டக்களப்பு-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,300 கிமீ.

திருகோணமலை-கொழும்பு-சென்னை-சிதம்பரம் =  1,250 கிமீ.

புத்தளம்-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  = 1,150 கிமீ.

மன்னார்-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  = 1,350 கிமீ.

வவுனியா-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,350 கிமீ.

முல்லைத்தீவு-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,530 கிமீ.

கிளிநொச்சி-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,550 கிமீ.

யாழ்ப்பாணம்-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,600 கிமீ.

அம்பாறை-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  900 கிமீ.

மட்டக்களப்பு-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  1,000 கிமீ.

திருகோணமலை-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  850 கிமீ.

புத்தளம்-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  750 கிமீ.

மன்னார்-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  1,050 கிமீ.

வவுனியா-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  = 1 ,050 கிமீ.

முல்லைத்தீவு-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  1,230 கிமீ.

கிளிநொச்சி-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  1,250 கிமீ.

யாழ்ப்பாணம்-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  1,300 கிமீ.

காலாதிகாலமாக ஈழத் தமிழர்கள், சிதம்பரத்திற்கு வருவதற்காகப் பருத்தித்துறை, காங்கேயன்துறை, மாதகல் ஆகிய ஈழத்தின் வடக்குத் துறைகளில் படகேறுவார்கள். தமிழகத்தின் கிழக்குத் துறைகளான திருமறைக்காடு, வேதாரணியம், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய துறைகளில் வந்திறங்குவார்கள். சிதம்பரம் செல்வார்கள். வழிபாட்டுக் கடமைகளை முடிப்பார்கள்.

எந்தத் துறைகளில் இறங்கினார்களோ, அந்தத் துறைகளில் படகில் ஏறி, எந்தத் துறைகளில் ஏறினார்களோ, அந்தத் துறைகளில் படகில் இருந்து இறங்கி எளிதாகத் தம் இடங்களுக்குச் செல்வார்கள். 1948க்கு முன்பு இருந்த நிலை இதுதான்.

1948க்குப் பின்னர் தலைமன்னார் வழியாகத் தனுஷ்கோடி வந்து, போட்மெயில் தொடர் வண்டி ஏறி, நேரே சிதம்பரம் வந்து, வழிபட்டு, மீண்டும் அதே வழியாகத் திரும்புவார்கள். 1948க்குப் பின்னர் ஈழத்தின் வட பகுதியில் இருந்து தமிழகத்தின் கிழக்குக் கரைகளுக்குச் சட்டத்துக்கு அமைய வரமுடியாது. 1992க்குப் பின்னர் தலைமன்னார், தனுஷ்கோடி, இராமேஸ்வரம் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

முசுலிம் மக்களுக்கு மெக்கா; கிறித்தவர்களுக்கு ஜெருசலம்; கத்தோலிக்கருக்கு வத்திக்கான்; புத்தர்களுக்கு புத்தகயா;  இந்துக்களுக்குத் திருக்கயிலாயம்; இவை பேன்று ஈழத்துச் சைவர்களுக்குச் சிதம்பரமே ஆண்டுதோறும் வந்து வழிபட்டுச் செல்லக் கூடிய நம்பிக்கைக்கு உரிய கோயில்.

2040 மார்கழி 16 (2010 திசம்பர் 31)ஆம் நாள் திருவாதிரைத் திருநாள். 2009 திசம்பர் 20ஆம் நாளில் இருந்து சிதம்பரம் விழாக் கோலம் பூணும். அந்தப் பத்து நாள்களும் வழிபாட்டில் ஈடுபட, ஈழத் தமிழர்களுக்கு உதவ உங்களைக் கோருகிறேன். பின்வரும் வழிகளில் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

1. ஈழத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய எட்டுத் தமிழ் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், விண்ணப்பிக்கும் தமிழர்க்குக் கடவுச் சீட்டு வழங்க இலங்கை அரசு ஆணையிட வேண்டும். இந்த வழக்கம் ஏற்கெனவே வெற்றிகரமாக நடைமுறையில் இருந்திருக்கிறது. போர்ச் சூழல் காலத்திலும் இந்த நடைமுறையைப் பின்பற்றி இருக்கிறார்கள்.

2. ஈழத்தின் வடபாலுள்ள பருத்தித்துறை, காங்கேயன்துறை, மாதகல், ஊர்காவற்றுறை ஆகிய துறைகளில் இருந்து பயணிகள் கப்பல் சேவையைத் திசம்பர் 15ஆம் நாளில் இருந்து தொடங்கி, சனவரி 10ஆம் நாள் வரை நாள்தோறும் தமிழகக் கிழக்குக் கரையில் நாகப்பட்டினத்திற்கோ, கடலூருக்கோ நியாயமான கட்டணத்தில் ஒழுங்கு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

3. இறங்கு துறையான நாகப்பட்டினம் அல்லது கடலூரில் வந்திறங்கும் இவ்வழிபாட்டுப் பயணிகளுக்காக ஒரு மாத கால நுழைவு அனுமதியைத் இறங்குதுறையிலேயே இந்திய அரசு வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

4. தமிழகச் சுற்றுலாத் துறையினரும் போக்குவரத்துக் கழகமும் அந்தந்த இறங்கு துறையில் இருந்து, சிதம்பரம் வரை போகவும், மீளவும் சிறப்புப் பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

5. இத்தகைய வழிபாட்டுக்காக வரும் பயணிகள், சிதம்பரத்தில் உள்ள பரம்பரை உரிமை மடாலயங்களில் தங்குவதற்கு உரிய வசதிகளைச் செய்யுமாறும், பள்ளிக்கூடம் போன்ற ஏனைய இடங்களிலும் உறைவிட உணவு வசதிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அம்பாறை-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  700 கிமீ.

மட்டக்களப்பு-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  620 கிமீ.

திருகோணமலை-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம் =  580 கிமீ.

புத்தளம்-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  = 560 கிமீ.

மன்னார்-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  = 550 கிமீ.

வவுனியா-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  450 கிமீ.

முல்லைத்தீவு-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  500 கிமீ.

கிளிநொச்சி-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  400 கிமீ.

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  300 கிமீ.

அம்பாறை-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  600 கிமீ.

மட்டக்களப்பு-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  520 கிமீ.

திருகோணமலை-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  480 கிமீ.

புத்தளம்-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  460 கிமீ.

மன்னார்-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  450 கிமீ.

வவுனியா-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  = 350 கிமீ.

முல்லைத்தீவு-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  400 கிமீ.

கிளிநொச்சி-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  300 கிமீ.

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  200 கிமீ.

காலத்தின் அருமை கருதி, விரைந்து உரிய ஆணைகளை அரசுகள் பிறப்பிக்க வேண்டுகிறேன்.

Dec 07, 2009

Wednesday, December 20, 2017

Siva Senai - first year end report

The areas that the Shiv Senai focuses on . . . . . ,
We are concerned, (deeply concerned) that in the post war scenario (post May 19, 2009) in the traditional areas of Hindu Tamil habitation and the areas of the hill country, and we are being marginalized through 
(a) aggressive coercive religious conversions to Islam and Christianity; 
(b) desecration our places of worship with intrusive incursions by Buddhists with Sri Lankan state support, by Christians with funds from the western world, and by Islamists with massive funding from the middle eastern countries;
(c) democratic elections to social, local governmental, provincial governmental and parliamentary bodies where our voters have to choose candidates from other denominations who do not cater our interests and / or work against our interests.
How was it conceived . . . .? ,
Simmering voices and agitated minds of those who are sons of this soil were looking for an outlet or a channel to express their deep grievances. Even though each village had a Hindu group or association or organisation, even though there were few national level organisations, these bodies were concentrating on maintaining traditional beliefs and values.
None were focusing on the threat to these beliefs and values from issues raised in (a) to (c) of above. 30 years of war had given them a sense of fear. They were reluctant voicing groups. The defeat in the war had made them near-sterile. They were vegetables or living caricatures.
Those with certain amount of courage of conviction were considered ‘dangerous or troublesome’. There had been periodical unrelated groupings, haphazardly meeting (by the so-called "dangerous and troublesome") to focus on the 3 situations.
Somewhere in August 2016, I was invited to one of such meetings. They asked for my views. I suggested the name Siva Senai, against few other long names proposed for an organisation. It was a crisp, catchy name, forceful enough to convey a strong message to the alien cultural intruders. Many in the meeting rose to their feet with spontaneity to applaud the proposed name.
Later during early October 2016 we met at Vavuniya. It was a meeting of representatives from the loose groupings from the 16 districts of Sri Lanka. They asked me to be the national convener. Even though we discussed many issues through the day-long consultation, only the above three issues were solidified as the main plank problems to be tackled by Siva Senai. We postponed the formalization of the organisation to a later date when we will be ready with a steppe-structure for functioning.
What are the concerns that you hope to address through the organisation?
As outlined in the para for your first question 
How has the journey been in the past one year?
We were able to perform. We met challenges squarely. We faced situations with courage and ease. We were careful not to tread into any law and order disturbing situation. We worked within the laws of the land. I will list you the important situations we met.
1. Moonraampiddy Mannar. A Christian priest had blocked a passage to a Hindu temple by erecting a fence across a public pathway. This fence had been there for three years. Festivals in the Hindu temple were scaled down. Representations did not bear fruit. I went to the site. I started removing the poles of the fencing. The temple devotees came to me and said that it would spark a communal violence. I phoned the district / divisional administration from there. I told them that I needed protection to go to worship; a matter of my fundamental right. They were aware of the ground situation. They had not acted so far. The divisional administrator asked me to give him 4 days to remove the fence. On the fourth day the fence was removed by a team of officials. What could not be done by the local associations for three long years, the name Siva Senai made it? Believe me I was alone at the site when I attempted to remove the fencing.
2. Vellankulam, Mannar. Eight feet high Christian Cross was clandestinely installed overnight on 14th January 2017 by a Catholic priest and his 'devotees' in the middle of a Hindu village. We objected. We approached the local and divisional administration. Nothing happened. After 3 months of waiting, on 23th April 2017, the Cross was removed by the Hindus. Of course the Christians retaliated breaking a Vinayaka idol alongside the road, and threatened to destroy few Hindu temples in the area. Police registered a case. When I went to the police station of the area, the Office in Charge praised the patience shown by the Hindus for so long. Now there is a police post in the Hindu village.
3. Pandatharippu, Jaffna. A church had come up in a land adjoining a Hindu temple land. There are no Christians in the area. That was a missionary church. We objected. So we started working on a Hindu temple. The Christian priest went to the police. I was summoned. I explained the situation. I spoke of the traditional worshiping rights. Police dismissed the compliant. Priest was advised to seek relief, if any, from courts. We were free to build a Hindu temple, the police said.
4. St. Anne School, Manipay, Jaffna. Principal, Sister Dorothy agreed to withdraw forthwith, the 100 year (or so) old ban for students in the school on wearing Holy Ash and Thilak in their foreheads. That was a Hindu majority student’s school.
5. Mukathankulam, Vavuniya. President of an Agricultural Society, a Christian, prevented the furtherance of construction and / or repair of a Hanuman temple. The prevention was not valid in law. I intervened and after 3 years, now the reconstruction work had started. That is a Hindu majority village. Hindus are not as educated as the Christians. So they elected a Christian as the President. Now we have pasted big wall posters all over the village asking Hindu voters to elect Hindu candidates-only in any election. Also we have erected Nandhi flag poles in each of the 156 Hindu houses in that village. Most of them start their day by performing pooja to the Nandhi flag inside their compound. Volunteers help them to begin with.
6. Thenmaradchi, Jaffna. Large scale thefts of oxen for meat were the order of the day. The thieves were funded by the licensee butcher cum trader, a Muslim in the area. But the abattoir was full of off-the-licence oxen or stolen oxen. We started a massive poster campaign calling for ban on the sale of oxen for meat. We went to the Police Chief of the District in a delegation. The nexus between some corrupt in the police and the licensee on the thefts of oxen was exposed. We had the support of the Buddhist organisations in this effort. Now the situation is very much under control with occasional thefts. Even the District Judge had warned the butcher against hurting the sentiments of the Hindu public.
7. Neeravi, Anurathapuara. On the last day of Navarathri, non-Hindus (Muslims) attacked Hindu devotees inside sanctum sanctorum of the Shakthi temple, knifing a devotee on his skull, breaking the idols and crating panic to wilfully disturb the Navarthri Festival. A Swamiji from the Chinmaya Mission joined us to be on the spot, the next day. We met the hospital expenses of the Hindu victim all through his treatment, held a meeting of the devotees inside the temple, restored the holiness through ceremonies, and met the Governor, District administrator, Police Chief and a Buddhist prelate. The Hindus are a minority there. They lacked leadership. Now they are strongly linked to us. They feel more secure.
8. Thallady, Chemantivu, Admapan, Mannar. Idols of Vinayaka statues were broken in 3 road side structures overnight on the same day. We saw them in the dawn. Before dusk new statues were in place. Sheds erected. Women devotees offered prayers by boiling rice with milk and sweet as per tradition. A week later these structures were also vandalized to be broken to be replaced immediately by us.
9. Kanakapuram Shakthi temple, Kilinochchi. An Army camp is situated adjoining the temple. An eight to nine feet high statue of Buddha was erected on the pirakara of the temple by the army. This pirakara is the annual chariot festival pirakara. Any number of protests is not helping. Matters were taken up at the highest level. In protest I walked along with around 1000 devotees for 8 km to make representations at the UN office at Kilinochchi. Buddhism being the state priority religion and the army is a Buddhist army, Hindu voices are ignored. Defeat in the war is the reason. This is Buddhist expansionism and aggression. There are no Buddhists in the area except those in the army. Mr Rama Ravikumar, Secretary of the Indhu Makkal Kadchi in Tamil Nadu visited the place along with me. He is a witness to this atrocious Buddhist expansionism.
10. Kokkilai, Mullaitivu. A land belonging to the Vinayaka temple has been taken over to construct a Buddhist priesthood complex. Kokkilai is a village of 300 Hindu families. There are no Buddhists in the village. However a minister in the Government encouraged a Buddhist priest to do these mean things to the complete disadvantage of the Hindus. The Vinayaka temple is not there now. The trustee of the Vinayaka temple told me that he will commit suicide being unable to perform his religious duties. Court cases are of no use as they get dragged. Mr Rama Ravikumar, Secretary of the Indhu Makkal Kadchi in Tamil Nadu visited the place along with me. He is a witness to this atrocious Buddhist expansionism.
11. Indupuram, Murikandy, Oddusuddan Mullaitivu. A recent convert to Christianity, has built a shed structure in the frontage of a Shiva temple. He lives there. He prevents religious assembly of devotees. So they constructed another temple by the side. During the consecration ceremony the encroacher played a loud speaker with Christian songs. Later he threw fish-washed dirty water over the Shiva Linga. Any number of complaints with the police does not deter him. The administration had asked him to vacate. He refuses. So we had a demonstration. We will be successful.
12. Sithamparapuram, Vavuniya. Conversions to Christianity were rampant. It is a Hindu village with few temples around. But the missionaries were active. We invited Mr. Rama Ravikumar, Secretary, Indhu Makkal Kadchi, Tamil Nadu. He stayed in Cheidamparapuram for 10 days. He was able to re-convert or bring back the converted. At least 25 families who sang Aluloya are singing the Hindu Arokara at home.
13. Neeravi, Anurathapura. Mr Rama Ravikumar Secretary, Indhu Makkal Kadchi, Tamil Nadu was there for a day. He performed paatha pooja to the depressed groups. During his stay few families were re-converted to Hinduism. He left his local disciple there who has re-converted few more families to Hinduism after his departure.
14. Kadavaipulavu, Chunnakam, Jaffna. Jehovah Witness missionaries began construction of a Church within the Hindu village. Initially the local body did not process their papers for permission to build. However they used the good offices of a Christian official to obtain the permission. We intervened. Nobody listened to us. At all levels of officialdom we had negative response. We met the Chief Minister of the Northern Province who is also the Minister for Local Government. He ordered for an inquiry. The building permit was cancelled. The missionaries packed up. Mr. Mazumdar from the editorial board of Swarajajya, Bangaluru, visited the abandoned site during his visit to Jaffna.
15. Mediapuaram, Cheddikulam, Vavuniya. A pastor was travelling to Mediapuram to work with the rehabilitated fighters. One of them has an irreversible medical condition. The pastor moved in. He conducted prayers. He provided food and clothing. He supported the education of children. The family did not appreciate these visits. But the husband / father accommodated the pastor’s request to install a picture of Christ in their shrine room. Later the pastor asked the family to remove the pictures of Hindu deities. The family resisted. We intervened. The family had now removed the picture of Christ. A Nandhi flag pole is in front of the house. A donor is supporting the educational expenses of the only son in the family. Another donor is providing sheds with cattle. There were four other houses in the area which came under the influence of the pastor. We intervened. The pastor does not visit the village any more.  
16. We are in the process of pasting big wall posters (100, 000 in number) all over asking Hindu Tamil voters to vote only for Hindu candidates in any election, be it for parliament, provincial council, village council, community centre, cooperatives and / or agriculture societies.
17. We are in the process of training priests who will concentrate on preaching / house hold visiting / community work / community welfare programmes, reducing their performance of rituals. A batch of 40 will be trained in January.
18. Our contact with Indian Hindu organisations also is helpful. Tamil Nadu Indu Makkal Kadchi has sent its representative twice. Goa based Hindu Jana Jagurithi sent two representatives who toured for a week, the conversion susceptible areas. Mr. Mazumdar, from Meghalaya, a Hindu activist and a member of the editorial board of the Bangalore based Swarajya journal visited affected areas and spoke to the media. I am in touch with Hindu activists in Bihar, Bengal, Telengana, Tamil Nadu and Maharashtra. I am inviting them to be with us for few days to rejuvenate those depressed Hindu folks in Sri Lanka.
19. Siva Senai successfully negotiated with the Government of Sri Lanka through the Governor of the Northern Province to permit a pilgrim ship to Chidambaram in India during Maarkazhi Thiruvembavai festival days. Government of Sri Lanka had instructed the Navy, Immigration, Customs, Port Authority and the Passport office to provide the necessary support for the pilgrims. The bottle neck is with the clearance from Government of India. I was in Delhi. I met the Sri Lankan High Commissioner, Mrs Chithranganee. I met Mr. Satheesh, coordinator for Mrs Sushma Swaraj, Minister of External Affairs. I spoke to Mr. Dinoy George, and Mr Sivaguru both at the Sri Lankan desk of the Ministry of External Affairs. In Chennai, I met Deputy Chief Minister Mr. O. P. Panneerselvam, Mr. Niranjan Mardi, Home Secretary, Mr. Samayamurthy, and Joint Secretary Public, all of the Government of Tamil Nadu. If GOI will give clearance, then the poorest of the poor who are in the conversion-susceptible group will have the opportunity of pilgrimage to Chidambaram. That will be a morale booster to them. They cannot afford a plane travel which is now normal for the affordable. A ship from the northern port of Kankeyanthurai to the port Cuddalore in Tamil Nadu, a distance of 150 nautical miles, with a travel time of 5 to 6 hours, costing less than SLR 5000 for the pilgrims will give the Hindus of Sri Lanka the strength of mind, attachment to their beliefs, interaction with fellow Hindus in India and an intransigent devotion to Siva, their all-powerful God.
20. Print + Digital media coverage both in Sri Lanka and India, apart from cyber-social media, gave Siva Senai an image. The Christian Church, The Buddhist Sanga and the Muslim groups are aware of the pro-active campaign we are conducting. They are watching us intensely. We have had adverse comments from the so-called Tamil Nationalists in Sri Lanka who say that we are dividing the Tamils. Then there are the anti-Hinduthuvists in Tamil Nadu who say unsavoury words. Cyber social media portrays me both ways. When we worked at Indhupuram Sivan temple, there were personal attacks, character assassinations and words of vendetta. Many link us with Thakarey's Shiv Sena. Many say that we are funded by RAW of India. Many are appreciative. Many come forward with funds. We remain transparent, accounting for every cent we spend.
Is the organisation limited to just a few areas in the country or are there are plans of expansion? 
We are working both ways. Strengthening our unit level structure is our prime time effort. We seek to enlarge island wide, but are careful. Fingers cannot swell off its size. Of the 25 of Sri Lanka, in 16 districts, Hindus are in cognizable number. Now Siva Senai has strong presence in 6 districts. We have contacts in other districts. Our name is used by those affected. The name itself jitters the cultural intruders. There were some posters in our name. We do not know who printed / pasted them. They were within our stated objectives so we did not bother.
In what ways are you inspired by the RSS in India? 
My personal contacts with RSS date back to 1960. But I was not in close touch.
RSS until recent times was little known among Hindus in Sri Lanka
As Secretary General of the Sri Lankan YMHA Federation, I met Mr A. B. Vajapayee in Colombo, hosted a dinner in his honour, when he came for the Inter Parliamentary Union meet in 1975.
As Secretary General of the Sri Lankan YMHA Federation, I sent four delegates to the Varanasi VHP convention in 1977.
I got in touch with Mr. Jana Krishnamurthy in 1986, thereafter we were very close. I was close to Mr. Shanmuganathan (later Governor, Meghalaya). Both had their roots in RSS.
Almost all in the present hierarchy of Tamil Nadu BJP are familiar.
I am good friend of Mr. Vethaantham VHP unit Tamil Nadu.
I cannot understand the posturing of the RSS / VHP that Hindus and Buddhists are the same?
RSS / VHP do not understand that the 7th century revival of Saivaism and Vaishnavism in Tamil Nadu had its roots in the Buddhist - Jain hegemony. Saivaites absorbed the best in both philosophies but refused to be part of their expansionism. To ask us to work with Buddhists is impossible.
After the Buddhist Muslim riots of 1915, Hindu leader Sir P. Ramanathan was responsible for the release from the British prison of about 4000 to 5000 Buddhists. The Buddhist did not show their gratitude.
Racial attacks on Hindus and Hindu temples by Buddhists became the norm in post independent Sri Lanka.  More so after the Constitution of Sri Lanka bestowed in 1972, Buddhism a priority position at the cost of Hinduism.
RSS and VHP have their instituted organisations in Sri Lanka. They work closely with Buddhists. It is not acceptable to those in Siva Senai.
Siva Senai works for the Saivaite Hindus. It is not in antipathy to other religions.
Saivaites are in the same situation as they were in 5th 6th centuries with regards to Buddhists.
Saivaites are in the same situation as they were in 16th centuries with regards to Christians.
Saivaites are in the same situation as they were in 14th century Malik Kafoor era with regards to Muslims.
We have also the historical reason not to budge.
We had Nayanmars to face Buddhists / Jains.
We had Nayakar kings to face Muslims.
We had Arumuga Navalar to face Christians.
It is like Marathi + Hindu for Shiv Sena.
It is Tamil + Saiva Hindu for Siva Senai.
I hope I answered your queries.
Thanks and Regards