Monday, August 28, 2023

வினைத் திண்மர் வித்தியானந்தன் நினைவுகள்

(வித்தியானந்தன் நூற்றாண்டு ஆண்டுக் கட்டுரை)

 வியாசர் விருந்துபாரதியார் கவிதைகள் எனத் தமிழ் நூல்களைத் தந்தையார் வாங்கித் தருவார். 12, 13 வயது மாணவனாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான். அக்காலத்தில் தமிழர் சால்பு என்ற நூல் ஒன்றையும் தந்தையார் கொண்டு வந்தார்.

நீதிநூற்கொத்து வழியாக ஔவையாரை அறிந்தேன். திருக்குறள் வழி திருவள்ளுவரை அறிந்தேன். தமிழர் சால்பு நூல் வழியாகச் சங்கத் தமிழ்ப் புலவர்களுக்கு அறிமுகமானேன். தமிழர் சால்பு நூலை ஆக்கிய பேராசிரியர் சு. வித்தியானந்தன் எனக்கு அறிமுகமானார் 1955இல்.

இடையில் அவர் தொடர்பாகப் பல செய்திகளை இதழ்களில் படிப்பேன். மன்னாரில் மட்டக்களப்பில் நாட்டார் நாடகங்களைகூத்துகளை அவர் ஊக்குவித்து வந்தார் எனச் செய்தித் தாள்களில் படிப்பேன்.

சென்னைப் பல்கலைக்கழக இளநிலை,  முதுநிலைப் பட்டங்கள் பெறுவதற்காக நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன்.

படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் பச்சையப்பன் கல்லூரி. தமிழர் சால்பு நூலில் பெற்ற அடித்தளமே பச்சையப்பன் கல்லூரியில் உதவியது.

பேராசிரியர் மு. வரதராசன் தொடக்கம் பெரும் பேராசிரியர்கள் அ. மு. பரமசிவானந்தம்அன்பு கணபதி, முருகேசன்சி. பாலசுப்பிரமணியன்பரமசிவன் ஆகியோரிடம் தமிழ் இலக்கிய மாணவனானேன். பேராசிரியர்கள் யோன்சன், வேங்கடகிருட்டினன் வழி ஆங்கில இலங்கியங்களைச் சுவைத்தேன்.

இலங்கை திரும்பிய பின்னர் பேராசிரியர் வித்தியானந்தன் பெயரைச் செய்தித்தாள்களில் அடிக்கடி காண்பேன்படித்து விவரம் அறிவேன்.

1968இல் சென்னை இரண்டாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நேரில் அவரையும் துணைவியாரையும் கண்டேன். தொலைவில் இருந்து பார்த்தேனே அன்றி நேரில் எனக்கு அறிமுகமாகவில்லை.

மு. தளையசிங்கம்மு பொன்னம்பலம்எஸ். பொன்னுத்துரைசு. வித்தியானந்தன் ஆகியோரை நற்போக்கு இலக்கியலார் என்றன இதழ்கள். தினகரன் ஆசிரியர் . கைலாசபதிவானொலி புகழ் கா. சிவத்தம்பிபிரேம்ஜிஇடானியல்டொமினிக் ஜீவா ஆகியோரை முற்போக்கு இலக்கியலார் என்றன இதழ்கள்.

கோட்பாடுகளின் திணிப்பால் பாலைவனம் ஆகிய முற்போக்குத் தமிழ் இலக்கியம் என முற்போக்காளரைச் சாடினர் நற்போக்காளர். அரைத்த மாவையே அரைக்கின்ற பிற்போக்காளர் என நற்போக்காளரைச் சாடினர் முற்போக்காளர்.

விபுலானந்த அடிகளாரிடமும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையிடமும் தமிழ் பயின்றவர் சு. வித்தியானந்தன். சு.வித்தியானந்தனின் மாணவரே க. கைலாசபதி, கா. சிவத்தம்பி இருவரும்.

சு. வித்தியானந்தன் அரசியலில் தமிழ்த் தேசியம் சார்ந்தும் தமிழரசுக் கட்சி சார்ந்தும் கருத்துகளை வெளியிடுவார். இடதுசாரிக் கோட்பாடுகளை முன்வைத்த இலக்கியப் பார்வை கைலாசபதிக்கும் சிவத்தம்பிக்கும்.

1971ஆம் ஆண்டு தேர்தலால் சிறீமாவோ தலைமையிலான இடதுசாரிச் சிந்தனை ஆட்சிகொழும்பில். கைலாசபதிசிவத்தம்பிபிரேம்ஜிஇடானியல்இலட்சுமண ஐயர் யாவரும் அக்காலத்தில் ஸ்ரீமாவோ அரசை ஆதரித்தனர். அமைச்சரவையில் அஞ்சல் துறை அமைச்சராகத் தமிழர் குமாரசூரியர். 

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்காக இலங்கை கிளையினர் நீதியரசர் எச். டபிள்யு. தம்பையா தலைமையில் கூடி ஆராய்ந்து வந்தனர். கொழும்பு பம்பலப்பிட்டி மிலாகிரியா அவனியூவில் கூட்டங்கள் நடைபெறும்.

அனைத்துலகத் தமிழராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையில் 1968 முதல் நானும் உறுப்பினர்என்னை உறுப்பினராகச் சேர்த்தவர் திருமதி புனிதம் திருச்செல்வம். இரண்டாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் உறுப்பினரானேன். எனினும் மிலாகிரிய அவெனியூக் கூட்ட நிகழ்ச்சிகளுக்கு நான் போவதில்லை.

1967 தொடக்கம் கொழும்பில் கடற்றொழில் ஆய்வு நிலையத்தில் அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தேன். திரு. ஜேம்ஸ் இரத்தினம் எனக்கு அருமை நண்பர். ஒரு நாள் தொலைப்பேசியில் அழைத்தார். மிலாகிரிய அவென்யூக் கூட்டத்துக்கு வருமாறு அழைத்தார். 

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைக் கொழும்பில் நடத்துவதாயாழ்ப்பாணத்தில் நடத்துவதாஇது தொடர்பாக வாக்கெடுப்பு நிகழ்வதாகக் கூறினார். கூட்டத்திற்குச் சென்றேன்.

அங்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் இருந்தார். அப்பொழுதும் அவர் எனக்கு நேரடியாக அறிமுகம் இல்லை.

நீதியரசர் எச். டபிள்யு. தம்பையா தலைமையில் ஓரணி. கொழும்பில் நடத்துவதை ஆதரிக்கும் அணி. யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டும் எனக் கருதுகின்ற மற்றோர் அணி. சு. வித்தியானந்தன் அந்த அணியில் இருந்தார். மிலாகிரிய அவென்யூபம்பலப்பிட்டி சரசுவதி மண்டபம் எனத் தொடர்ந்து இரண்டு மூன்று கூட்டங்கள்.

யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்த முன்வராவிட்டால் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்சரசுவதி மண்டபக் கூட்டத்தில் நீதியரசர் தம்பையாவிடம் நான் கேட்டேன். என்னுடைய கோரிக்கைக்குப் பலரின் ஆதரவு இருந்ததால் நீதியரசர் தம்பையா பதவி விலகினார். கொழும்பில் மாநாட்டை நடத்த வேண்டும் என அரசு சார்ந்தோர் (முனைவர் கோபாலபிள்ளை மகாதேவா தவிர்ந்த) அனைவரும் தம்பையாவோடு சேர்ந்து கொண்டார்கள். கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்த்துக் கொண்டார்கள்.

அடுத்து என்ன?

பேராசிரியர் சி. பத்மநாபனும் நானும் யாழ்ப்பாணத்தில் வடக்கே வளலாய் ஆச்சிரமத்துக்குச் சென்றோம். அருட்தந்தை தனிநாயகம் அடிகளாரிடம் கேட்டோம். அடுத்த தலைவராக யார்?

பேராசிரியர் சு. வித்தியானந்தனே அடுத்த தலைவர் என்றார் அடிகளார்.

கொள்ளுப்பிட்டியில் வழக்குரைஞர் அம்பலவாணர் இல்லத்தில் அடுத்த கூட்டம். அங்கே தலைவர் தெரிவு. அந்நாள் வரை பேராசிரியர் சு. வித்தியானந்தனுடன் நேரில் பேசியதாக எனக்கு நினைவே இல்லை. கொழும்பில் கூட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

பேராசிரியர் சி. பத்மநாதன் ஏற்கனவே அடிகளாரின் செய்தியைச் சு. வித்தியானந்தனிடம் தெரிவித்திருந்தார். கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் அந்தச் செய்தியை நாங்கள் ஏற்கனவே பல்வேறு வழிகளில் சொல்லி இருந்தோம்.

வழக்குரைஞர் அம்பலவாணர் வீட்டு முன் மண்டபத் தூண்கள் ஒவ்வொன்றும் உருளை வடிவின. நான்கு அல்லது ஐந்து அடி சுற்றளவு உள்ளன. கூட்டம் தொடங்கும் முன்பு பேராசிரியர் வித்தியானந்தனை அன்புடன் அழைத்தேன். உருளைத் தூண்களில் ஒன்றின் மறைவிற்கு அழைத்துச் சென்றேன். 

அவர் தலைவராக வரக்கூடாது எனச் சிலர் அவரைப் பற்றி என்னிடம் கூறிய செய்திகளை அவரிடம் சொன்னேன். இன்னும் 4 - 5 மாதங்கள் தானே ஐயா. இந்தக் குறைகள் உங்களிடம் இருக்காது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் மற்றவர்களுக்காக இதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள் என்றேன்.

என் கண்களைப் பார்த்தார். கனிவோடு பார்த்தார். சரி என்றார்.

அடுத்த சில மாதங்கள் நானும் அவரும்இணை பிரியாதுகருத்தொத்துசொல்லால்செயலால்இயல்பினால் ஒரு கணமேனும் முரண்படாது மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டோம். யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய குழுவின் தலைவர் சு. வித்தியானந்தன்.

தலைவராய்ப் பொறாமை அற்ற பொறுமைசாலி. 

தலைவராகி அன்பால் அரவணைப்பவர். 

தலைவரின் நெஞ்சுறுதிஅஞ்சாமை நிறைந்தவர். 

தலைவராதலால் இதனை இதனால் இவன் முடிக்கும் என முன்கூட்டியே திட்டமிடுபவர். 

தலைவராதலால் களைப்பின்றிப் பயணித்தவர். மடியற்ற சோர்விலர். 

தலைவருக்குரிய சாணக்கியரானவர். தலைவருக்குரிய வெல்லும் சொல் வேறு கேட்காச் சொல்வலர்.

அவருடன் பணியாற்றிய சில மாதங்களில் இவை யாவின் மறு உருவமாக அவரைக் கண்டேன்.

அவருடைய தலைமையால் 'அப்பி பலமு' வீறாப்புச் சொன்ன பாதுகாப்புத் துணை அமைச்சரே பணிந்தார். அருளம்பலம்தியாகராசாகுமாரசூரியர்துரையப்பாகைலாசபதிசிவத்தம்பி என ஆட்சி அதிகாரப் பின்னணி கொண்ட அனைவரும் வெட்கினர்விலகினர்.

தடைகளுக்கு மேல் தடை எனக் கொக்கரித்து ஓலமிட்டது சிறீமாவோ அரசு. மாநாடு தொடங்குவதற்கு முதல் நாள் தடையைத் தானாகவே முன்வந்து நீக்கியது. காரணம் பேராசிரியர் சு. வித்தியானந்தனின் தலைமையே.

மாநாடு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் முகாமிடத் தொடங்கினேன்.  மாநாட்டுக் குழுவின் முகவராக யாழ்ப்பாண அலுவலகத்தை நடத்தினேன்.

பேராசிரியர் வித்தியானந்தன் கண்டியில் இருப்பார். கொழும்பில் இருப்பார். யாழ்ப்பாணத்தில் இருப்பார். எந்த நாள் எங்கு இருப்பார் எனச் சொல்ல முடியாதவாறு கடுமையாக உழைத்தார். சோர்வின்றிப் பயணித்தார்.

மாநாட்டுக் குழுக் கூட்டங்களில் பல்வேறு கருத்துகள் வரும். இவ்வாறே  நடக்கும் என முடிவாகப் பேராசிரியர் வித்தியானந்தன் சொல்வார். குழுவினர் ஏற்றுக் கொள்வோம்.

அரசுத் தடைகளை  மீறி யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்துவோம் என்ற உறுதியேஊசலற்ற ஈடாடா உறுதியே பேராசிரியர் வித்தியானந்தன். இந்த உறுதியேஇந்த விடாப்பிடியேஇந்தக் கடுமையே உணர்வுத் தமிழ் நெஞ்சங்களின் பூரிப்பு. தமிழ் இளைஞர் உள்ளங்களின் ஆர்ப்பரிப்பு. தமிழ்த் தேசிய மனங்களுக்கு மலர்ச்சி.

மாநாட்டு காலத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே யாழ்ப்பாணம் வந்துவிட்டேன். என்னைக் கண்டால் நெருப்பைக் கண்ட மாதிரி விலகினர் அரசு அலுவலர்கள். 

என்னைக் கண்டதுமே அண்ணனைக் கண்டது போல்தம்பியைக் கண்டது போல்தந்தையைக் கண்டது போல்நெருங்கிய உறவைக் கண்டது போல்சொந்தம் கொண்டாடி முன்பின் அறிமுகம் இல்லாத தமிழ் நெஞ்சங்கள். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் வருகிறோம் தருகிறோம் என்றன அந்த நெஞ்சங்கள். 

நிதிப் பற்றாக் குறையில் இருந்த அலுவலகத்தில் இலட்சக்கணக்கான ரூபாய்களைக் கேட்காமலே கொண்டு வந்து குவித்த வணிகர்.

பருப்பு அரிசி என உணவுத் தட்டுப்பாட்டுக் காலம். அரசின் உரிமம் இல்லாது எடுத்துச் செல்ல முடியாத காலம். உரிமம் பெற அரசு அலுவலகங்களுக்குப் போனேன். என்னைப் பார்த்த உடனேயே எழுந்து விலகிச் சென்ற என் நண்பர்களால் அதிர்ந்தேன்.

அரிசியாபருப்பாஎன்ன வேண்டுமானாலும் தருவோம். அலையாதீர்கள் என முன்வந்த வேளாண் பெருமக்களின் நெஞ்சுக்குள் கனிவும் இனிமையும் பெருமையும் பொலிவும் இருந்தன.

மகிழுந்துகளைத் தந்தவர் பலர். மாநாட்டு ஊர்திகளை வடிவமைத்தவர் நூற்றுக்கணக்கானோர். தொண்டர்களாகியோர்  யாவரும் 16 தொடக்கம் 25 வயதான இளைஞர் பட்டாளம். மாநாட்டுப் பேராளரை மகிழ்விப்போம் என வந்த கலைஞர் கூட்டம். கண்காட்சியில் எங்கள் அரிய தொன்மப் பொருள்களையும் வையுங்கள் என வரிசையாக வந்த வடகிழக்கு மக்கள். கண்காட்சியைக் காணக் காத்திருந்த நீண்ட வரிசை.

ஆராய்ச்சிக் களத்தில் வித்தியானந்தன். பேராளர்கள் வரவேற்பில் வித்தியானந்தன். தலைமை உரையை எழுதியதும் என்னிடம் காட்டினார். கருத்துச் சொன்னேன்.

கண்காட்சிக் களத்தில் வித்தியானந்தன். ஊர்திக் களத்தில்ஊர்வலக் களத்தில் வித்தியானந்தன். இசையில் நடனத்தில் நாட்டியத்தில் கூத்தில் வல்ல அவரே கலை நிகழ்ச்சிகளின் களத்தில். 

வீரசிங்கம் மண்டபத்தில் இறுதி நாள் இரவு மேடையில் வித்தியானந்தன். மக்களோடு மக்களாகதொண்டர்களோடு தொண்டராககண்ணீர்ப் புகை மயக்கத்தில் வீழ்ந்து படுத்திருக்கிறார்.

இடுக்கட் பட்டிருக்கினும் இரந்து யாரையும் விடுக்கற் பிரான் என்று வினவுவோம் அல்லோம் என்ற மன உறுதி வித்தியானந்தனுக்கு. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற நெஞ்சுறுதி அவருக்கு.

மாநாட்டுக் காலங்களில் வித்தியானந்தனும் துணைவியாரும் அவரின் மக்களும் என் மீது காட்டிய அன்புபாசம்நெருக்கம்நம்பிக்கை அளவிட முடியாதன.

நான் கொழும்பு சென்றேன். பணிக்குச் சென்றேன். கொழும்புக்கு வரும் பொழுது கிருலப்பனையில் என் வீட்டுக்கு வித்தியானந்தன் வருவார். துணைவியாரோடும் மக்களோடும் வருவார். 

மாநாட்டில் என் பங்களிப்பு பற்றி அவரே தாமாகப் பாராட்டுக் கடிதம் ஒன்றை எழுதினார். தன் கைப்பட எழுதினார். தந்தார்.

1977இல் பதினொன்றரை ஆண்டு கால அரசுப் பணியை ஒரே நாளில் துறந்தேன்ஓய்வூதியத்தை மறந்தேன். வெறும் கையோடு யாழ்ப்பாணம் வந்தேன். ஓய்வூதியம்சலுகைகள்சமூக நிலை என்பன சார்ந்த அரசு பதவியை நான் துறந்ததில் என் இல்லத்தவர்க்கு உடன்பாடு இல்லை.

வருவாய்க்காகக் கைக்கடிகார வணிகம்அச்சு வணிகம்தமிழ்நூல் பதிப்பு வணிகம் பார்த்துக் கொண்டிருந்தேன்தந்தையாரோடு சேர்ந்து.

அக்காலத்தில் வித்தியானந்தன் என் வீடு தேடி வந்தார். அப்பொழுது அவர் துணை வேந்தர். பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேருமாறு வலியுறுத்தினார். விலங்கியல் துறையில் வெற்றிடம் வருகின்றதுவிண்ணப்பியுங்கள் என்றார்.

விண்ணப்பித்தேன். இந்தியப் பட்டதாரி நான். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இலங்கைப் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை. நேர்முகத் தேர்வில் என்னைத் தேர்ந்தெடுக்க மறுத்தனர்.

மீண்டும் விண்ணப்பிக்குமாறு வித்தியானந்தன் சொன்னார். அடுத்த நேர்முகத் தேர்வுக்கு வித்தியோதயப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வீரக்கோன் வந்திருந்தார். 

சச்சிதானந்தன் விலகியதால் கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்துக்கு இழப்பு. ஈடாக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவரைச் சேருங்கள் என்றார் தெரிவுக் குழுவிடம் வீரக்கோன். 

1977 இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தேன். செங்கடல் நாடுகளில் ஐநா ஆலோசகர் பணி ஏற்று, 1979 நடுப்பகுதியில் பல்கலைக்கழகப் பணியிலிருந்து விலகினேன்.

பல்கலைக்கழகப் பணிக்காலத்தில் தேசிய அறிவியல் கழக புலமை நிதித் தொகை பெற்றேன். முதுநிலை ஆய்வு மாணவிக்கு வழிகாட்டினேன். பின்னாளில் அம்மாணவியே விலங்கியற் துறைத் தலைவரானார். எனக்கு மகிழ்ச்சி. என் மீது வித்தியானந்தன் வைத்திருந்த நம்பிக்கையை நான் வீணாக்கவில்லை. வித்தியானந்தனுக்கு நான் ஆற்றிய புலமைக் கடன்.

நினைவுகளை மீட்டு எழுத ஊக்கிய பேராசிரியர் சு. வித்தியானந்தன் நூற்றாண்டு நினைவுக் குழுவினருக்கு நன்றி.

Monday, August 14, 2023

செபத்தியான் பத்தினி

 https://www.elukainews.com/archives/44131



கத்தோலிக்க ஆக்கிரமிப்பில் எக்காளத்தில் ஏளனத்தில் தமிழ் அவமதிப்பின் சின்னம் ஊர்காவற்துறையில்.

...பார்தொழு தேத்தும் பத்தினி... (சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம், நடுகற் காதை 210). கண்ணகி எனச் சொல்லாது பத்தினி என்றார் இளங்கோ.

...உரைசால் பத்தினி... எனத் தொடக்கத்திலேயே கூறிய இளங்கோ, காப்பியம் முழுவதும் பல இடங்களில் பத்தினி என்பார்.

இளங்கோ கூறிய அதே சொல். அதே பொருள். அதே தெய்வ நிலை.

இலங்கையில் ஏறத்தாழ 25,000க்கும் கூடுதலான பத்தினித் தெய்வக் கோயில்கள்.

கண்ணகி தமிழ்ப் பெண். 25,000க்கும் கூடுதலான விகாரைகளின் கோயில்களில் வழிபடுவோர் புத்த சிங்களவர்.

தமிழர் அல்லாத வேறொரு இனக் குழு, தமிழ்ப் பெண்ணான கண்ணகிக்கு இத்தனை கோயில்களை அமைத்து வழிபடும் மரபு உலகில் வேறு எங்கும் இல்லை.

பல நூற்றாண்டு காலப் பத்தினித் தெய்வ வழிபாட்டில் கண்ணகியைப் புத்த கண்ணகி என்றோ, சித்தார்த்த கண்ணகி என்றோ, கௌதம கண்ணகி என்றோ அவர்கள் அழைக்கவில்லை.

இளங்கோ எந்தச் சொல்லால் கண்ணகியை அழைத்தாரோ, அதே சொல்லால் சிங்களவர் ஏறத்தாழ 1800 ஆண்டுகளாகக் கண்ணகியை அழைக்கிறார்கள்.

தமிழ் மரபைப் புத்த சிங்களவர் செம்மாந்து போற்றுகிறார்கள். இன்றைய புத்த சிங்களவரின் மிகப்பெரியதான கண்டிப்  பெருவிழாவில் பத்தினியும் யானை மீதுவர்ந்து வலம் வருகிறாள் பத்தினி - கண்ணகி தெய்வமாக.

நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். வாள்முனையில் சைவர்களைக் கத்தோலிக்கராக மதமாற்றியவர்கள்.

கண்ணகியைச் செபத்தியான் கண்ணகி என்கிறார்கள். 

கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக இலங்கைக்குக் கொண்டு வந்து புத்தரின் தெய்வமாக்கியவன் கயவாகு (கிபி 113 135 கால அரசன்). ....கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்... என அவனை இளங்கோவடிகளே சிறப்பித்துக் கூறுவார்.

கயவாகுவுக்கு 120 ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவன் செபத்தியான் (கிபி 233-288). தமிழுக்கும் பத்தினிக்கும் கயவாகுவுக்கும் செபத்தியானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஐரோப்பாவில் பிரான்சில் பிறந்தவன். உரோமப் பேரரசின் கொடுமையால் இறந்தவன் செபத்தியான்.

கொள்ளை நோய்களைப் போக்கினான், என்பர்.

செபத்தியானுக்கும் தமிழருக்கும் என்ன உறவு? எதுவுமே இல்லை.

தமிழர் மீதான கத்தோலிக்கப் படையெடுப்பின், கத்தோலிக்க ஆக்கிரமிப்பின், கத்தோலிக்க மேலாட்சியின் சின்னமே செபத்தியான்.

செபத்தியானின் பெயர், தமிழ் இலக்கியம் எதிலுமே இல்லை.

கத்தோலிக்க ஆக்கிரமிப்பின் அடையாளமாகச் செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு ஊர்காவற்துறையில் அமைந்திருக்கிறது.

இளங்கோ, கயவாகு, சேரன் செங்குட்டுவன், புத்தர், சைவர், தமிழர், சிங்களவர், யாவருக்கும் அவமானம் பழிச்சொல் தருகின்ற பெயரே, செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு.

சைவத் தமிழர், புத்த சிங்களவர் இரு சமூகத்தவரையும் திட்டமிட்டு எக்காளிக்க ஏளனமாக்க அவமானிக்கக் கத்தோலிக்க செபத்தியான் கண்ணகை அம்மன் தெருவை உருவாக்கி இருக்கிறார்கள்.

சைவருக்கு எதிரான தமிழருக்கு எதிரான கத்தோலிக்கரின் இன்றைய அட்டூழியமே செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு.

1998இல் சிலாவத்துறைப் பிள்ளையார் கோயில் வளாகத்துள் மரியாள் சிலை வைத்த பாதிரியார் அன்று விடுதலைப் புலிகளின் கையில் சிக்கினார். அன்றே சிலையும் இல்லை. பாதிரியாரும் இல்லை.

இன்று விடுதலைப் புலிகளில்லை. ஊர்காவற்றுறைக் கத்தோலிக்கப் பாதிரியார் கொட்டம் எத்தனை நாளைக்குத் தொடரும்? பார்க்கலாம்.


[14/08, 6:16 am] சச்சிதானந்தன் மறவன்புலவு: 

ஆடி 29 திங்கள் (14 8 2023)

அனுப்புநர்:

ஊர்காவற்துறைப் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் வாக்காளர்

பெறுநர்: 

பொறுப்பு அதிகாரி 

காவல் நிலையம் ஊர்காவற்துறை

ஐயா 

மதக் கலவரம் ஏற்படும் சூழ்நிலை வந்துள்ளது. சைவருக்கும் கத்தோலிக்கருக்கும் இடையே கலவரம் உருவாகலாம்.

கலவரத்தைத் தூண்டுகிறார் பிரதேச சபைச் செயலாளர்.

கண்ணகை அம்மன் தெருப் பெயரைச் செபத்தியான் கண்ணகை அம்மன் தெரு என மாற்றிப் பெயர்ப் பலகை அமைத்துள்ளார். 

சைவ மக்களின் உள்ளத்தைப் புண்படுத்துகிறார்.

கோவலன் சைவ மகன். கண்ணகி சைவ மகள். வேதம் ஓதும் பார்ப்பான் சைவன்.

....கோவலன்

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்

தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை...

சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் மங்கள வாழ்த்துப் பாடல் 53 ஆம் வரி.

சைவத் தமிழ்ப் பெண்ணான கண்ணகிக்கு இலங்கை முழுவதும் திருக்கோயில்கள்.

தோராயமாக 30,000 கோயில்கள். தமிழ்ப் பகுதிகளில் சிவாச்சாரியார் பூசை செய்யும் கோயில்கள்.

சிங்களப் பகுதிகளில் புத்தர் ஒவ்வொரு விகாரையிலும் பத்தினித் தெய்வமாக வழிபடும் கோயில்கள்.

அத்தகைய தமிழ்ப் பெருமாட்டியை, சைவப் பத்தினியை, புத்தர் போற்றும் தமிழ் மகளை, தமிழுக்கோ சைவத்துக்கோ புத்தத்துக்கோ கண்ணகிக்கோ தொடர்பில்லாத, பிரான்சில் பிறந்து உரோமப் பேரரசு கண்டித்துத் தண்டித்த செபத்தியான் என்ற கத்தோலிக்கக் குற்றவாளி ஒருவரின் பெயரோடு சேர்த்துத் தெருப் பெயராக்கியுள்ளார் ஊர்காவற்துறைப் பிரதேச சபைச் செயலாளர்.

இனக் கலவரத்தை தணிக்க வேண்டியவரே தூண்டுகிறார். 

இந்தப் பெயர்ப் பலகையால், இலங்கை முழுவதும் பரந்து வாழும், இரண்டு கோடி எண்ணிக்கையிலான, கலாசார இரட்டையர்களான, சைவரும் புத்தரும் மனம் கொதித்துச் சினம் கொண்டு உள்ளனர். 

இன மத முரண்பாடுகளைத் தூண்டுதல் பின்வரும் சட்டங்களை மீறுவதாகும். 

Section 3 of the ICCPR Act of 2007 says: 

(1) No person shall propagate war or advocate national, racial or

religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence.

(2) Every person who— (a) attempts to commit; (b) aids or abets in the 

commission of; or (c) threatens to commit, an offence referred to in subsection 

(1), shall be guilty of an offence under this Act. 

(3) A person found guilty of committing an offence under subsection (1) 

or subsection (2) of this section shall on conviction by the High Court, be 

punished with rigorous imprisonment for a term not exceeding ten years. 

(4) An offence under this section shall be cognizable and non-bailable, 

and no person suspected or accused of such an offence shall be enlarged on 

bail, except by the High Court in exceptional circumstances. 

Section 2(1)(h) of the 

Prevention of Terrorism Act (PTA) says:

..by words either spoken or intended to be read or by signs or by visible 

representations or otherwise causes or intends to cause commission of acts of 

violence or religious, racial or communal disharmony or feelings of ill-will or 

hostility between different communities or racial or religious groups; 

The Penal Code of Sri Lanka contains sections 290-292 (offenses relating 

to the religions), which along with other similar provisions contain set of 

offenses relating to religion including uttering words with deliberate intention 

to injure religious feeling. The sections 291A and 291B are significant as they 

deal with hate acts. 

LLRC recommendations on promoting religious harmony and co-

existence, call for establishing a mechanism in consultation with inter-faith 

groups that can serve as an early warning and diffusing system of potential 

religious tension.

பெயர்ப் பலகையைக் காவல்துறையினரே அகற்றுக. 

பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துக.

இங்ஙனம்

மத நல்லிணக்கத்தையும் மத ஒற்றுமையையும் விரும்புகின்ற 

ஊர்காவற்துறைப் பிரதேச சபை வாக்காளர்

[14/08, 6:16 am] சச்சிதானந்தன் மறவன்புலவு: 

Audi 29 සඳුදා (14 8 2023)

යවන්නා:

ඌර්ගාවත්තුරෙයි ප්‍රාදේශීය සභා බල ප්‍රදේශය තුළ ජීවත්වන ඡන්ද දායකයෙකි

ලබන්නා:

වගකිවයුතු නිලධාරියා

පොලිස් ස්ථානය නාගරික පොලිසිය

සර්

ආගමික කෝලාහල තත්ත්වයක් උදාවී ඇත. සයිවර් සහ කතෝලිකයන් අතර ගැටුම් ඇති විය හැක.

ප්‍රාදේශීය සභා ලේකම් කැරලි අවුස්සයි.

කන්නකායි අම්මාන් වීදිය සෙබේටියන් කන්නකායි අම්මාන් වීදිය ලෙස නම් කර නාමපුවරුවක් ද සවිකර තිබේ.

ඔහු ශෛව ජනතාවගේ සිත් රිදවයි.

ගෝවාලන් නිර්මාංශ පුතෙක්. කන්නගී සෛව දියණියකි. ශෛව යනු වේද බණ කියන දෘෂ්ඨිකයෙකි.

....කෝවලන්

Maamudu brahman ඔබට සැඟවුණු මාර්ගය පෙන්වනු ඇත

නරක දේවල් කරන අයගේ ඇස් නිරාහාරව සිටියි ...

සිලපතිකාරම් බුක්කර් කන්දම් මංගල සුබපැතුම් ගීතය 53 පදය.

ශෛව දෙමළ කාන්තාවක් වන කන්නගී වෙනුවෙන් කැප වූ පන්සල් ලංකාව පුරා ඇත.

දළ වශයෙන් පන්සල් 30,000ක්. දෙමළ ප්‍රදේශ වල ශිවාචාර්ය පන්සල්

සිංහල ප්‍රදේශයන්හි සෑම විහාරස්ථානයකම බුදුන් පත්තිනි දෙවියන් ලෙස වන්දනාමාන කරන විහාරස්ථාන.

එවැනි දෙමළ ආච්චි, නිර්මාංශ බිරිඳක්, බුදුන් වඳින දමිළ දියණියක්, ප්‍රංශයේ ඉපිද රෝම අධිරාජ්‍යය විසින් හෙළා දකින ලද කිසිඳු සම්බන්ධයක් නැති කතෝලික අපරාධකරුවෙකුගේ නමින් වීදි නාමයක් තබා ඇත. දෙමළ, ශෛවවාදය, බුද්ධ හෝ කන්නකි.

ජනවාර්ගික කෝලාහල මැඩපවත්වන්න ඕන එකා තමයි ඒක අවුස්සන්නේ.

මේ නාමපුවරුවත් එක්ක ලංකාව පුරා වෙසෙන සෛව - බුද්ධ යන දෙකෝටි සංස්කෘතික නිවුන්නු සිනා පහළ වෙනවා.

වාර්ගික හා ආගමික අසමගිය ඇති කිරීම පහත සඳහන් නීති උල්ලංඝනය කිරීමකි.

2007 ICCPR පනතේ 3 වැනි වගන්තිය මෙසේ කියයි:

(1) කිසිම පුද්ගලයෙක් යුද්ධය ප්‍රචාරය නොකළ යුතු හෝ ජාතික, වාර්ගික හෝ වෙනුවෙන් පෙනී සිටිය යුතු නැත

වෙනස් කොට සැලකීමට, සතුරුකමට හෝ ප්‍රචණ්ඩත්වයට උසිගැන්වීමක් වන ආගමික වෛරය.

(2) සෑම පුද්ගලයෙකුම- (අ) කැපවීමට උත්සාහ කරන; (ආ) ආධාර හෝ අනුබල

කොමිෂන් සභාව; හෝ (ඇ) උපවගන්තියේ සඳහන් වරදක් කිරීමට තර්ජනය කරයි

(1), මෙම පනත යටතේ වරදකට වරදකරු විය යුතුය.

(3) (1) උපවගන්තිය යටතේ වරදක් සිදු කිරීම සම්බන්ධයෙන් වරදකරු වූ පුද්ගලයෙක්

හෝ මෙම වගන්තියේ (2) උපවගන්තිය මහාධිකරණය විසින් වරදකරු කිරීම මත විය යුතුය

වසර දහයකට නොවැඩි කාලයක් සඳහා දැඩි සිරදඬුවම් නියම කර ඇත.

(4) මෙම වගන්තිය යටතේ වරදක් දැනගත හැකි සහ ඇප දිය නොහැකි විය යුතුය.

සහ එවැනි වරදක් සම්බන්ධයෙන් සැක කරන හෝ චෝදනාවට ලක් වූ කිසිඳු තැනැත්තකු විශාල නොකළ යුතු ය

විශේෂ අවස්ථා වලදී මහාධිකරණයෙන් හැර ඇප.

2(1)(h) වගන්තිය

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත (PTA) පවසයි:

..කතා කරන ලද හෝ කියවීමට අදහස් කරන වචන වලින් හෝ සංඥා මගින් හෝ දෘශ්‍යමානව

නියෝජන කිරීම හෝ වෙනත් ආකාරයකින් ක්‍රියාවන් සිදු කිරීමට හේතු හෝ ඇති කිරීමට අදහස් කරයි

ප්‍රචණ්ඩත්වය හෝ ආගමික, වාර්ගික හෝ වාර්ගික අසමගිය හෝ අයහපත් හැඟීම් හෝ

විවිධ ප්රජාවන් හෝ වාර්ගික හෝ ආගමික කණ්ඩායම් අතර සතුරුකම;

ශ්‍රී ලංකාවේ දණ්ඩ නීති සංග්‍රහයේ 290-292 වගන්ති අඩංගු වේ (අදාළ වැරදි

ආගම් වෙත), අනෙකුත් සමාන විධිවිධාන මාලාවක් අඩංගු වේ

හිතාමතා චේතනාවෙන් වචන ප්‍රකාශ කිරීම ඇතුළු ආගමට අදාළ වැරදි

ආගමික හැඟීමට හානි කිරීමට. 291A සහ 291B වගන්ති ඒ ආකාරයෙන්ම වැදගත් වේ

වෛරී ක්රියා සමඟ කටයුතු කරන්න.

ආගමික සහජීවනය සහ සම-ප්‍රවර්ධනය පිළිබඳ LLRC නිර්දේශ

පැවැත්ම, අන්තර් ඇදහිල්ල සමඟ සාකච්ඡා කර යාන්ත්‍රණයක් ස්ථාපිත කිරීම සඳහා කැඳවීම

විභවයන් පිළිබඳ පූර්ව අනතුරු ඇඟවීමක් සහ විසරණ පද්ධතියක් ලෙස සේවය කළ හැකි කණ්ඩායම්

ආගමික ආතතිය.

පොලිසියෙන් නාමපුවරුව ගලවන්න.

ප්‍රාදේශීය සභා ලේකම්වරයා අත්අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත් කරන්න.

අවයවය

ආගමික සහජීවනය සහ ආගමික සමගිය අපේක්ෂා කිරීම

ඌර්ගාවත්තුරෙයි ප්‍රාදේශීය සභාවේ ඡන්ද දායකයා

Saturday, August 12, 2023

பழித்து இகழ்வாரையும் உடையார்

 ... பழித்து இகழ்வாரையும் உடையார்



.... சிவபெருமான்..

1. சிவசேனையில் உள்ளவர்கள் புத்த மயமாக்கலுக்குத் துணை போகிறார்களாம்! செய்திகள் ஊடகங்களில் வருகின்றன.

இலங்கை முழுதும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான சிவ சேனைத் தொண்டர்களே,

ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களே, 

பல்லாயிரக்கணக்கான பாராட்டாளர்களே,  

சிவ சேனையின் நடவடிக்கைகளால் நெஞ்சம் நெகிழ்ந்து புளங்காகிதம் கொள்ளும் இலட்சக்கணக்கான சைவப் பெருமக்களே,

சைவர்கள் நெஞ்சை நிமிர்த்த மாட்டார்களா? சைவர்களின் முதுகுத்தண்டு நிமிராதா? என ஏங்கிய புத்தர் இருக்கிறார்கள் கிறித்தவர் இருக்கிறார்கள் முகமதியர் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் நல்ல உள்ளம் கொண்டவர்கள், அத்தகையோரே,

இச்செய்திகளால் நீங்கள் வேதனை அடையாதீர்.

சில நேரங்களில் இதழ் விற்பனைக்காகவும் சில நேரங்களில் தொகையை வாங்கிக் கொண்டும் பொய்யையும் புரட்டையும் ஊடகங்கள் எழுதிக் கொண்டே இருக்கின்றன. இதனால் நீதி மன்ற வழக்குகளையும் சந்தித்து வருகின்றன.

2 குருந்தூர் மலைக்குப் போய் வந்ததைக் கொச்சையாக்கினர். குருந்தூர் மலைமேல் ஆதிசிவன் கோயில் கட்டத் தளம் தேடினோம் என்பதை அவர் அறியார்.

 ....குற்றம் ஒன்றும் செய்ததில்லை, கொத்தையாக்கினீர்.... என்பார் சுந்தரர் (தி07095002)

3 சங்கமித்திரை கொண்டு வந்ததாக முதலியார் இராசநாயகம் கூறியிருக்கிறார் என்பதே சிவ சேனையின் செய்தி. சிவ சேனையின் கருத்து அதுவன்று.

உண்மையையும் பொய்யையும்அறியும் நிலையை வாசகருக்கு விட்டோம். 

....குற்றம் ஒன்றும் செய்ததில்லை, கொத்தையாக்கினீர்.... என்பார் சுந்தரர் (தி07095002)

4 பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணின் மரபுகள். தமிழ்ச் சைவ மரபுகள்.

வந்தேறி மரபுகளே மதங்களே, புத்தமும் கிறித்தவமும் முகமதியமும்.

இதை நான் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறேன்.

வந்தேறிகளுக்கு ஆதிகுடிகளின் மரபுகளை மாற்றும் மத மாற்றும் ஒரே இலக்குச் சைவர்களே. 

வந்தேறி மரபுகளையும் மதங்களையும் திணிக்க

புத்தத்தைப் புகுத்த 

கிறித்தவத்தைப் புற்றுநோயாக்க 

முகமதியத்தைப் பால்வினை நோயாக்கத்

தமிழ்ச் சைவ மரபுகளை உடைப்பதற்கு ஊடகங்கள் அவர்களுக்கு துணை போகின்றன. 

வந்தேறிகளிடம் 

1 அரச ஆட்சி  

2 வளர்ந்த நாடுகளின் நிதி

3 எண்ணெய் வள நாடுகளின் செல்வம் 

குவிந்து குவிந்து இலட்சப்பானை அருவியாய்க் கொட்டுகிறது. 

வற்றாத வளங்களின் பின்னணியில் வந்தேறிகள் விலை போகக்கூடிய ஊடகர்களை விலைக்கு வாங்குகிறார்கள்

சைவ மரபு சாத்தானின் மரபு, உருவ வழிபாட்டு மரபு எனக் கூறி மாற்ற வேண்டும் உடைக்க வேண்டும் சுக்குநூறாக்க வேண்டும் என்போரே வந்தேறிகள்.

சிவசேனைத் தொண்டர்களுக்குப் பாராட்டும் ஒன்றே. பழிச் சொல்லும் ஒன்றே. மரபு காக்கும் பணியே மாறாத பிணி. 

புகுத்துவோர் முன், புற்று நோயூட்டியோர் முன், பால்வினை நோயூட்டியோர் முன், வஞ்சினம் கூறி நெஞ்சை நிமிர்த்தி அஞ்சேல் என வழிகாட்டியவர் திருஞானசம்பந்தர்.

பணியைப் பிணியாகக் கொண்டவர்.

இன்று இலங்கைத் தமிழ்ச் சைவர்கள் எதிர்கொள்கின்ற அதே சூழ்நிலையை அன்று அவர் எதிர்கொண்டவர். அவருடைய ஒரே நம்பிக்கை சிவபெருமான்.

சிவபெருமானைப் போற்றுவோர் பாராட்டுவோர் வாழ்த்துச் சொல்வோர் பரவுவோர்.

மாச்சரியத்தால் சினத்தால் பொறாமையால் ஆற்றாமையால் சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லிச் சிவபெருமானைப் பழித்து இகழ்வோர்.

நெஞ்சத்தில் அவரை நினைத்து, பூவும் நீரும் ஆட்டி நாள்தோறும் சிவபெருமான் மீது அன்பைப் பெருக்குவோர்.

போற்றுவாரையும் தூற்றுவாரையும் அன்பைப் பெருக்குவாரையும் தன்னோடு வைத்துக் கொள்பவர் சிவபெருமான், என்கிறார் திருஞானசம்பந்தர்.

பரவு வாரையு முடையார் 

பழித்திகழ் வாரையு முடையார்

விரவு வாரையு முடையார்... (தி02094005)

சிவபெருமானே நமக்கு வழிகாட்டி. நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம். மரபுகளைக் காப்போம். புகுத்தும் புற்றுநோய் ஆகும் பால்வினையாகும் மரபுச் சிதைப்பாளரை, மத மாற்றிகளை விரட்டுவோம்.

ஓயாது இப்பணி தொடர்வோம்.

....விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும் வீணருக்குழைத்துடலம் ஓயமாட்டோம்.. (பாரதியார், விடுதலைப் பள்ளு வரிகள்)

வந்தேறிகளா சிங்களவர்?

 பிருந்தாபன் பொன்ராசா எழுதுகிறேன்


மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயா அவர்களே,




ஈழமணித் திருநாட்டில் சிங்களவர்கள் வந்தேறு குடிகள் என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்டினேன். ஆனால் உங்கள் கருத்து இனத்தை விடுத்து மதத்தை மட்டும் பற்றி நிற்கின்றதே!


பிருந்தாபன் பொன்ராசா அவர்களே,

சிங்களம் என்ற சொல் எண்ணுறு ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக இல்லை. இன்றைய சிங்களவரே தம்மைச் சிங்களவர் என்று அன்று சொல்லிக் கொள்ளவில்லை. பூசா வழி என்ற நூல் சிங்களத்தில் எழும்வரை புத்த சமய வரலாறு பாளி மொழியிலேயே முழுமையாக எழுதினர். 

மகா வமிசத்தில் 37 அதிகாரங்களில் சிங்களம் என்ற சொல் இல்லவே இல்லை. சிங்கத்திற்குப் பிறந்த வழி வந்ததால் சிகாலி என்ற ஒரே சொல் அங்கு உண்டு. அந்த 37 அதிகாரங்களில் தமிழர் என்று சொல் சோழ நாட்டவரைக் குறிக்கும்.

பராக்கிரமபாகுவைச் சிங்களவர் என்று குல வமிசம் சொல்லவில்லை. பாராக்கிரமபாகு சந்திரகுல பாண்டிய இளவரசன். பாண்டிய மரபுக்கு அமையச் சத்திரியனாகப் பார்ப்பனர் வேதம் ஓதப் பூணூல் அணிந்தான் (குலவமிசம் 64.15,16,17). பாளி மொழியில் அமைந்த குல வமிசம் சொல்லும். 

நாகப்பட்டினம் சூளாமணி விகாரையில் வாழ்ந்த தமிழ் பிக்குகள் 900 ஆண்டுகளுக்கு முன் சித்த சங்கராமா என்ற சிங்கள இலக்கண நூலை எழுதினர். மியான்மார் மொழிக்கும் இலக்கண நூலை எழுதினர். அதற்கு முன்பு சிங்களத்தில் இலக்கண நூலே இல்லை. அந்தச் சிங்கள இலக்கண நூலில் பாடத்தில் ஐயம் எழுந்தால் தமிழில் புத்த மித்திரர் எழுதிய இலக்கண நூல் வீரசோழியத்தை பார்க்க எனக் குறிப்பு அடிக்கடி வரும்.

750 ஆண்டுகளுக்கு முன்பு நான்காம் பராக்கிரமபாகு அரசவையில் அரங்கேறிய சிங்கள நூல் பூசா வழி. குல வமிசம் நூலை ஒட்டி எழுதிய சிங்கள நூல்.

610 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கோகில சந்தேசய (குயில் விடு தூது) சிங்களத்தின் முதல் கவிதை நூல். அக்காலத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மூன்றாம் விசயபாகு,  அவனின் பல் மொழிப் புலமையாளரான பாண்டிய மனைவிக்குப் பிறந்த இரண்டாம் பராக்கிரமபாகு இருவரும் பல் மொழிப் புலமையாளர் எனவும் சிங்களத்தில் கவிதை நூல்களை எழுதினார் என்றும் குலவமிசம் கூறும். அவை என்று கிடைக்கின்றனவா? அறியேன்.

சிங்களவர் இல்லாத காலத்தில் சிங்களவர் இருந்ததாகக் கற்பனை செய்து அவர்களை வந்தேறிகள் என்று சொல்லுகின்ற நிலை வரலாறா? நீங்களே மேலும் தேடல்கள் மூலம் விடையை அறிந்து கொள்க.

புத்தர் இலங்கைக்கு வந்தார் (சித்திரை முழு நாளில் இரண்டாவது வருகை) என்ற செய்தியை மகா வமிசத்துக்கு முன்பே தமிழில் மணிமேகலைக் காப்பியம் 'மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை'யில்

அறுதியிட்டுக் கூறுகிறது. 

....கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும்

இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி 

எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார்

தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்

செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்

தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்

இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே 

பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும்....

அதற்கு முந்திய முதலாவது வருகையில், அவர் வந்த நாளில் கதிர்காமத்தில் தைப்பூசத் திருவிழா எனப் பாளி மொழிப் புத்த நூல்களான மகாவமிசம் தீபவமிசம் அட்டகாதை மகா வமிச தீகை முதலியன கூறும்.

.....the Conqueror, in the ninth month of his buddhahood, at the full moon of Phussa..... (தைப்பூசம்)

....there was a great gathering of (all) the yakkhas dwelling in the island. To this gathering of that yakkhas went the Blessed One... (இலங்கையிலுள்ள முருக வழிபாட்டாளரான மக்கள் அனைவருமே கூடியிருந்தனர்)

எனவே புத்த மதம் வந்தேறி மதம் என நான் சொல்கிறேன். முருகனின் அடியார்களை மகியங்கனையிலும் சிவனின் அடியார்களை யாழ்ப்பாணத்திலும் புத்தர் சந்தித்தார். நாகர் இயக்கர் என அழைத்த அவர்களுட் சிலர் புத்தரின் கொள்கைகளைப் பின்பற்ற முயன்றனர். சைவர்கள் ஆகவே தொடர்ந்தனர். அக்காலத்தில் சிங்களம் என்ற சொல்லுக்குப் பொருளே இல்லை. அச்சொல் தோன்றவே இல்லை.

தமிழ்நாட்டு வரலாற்றில் சிங்களம் என்ற சொல்லை முதலாம் இராசராச சோழனுக்கு முன்பு யாரும் இலக்கியத்திலோ கல்வெட்டிலோ செப்பேடுகளிலோ எழுதினரா அறியேன். அவனுக்குரிய பட்டப் பெயர்களில் ஒன்று சிங்களாந்தன்.

பிருந்தாபன் பொன்ராசா அவர்களே

 .,.... There is no clear genetic separation based on the Principal Component Analysis map between Sinhalese and Tamils, and between Up- and Low-country Sinhalese of Sri Lanka. 

The latter phenomenon suggests a recent division of the Sinhalese into Up- and Low-country, the fact confirmed on a historical ground.

For the groups represented in this study, majority of the Up-country Sinhalese formed closer association among themselves than did their Low-country ethnic counterparts. This is to a certain degree explicable in a light of the isolation-by-distance; the Up-country Sinhalese groups are more geographically proximal with each other than do their Low-country counterparts. 

However, the closer association of the Up-country Sinhalese with the Sri Lankan Tamils than with the Indian Tamils is not in agreement with the geographic distances among them..... 

Published: 07 November 2013, Mitochondrial DNA history of Sri Lankan ethnic people: their relations within the island and with the Indian subcontinental populations

Lanka Ranaweera, Supannee Kaewsutthi, Aung Win Tun, Hathaichanoke Boonyarit, Samerchai Poolsuwan & Patcharee Lertrit -Journal of Human Genetics volume 59, pages28–36 (2014)

பிருந்தாபன் பொன்ராசா  இந்தியாவின் வடமேற்கு கரை கூச்சரம் என்கிற குஜராத். அங்கே குருனார் என்ற இடத்தில் அசோகனின் இரண்டாவது பெரிய கல்வெட்டு. 

சோழர் பாண்டியர் கேரள புத்திரர் சத்தியபுத்திரர் தாமிரபரணி என்றெல்லாம் கூறும்  அக்காலத்தில் சிங்களவர் என்ற சொல் இல்லை. 

Everywhere in the dominions of king Devanampriya Priyadarsin (Ashoka) and (of those) who (are his) borderers, such as the Cholas, the Pandyas, the Satiyaputa, the Kelalaputa, Tamraparni, the Yona (Greek) king named Antiyoga (Antiochus), and the other kings who are the neighbours of this Antiyoga, everywhere two (kinds of) medical men were established by king Devanampriya Priyadarsin, (viz.) medical treatment for men and medical treatment for cattle.

Friday, August 04, 2023

மதவெறியர்கள் அறநெறி


01.08.2023

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிவ சேனை எழுதுகிறேன்.

மத வெறிப் புயலாக்காதீர் 

அற நெறிப் புத்தரை.

மேனாள் படைத்தளபதி சரத் பொன்சேகா போருக்குப் பின் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து கொக்கரித்தார். இலங்கை சிங்களவர் புத்த நாடு. 

நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாசா அமைச்சராக இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரம் புத்தர் சிலைகளை அமைப்போம் எனக் கொக்கரித்தார்.

கடந்த சில வாரங்களாகவே மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா கொக்கரித்து வருகிறார்.

இலங்கை சிங்கள புத்த நாடு. தீவு எங்கும் புத்தர் சிலைகளை வைப்போம் என்கிறார்.

போரில் வெற்றிக்குப் பின்னால் மத வெறியே வரலாறு. 

மைசூரைக் கைப்பற்றினோம். மதுரையைக் கைப்பற்றுவோம் என 725 ஆண்டுகளின் முன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் அதே மத வெறியுடன் தமிழகம் வந்தான்.

இந்துக் கோயில்களை அழித்தான். அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடித்தான்.

தொடர்ந்து அறுபது ஆண்டுகள் தமிழகத்தில் முகமதியர் ஆட்சி. இந்துக் கோயில்கள் இடிந்தன. மசூதிகள் எழுந்தன. இராமநாதபுரத்தின் பெயரே இலாலாபாத் என மாறியது.

அயோத்தியில் பல்லாயிரம் ஆண்டுத் தொன்மையான இராமர் கோயிலை 400 ஆண்டுகளுக்கு முன்பு இடித்தவன் பாபர். அங்கே மசூதியைக் கட்டினான்.

பாபர் வழிவந்த அவுரங்கசீப் காசியில் அருள்மிகு விசுவநாதர் கோயிலை முற்றாக அழித்து அங்கே மசூதியைக் கட்டினான்.

போரின் வெற்றியின் பின்னால் கொக்கரிக்கும் 

(1) முகமதிய மத வெறி 

(2) கத்தோலிக்க மத வெறி 

(3) புத்த மத வெறி தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

மூன்று மதவெறிப் படைகளுக்கும் தளபதிகளுக்கும் இலக்கு இந்துக்களே.

மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா விதிவிலக்கானவரா? 

அலாவுதீன் கில்ஜி, மாலிக் கபூர், பாபர், அவுரங்கசீப் போன்றோர் வரிசையில், போரின் வெற்றியை மத வெறியாக்குகிறார். அந்தப் படைத்தளபதிகளைப் போலவே இந்துக்களை நோக்கிக் கொக்கரிக்கிறார் சரத் வீரசேகரா.

450 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் தென்கோடியில், பல்லாயிரம் ஆண்டு பழமையான, பல்லவர் திருப்பணி செய்த, சீனர் கல்வெட்டு எழுதிய, அருள்மிகு தென்னாவர நாயனார் கோயிலை  கத்தோலிக்க மத வெறியோடு இடித்தவன் தளபதி தோமை சொயிசா. அங்கே உலூயிசா தேவாலயத்தைக் கட்டினான்.

416 ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்கத் தளபதி கான்ஸ்டன்ட்டைன் கச்ச தீவில்  அருள்மிகு கச்சாபகேச்சரர் திருக்கோயிலைத் தரைமட்டமாக்கினான்.

405 ஆண்டுகளுக்கு முன் இந்து அரசின் சங்கிலி மன்னனைத் தோற்கடித்த கத்தோலிக்க படைத்தளபதி இடீ லீவரா யாழ்ப்பாணத்தில் 400 சைவக் கோயில்களை இடித்தான். அங்கே தேவாலயங்களைக் கட்டுவித்தான்.

மன்னாரில் திருக்கேதீச்சரத்தைத் தடயமே இல்லாமல் முற்று முழுதாக அழித்தான்.

தோமை சொயிசா வழியில், கொன்ஸ்டன்ட்டையின் வழியில் இடி லீவரா வழியில், மத வெறியோடு இந்துக் கோயில்களைத் தாக்கியோர் அழித்தோர் கொக்கிரித்தோர் வழியில் போரில் வெற்றி பெற்ற மதகளிப்பில், வெற்றியைக் கொண்டாடும் மெய்சிலிர்ப்பில் இலங்கை, சிங்கள புத்த நாடு என்கிறார் மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா.

வெற்றியும் தோல்வியும் இரவும் பகலும் போல, மாறி மாறி வருவன அறியாரோ, மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா?

போரின் வெற்றிக்குப் பின்னால் நிதானமும் பெருந்தன்மையும் மாவீரன் அலெக்சாண்டருக்கு இருந்தது. இலங்கையில் மாவீரன் எல்லாளனுக்கு இருந்தது.

அத்தகைய நிதானமும் பெருந்தன்மையுமே இலங்கையில் புத்தர் கூறிய அன்பையும் அறனையும் அருளையும் அறிவையும் பெருக்கும். 

இலங்கையின் அழிவுக்கான வாயிலாகப் புத்தர் சிலைகளை, புத்த சமயத்தை, புத்தரின் கொள்கைகளை சரத் வீரசேகரா நஞ்சாக விதைக்கிறார். படு தோல்வியையே காண்பார்.

From

Maravanpulau K. Sachithanandan

Siva Senai, Sri Lanka.

Cyclonic religious fanaticism in the name of peace-loving Buddha.

Major General Sarath Fonseka went to America after the war. He shouted there saying Sri Lanka is a Sinhala Buddhist country.

Sajith Premadasa was a minister in the good governance government of President Maithiri. He shouted that he will set up a thousand Buddha statues in the Hindu homeland of Sri Lanka - North Eastern Provinces.

For the past few weeks, former Army Commander Sarath Veerasekhara has been on the prowl. He shouts saying Sri Lanka is a Sinhala Buddhist country. He says that his political agenda is to install Buddha statues everywhere on the island.

Religious fanaticism is behind every victory in wars. This is history.

725 years ago Alauddin Khilji's general Malik Kafoor came to Tamil Nadu with religious fanaticism to conquer Madurai after his victory in Mysore. He destroyed Hindu temples. He looted the riches there. The Muhammadan rule in Tamil Nadu continued for sixty consecutive years. Hindu temples were destroyed. Mosques arose. The name of Ramanathapuram itself changed to Lalabad.

Victorious Babur demolished the historical Rama temple in Ayodhya 400 years ago. He built a mosque there. Babur's descendant and conqueror Aurangzeb destroyed the Vishwanath temple at Kashi and built a mosque there.

Could General Sarath Weerasekhara be an exception? Along the lines of Alauddin Khilji, Malik Kafoor, Babur, Aurangzeb, etc., the victorious Sarath Weerasekhara is also shouting at Hindus.

450 years ago in Sri Lanka's Dondra head, the historical, Pallava-renovated, Chinese-inscribed, Buddhist patronized, auspicious Tennavara Nayanar temple was demolished by Catholic zealot General Thomas Soysa. He built the Catholic church there.

416 years ago, the Catholic General Constantine razed the temple to the ground of the Blessed Kachapakecherar on the island of Kachativu off Jaffna.

405 years ago, Catholic general De Levera, who defeated Sankili, king of the northern Hindu kingdom, destroyed 400 Saiva temples in the Jaffna peninsula to build Catholic churches there.

In Mannar, he completely destroyed razing it to the ground the Thiruketheechcharam temple.

Following the footsteps of Thomas Soysa, Constantine, and De  Levera (those who destroyed Hindu temples with religious fanaticism, victorious in war),  Commander Sarath Weerasekhara in the celebration of the victory, in his joyous moments declares with religious fervor and fanaticism, that Sri Lanka is a Sinhalese Buddhist country.

Victory and defeat are like night and day, Buddha said. Does he, Sarath Weerasekhara know not?

Temperance and magnanimity are glorious possessions of heroes of war. like the Macedonian, Alexander the Great, or the Sri Lankan Ellara. Has he not read the magnanimity of Dutu Gemunu providing for the post-war eternal respect for his sworn enemy? 

Such post-war moderation and generosity will perpetuate the love, virtue, grace, and knowledge that Gauthama the Buddha preached in Sri Lanka.

Sarath Weerasekhara is not a Buddhist if he seeks to plant Buddha statues in the Hindu homeland, or misinterprets Buddhism and Buddha's principles to Hindus. He is opening the gateway to hell for all Sri Lankans. Despite this, Buddhism will prosper in Sri Lanka.

මරවන්පුලවු කේ. සචිතානන්දන් සිව සේනයි, ශ්‍රී ලංකාව වෙතින්.

සාමයට ලැදි බුදුන් වහන්සේගේ නාමයෙන් චක්‍රීය ආගමික උමතුව.

මේජර් ජෙනරාල් සරත් ෆොන්සේකා යුද්ධයෙන් පසු ඇමරිකාවට ගියා. ලංකාව සිංහල බෞද්ධ රටක් කියමින් ඔහු එහිදී කෑගැසුවේය.

සජිත් ප්‍රේමදාස ජනාධිපති මෛත්‍රීගේ යහපාලන ආණ්ඩුවේ ඇමතිවරයෙකි. හින්දු නිජබිම වන ශ්‍රී ලංකාවේ - උතුරු නැගෙනහිර පළාත්වල බුදු පිළිම දහසක් පිහිටුවන බව ඔහු කෑගැසුවේය.

පසුගිය සති කිහිපය පුරාවටම හිටපු හමුදාපති සරත් වීරසේකර රස්තියාදු වෙමින් සිටියේය. ලංකාව සිංහල බෞද්ධ රටක් කියමින් කෑගසයි. දිවයිනේ සෑම තැනකම බුදු පිළිම ස්ථාපිත කිරීම තම දේශපාලන න්‍යාය පත්‍රය බව ඔහු පවසයි.

සෑම යුද ජයග්‍රහණයක් පිටුපසම ඇත්තේ ආගමික උන්මත්තකය. මෙය ඉතිහාසයයි.

වසර 725 කට පෙර අලවුදීන් කිල්ජිගේ සෙන්පති මලික් කෆූර් මයිසූර්හි ජයග්‍රහණයෙන් පසු මදුරෙයි යටත් කර ගැනීමට ආගමික උමතුවෙන් තමිල්නාඩුවට පැමිණියේය. ඔහු හින්දු කෝවිල් විනාශ කළේය. ඔහු එහි තිබූ ධනය කොල්ල කෑවේය. තමිල්නාඩුවේ මුහම්මද් පාලනය වසර හැටක් අඛණ්ඩව පැවතුනි. හින්දු කෝවිල් විනාශ කළා. මුස්ලිම් පල්ලි ඇති විය. රාමනාතපුරම් යන නමම ලලාබාද් ලෙස වෙනස් විය.

ජයග්‍රාහී බාබර් වසර 400 කට පෙර අයෝධ්‍යාවේ ඓතිහාසික රාම දේවාලය කඩා බිඳ දැමීය. ඔහු එහි මුස්ලිම් පල්ලියක් ඉදි කළේය. බාබුර්ගෙන් පැවත එන සහ ජයග්‍රාහකයා වූ අවුරංසෙබ් කාෂි හි විශ්වනාත් දේවාලය විනාශ කර එහි මුස්ලිම් පල්ලියක් ඉදි කළේය.

ජෙනරාල් සරත් වීරසේකර ව්යතිරේකයක් විය හැකිද? අලවුදීන් ඛිල්ජි, මලික් කෆූර්, බාබර්, ඖරංසෙබ් ආදීන්ගේ පේළියේ ජයග්‍රාහී සරත් වීරසේකර ද හින්දු භක්තිකයන්ට කෑ ගසයි.

මීට වසර 450 කට පෙර ශ්‍රී ලංකාවේ දෙවුන්දර තුඩුවේ, ඓතිහාසික, පල්ලව ප්‍රතිසංස්කරණය කරන ලද, චීන ශිලා ලේඛන සහිත, බෞද්ධ අනුග්‍රහය ලත්, පින්වන්ත තෙන්නවර නායනාර් විහාරය, කතෝලික භක්තික සෙන්පති තෝමස් සොයිසා විසින් කඩා බිඳ දමන ලදී. ඔහු එහි කතෝලික පල්ලිය ඉදි කළේය.

වසර 416 කට පෙර, කතෝලික ජෙනරාල් කොන්ස්ටන්ටයින් විසින් යාපනය කචතිව් දූපතේ පිහිටි භාග්‍යවත් කචපාකේචරර්ගේ දේවාලය සමූලඝාතනය කරන ලදී.

වසර 405 කට පෙර, උතුරු හින්දු රාජධානියේ රජු වූ සංකිලි පරාජය කළ කතෝලික සෙන්පති ද ලෙවේරා, යාපනය අර්ධද්වීපයේ කතෝලික පල්ලි ඉදිකිරීම සඳහා ශෛව කෝවිල් 400 ක් විනාශ කළේය.

මන්නාරමේදී ඔහු තිරුකේතීච්චරම් විහාරය සම්පූර්ණයෙන්ම විනාශ කළේය.

තෝමස් සොයිසා, කොන්ස්ටන්ටයින් සහ ද ලෙවේරා (ආගමික උමතුවෙන් හින්දු කෝවිල් විනාශ කළ, යුද්ධයෙන් ජයග්‍රහණය කළ අය) යන අයගේ අඩිපාරේ යමින්,. ලංකාව සිංහල බෞද්ධ රටකි.

ජයග්‍රහණයත් පරාජයත් රාත්‍රියක් හා දවාලක් වැනි බව බුදුන් වදාළහ. ඔහු, සරත් වීරසේකර දන්නේ නැද්ද?

අමද්‍යපභාවය සහ උදාරත්වය යුධ වීරයන්ගේ තේජාන්විත වස්තුවකි. මැසිඩෝනියානු, මහා ඇලෙක්සැන්ඩර්, හෝ ශ්‍රී ලංකා එල්ලර වැනි. තම දිවුරුම් දුන් සතුරාට පශ්චාත් යුධ සදාකාලික ගෞරවය සලසන දුටු ගැමුණුගේ උදාරත්වය ඔහු කියවා නැත්ද?

එවැනි පශ්චාත් යුධ මධ්‍යස්ථභාවය සහ ත්‍යාගශීලීභාවය ගෞතම බුදුපියාණන් වහන්සේ ශ්‍රී ලංකාවේ දේශනා කළ ආදරය, ගුණය, කරුණාව සහ දැනුම චිරස්ථායී කරනු ඇත.

සරත් වීරසේකර හින්දු නිජභූමියේ බුද්ධ ප්‍රතිමා සිටුවීමට උත්සාහ කරන්නේ නම් හෝ බුදුදහම සහ බුද්ධ ප්‍රතිපත්ති හින්දුන්ට වැරදි ලෙස අර්ථකථනය කරන්නේ නම් ඔහු බෞද්ධයෙකු නොවේ. ඔහු සියලු ශ්‍රී ලාංකිකයන් සඳහා අපායේ දොරටුව විවෘත කරයි. එසේ වුවද ශ්‍රී ලංකාවේ බුදුදහම දියුණු වනු ඇත.

फ्रॉममारावनपुलौ के. सचिथानंदनशिव सेनाई, श्रीलंका।

शांतिप्रिय बुद्ध के नाम पर चक्रवाती धार्मिक कट्टरता।

युद्ध के बाद मेजर जनरल सरथ फ़ोन्सेका अमेरिका चले गये। उन्होंने वहां चिल्लाते हुए कहा कि श्रीलंका एक सिंहली बौद्ध देश है।

साजिथ प्रेमदासा राष्ट्रपति मैथिरी की सुशासन सरकार में मंत्री थे। उन्होंने चिल्लाकर कहा कि वह हिंदू मातृभूमि श्रीलंका-उत्तर पूर्वी प्रांत में एक हजार बुद्ध प्रतिमाएं स्थापित करेंगे।

पिछले कुछ हफ्तों से पूर्व सेना कमांडर सरथ वीरसेखरा तलाश में हैं। वह चिल्लाकर कहता है कि श्रीलंका एक सिंहली बौद्ध देश है। उनका कहना है कि उनका राजनीतिक एजेंडा द्वीप पर हर जगह बुद्ध की मूर्तियां स्थापित करना है।

युद्धों में हर जीत के पीछे धार्मिक कट्टरता होती है। यह इतिहास है.

725 वर्ष पूर्व अलाउद्दीन खिलजी का सेनापति मलिक काफ़ूर मैसूर विजय के बाद मदुरै को जीतने के लिए धार्मिक कट्टरता के साथ तमिलनाडु आया था। उसने हिंदू मंदिरों को नष्ट कर दिया। उसने वहां का धन लूटा। तमिलनाडु में मुहम्मदी शासन लगातार साठ वर्षों तक जारी रहा। हिंदू मंदिरों को नष्ट कर दिया गया। मस्जिदें पैदा हुईं. रामनाथपुरम का नाम ही बदलकर लालाबाद हो गया।

विजयी बाबर ने 400 साल पहले अयोध्या में ऐतिहासिक राम मंदिर को ध्वस्त कर दिया था। उन्होंने वहां एक मस्जिद बनवाई. बाबर के वंशज और विजेता औरंगजेब ने काशी में विश्वनाथ मंदिर को नष्ट कर दिया और वहां एक मस्जिद बनवाई।

क्या जनरल सरथ वीरशेखरा अपवाद हो सकते हैं? अलाउद्दीन खिलजी, मलिक काफूर, बाबर, औरंगजेब आदि की तर्ज पर विजयी शरथ वीरशेखरा भी हिंदुओं पर चिल्ला रहा है।

450 साल पहले श्रीलंका के डोंड्रा हेड में, ऐतिहासिक, पल्लव-पुनर्निर्मित, चीनी-लिखित, बौद्ध संरक्षण प्राप्त, शुभ तेनावारा नयनार मंदिर को कैथोलिक कट्टरपंथी जनरल थॉमस सोयसा ने ध्वस्त कर दिया था। उन्होंने वहां कैथोलिक चर्च बनवाया।

416 साल पहले, कैथोलिक जनरल कॉन्सटेंटाइन ने जाफना के कचातिवु द्वीप पर धन्य कचापाकेचेरार के मंदिर को ध्वस्त कर दिया था।

405 साल पहले, कैथोलिक जनरल डी लेवेरा, जिन्होंने उत्तरी हिंदू साम्राज्य के राजा संकिली को हराया था, ने वहां कैथोलिक चर्च बनाने के लिए जाफना प्रायद्वीप में 400 शैव मंदिरों को नष्ट कर दिया था।

मन्नार में, उसने थिरुकेथिच्चरम मंदिर को पूरी तरह से नष्ट कर दिया।

थॉमस सोयसा, कॉन्स्टेंटाइन और डी लेवेरा (जिन्होंने धार्मिक कट्टरता के साथ हिंदू मंदिरों को नष्ट कर दिया, युद्ध में विजयी हुए) के नक्शेकदम पर चलते हुए, जीत के जश्न में कमांडर सरथ वीरशेखरा, अपने खुशी के क्षणों में धार्मिक उत्साह और कट्टरता के साथ घोषणा करते हैं, कि श्री लंका एक सिंहली बौद्ध देश है।

बुद्ध ने कहा, जीत और हार रात और दिन की तरह हैं। क्या वह, सरथ वीरशेखरा नहीं जानते?

संयम और उदारता युद्ध के नायकों की गौरवशाली संपत्ति हैं। जैसे मैसेडोनियन, अलेक्जेंडर द ग्रेट, या श्रीलंकाई एलारा। क्या उसने अपने शत्रु के लिए युद्ध के बाद शाश्वत सम्मान प्रदान करने के लिए दुतु जेमुनु की उदारता को नहीं पढ़ा है?

युद्ध के बाद का ऐसा संयम और उदारता उस प्रेम, सदाचार, अनुग्रह और ज्ञान को कायम रखेगी जिसका उपदेश गौतम बुद्ध ने श्रीलंका में दिया था।

सरथ वीरशेखरा बौद्ध नहीं हैं यदि वह हिंदू मातृभूमि में बुद्ध की मूर्तियाँ लगाना चाहते हैं, या हिंदुओं के लिए बौद्ध धर्म और बुद्ध के सिद्धांतों की गलत व्याख्या करते हैं। वह सभी श्रीलंकाई लोगों के लिए नरक का द्वार खोल रहा है। इसके बावजूद श्रीलंका में बौद्ध धर्म समृद्ध होगा।