Saturday, August 12, 2023

வந்தேறிகளா சிங்களவர்?

 பிருந்தாபன் பொன்ராசா எழுதுகிறேன்


மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயா அவர்களே,




ஈழமணித் திருநாட்டில் சிங்களவர்கள் வந்தேறு குடிகள் என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்டினேன். ஆனால் உங்கள் கருத்து இனத்தை விடுத்து மதத்தை மட்டும் பற்றி நிற்கின்றதே!


பிருந்தாபன் பொன்ராசா அவர்களே,

சிங்களம் என்ற சொல் எண்ணுறு ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக இல்லை. இன்றைய சிங்களவரே தம்மைச் சிங்களவர் என்று அன்று சொல்லிக் கொள்ளவில்லை. பூசா வழி என்ற நூல் சிங்களத்தில் எழும்வரை புத்த சமய வரலாறு பாளி மொழியிலேயே முழுமையாக எழுதினர். 

மகா வமிசத்தில் 37 அதிகாரங்களில் சிங்களம் என்ற சொல் இல்லவே இல்லை. சிங்கத்திற்குப் பிறந்த வழி வந்ததால் சிகாலி என்ற ஒரே சொல் அங்கு உண்டு. அந்த 37 அதிகாரங்களில் தமிழர் என்று சொல் சோழ நாட்டவரைக் குறிக்கும்.

பராக்கிரமபாகுவைச் சிங்களவர் என்று குல வமிசம் சொல்லவில்லை. பாராக்கிரமபாகு சந்திரகுல பாண்டிய இளவரசன். பாண்டிய மரபுக்கு அமையச் சத்திரியனாகப் பார்ப்பனர் வேதம் ஓதப் பூணூல் அணிந்தான் (குலவமிசம் 64.15,16,17). பாளி மொழியில் அமைந்த குல வமிசம் சொல்லும். 

நாகப்பட்டினம் சூளாமணி விகாரையில் வாழ்ந்த தமிழ் பிக்குகள் 900 ஆண்டுகளுக்கு முன் சித்த சங்கராமா என்ற சிங்கள இலக்கண நூலை எழுதினர். மியான்மார் மொழிக்கும் இலக்கண நூலை எழுதினர். அதற்கு முன்பு சிங்களத்தில் இலக்கண நூலே இல்லை. அந்தச் சிங்கள இலக்கண நூலில் பாடத்தில் ஐயம் எழுந்தால் தமிழில் புத்த மித்திரர் எழுதிய இலக்கண நூல் வீரசோழியத்தை பார்க்க எனக் குறிப்பு அடிக்கடி வரும்.

750 ஆண்டுகளுக்கு முன்பு நான்காம் பராக்கிரமபாகு அரசவையில் அரங்கேறிய சிங்கள நூல் பூசா வழி. குல வமிசம் நூலை ஒட்டி எழுதிய சிங்கள நூல்.

610 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கோகில சந்தேசய (குயில் விடு தூது) சிங்களத்தின் முதல் கவிதை நூல். அக்காலத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மூன்றாம் விசயபாகு,  அவனின் பல் மொழிப் புலமையாளரான பாண்டிய மனைவிக்குப் பிறந்த இரண்டாம் பராக்கிரமபாகு இருவரும் பல் மொழிப் புலமையாளர் எனவும் சிங்களத்தில் கவிதை நூல்களை எழுதினார் என்றும் குலவமிசம் கூறும். அவை என்று கிடைக்கின்றனவா? அறியேன்.

சிங்களவர் இல்லாத காலத்தில் சிங்களவர் இருந்ததாகக் கற்பனை செய்து அவர்களை வந்தேறிகள் என்று சொல்லுகின்ற நிலை வரலாறா? நீங்களே மேலும் தேடல்கள் மூலம் விடையை அறிந்து கொள்க.

புத்தர் இலங்கைக்கு வந்தார் (சித்திரை முழு நாளில் இரண்டாவது வருகை) என்ற செய்தியை மகா வமிசத்துக்கு முன்பே தமிழில் மணிமேகலைக் காப்பியம் 'மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை'யில்

அறுதியிட்டுக் கூறுகிறது. 

....கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும்

இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி 

எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார்

தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்

செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்

தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்

இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே 

பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும்....

அதற்கு முந்திய முதலாவது வருகையில், அவர் வந்த நாளில் கதிர்காமத்தில் தைப்பூசத் திருவிழா எனப் பாளி மொழிப் புத்த நூல்களான மகாவமிசம் தீபவமிசம் அட்டகாதை மகா வமிச தீகை முதலியன கூறும்.

.....the Conqueror, in the ninth month of his buddhahood, at the full moon of Phussa..... (தைப்பூசம்)

....there was a great gathering of (all) the yakkhas dwelling in the island. To this gathering of that yakkhas went the Blessed One... (இலங்கையிலுள்ள முருக வழிபாட்டாளரான மக்கள் அனைவருமே கூடியிருந்தனர்)

எனவே புத்த மதம் வந்தேறி மதம் என நான் சொல்கிறேன். முருகனின் அடியார்களை மகியங்கனையிலும் சிவனின் அடியார்களை யாழ்ப்பாணத்திலும் புத்தர் சந்தித்தார். நாகர் இயக்கர் என அழைத்த அவர்களுட் சிலர் புத்தரின் கொள்கைகளைப் பின்பற்ற முயன்றனர். சைவர்கள் ஆகவே தொடர்ந்தனர். அக்காலத்தில் சிங்களம் என்ற சொல்லுக்குப் பொருளே இல்லை. அச்சொல் தோன்றவே இல்லை.

தமிழ்நாட்டு வரலாற்றில் சிங்களம் என்ற சொல்லை முதலாம் இராசராச சோழனுக்கு முன்பு யாரும் இலக்கியத்திலோ கல்வெட்டிலோ செப்பேடுகளிலோ எழுதினரா அறியேன். அவனுக்குரிய பட்டப் பெயர்களில் ஒன்று சிங்களாந்தன்.

பிருந்தாபன் பொன்ராசா அவர்களே

 .,.... There is no clear genetic separation based on the Principal Component Analysis map between Sinhalese and Tamils, and between Up- and Low-country Sinhalese of Sri Lanka. 

The latter phenomenon suggests a recent division of the Sinhalese into Up- and Low-country, the fact confirmed on a historical ground.

For the groups represented in this study, majority of the Up-country Sinhalese formed closer association among themselves than did their Low-country ethnic counterparts. This is to a certain degree explicable in a light of the isolation-by-distance; the Up-country Sinhalese groups are more geographically proximal with each other than do their Low-country counterparts. 

However, the closer association of the Up-country Sinhalese with the Sri Lankan Tamils than with the Indian Tamils is not in agreement with the geographic distances among them..... 

Published: 07 November 2013, Mitochondrial DNA history of Sri Lankan ethnic people: their relations within the island and with the Indian subcontinental populations

Lanka Ranaweera, Supannee Kaewsutthi, Aung Win Tun, Hathaichanoke Boonyarit, Samerchai Poolsuwan & Patcharee Lertrit -Journal of Human Genetics volume 59, pages28–36 (2014)

பிருந்தாபன் பொன்ராசா  இந்தியாவின் வடமேற்கு கரை கூச்சரம் என்கிற குஜராத். அங்கே குருனார் என்ற இடத்தில் அசோகனின் இரண்டாவது பெரிய கல்வெட்டு. 

சோழர் பாண்டியர் கேரள புத்திரர் சத்தியபுத்திரர் தாமிரபரணி என்றெல்லாம் கூறும்  அக்காலத்தில் சிங்களவர் என்ற சொல் இல்லை. 

Everywhere in the dominions of king Devanampriya Priyadarsin (Ashoka) and (of those) who (are his) borderers, such as the Cholas, the Pandyas, the Satiyaputa, the Kelalaputa, Tamraparni, the Yona (Greek) king named Antiyoga (Antiochus), and the other kings who are the neighbours of this Antiyoga, everywhere two (kinds of) medical men were established by king Devanampriya Priyadarsin, (viz.) medical treatment for men and medical treatment for cattle.

No comments: