Sunday, July 24, 2022

நீத்தார் கடனாக நினைவேந்தல்

 நீத்தார் கடனாக நினைவேந்தல்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


போர்க் களம். மார்பில் ஈட்டி. மகிழ்ந்தது நெஞ்சம். மகன் இறந்ததால் மகிழ்ச்சியா தாய்க்கு? 

முதுகில் ஈட்டி பாய்ந்து இறந்தால், ஏன் பெற்றேன் இந்த மகனை எனத் துயர் தாய்க்கு. 

மார்பில் ஈட்டி பாய்ந்து இறந்தால் என்ன தவம் செய்தேன் என மகிழச்சி தாய்க்கு. 

பெற்ற பொழுது இல்லாத உவப்பும் மகிழ்ச்சியும் மாவீரன் தன் மகன் என்பதாய் தாய்க்கு.

வீடு திரும்புவாள் தாய், முதுகில் ஈட்டி எனில் என்? மார்பில் ஈட்டி எனில் என்? இறந்த பொழுது, உயிர் பிரிந்த பொழுது எது? 

காலையா, நண்பகலா? மாலையா? முன்னிரவா? நள்ளிரவா? விடியலா? வளர் பிறையா? எத்தனையாம் நாள்? தேய் பிறையா? எத்தனையாம் நாள்? 

கணித்தாள். அவள் செஞ்சில் நீங்காப் பொழுது. கணித்த நாளில் ஒவ்வொரு மாதமும் வழிபாடு. உயிருக்கு வழிபாடு. உயிர் உலவிக்கொண்டே தொடர்கிறதாம். வாழ்ந்த பொழுதுகளை மீட்கிறதாம்.

குத்து விளக்கு ஒளி, குடம் நிறைத்த நீர் மூடிய மாவிலைத் தேங்காய், அரிசி மாக் குழையல்களே உயிரின் சாட்சியாக.

பால் படையல், பழம் படையல், பொங்கல் படையல், வாழ்ந்த காலத்தில் விழைந்த உணவுகள் படையல். 

மனம் ஒடுங்கிப் பாடுகிறாள். தாலாட்டுத் தொடக்கம் வழிபாட்டுப் பாடல்களாக, தெய்வமாக மகனை உருவகித்துப் பாடுகிறாள். மகன் நினைவுகளில் கரைகிறாள். 

மாதந் தோறும் வழிபட ஓராண்டு. அடுத்து ஆண்டுக்கு ஒருமுறை படையலும் வழிபாடும். நீத்தார் கடன்.

மறக்காள் பிறை நாளை. ஆண்டு நினைவுக்கு அழைப்பாள் உறவுகளை. 

போரும் காதலுமா? காதலும் போருமா? அகமும் புறமுமா? புறமும் அகமுமா?

மனித வரலாறே போரும் காதலுமாம்.

இராவணனன் தொடக்கம் சைவத் தமிழ் அரசர் கண்ட போர்க்களங்கள் எண்ணில் அடங்கா. இலங்கை தொடர்ச்சியாகவே போர்க்களத்தின் தளம்.  

நெடிய சைவத் தமிழர் வரலாற்றில் இலங்கைப் போர்க்களங்களில் இறந்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. இவர்களை நினைவு கூரும் சுற்றமும் உற்றமும் எண்ணுக் கணக்கில் அடங்கா.

402 ஆண்டுகளுக்கு முன் சைவத் தமிழ் அரசன் சங்கிலியன் போரில் மாய்ந்தான். அவனோடு கணக்கில் அடங்காச் சைவத் தமிழ் உயிர்களை இழந்தோம்.

இழந்த நாள் வைகாசி, தேய்பிறை எட்டாம் நாள். 

இந்த நாளைக் கணக்கிட்டுத் தந்தவர் வாழும் வரலாற்றுப் பேராசிரியர் பத்மநாதன். கொழும்பில் 45 ஆண்டுகளுக்கு முன் நடந்த அரசியல் வழக்கில், ஈழச் சைவத் தமிழர் இறைமை, போர்த்துக்கேயக் கத்தோலிக்கரிடம் சென்றடைந்த நாள் திருவள்ளுவருக்குப் பின் 1970ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் தேய்பிறை எட்டாம் நாள் (05 யூன் 1619) எனக் கூறி வாதாடியவர் மூத்த வழக்கறிஞர் மு. திருச்செல்வம். 

பேராசிரியர் பத்மநாதன் கணக்கிட்ட நாளே, வழக்கறிஞர் திருச்செல்வம் எடுத்துக் கூறிய நாள். 45 ஆண்டுகளுக்குமுன் வழக்கறிஞர் திருச்செல்வம் தன் வழக்குரை வாதங்களை நூலாக வெளியிட்டார். அவரது மகன் நீலன் திருச்செல்வத்தின் முன்னுரையுடன் கூடிய அந்த நூலை இன்றும் விலைக்கு வாங்கலாம்.

12 ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் சைவத் தமிழர் போரில் தோற்ற நாள், கணக்கிலடங்கா சைவத் தமிழ் உயிர்களைப் போரில் பறிகொடுத்த நாள், வைகாசித் திங்கள் தேய்பிறை ஒன்பதாம் நாள்.

சங்கிலியன் நினைவேந்தல் நாளுக்கு அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள்.

27 ஆண்டுகளுக்கு முன்னர், உரும்பராய் சிவகுமாரன் நினைவேந்தல் வைகாசி  தேய்பிறை முதலாம் நாள்.  

பிறந்த நாளுக்கு  ஒருவர் பிறந்த நட்சத்திரம் வருமநாளே பிறந்த நாள். மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் அதுவே நமது மரபு. 

திதியைப் பார்த்தே நினைவேந்தல். இறந்தவர்கள் இறந்து போன நாளன்றே அவ் உயிர்கள் நம்மை நாடி வருகின்றன. எனவே அதை விடுத்து அவர்கள் இறந்து போன ஆங்கிலத் தேதியை கணக்கிட்டு திதி கொடுப்பது வீணானதே. 


தென்னாவரம் Dondra Head

 தென்னாவரம் எனும் தொண்டீச்சரம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம், முன்னேச்சரம், தொண்டீச்சரம், நகுலேச்சரம் ஆய சிவன் கோயில்கள் இராவணன் காலத்துக்கும் முந்தையன. இதனாலன்றோ இலங்கையைச் சிவபூமி என்பார் திருமந் திரத்தில் திருமூலர்.

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்

சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ

டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே. (தி10913010)

இலங்கையின் மறு பெயர் நாக நாடு. நாகர் வாழும் நாடு நாக நாடு. தமிழர்களே ஆதி நாகர்கள். அம்மெய்யன் நாகனார், இளநாகனார், இனி சந்த நாகனார், எழுவுப்பன்றி நாகனார், நன்னாகனார், பொன்னாகன், வெண்ணாகனார், முப்பேர் நாகனார், முரஞ்சியூர் முடிநாகரையனார், விரிச்சியூர் நன்னாகனார், வெள்ளைக்குடி நாகனார் போன்ற பெயர்களைக் கொண்டவர். சிவ வழிபாட்டினர்.

நாக மன்னனும் தென்னாவரமும்

திருவள்ளுவருக்கு முன் 600இல் வாழ்ந்த சிவ நாகன் மூத்தவன், நாகநாட்டின் அரசன். திருக்கேதீச்சரமும் திருக்கோணேச்சரமும் இவனின் வழிபடு கோயில்கள். தவ நாகன் இரண்டாமவன் களனி நாட்டின் அரசன். முன்னேச்சரமும் சிவனொளி பாதமலையும் இவனது வழிபடு கோயில்கள். மால நாகன் இளையவன் உரோகணத்து அரசன். தென்னாவரம் என்ற தொண்டீச்சரமும் கதிர்காமமும் இவனின் வழிபடு கோயில்கள்.

இளவரசர்களாக இருந்த காலத்தில் சிவ நாகனும் தவ நாகனும் உரோகணம் சென்றனர். கதிர்காமத்தில் தைப்பூச நாளில் காவடி ஆடினர். மாணிக்க நதிக் கரையில் இயக்கவள்ளி, இயக்கமணி என உடன்பிறப்புகளான இரு அழகான பெண்களைக் கண்டனர். சிவ நாகனுக்கு மனைவியானாள் இயக்கிவள்ளி. தவ நாகனுக்கு மனைவியானாள் இயக்கிமணி.

உரோகணத்தில் இருந்து திரும்பும் வழியில் குவையாக இரத்தினங்களைப் பரிசளித்தான் மால நாகன். அவ் இர்த்தினக் கற்களை இழைத்துத் தங்க அரியணை இனக்குவித்தான் சிவ நாகன்.

இந்தத் தங்க அரியணையே சிவ நாகனின் மகன் மகா நாகன் (மகாவமிசம் கூறும் மகோதரன்) வைத்திருந்தான். மகா நாகனின் தங்கை மகன் குல நாகன் (குலோதரன் என மாகாவமிசம் கூறும்) விரும்பினான். அதற்காப் போர் நடந்த நிகழ்ச்சியை முதலில் கூறியது சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை, பின்னர் கூறியது மகாவமிசம்.

வீரராகவனும் தென்னாவரமும்

மதுரையைச் சேர்ந்தவன் வீரவராயன் செட்டியார். இலங்கைக்கு அடிக்கடி வரும் வெண்கலப் பொருள் வணிகன். திருவள்ளுவருக்குப் பின் 278இல் தன் வீரர்களுடன் மாதோட்டத் துறைமுகத்துள் வந்திறங்கினான். திருக்கேதீச்சரம் சென்றான். பாலாவியில் நீராடினான். கௌரியம்பாள் உடனுறை திருக்கேதீச்சர நாதரை வழிபட்டனர். 

மருதமடு வந்தனர் அடியார் திருக்கூட்டமாக. மதுரைப் புகழ் கண்ணகிக்கு கோயில் கயவாகு கட்டியிருந்தான். வழிபட்டனர்.

வணிகத்துக்காக அநுராதபுரத்தை நோக்கிப் பயணமாயினர். ஏராளமான வெண்கலச் சட்டிகள், கலைப் பொருள்களை விற்றனர்.

அவனும் வீரர்களும் தங்கிய ஊரே இன்றைய வெண்கலச் செட்டிகுளம். சிவனின் அடியவனான வீரவராயன் செட்டியார், திபி. 320இல் வௌவாலையில் குளம் தோண்டிக் கேணியாக்கினான். அருகே சிவன் கோயில் கட்டினான்.

தெற்கே உரோகணத்துச் தென்னாவரம் தொண்டீச்சரர் கோயில் அடியவனாதலால் வௌவாலைச் சிவன் கோயிலுக்கும் சந்திரசேக ரீச்சரம் எனப் பெயரிட்டு வழிபட்டு வந்தான்.

பல்லவரும் தென்னாவரமும்

பல்லவன் நரசிம்ம வர்மன், இலங்கையின் தென்முனையில் தொண்டீச்சரம் என்ற தென்னாவரம் கோயிலை தமிழகத்தில் தான் அமைத்த மாமல்லபுரம் சிற்பப் பாணியில் மீளக் கட்டினான்.

மாமல்லபுரம் போன்ற சிற்பக் கலையுடன் பல்லவன் சிம்ம விட்டுணு காலத்திலும் நரசிம்ம வர்மன் காலத்திலும் கட்டுவித்த திருக்கோயில் தென்னாவரம்.

சோழரும் தென்னாவரமும்

விசயாலயன் தொடங்கிய சோழ மீழெழுச்சி வரலாற்றில் அவன் பரம்பரையினர் எவரும் இலங்கைக்கு வரவில்லை. 

அந்தப் பரம்பரையின் முதலாவது இலங்கைப் பயணி இராசாதிராசன்.

திருப்பதிகம் பாடப்பெற்ற திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் மற்றும் இலங்கையில் உள்ள முன்னேச்சரம், தென்னாவரமான தொண்டீச்சரம், கதிர்காமம், சனநாதமங்கல வானவன்மாதேச்சரம், கந்தளாய் இராசராசேச்சரம், இரவிகுலமாணிக்கேச்சரம், உத்தம சோழீச்சரம், விக்கிரமசீலமேகவீச்சரம் ஆகிய திருக்கோயில்களில் வழிபட விரும்பியவன் இராசாதிராசன். முதலாம் இராசேந்திரனின் மூத்த மகன்.

யாழ்ப்பாண அரசும் தென்னாவரமும்

கிரேக்கப் பயணி கொசுமாசு இந்திக்கோபிளியுத்தசு திபி. 600 ஆண்டளவில் தென்னாவரம் வந்தார். யாழ்ப்பாண மன்னரின் ஆட்சியில் தென்னாவரம் இருந்ததைத் குறிப்பிடுகிறார். (6th century Greek merchant Cosmas Indicopleustes)

சேனனும் தென்னாவரமும்

மாணிக்கவாசகர் காலத்தில் முதலாம் சேனன் ஆட்சியில் சந்தனத் திருமால் சிலாவடிவம் தென்னாவரம் கோயிலுக்கு வந்து சேர்ந்ததைக் கேகாலை மாவட்ட ஓலை ஏடுகளில் கண்டறிந்தவர் அரிசர் (Harry Charles Purvis Bell).

பாண்டியரின் இலங்கை மன்னர் காலத் தென்னாவரம்

பாண்டியர் வழிவந்த தமிழ்ச் சைவ அரசர்களான இரண்டாம் பராக்கிரமபாகு, ஆறாம் பராக்கிரமபாகு, யாவரும் இத் திருக்கோயிலைப் போற்றினர், வழிபட்டனர்,

பின்னர் வந்த ஆறாம் விசயபாகு, ஏழாம் விசயபாகு, சீனப் பயணி செங்கோ திருப்பணி செய்தனர். நிவந்தங்கள், பரிசுகள் வழங்கினர்.

நான்காம் பராக்கிரமபாகுவின் அரசவைப் புலவர் போசராசர். தென்னாவரத்தவர். சரசுவதி மாலை என்ற நூலைத் தமிழில் பின் சிங்களத்தில் எழுதி அரசவையில் அரங்கேற்றினார். தென்னாவரத்தில் இவருக்குப் பெருந்தோட்டம் பரிசு.

ஆறாம் பராக்கிராமபாகு காலத்தில் அரசவையில் தமிழ்ப் புலவர் நல்லுருத்தினார். தென்னாவரம் அவரது ஊர். புராண நாமாவழிய என்ற சிங்கள நூலை எழுதினார். புலவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்தவித்தார் ஆறாம் பராக்கிரமபாகு.

இவன் பற்றுற்றாவும் தென்னாவரமும்

திருவள்ளுவருக்குப் பின் 1375இல் புத்தளத்தில் காற்றுத் தள்ளக் கரையிறங்கியவர் இவன் பற்றுற்றா (Ibn Batuta). இவர் மொரொக்கோ நாட்டுப் பயணி. 

புத்தளத்தில் முத்துக் குளிப்புக்காக முகாமிட்டிருந்த வரோதைய சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியைச் சந்தித்தார். பாரசீக மொழியில் இருவரும் உரையாடினர். 

தெற்கே தென்னாவரம் என்ற தொண்டடீச்சரம் கோயில், மலைகளுள் சிவனொளிபாதமலை யாவையும் காண விழைந்தார் இவன் பற்றுற்றா. அரசக் கணையாழி ஒன்றைக் கொடுத்தான் வரோதையன். அதுவே கடவுச் சீட்டாயிற்று. மல்லன் ஒருவனையும் துணைக்கு அனுப்பினான்.

தொண்டீச்சரம் சென்ற  இவன் பற்றுற்றா அங்கே இந்திர விழா நடைபெற்றதையும் ஓராயிரம் மகளிர் விழாவில் நாட்டியமாடியதைக் கண்டதாகவும் தன் பயணக்குறிப்புகளில் எழுதினார்.  

நூற்றுக்கும் கூடுதலான கப்பல்கள், முத்து, பவளம், யானைத் தந்தம், ஏலம், கறுவா, கராம்பு, மிளகு, நெய்த பட்டு, கலைப் பொருள்கள் யாவையும் ஏற்றிக்கொண்டு புத்தளம் துறைமுகத்தில் பாய்விரித்தன. அரபுக் கடல் நோக்கின. இவ்வணிகத்தின் உடைமையாளர் ஆரியச் சக்கரவர்த்தி என இவன் பற்றுற்றா தன் பயண நூலில் எழுதுகிறார்.

சீனரும் தென்னாவரமும்

திருவள்ளுவருக்குப் பின் 1445இல் சீன அரசின் சார்பாளர் செங்கோ தென்னாவரம் வந்தார். பொன், மணி, முத்து, பட்டு என, விலையுயர்ந்த சீனப் பொருள்களைக் கோயிலுக்கு அன்பளித்தார். சீன, பாரசீக, தமிழ் மொழிகளில் கல்வெட்டுப் பொறித்தார். தென்னவராய நாயனார் எனச் சந்திரசேகரரைக் கல்வெட்டில் குறித்தார். இம் மும்மொழிக் கல்வெட்டு இன்றும் கொழும்பு அருங்காட்சியகத்தில் உண்டு.

தொன்மைக்குத் தொன்மை

தென்னாவரம் திருக்கோயில் கொண்ட இலங்கை முழுவதும் சிவபூமி. மன்னார், மாதோட்டம், திருக்கேதீச்சரம் போன்றே சந்திரசேகரீச்சரமும் பழமையான திருக்கோயில். இலங்கையின் தென் முனையில் அமைந்தது. புனிதமான தொன்மையான பஞ்ச ஈச்சரங்களுள் ஒன்று.

திருவள்ளுவர் காலத்தைய கிரேக்கக் குறிப்புகள், பல்லவர் பங்களிப்புடன் திருப்பணி, தொடர்ச்சியாகத் தெற்கத்தைய அரசர்களின் நிவந்தங்கள், தென்னாவரம் திருக்கோயிலின் பாதுகாப்புக்கும் இருப்புக்கும் அடித்தளம்.

சைவரான நாகர், பல்லவர், சேரர், சோழர், பாண்டிய அரசர், புத்தரான சிங்களர், சீனர் எனப் பல தலைமுறைகளுக்கு ஊடாகப் போற்றிப் பரவிய வரலாற்றுக்கு முந்தைய காலச் சைவக் கோயில் தென்னாவரம்.

போர்த்துக்கேயரும் தென்னாவரமும்

தெற்கே தொண்டீச்சரம் என்ற தென்னாவரம் சிவன்கோயிலை, திருவள்ளுவருக்குப் பின் 1619 மாசியில் முற்றாகத் தகர்த்தனர். இடித்துத் தள்ளிய கத்தோலிக்கன், தளபதி தோமை சொயிசா என்ற போர்த்துக்கேயன்.

ஈவிரக்கமின்றி, வரலாற்றுக் கண்ணோட்டமின்றிக் காட்டுமிராண்டியாய்க் கத்தோலிக்கத் தளபதி தோமை சொயிசா இடித்துத் தள்ளினான். 

சைவரும் புத்தரும் கண்ணீர் வடித்தனர். அக்கோயில் இருந்த இடத்தில் கிருத்தவ உலூசியா தேவாலயம் ஒன்றைக் கட்டினர்.

இன்று வரை தென்னாவரம் சிவன் கோயிலை மீளமைக்கவில்லை. தென்னாவரம் சிவன்கோயில் திருப்பணிச் சங்கம் அமைத்துத் திருக்கோயிலை மீள அமைப்போமாக. பாண்டியரும் பல்லவரும் சோழரும் ஈழத்தவரும் சிங்களவரும் திருப்பணிகள் செய்து நிவந்தங்கள் வழங்கிப் பராமரித்து வழிபட்ட சிவன்கோயிலை மீளமைப்பது சைவர் கடனாகும்.

 

Thursday, July 14, 2022

ஊர்க்குருவி வடிவேலு

 ஈழநாடு 15 ஜூலை 2022 வெள்ளிக்கிழமை 

இப்படியும் நடக்கிறது...!


தமிழ் படம் ஒன்றில் வரும் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி ஒன்று இது.

அண்ணனும் தம்பியும் கடுமையாக ஒருவரையொரு வர் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் ஒருவரையொருவர் தாக்குகிறார்கள் சமாதான மாக இருக்கட்டுமே என்று வடிவேலு அவர்கள் இரு வரையும் இணக்கத்திற்கு கொண்டு வரும் முயற்சி செய் வார்.

ஆனால் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து வடி வேலுவை அடித்து நொறுக்கி விடுவார்கள்.

அண்ணனும் தம்பியும் அடிபட்டுக் கொண்டு இருக் கும் பொழுது அவர்களிடம் பெறக்கூடியதைப் பெற்று விடலாம் என நினைப்பது பேதைமை. தமிழர்கள் உரிமை கேட்டு வந்திருக்கிறார்கள் என்றாலே அண்ணனும் தம்பியும் ஒற்றுமையாகி விடுவார்கள்.

இருவரும் நன்றாக அடிபட்டு ஒருவர் தாங்க முடியாத துயரத்தில் மூன்றாமவரிடம் உதவி கேட்க வரும் பொழுது மூன்றாமவர் நிபந்தனை விதித்து,

தனக்குரியதைப் பெற்றுக் கொண்டபின் உதவி கொடுக்கும் நிலையே சாணக்கியம். ஆறு திருமுகன் அய்யாவின் அறிக்கை படித்தேன். மதகுருமார் கோரிக்கையையும் படித்தேன். தமிழர் உரிமையை பேசினால் அதுவே அவர்கள் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

சிங்கள புத்த மேலாதிக்கம் தமிழர் மீது மேலும் கடுமையாக வேண்டும் என எவரும் கருதினால் இந்த நேரத்தில் தமிழர் உரிமையை கேட்கலாம்.

சோபித தேரர் அறிக்கை தமிழ் மதகுருமார் படிக்கவில்லை போலும்.

மேலேயுள்ள அத்தனை வரிகளுக்கும் சொந்தக்காரர் இந்த ஊர்க்குருவி அல்ல.

ஊர்க்குருவிக்கு வட்ஸ்அப்பில் வந்த செய்தி இது. இப்போதெல்லாம் ஊர்க்குருவிக்கு வருகின்ற செய்தி களில் இப்படியொரு சின்னக் கதையையும் சேர்த்து விடுகின்றனர்.

மேலேயுள்ள இந்தச் செய்தியை அனுப்பி வைத்தவர் வேறுயாருமல்ல, இலங்கை சிவசேன தலைலவர் மற வன்புலவு சச்சிதானந்தன் ஐயா தான்.

ஊர்க்குருவிக்கு வாட்ஸ்அப்பில் வந்த இந்தச் செய் தியைப் படித்ததும், அதனை அனுப்பிய அந்தப் பெரியவருக்கு பதில் அனுப்பினேன்.

நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் "இருவரும் அடிபட்டு, மூன்றாமவரின் உதவிக்கு வரும்போது, மூன்றாமவர் நிபந்தனை விதித்து, தனக்குரியதை பெற்றுக்கொண்ட பின் உதவுவதுதான் சாணக்கியம்" என்று நீங்கள் தானே சொல்லியிருக்கிறீர்கள். அதுதான், அப்படியொரு நிலைமை வரும்போது மூன்றாமவர் களான தமிழர்கள் எதனைக் கேட்டுப்பெறுவது என்பது தொடர்பாக தமிழ் எம்.பி.க்கள் ஒன்றாக கூடிப்பேசி ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்றுதானே அவர்கள் இப் போது கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். எதனைக் கோருவது என்பதை பகிரங்கப்படுத்தாமலே ஒரு முடிவை எடுத்துவைத்திருக்க வேண்டாமா? இல்லை யெனில் என்ன நடக்கும்? கடந்த நல்லாட்சி காலத்தில் நமது உதவியை வழங்கிய போது அதற்காக எதைப் பெற்றுக்கொண்டோம்?

அந்த நிலைமையே இன்றுவரை தொடர்கின்றது என்று அவரிடம் கேட்டிருந்தேன். அவர் பதில் அனுப்பினார், ஐம்பத்தி இரண்டு வீதமான சைவ மக்கள், சிங்களவர் மத்தியில் வாழ்கிறார்கள்.

ஆண்டுதோறும் வைகாசி தொடக்கம் ஆவணி வரை கொதிநிலைக்கு வருகின்ற சிங்கள புத்த உணர்வுகள் அங்கு வாழும் சைவத் தமிழர்களுக்கு எதிராக திரும்புவ தற்கு சிறிய ஒரு காரணமே போதும். இன்றைய சூழ் நிலையில் படையினரும் காவலரும் கிஞ்சித்தும் உதவ மாட்டார்கள்.

கமுக்கமாக முயற்சி எடுங்கள் சைவத்தமிழ் மக்களுக்கு அதுவே நல்லது.

வெளிப்படையாக செய்யும் முயற்சிகள் எந்த நேரத் தில் சிங்கள புத்த மக்களால் எவ்வாறு புரிந்து கொள்ளப் படுகிறது என்பதை இப்போது கணிக்க முடியாது.

அதன் விளைவுகள் முன்பு தொடர்ச்சியாக நம்மைப் பாதித்து வந்தது போல், இவ்வாண்டுக் கொதி நிலையி லும் மேலும் சைவத் தமிழர்களுக்கு அழிவைக் கொண்டு வரலாம். இதுவே அவரிடமிருந்து வந்த ஆலோசனை. சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்தும் கவனம் செலுத்த வேண்டும். மதத்தலைவர்கள் கூட்டுகின்ற கூட்டத்தில் கலந்துகொள்கின்றவர்களே அதனை பகிரங்கப்படுத்தி தெற்கில் கொதிநிலையை மோசமாக்கிவிடுவார்கள்.

நல்லாட்சி அரசில் தமிழர்களின் உதவியைப் பெறுவதற்காக,

பெட்டியை வாங்கிக்கொண்டு நிலைமையை கட்டுக் குள் வைத்திருக்கக் கமுக்கமாகச் செய்யும் சிலரின் சாணக் கியத்தை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.! இதுவே அவரின் கடைசி வரிகள்.!

- ஊர்க்குருவி


Wednesday, July 13, 2022

தெய்வ சுந்தரம் நயினார் பாராட்டு

தெய்வ சுந்தரம் நயினார்13 ஜூலை, 2016  · மதிப்பிற்குரிய ஐயா திரு. மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் (டிசம்பர் 5, 1941) .... 75 வயதே நிரம்பிய இளைஞர். யாழ்ப்பாணத்தின் மறவன்புலவு என்ற ஊரில் பிறந்தவர். தந்தையார் திரு. கணபதி அவர்கள் ... தாயார் திருமதி தங்கம்மாள்  அவர்கள்.  சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விலங்கியல், முதுகலை கடல்சார் உயிரியல், முதுகலை தமிழ் பயன்றவர். ஐக்கிய நாடுகள் உணவு வேளாண் துறையில் 23 நாடுகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். சில ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். '' காந்தளகம்'' என்ற ஒரு தமிழ் நூல் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். ''பதிப்புத் தொழில் உலகம்'' என்ற ஒரு இதழையும் நடத்திவருகிறார். இவையெல்லாம் பொதுவாக ஒரு மனிதரைப்பற்றிக் கூறும்போது கூறக்கூடியவைதான்!ஆனால் இவரது தனிச் சிறப்பு... எழுதுவதற்கு இடமில்லை! தமிழ் உணர்வாளர்... சமூகப் போராளி ... அவர் ஏற்றுக்கொண்ட ஆன்மிகத்தில் அளப்பறிய பணிகளை மேற்கொண்டுவருபவர்... பன்னிரு திருமுறைகளை இந்தியமொழிகளில் மட்டுமல்லாமல், பிற உலகமொழிகளிலும் ஒலிபெயர்ப்பு செய்து கொடுத்துள்ளவர்...  பேச்சு ஒலியியல் அடிப்படையில் பன்னிருதிருமுறைகளை ஒலிபெயர்க்க எனது பேச்சொலியியல் பேராசிரியர்  க. முருகையன் அவர்களுடன் அவர்  மேற்கொண்ட முயற்சியில் எனக்கும் ஒரு சிறு பங்கு அளித்தார்.  தலைவர்கள் ( மூதறிஞர்கள் இராஜாஜி, அண்ணாதுரையிலிருந்து இன்றைய அரசியல்தலைவர்கள் வரை) தமிழறிஞர்கள் ( பேராசிரியர்கள் மு.வ.., அகத்தியலிங்கம், இங்கிலாந்து ஆஷர், பொற்கோ என்று பட்டியல் விரியும்). ஈழப்போராட்டத்தில் போராளிகளுக்கு மருத்துவ உதவி செய்ததற்காகவே சிறையில் அடைக்கப்பட்டவர்) சென்னையில் நடைபெறும் தமிழ்தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள் எந்தவொரு கூட்டத்திலும் முதலாவதாக வருகை தருபவர்... நான் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழகத்திற்கு வெளியேயும் நடத்தியுள்ள கணினித்தமிழ் தொடர்பான அனைத்துக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர்.. எனக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பவர்.... அவரது முகநூல் பக்கத்தில் படங்கள் என்ற பட்டியில் பார்த்தால்...  இடம்பெறாத தமிழறிஞர்கள், தலைவர்கள் இருக்கமுடியாது! அந்த அளவு அனைவரிடம் நட்பு பாராட்டுபவர். மிக முக்கியமான அவரது பண்பு .... நான் வியக்கிற பண்பு.... அடக்கம் .. எளிமை.. எந்தவித ஆடம்பரமும் இல்லாத ஒரு அறிஞர்... அனைவரிடமும் ... வயது வேறுபாடின்றிப் பழகும் மனிதப் பண்பு!. அவரை முகநூலில் அறிமுகப்படுத்தவேண்டிய தேவையேயில்லை.  ஆனாலும் எனக்கு ஒரு ஆசை ... அவரைப்பற்றி எனது முகநூல் பக்கத்தில் எழுதவேண்டும் என்று... எழுதிவிட்டேன்!அவரைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு... https://ta.wikipedia.org/.../%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5...

Tuesday, July 12, 2022

பட்டுத் தெளியட்டும்

 பட்டுத் தெளியட்டும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

 “இஞ்சேரும்… நான் வந்திட்டன்…. இஞ்சேரும்..”

ஈருருளி மணியை அடித்து அழைத்தார், பண்டிதர் சிங்கராயர்.

வழமையாக மணி கேட்டவுடன் கணவரைப் புன்னகை வீசி வரவேற்பவர் சிந்தியா. சில நாள்களாகவே சிந்தியாவின் போக்கில் ஒரு மாற்றம்.

நண்பகல் உணவுக்கு வருபவர் படலையில் நின்று மணியடிப்பார். சிந்தியா சிரித்த முகத்துடன் வருவார். சில நாள்களாக அவள் வருவதில்லை.

“இஞ்சேரும்… இஞ்சேரும்” என்று கூப்பிட்டாலும் வருவதில்லை. மணி அடித்தாலும் வருவதில்லை.

ஈருருளியை மதிலோடு சாய்த்தார். காலைக் கழுவினார். வாயில் வழி முன்னறைக்குள் புகுந்தார்.

“இஞ்சேரும்… இஞ்சேரும்…” என்று கூப்பிட்டாj.

“ஓ.. வாறன்..” அடுப்படிப் பின் படிக்கட்டில் குந்தி இருந்தவாறே சிந்தியா குரல் கொடுத்தாள். ஆனால் வரவில்லை.

இவர் அவளிடம் போனார். வானத்தை வெறுத்துப் பார்த்தவாறு சிந்தியா இருந்தாள். இவர் போனதைக் கவனிக்காத மாதிரியே இருந்தாள்.

“இஞ்சேரும்…” இவர் அழைத்தார்.

சிந்தியா முகத்தைத் திருப்பினாள். கணவரைப் பார்த்தாள். வெறுப்பும் அருவருப்பும் முகத்தில் கொப்பளித்தன. அவள் பேசவில்லை.

“சாப்பாட்டை எடுமன்… சாப்பிட்டுட்டுப் போவேணுமல்லே…”

“போங்கோ வாறன்..” சிந்தியாவின் குரலில் கடுப்புத் தொனித்தது.

மேசையில் இருந்த பொருள்களை ஒதுக்கினார். கதிரையை இழுத்துப் போட்டார். இருந்தார்.

தட்டில் சோறு. மேலே உறைப்புக் குழம்பு. கொஞ்சம் பொரியல். வைத்த சிந்தியா மீண்டும் அடுப்படிப் பின் படிக்கட்டுக்குக் குந்தப் போனாள்.

சாப்பிடும்போது விக்கலெடுக்கத் தண்ணீர கேட்டார். சிந்தியா வரவில்லை. தானே போய்த் தண்ணீர் வார்த்துக் குடித்தார். சாப்பிட்டு முடிந்ததும் முன் விறாந்தைக் கதிரையில் சாய்ந்தார் சிங்கராயர்.

கண் அயரமுன் எழுந்தார். “இஞ்சேரும்… நான் வாறன்…” என்றார்.

சிந்தியாவிடமிருந்து பதிலே வரவில்லை. “நான் போட்டு வாறனப்பா..” சொன்னவர் ஈருருளியை எடுத்துப் படலை வழி பள்ளிக்குப் பயணமானார்.

“ஒருவேளை அவளுக்குத் தெரிஞ்சு போச்சோ….” நினைத்தவாறே ஈருருளியை ஓட்டினார்.

கொஞ்ச நேரத்தில் படலையைத் திறந்து வீட்டுக்கு உள்ளே வந்தவள் சரிக்கா. சிங்கராயரின் அக்கா.  நேரே சமையலறை போனாள்.சிந்தியாவைப் பார்த்தாள். “மச்சாள் விட்டுக் கொடுக்காதேங்கோ…. உவன் தம்பிக்குப் பாடம் படிப்பிக்கவேணும். உப்பிடியும் செய்யிறதோ?”

சிந்தியா சலனமற்ற முகத்துடன் சரிக்காவைப் பார்த்தாள். பதிலேதும் சொல்லவில்லை.

“இரண்டு முருங்கைக்காய் ஆய வந்தனான்…” எனச் சமையலறைக்குப் பின்பக்கம் போன சரிக்கா, பின்வளவுப் பொட்டுக்குள்ளாலை அடுத்த வீட்டுக்குப் போனாள்.

கொஞ்ச நேரம் கழித்து அதே பொட்டுக்குள்ளாலை வந்தவள் பிரியா. சிங்கராயரின் தங்கை.

கிணற்றடியில் குந்தி இருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்த சிந்தியாவைக் கண்டாள். “மச்சாள்… நீங்கள் கடுமையான உழைப்பாளி. எந்த நேரமும் ஏதோ ஒண்டிலை இருப்பியள்..”

சிந்தியாவின் முகத்தில் ஒரு கீற்றுப் புன்னகை. மீண்டும் அதே வாட்டம்.

“மச்சாள் யோசிக்கிறியள்..  யோசியாதேங்கோ… அண்ணரைத் திருத்ததவேணும்… அது உங்களாலை முடியும்… ஆனா எதுக்கும் விட்டுக் கொடுக்காதேயுங்கோ….. உவருக்குப் பாடம் படிப்பிக்கவேணும்…” பிரியா சொன்னாள்.

பள்ளிக்குப் போன சிங்கராயர், பத்தாம் வகுப்புக்குப் படிப்பித்து முடித்ததும் அறைக்கு வந்தார். தண்ணீர் குடித்தார். கதிரையில் இருக்கப் போனவர், மாணவி ஒருத்தி வந்ததைக் கண்டார். “என்ன பிள்ளை…?” எனக் கேட்டார்.

“சின்மயி ஆசிரியை வெளியாலை நிக்கிறா…, நீங்கள் இருக்கிறியளோ.. எண்டு பாத்து வரச் சொன்னவ…” மாணவி சொன்னாள்.

“சரி வாறன் எண்டு சொல்லும்… போம்…” என்றார் சிங்கராயர்.

சிங்கராயர் வெளியே வந்தார். பெயரைப் போல உயரம் குறைந்தவள், மேனியோ பொன் மஞ்சள். “என்ன… எப்படி…?” சின்மயியிடம் கேட்டார்.

“பின்னேரம் வாறியளே… ஏதும் வேலையோ…” சின்மயி கேட்டாள்.

“சரி போம் வாறன்…” சிங்கராயர் சொன்னார்.

சின்மயியும் சிங்கராயரும் குலாவும் செய்தி காதுக்கெட்டிய பின்னரேயே சிந்தியாவின் அன்புப் போக்கு சிங்கராயர் மீது அக்கினிப் போக்காக மாறியது.

சிந்தியாவுக்காகச் சிங்கராயர் வைத்திருந்த அட்டியல் சின்மயியின் கழுத்துக்குப் போனதைச் சிந்தியா தெரிந்ததும் “ஆ…. அட்டியல் தானே.. அவர் போகவில்லையே, என்னோடேயே இருக்கிறார்”. சிந்தியா கண்டுகொள்ளவில்லை.

சிங்கராயருக்கும் சிந்தியாவுக்கும் ஒரே மகள் அமிழ்து. திருமணத்தின்போது சீதனமாகக் கொடுப்பதாகச் சொன்ன காணியைக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் சிங்கராயர். அவருக்குக் கொடுக்க மனமில்லை.

சிந்தியா பலமுறை சொல்லிவிட்டாள். அமிழ்துவுக்குரியதை அமிழ்துக்குக் கொடுத்திடுங்கோ. “ஓம்.. ஓம்” என்று சொல்லுறதோடை சரி. சிங்கராயர் இழுத்தடித்தார்.

மகளுக்கும் தாய்க்கும் தொப்புள் கொடி உறவு. பாசம் என்ற பாசம். ஒருமுறை அமிழ்துக்கும் கணவன் கரனுக்கும் இடையே ஏதோ சிக்கல். சிந்தியா போய் கரனைப் பேசிப்போட்டாள். அதற்குப் பிறகு அமிழ்துக்குத் தாயோடை பிடிப்புக் குறைந்தது. கரனும் கொஞ்சம் கோவக்காரன்.

‘சீதனக் காணியை அப்பா தராவிட்டாலும் அம்மா வாங்கித் தந்திருக்க வேண்டாமா’ என்ற சினமும் அமிழ்துவுக்கு.

சின்மயியும் சிங்கராயரை விடுவதாயில்லை. சிந்தியாவும் செய்வதறியாது திகைத்திருந்தாள்.

இந்த நேரத்தில் சிங்கராயருக்கு நெஞ்சுவலி வந்தது. மருத்துவர்களும் கைவிட்டு விடுவார்களோ என்ற நேரம்.

இதுதான் சாட்டு என்று சின்மயி மாயமானாள். வேறு பள்ளிக்கு மாற்றலாய்ப் போனாளாம்.

சிங்கராயருக்குச் சிந்தியாவை விட்டால் வேறு யாரும் இல்லை. அக்காள் சரிக்கா, தங்கை பிரியா இருவரும் சிந்தியா பக்கம்.

மனிதாபிமானத்துடன் சிந்தியா நடந்துகொண்டாள். தேவையான மருத்துவம் செய்வித்தாள். தேவையான சத்துணவு கொடுத்தாள். இரவெல்லாம் கண்விழித்துச் சிங்கராயரைப் பார்த்தாள். ஆனாலும் சிந்தியாவின் மனத்தில் சிங்கராயர் மீதான அருவருப்புக் குறையவில்லை.

“அப்பாவுக்கு ஏதும் ஆகமுன் சீதனக் காணியை எழுதித் தாங்கோ” என அமிழ்து அம்மாவை நெருக்கினாள்.

‘பனையாலை ஏறி விழுந்தவன். மாடாக ஏறி மிதிக்கலாமோ?’ இதுவே சிந்தியாவின் கண்ணோட்டம். “இவ்வளவு நாளும் பொறுத்தனி இன்னும் கொஞ்ச நாள் பொறு….” அமிழ்துவிடம் சிந்தியா கூறினாள்.

சிங்கராயருக்கு சேடம் இழுக்கும் காலம் வரலாம் என மருத்துவர்கள் சொன்னதையும் சிந்தியா கவனத்தில் கொண்டாள்.

‘தேற வேண்டும்,  நோயிலிருந்து மீள வேண்டும். நடமாட வேண்டும்’ என்பது சிந்தியாவின் விருப்பம்.

‘உந்தாளை நம்பேலாது. அமிழ்துக்குக் காணியும் எழுத மாட்டார். சின்மயியை நாடாமல் இருக்கவும் மாட்டார்’. சிந்தியாவின் ஆழ் மனது எச்சரித்தது.

‘அட்டியலைச் சின்மயிக்குக் கொடுத்தது போலக் காப்புகளைக் கொடுத்தாலும் கொடுக்கக் கூடியவர் கணவர்’. சிந்தியாவின் எண்ண ஓட்டம்.

‘கண்கண்ட தெய்வமான கணவன் பிழைக்கவும் வேண்டும். தாலிப் பாக்கியம் தொடரவேண்டும். கண்டகண்ட சின்மயிகளோடு போகவும் கூடாது.

‘அமிழ்துவுக்கு என்னோடே அவ்வளவு பிடிப்பில்லை. அவள் என்ரை தொப்புள் கொடி. அவளுக்குத் தாற எண்ட சீதனக் காணியை எழுதிக் கொடுக்கவேண்டும்.’

சிங்கராயர் பட்டுத் தெளியட்டும்
அகத்தில் காதலோடும் புறத்தில் ஊடலோடும் சிந்தியா காத்திருக்கிறாள்.

 

(சிங்கராயர் = சிங்களவர், அமிழ்து = தமிழர், சிந்தியா = இந்தியா, சின்மயி = சீனா, சரிக்கா = அமெரிக்கா, பிரியா = பிரித்தானியா, அட்டியல் = அம்பாந்தோட்டை, சீதனக் காணி = வட கிழக்கு)

Friday, July 01, 2022

youtube liks

எம்தமிழ் ஈழம் இந்து  மயமா?

https://www.youtube.com/watch?v=p2OgaAhm9sk&t=41s


உள்ளூராட்சித் தேர்தல்

https://www.youtube.com/watch?v=dIZ-dz1Tqbc&t=52s


பயங்கரவாதப் புலனாய்வு

https://www.youtube.com/watch?v=fywDFshCiI4


தில்லி அருண்

https://www.youtube.com/watch?v=smr2HIy0WXk

https://www.youtube.com/watch?v=IqEwuSyfgeo&t=25s


வவுனியா கூட்ட முடிவு பேட்டி

https://www.youtube.com/watch?v=NL41yRRNTXI


அகண்டதமிழ் உலகம்

https://www.youtube.com/watch?v=USH5jUNJzvk


சாவகச்சேரி உண்ணா  நோன்பு

https://www.youtube.com/watch?v=YNfOdUb7Fp8&t=55s


சுமந்திரனை நீக்குக

https://www.youtube.com/watch?v=fYGTPH_lqO4


அரியாலை மதமாற்றிகள்

https://www.youtube.com/watch?v=EPhP7pR-iIk


சுமந்திரனை இந்தியா ஏற்காது

https://www.youtube.com/watch?v=a_2A-RPgP7k


மதமாற்றத் தடை உண்ணா நோன்பு

https://www.youtube.com/watch?v=W9-JCDn6N-c


மஸ்தான் இந்து அமைச்சு

https://www.youtube.com/watch?v=dCyIHftysBA


இலங்கை நெருக்கடி அண்ணா கண்ணன்

https://www.youtube.com/watch?v=Dhsq5FeJh5g&t=6s


குருந்தூர் மலை

https://www.youtube.com/watch?v=odJxomPy_J8&t=26s

https://www.youtube.com/watch?v=G7TFW_FsUMA


மறவன்புலவு கல்வெட்டு

https://www.youtube.com/watch?v=HCOrgYXE5t8


தமிழர் கடலில் அணஅணா கண்ணண்

https://www.youtube.com/watch?v=kVlj_rsOPUI


பாசக தேவையா? 

https://www.youtube.com/watch?v=pWCDeYB3WFY


வவுனியா ஊடகச் சந்திப்பு

https://www.youtube.com/watch?v=7SetM3NcWus


மறவன்புலவு பொங்கல்

https://www.youtube.com/watch?v=FnSJGr8uri8


ஆயர் இல்லம் உண்ணா நோன்பு

https://www.youtube.com/watch?v=tERLa0KsAmE&t=6s


மயிலாப்பூர் முள்ளிவாய்க்கால்

https://www.youtube.com/watch?v=RH0m2vsTZdU


மன்னார் தேர்தல் ஊடகச் சந்திப்பு

https://www.youtube.com/watch?v=-PfKb36TA2M


சைவ நிலை கத்தோலிக்கர் ஊடகச் சந்திப்பு

https://www.youtube.com/watch?v=GgNtnS1O9xA


மதுரை தியாகராசர் கல்லூரி

https://www.youtube.com/watch?v=es2FHLir6CY


தான் தொக்கா இன்றைய பிரமுகர்

https://www.youtube.com/watch?v=eNYNNVIxTlk&t=17s


ஊடகச் சந்திப்பு உயிர்த் ஞாயிறு

https://www.youtube.com/watch?v=21opaF0x0s0


மறவன்புலவு கல்வெட்டு

https://www.youtube.com/watch?v=0Ga-5IonKYg&t=126s


அண்ணா கண்ணன் சிவசேனை 2

https://www.youtube.com/watch?v=JHSi0zUXPiY


தில்லி சங்கம்

 https://www.youtube.com/watch?v=EE9GozOmNGQ&t=13s


நடராசர் விம்ரசனம்

https://www.youtube.com/watch?v=gBc34T1koNU


ஐபிசி தில்லிக் கூட்டம் தொடர்பாக

https://www.youtube.com/watch?v=2p1DUIksY1I&t=42s


தமிழ் நெற் சிவசேனை

https://www.youtube.com/watch?v=M-zU4ysuhXU


நியூஸ்18 சிவசேனை ஏன்

https://www.youtube.com/watch?v=RUMDbP7HJz4


இராசீவர் மல்கோத்திரா

https://www.youtube.com/watch?v=s-tR7NNC1aA&t=30s


காளிகோயிலின் மீது முகமதியர்

https://www.youtube.com/watch?v=Smh4OAueBXA&t=43s


ஐபிசி 2022 முதலாவது

https://www.youtube.com/watch?v=cMkNWvRXFuM


கோலாலம்பூர் முருக பத்தி மாநாடு

https://www.youtube.com/watch?v=YvrCwF9q1gM


இலங்கையில் பாசக

https://www.youtube.com/watch?v=qnq1wj7XViA


தமிழ்நெற் டேவிட்

https://www.youtube.com/watch?v=QfT8uefwkiY


ஊடடக சந்திப்பு சிவசேனை 2016

https://www.youtube.com/watch?v=KGP7uoS9kms&t=7s


கொல்கத்தா 2022 பேட்டி

https://www.youtube.com/watch?v=p8PPV3BRexE


சமீனின் விமர்சனம்

https://www.youtube.com/watch?v=wXXxFHiZO28


ஐபிசி 2022 இரண்டாவது

https://www.youtube.com/watch?v=hX1gQwpTbMk


அண்ணா கண்ணன் சிவசேனை எதற்காக

https://youtu.be/Hk4n6Y1wfH4

சென்னை, நடராசர் விமர்சனம்

https://www.youtube.com/watch?v=gBc34T1koNU&t=2s


தில்லி சங்கம்

https://www.youtube.com/watch?v=EE9GozOmNGQ&t=17s


அண்ணா கண்ணன் சிவசேனை எதற்காக

https://www.youtube.com/watch?v=Hk4n6Y1wfH4&t=15s


சமீனின் விமர்சனம்

https://www.youtube.com/watch?v=wXXxFHiZO28


ஐபிசி 2019 தில்லிப் பயணம்

https://www.youtube.com/watch?v=2p1DUIksY1I&t=52s


மலேசியா முருகபத்தி மாநாடு

https://www.youtube.com/watch?v=YvrCwF9q1gM&t=4s


நியூசு18 சென்னை சிவனை ஏன்?

https://www.youtube.com/watch?v=RUMDbP7HJz4&t=64s


தில்லி ஓட்டல்

https://www.youtube.com/watch?v=Smh4OAueBXA&t=46s


இரசீவர் மல்கோத்திரா அமெரிக்கா

https://www.youtube.com/watch?v=s-tR7NNC1aA&t=30s


தமிழ்நெற் டேவிட்

https://www.youtube.com/watch?v=QfT8uefwkiY


இலங்கையில் பாசக

https://www.youtube.com/watch?v=qnq1wj7XViA


ஊடக சந்திப்பு 2016

https://www.youtube.com/watch?v=KGP7uoS9kms&t=9s


தில்லி கூட்டம் அருண் தீக்சா
https://www.youtube.com/watch?v=IqEwuSyfgeo


சிவஞானம் தமிழாராய்ச்சி மாநாடு

https://www.youtube.com/watch?v=5Ce8oDfJ1RU


சுசுமா சுவராசரின் பங்கு

https://www.youtube.com/watch?v=jn4tVlJmcIQ


ஆயரில்ல உண்ணா நோன்பு

https://www.youtube.com/watch?v=tERLa0KsAmE


தென்னாடு சைவமும் தமிழும்

https://youtu.be/kZ032JElYOE