தெய்வ சுந்தரம் நயினார்13 ஜூலை, 2016 · மதிப்பிற்குரிய ஐயா திரு. மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் (டிசம்பர் 5, 1941) .... 75 வயதே நிரம்பிய இளைஞர். யாழ்ப்பாணத்தின் மறவன்புலவு என்ற ஊரில் பிறந்தவர். தந்தையார் திரு. கணபதி அவர்கள் ... தாயார் திருமதி தங்கம்மாள் அவர்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விலங்கியல், முதுகலை கடல்சார் உயிரியல், முதுகலை தமிழ் பயன்றவர். ஐக்கிய நாடுகள் உணவு வேளாண் துறையில் 23 நாடுகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். சில ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். '' காந்தளகம்'' என்ற ஒரு தமிழ் நூல் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். ''பதிப்புத் தொழில் உலகம்'' என்ற ஒரு இதழையும் நடத்திவருகிறார். இவையெல்லாம் பொதுவாக ஒரு மனிதரைப்பற்றிக் கூறும்போது கூறக்கூடியவைதான்!ஆனால் இவரது தனிச் சிறப்பு... எழுதுவதற்கு இடமில்லை! தமிழ் உணர்வாளர்... சமூகப் போராளி ... அவர் ஏற்றுக்கொண்ட ஆன்மிகத்தில் அளப்பறிய பணிகளை மேற்கொண்டுவருபவர்... பன்னிரு திருமுறைகளை இந்தியமொழிகளில் மட்டுமல்லாமல், பிற உலகமொழிகளிலும் ஒலிபெயர்ப்பு செய்து கொடுத்துள்ளவர்... பேச்சு ஒலியியல் அடிப்படையில் பன்னிருதிருமுறைகளை ஒலிபெயர்க்க எனது பேச்சொலியியல் பேராசிரியர் க. முருகையன் அவர்களுடன் அவர் மேற்கொண்ட முயற்சியில் எனக்கும் ஒரு சிறு பங்கு அளித்தார். தலைவர்கள் ( மூதறிஞர்கள் இராஜாஜி, அண்ணாதுரையிலிருந்து இன்றைய அரசியல்தலைவர்கள் வரை) தமிழறிஞர்கள் ( பேராசிரியர்கள் மு.வ.., அகத்தியலிங்கம், இங்கிலாந்து ஆஷர், பொற்கோ என்று பட்டியல் விரியும்). ஈழப்போராட்டத்தில் போராளிகளுக்கு மருத்துவ உதவி செய்ததற்காகவே சிறையில் அடைக்கப்பட்டவர்) சென்னையில் நடைபெறும் தமிழ்தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள் எந்தவொரு கூட்டத்திலும் முதலாவதாக வருகை தருபவர்... நான் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழகத்திற்கு வெளியேயும் நடத்தியுள்ள கணினித்தமிழ் தொடர்பான அனைத்துக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர்.. எனக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பவர்.... அவரது முகநூல் பக்கத்தில் படங்கள் என்ற பட்டியில் பார்த்தால்... இடம்பெறாத தமிழறிஞர்கள், தலைவர்கள் இருக்கமுடியாது! அந்த அளவு அனைவரிடம் நட்பு பாராட்டுபவர். மிக முக்கியமான அவரது பண்பு .... நான் வியக்கிற பண்பு.... அடக்கம் .. எளிமை.. எந்தவித ஆடம்பரமும் இல்லாத ஒரு அறிஞர்... அனைவரிடமும் ... வயது வேறுபாடின்றிப் பழகும் மனிதப் பண்பு!. அவரை முகநூலில் அறிமுகப்படுத்தவேண்டிய தேவையேயில்லை. ஆனாலும் எனக்கு ஒரு ஆசை ... அவரைப்பற்றி எனது முகநூல் பக்கத்தில் எழுதவேண்டும் என்று... எழுதிவிட்டேன்!அவரைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு... https://ta.wikipedia.org/.../%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5...
No comments:
Post a Comment