Thursday, July 14, 2022

ஊர்க்குருவி வடிவேலு

 ஈழநாடு 15 ஜூலை 2022 வெள்ளிக்கிழமை 

இப்படியும் நடக்கிறது...!


தமிழ் படம் ஒன்றில் வரும் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி ஒன்று இது.

அண்ணனும் தம்பியும் கடுமையாக ஒருவரையொரு வர் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் ஒருவரையொருவர் தாக்குகிறார்கள் சமாதான மாக இருக்கட்டுமே என்று வடிவேலு அவர்கள் இரு வரையும் இணக்கத்திற்கு கொண்டு வரும் முயற்சி செய் வார்.

ஆனால் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து வடி வேலுவை அடித்து நொறுக்கி விடுவார்கள்.

அண்ணனும் தம்பியும் அடிபட்டுக் கொண்டு இருக் கும் பொழுது அவர்களிடம் பெறக்கூடியதைப் பெற்று விடலாம் என நினைப்பது பேதைமை. தமிழர்கள் உரிமை கேட்டு வந்திருக்கிறார்கள் என்றாலே அண்ணனும் தம்பியும் ஒற்றுமையாகி விடுவார்கள்.

இருவரும் நன்றாக அடிபட்டு ஒருவர் தாங்க முடியாத துயரத்தில் மூன்றாமவரிடம் உதவி கேட்க வரும் பொழுது மூன்றாமவர் நிபந்தனை விதித்து,

தனக்குரியதைப் பெற்றுக் கொண்டபின் உதவி கொடுக்கும் நிலையே சாணக்கியம். ஆறு திருமுகன் அய்யாவின் அறிக்கை படித்தேன். மதகுருமார் கோரிக்கையையும் படித்தேன். தமிழர் உரிமையை பேசினால் அதுவே அவர்கள் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

சிங்கள புத்த மேலாதிக்கம் தமிழர் மீது மேலும் கடுமையாக வேண்டும் என எவரும் கருதினால் இந்த நேரத்தில் தமிழர் உரிமையை கேட்கலாம்.

சோபித தேரர் அறிக்கை தமிழ் மதகுருமார் படிக்கவில்லை போலும்.

மேலேயுள்ள அத்தனை வரிகளுக்கும் சொந்தக்காரர் இந்த ஊர்க்குருவி அல்ல.

ஊர்க்குருவிக்கு வட்ஸ்அப்பில் வந்த செய்தி இது. இப்போதெல்லாம் ஊர்க்குருவிக்கு வருகின்ற செய்தி களில் இப்படியொரு சின்னக் கதையையும் சேர்த்து விடுகின்றனர்.

மேலேயுள்ள இந்தச் செய்தியை அனுப்பி வைத்தவர் வேறுயாருமல்ல, இலங்கை சிவசேன தலைலவர் மற வன்புலவு சச்சிதானந்தன் ஐயா தான்.

ஊர்க்குருவிக்கு வாட்ஸ்அப்பில் வந்த இந்தச் செய் தியைப் படித்ததும், அதனை அனுப்பிய அந்தப் பெரியவருக்கு பதில் அனுப்பினேன்.

நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் "இருவரும் அடிபட்டு, மூன்றாமவரின் உதவிக்கு வரும்போது, மூன்றாமவர் நிபந்தனை விதித்து, தனக்குரியதை பெற்றுக்கொண்ட பின் உதவுவதுதான் சாணக்கியம்" என்று நீங்கள் தானே சொல்லியிருக்கிறீர்கள். அதுதான், அப்படியொரு நிலைமை வரும்போது மூன்றாமவர் களான தமிழர்கள் எதனைக் கேட்டுப்பெறுவது என்பது தொடர்பாக தமிழ் எம்.பி.க்கள் ஒன்றாக கூடிப்பேசி ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்றுதானே அவர்கள் இப் போது கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். எதனைக் கோருவது என்பதை பகிரங்கப்படுத்தாமலே ஒரு முடிவை எடுத்துவைத்திருக்க வேண்டாமா? இல்லை யெனில் என்ன நடக்கும்? கடந்த நல்லாட்சி காலத்தில் நமது உதவியை வழங்கிய போது அதற்காக எதைப் பெற்றுக்கொண்டோம்?

அந்த நிலைமையே இன்றுவரை தொடர்கின்றது என்று அவரிடம் கேட்டிருந்தேன். அவர் பதில் அனுப்பினார், ஐம்பத்தி இரண்டு வீதமான சைவ மக்கள், சிங்களவர் மத்தியில் வாழ்கிறார்கள்.

ஆண்டுதோறும் வைகாசி தொடக்கம் ஆவணி வரை கொதிநிலைக்கு வருகின்ற சிங்கள புத்த உணர்வுகள் அங்கு வாழும் சைவத் தமிழர்களுக்கு எதிராக திரும்புவ தற்கு சிறிய ஒரு காரணமே போதும். இன்றைய சூழ் நிலையில் படையினரும் காவலரும் கிஞ்சித்தும் உதவ மாட்டார்கள்.

கமுக்கமாக முயற்சி எடுங்கள் சைவத்தமிழ் மக்களுக்கு அதுவே நல்லது.

வெளிப்படையாக செய்யும் முயற்சிகள் எந்த நேரத் தில் சிங்கள புத்த மக்களால் எவ்வாறு புரிந்து கொள்ளப் படுகிறது என்பதை இப்போது கணிக்க முடியாது.

அதன் விளைவுகள் முன்பு தொடர்ச்சியாக நம்மைப் பாதித்து வந்தது போல், இவ்வாண்டுக் கொதி நிலையி லும் மேலும் சைவத் தமிழர்களுக்கு அழிவைக் கொண்டு வரலாம். இதுவே அவரிடமிருந்து வந்த ஆலோசனை. சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்தும் கவனம் செலுத்த வேண்டும். மதத்தலைவர்கள் கூட்டுகின்ற கூட்டத்தில் கலந்துகொள்கின்றவர்களே அதனை பகிரங்கப்படுத்தி தெற்கில் கொதிநிலையை மோசமாக்கிவிடுவார்கள்.

நல்லாட்சி அரசில் தமிழர்களின் உதவியைப் பெறுவதற்காக,

பெட்டியை வாங்கிக்கொண்டு நிலைமையை கட்டுக் குள் வைத்திருக்கக் கமுக்கமாகச் செய்யும் சிலரின் சாணக் கியத்தை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.! இதுவே அவரின் கடைசி வரிகள்.!

- ஊர்க்குருவி


No comments: