Sunday, July 12, 2020

குருபரன் பதிவில்..

தமிழரசுக்கட்சி அதன் ஆரம்பத்திலிருந்தே மதசார்பற்ற கட்சியாக இருந்தது. இப்போ மறவன்புலவு சச்சி , யோகேஸ்வரன், சுமந்திரன் ( vice president Methodist Church, Sri Lanka ) என்று மத சார்பானவர்கள் கோலோச்சுகிறார்கள்

தமிழரசுகட்சி தானே குண்டு வைக்குமாம். பின் தானே கண்டுபிடிக்குமாம். மறவன்புலவு சச்சி சைவர்களுக்கு வாக்கு என்பார். உடனே சுமந்த்திரனின் ஆங்கிலிக்கன்/மெதடிஸ்ட் அடிவருடிகள் கிறிஸ்தவர்களுக்கே வாக்கு என்பார்கள். உடனே ஆர்னோல்ட் தரப்பில் சிலர் கத்தோலிக்கர்களுகே வாக்குஎன்பார்கள். தமிழர்களை கூறுபோட்டு வாக்கு வேட்டையாடும் தமிழரசுக் கட்சிஒருதோற்கடிக்கப்படவேண்டிய தீயசக்தி

நேற்று Elijah Hoole தனது பதிவில் கஜேந்திரகுமார் அண்ணன் சுமந்திரன் சேரின் மத அடையாளத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்வதாக சொல்லியிருந்தார். அதனை நான் கண்டித்து பதிவிட்டிருந்தேன். பின்னர் அவர் தனது தவறை ஏற்றுக்கொண்டு பதிவை திருத்தியிருந்தார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.
ஆனால் அப்படி ஒரு பிரச்சாரம் வேறு சிலரால் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். ஆதாரத்திற்கு ஒரு படமும் இணைத்திருந்தார். அது மறவன்புலவு சச்சிதானந்தன் உடையதாக இருக்கலாம் என நான் சந்தேகம் வெளியிட்டேன். எனது தான் என அவரே உறுதிப்படுத்தியுள்ளார். சச்சிதானந்தன் முன்னணிக்காரர் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. நன்றி.

2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி வெளியிட்ட எட்டுப் பக்க நூல் ஒட்டியே மேலே உள்ள படம். முழுப் பக்கங்களையும் படிக்க விழைவோர் +94772754864 புலனத்துக்குச் செய்தி அனுப்புக நன்றி

நேர்மையாக பேசி பழகுங்கள் Elijah Hoole. இது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மறவன்புலவு விடுத்த அறிக்கை போல் உள்ளது. Don't accuse people on rumours. You are better than this.

மறவன் புலவு காரனை நான் கண்டால் கட்டாயம் காறி துப்புவேன்

இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி வெளியிட்ட எட்டுப் பக்க நூல் ஒட்டியே அதன் அட்டையே மேல் உள்ள படம்.
தமிழரசுக்கட்சியின் நடுவண் குழுவில் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். தமிழரசுக் கட்சித் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவரது மகன் மற்றும் திரு கனகசபாபதி அவர்கள் எனது இல்லம் வந்த பொழுது தமிழரசுக்கட்சியின் நடுவண் குழுவில் நான் இருக்கிறேனா? என அவரிடம் கேட்டேன். அதைத் தீர்மானிப்பவர் திரு குலநாயகம். அவர் விரும்பியவர்களுக்கு அறிவித்தல் அனுப்புகிறார் எனத் திரு மாவை அவர்கள் என்னிடம் கூறினார்கள். இதுவரை ஒரு கூட்டத்தில் கூட நான் கலந்து கொள்ளவில்லை.
1961 அறப் போருக்காகச் சென்னையில் உள்ள தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய காலம் தொடக்கம்,
1961 அறப்போரில் ஒரே ஒருநாள் கலந்துகொண்ட காலம் ஊடாக,
திரு திருச்செல்வம் அமைச்சராக இருந்த காலத்தில் 1966இல் அவருக்குத் தனி உதவியாளராக இருந்த காலத்தின் ஊடாக,
13 ஆண்டுகள் திரு செல்வநாயகம் அவர்களுடன் மொழிபெயர்ப்பாளராக உதவியாளராக அவர் சொல்லும் பணிகளைச் செய்பவராக (1963-1976)
அவர் இறந்த பின்பு அவருக்கு 108 அடி உயர நினைவு துணை அமைக்கும் பணியில் ஈடுபட்டவனாக
1977 தொடக்கம் 1989 வரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினராக இருந்த காலங்களில் ஊடாக
தமிழ்த் தேசியத்துடன் இணைந்து பணி புரிந்திருக்கிறேன்.
அண்மைக் காலத்தில் தமிழரசுக்கட்சியின் நடுவண் குழுவில் இருந்தேனா இல்லையா என்பதைத் திரு குலநாயகம் அவர்களிடம் கேட்டுத் தெரிந்த பின்பு நீங்கள் பதிவிடுவதே பொருத்தமானது. நன்றி

என் முகத்தில் காறித் துப்புதல் உங்களுக்கு மன நிறைவு கிடைக்குமாயின்
யாழ் மாவட்டத்தில் நீங்கள் சொல்லும் இடத்திற்கு வருகிறேன். என் முகத்தைக் காட்டுகிறேன்.
காறித்துப்புமக மகிழ்ச்சி அடைவேன்.

Both Arnold and Saravanabhavan should be defeated.
மணிவண்ணனை 'இந்துவின் மைந்தன்' என்று முன்னிறுத்திய முன்னணி ஆதரவாளர்களை நீங்கள் கண்டதில்லையா? (அவரது பாடசாலையைச் சொன்னார்கள் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்). As always these things are quite subtle.
எனது பதிவின் கீழ்ப்பாதியையும் போட்டிருந்தால் நியாயபூர்வமாக இருந்திருக்கும். எனது பதிவு சுமந்திரன் தோற்பது/வெல்வதைப் பற்றியதல்ல. தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தற்போது நடக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றைப் பற்றியது.

இந்த கருத்தை மிகுந்த தயக்கதிற்கு பின்னரே பகிர்கின்றேன். ஏனெனில் இதனை இந்துத்துவா என சிலர் திரிபு செய்யக்கூடும். யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியை மையப்படுத்திய ஆங்கிலிக்கன்/ மெதடிஸ்ட் மேட்டுக்குடி அரசியல் உண்டு. அதில் கதிர்காமர்கள் , ஹூல்கள் ஏன் நிர்மலா ராஜசிங்கம் குடும்பம் கூட உண்டு. இவைஅனைத்தும் சுமந்திரன் பின்னால் திரண்டிருக்கின்றன.

இதனை பதிவு செய்த Hoole என்பவர் இரத்தினஜீவன் Hoole குடும்பத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த Hoole குடும்பத்திற்கு தமிழ் மக்களை சாதிரீதியாக மதரீதியாக பிரிக்கும் உள்நோக்கம் இருப்பது புலப்படுகிறது. ஒரு வகையான உளவியற்சிக்கலில் அவதிப்படுகிறார்கள் என்றே நம்புகிறேன்.
28 ஜுன் 2018 இல் "UNHRC Or UNSC? Government Intransigence Feeds ITAK’s Militancy & Foolishness " என்ற தலைப்பில் துஷ்யந்தி Hoole என்ற பெண் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் (https://www.colombotelegraph.com/index.php/unhrc-or-unsc-government-intransigence-feeds-itaks-militancy-foolishness/)
இக்கட்டுரையில் UNHRC, UNSC பற்றி எழுதிய விடயங்களை விட கஜேந்திரகுமாரின் தனிப்பட்ட விடயங்களை பற்றி எழுதிய விடயங்களே அதிகம்.
கஜேந்திரகுமார் திருமணம் செய்துள்ளார் என்பதனை பற்றிய gossip பை வைத்து இக்கட்டுரையை இந்தப் பெண் எழுதியிருந்தார்.
கஜேந்திரகுமாரை scion of the Hindu Ponnamabalam family என்று எழுதிவிட்டு, A day or two ago, he married a Christian divorcee என்று எழுதியுள்ளார். கஜேந்திரகுமார் திருமணம் செய்ததற்கும் UNHRC, UNSC க்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆக இந்து கஜேந்திரகுமார் கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்தார் என்ற பூராயத்திற்கு அதிகமாக இக் கட்டுரையில் வேறொன்றும் இல்லை.
இது gossip பை வைத்து எழுதியது என்று ஏன் சொல்கிறேன் என்றால். கஜேந்திரகுமார் திருமணம் செய்த பெண் ஒரு சைவப் பெண். கஜேந்திரகுமாரைக் காட்டிலும் சைவ மதத்தை அதிகமாகப் பின்பற்றுவர்.

m Vettivelu
இந்த Elijah Hoole இற்குப் புறொட்டஸ்தாந்து கிறீஸ்தவர்களின் அரசியல வரலாறு தெரியாதுபோல் இருக்கிறது. 1920களில் பண்டாரநாயக்க இலங்கைக்கு சமஷ்டி அமைப்புத்தான் பொருத்தமானது என்ற பிரசாரத்தினை இலங்கையிலும், யாழ்ப்பாணத்திலும் செய்துவந்த காலத்தில், வடக்குக் கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி தமிழருக்குப் பொருத்தமற்றது என்றும், அது இந்துக்களின் மேலாதிக்கத்தினை வடக்குக் கிழக்கில் நிலைநாட்டிவிடும் எனவும் கூறி, இலங்கைக்கு ஒற்றை ஆட்சிதான் பொருத்தமானது எனப் புறொட்டஸ்தாந்து கற்றோரான இரத்தினம் என்பவர் தென்னிலங்கையின் பிரபல ஆங்கில ஊடகத்தில் கட்டுரை எழுதியிருந்தார்.இவரது மனைவியின் பெயரில்தான் யாழ் பல்கலைக் கழகத்திற்குப் பின்னால் ஈவ்லின் ரத்தினம் அமைப்பு அமைந்துள்ளது. அன்று புறொட்டஸதாந்து கிறீஸ்தவர்கள் சமஷ்டி ஆட்சி முறையை எதிர்த்து, ஒற்றை ஆட்சியைத்தான் ஆதரித்து வந்தனர். இப்படி சமஷ்டி ஆட்சி தமிழருக்குப் பொருத்தமற்றது என சுதந்திரத்திற்கு முன்னர் நிராகரித்திருந்த புறொட்டஸ்தாந்து கிறீஸ்தவர்கள் சுதந்திரத்தின் பின்னர் தமிழர்கள் தனி நாடு அமைக்கும் அரசியல் பாதையில் செல்வதைத் தடுக்க, சி. ஐ. ஏயினது திட்டத்திற் அமைவாக புறொட்ஸ்தாந்து கிறீஸ்தவரான செல்வநாயகத்தின் தலைமையில் தமிழரசுக் கட்சியை 1949ஆம் ஆண்டில் ஆரம்பித்துச் செயற்பட்டனர். முன்னர் சமஷ்டிக் கொள்கையை நிராகரித்திருந்த புறொட்டஸ்தாந்து கிறீஸ்தவர்கள், பின்னர் சமஷ்டிக கொள்கையையுடைய தமிழரசுக் கட்சியினர் ஆகினர். தமிழரசுக் கட்சி அன்றுமுதல் இன்றுவரை அமெரிக்காவின் நலன்களைப் பேண மிகவும் தந்திரோபாயமாகச் செயற்பட்டுத்தான் வருகிறது. அது தமிழர்கள் தனி நாட்டினை அமைப்பதையும் தந்திரோபாய ரீதியாக முறியடித்துத்தான் வந்துள்ளது. எந்தவொரு புறொட்டஸ்தாந்து கிறீஸ்தவரும் ஆயுதம் தாங்கிப் போராட புலிகளில் இணையவில்லை என்பதை அவதானிப்பது மிக முக்கியமானது. அவாகளுடைய போதகர்கள் செய்து வந்த பிரசாரத்தினை கேட்டவர்களுக்கு இது ஏன் என்பது புரியும். இவைகளைச் சரியாக அறிந்தால், அங்கிலிக்கன் சேர்ச்சினைச் சேர்ந்த குடும்பத்தினரான Elijah Hoole இனதும், சுமந்திரனதும் கொள்கைகளைச் சுலபமாக விளங்கிக்கொள்ள முடியும்.

தன் நாடு அமைக்கும் ஆயுதப்போராட்ட காலத்தில் புறொட்டஸ்தாந்து போதகர்கள் கிறீஸ்தவர்களை புலிகளுடன் இணையக் கூடாது எனப் போதித்து வந்தனர். எந்த ஆயுதக் குழுக்களுடனும் இணைந்து, போரில் ஈடுபட வேண்டாம் என்றுதான் போதித்து வந்திருந்தனர். எத்தனை புநொட்டஸதாந்து கிறீஸ்தவர்கள் இயக்கங்களில் 1984 இன்பின்னர் இணைந்து செயற்பட்டு வந்தனர் என்பதைக் கூறுங்கள் பார்க்கலாம்? கத்தோலிக்கரைப் பொறுத்தமட்டில், கீழ் மட்டக் கத்தோலிக்கர் தம்மை விடுதலைப் போராட்டத்துடன் இணைத்த நிலையில், உயர் சாதிப் பாதிரிகளுக்கு அவர்களைச் சேரவேண்டாம் எனக் கூற முடியாது போய்விட்டது.

தமிழ் தேசிய அரசியலினுள் மதத்தை புகுத்தும் கேவலமான வேலையை செய்வது டபிழரசு கட்சி தான். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஆர்னள்டுக்கு எதிராக மதவாதம் பூசிய சுவரொட்டிகளை அவரது ஆதரவாளர்களே சில பகுதிகளில் ஒட்டி குறித்த மதம் ஒன்றின் ஆதரவை வேண்டினார்கள். அது போல அப்படியான பிரசாரமும் நடந்த்து .
வட்டுக்கோட்டை ஆயர் தியாகராஜா மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெளிப்படையாகவே தமது தேவாலயங்களில் மதத்தை முன்னிலைப்படுத்தி சுமந்திரனுக்கு வாக்கு போடுமாறு கேட்டார்கள்( சுமந்திரன் தென்னிந்திய திருச்சபை இல்லாத போதிலும் ).
திருமதி தியாகராஜா , ஒரு ஆயரின் பாரியார் எனும் பொறுப்புணர்வில் இருந்து விலகி, பகிரங்கமாக தனது முகநூலில் சுமந்திரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்(2015 தேர்தல்)
அது போல
“இந்துக்களை “ பாதுகாக்க இந்தியா நேரடியாக தலையிட வேண்டும் என கட்சித்தலைமை டீலிற்ககாக சுமந்திரனுடன் தற்போது கைகோர்த்து நிற்கும் சந்தர்ப்பவாதியான சிரிதரன் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

No comments: