Sunday, July 12, 2020

மன்னார் அழிப்புகள் 2009க்குப் பின்

2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம்முடிந்தபின்னர் மன்னாரில் நடந்த கத்தோலிக்க பாதிரிகளால் தூண்டப்பட்ட மத அடிப்படைவாத வன்முறைகள் பின்வருவன. கேதீச்சர  வளைவுடைப்புஒரு Isolated ஆன சம்பவமல்ல. 1. 2013 ல் பொன்தீவு கண்டலில் புலிகளால்விரட்டப்பட்ட முஸ்லீம்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முற்பட்டபோது அத்திட்டத்தைதடுக்க பாதிரிகள் மார்க்கஸ், சுரேஷ் ஆகியோர் கத்தோலிக்கஊரையே கூட்டிவந்து நானாட்டான் பிரதேச செயலகத்தை கல்லெறிந்து தாக்கினார்கள்.அப்போதைய பிரதேச செயலாளர் காஷ்மீர் சந்திரய்யா தன்னை தாக்க எறிந்த கல்லை இப்போதும்நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறார். வழக்கு எதுவும் பாதிரிகளுக்கெதிராகபதியப்படவில்லை. 2. 2010ல் நறுவிலிக்குளத்திலிருந்த Assemblyof God  கிறிஸ்தவ குடிசைத்தேவாலயம் கத்தோலிக்க பாதிரிகளின் தூண்டுதலால்எரிக்கப்பட்டது.3. 2016ல் புதுக்குடியிருப்பு அரசகாணிகளில் குடியேற்றப்பட்ட யாழ்ப்பாணம் நெல்லியான் ஊரைச்சேர்ந்த தாழ்த்தப்பட்ட சைவகுடும்பங்களின் 2 குடிசைகள் கத்தோலிக்கரால்கொழுத்தப்பட்டு குடியிருப்பு தடுக்கப்பட்டது. 4. 2013ல் அச்சன்குளத்திலிருந்தகாளிகோவில் கத்தோலிக்கரால்  தாக்கப்பட்டு  அழிக்கப்பட்டது. 5. 2014ல் அரிப்பு முத்துமாரியம்மன்கோவில் கத்தோலிக்கரால் சேதமாக்கப்பட்டது. 6. கற்கிடந்த குளத்தில்வசித்துவந்த கந்தசாமி குடும்பத்தை மார்க்கஸ் பாதிரியார் செய்வினை சூனியம்செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஊரைவிட்டே கலைக்க முயன்றார். 7. எருவிட்டான் வழிபாட்டுஇடத்திலிருந்த சூலத்தை நானாட்டான் பங்குத்தந்தையின் உத்தரவில் இன்பம் என்றகத்தோலிக்கர் புடுங்கி அகற்றினார்.8. 2017ல் நானாட்டான்-புதுக்குடியிருப்பு பிள்ளையார் கோயில் சூழலிலிருந்த விநாயகர் சிலை கத்தோலிக்கரால்உடைக்கப்பட்டது. 9. நறுவிலிக்குளம் இந்துஇடுகாட்டுக்கு பாதை போடுவதற்கு கத்தோலிக்கர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 10. 2016ல் வெள்ளாங்குளம்சந்தியிலிருந்த விநாயகர் சிலை கத்தோலிக்கரால்  உடைத்து  கடலில்எறியப்பட்டது. 11.2018 தலைமன்னார் பிள்ளையார் சிலைகத்தோலிக்கரால் உடைப்பு.12. 2018 உயிலங்குளம் சந்தி பிளாளையார்சிலை கத்தோலிக்கரால் உடைப்பு.13. 2018 தள்ளாடி விமானப்படை ஓடுபாதைமுன்னாலிருந்த பிள்ளையார் சிலை கத்தோலிக்கரால் உடைப்பு. 14. 2018 சிவராத்திரி வாரத்தில்மன்னார்-புதுக்குடியிருப்பு சிவன்கோயில் லிங்கம் கத்தோலிக்கரால் உடைத்துதிருடப்பட்டது. 

-- 

No comments: