ஆனி 11, 2051 சனி (11.07.2020)
காவியோடு பிறந்தவர்
தொப்புள்கொடியை நீக்க முன்பே
காவிப் போர்வையைக் கண்ட தாதியர்
இவர் ஓர் அதிசயப் பிறவி என்றனர்
பிறப்போடு வந்த காவி
இறக்கும் வரை தன்னோடு இருக்கும்
இறந்த பின்னும் தன்னோடு தொடரும்
என்று நம்புபவர் கம்பவாரிதி ஜெயராஜ்
மற்றவர்கள் எல்லாம்
திடீரெனக் காவிச் சட்டை போடுகிறவர்கள்
என்று கண்டுபிடித்துள்ளார்
உண்மைதான்
அவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும்
பிறந்து வளர்ந்த பின்புதான்
காவிச் சட்டை போடுகிறார்கள்.
அவர் மட்டுமே
பிறக்கும்போதே காவி ஆடையோடு பிறந்தவர்
அதிசயப்பிறவி.
பிரமச்சரியம்
இல்லறம்
வானப்பிரஸ்தம்
சந்நியாசம்
என்று
நான்கு நிலைகளை
மனிதருக்கு விதித்து உள்ளார்கள்
எனவேதான் என்னைப்பார்த்து
மனிதர் என்கின்றார்
அவர் அதிசயப்பிறவி
மனிதரல்ல.
பிரம்மச்சரியத்தில் இருந்தேன்
இல்லறத்தில் இருந்தேன்
வானப்பிரஸ்தத்துக்கு வந்திருக்கிறேன்
அரைவாசி காவி
அரைவாசி வெள்ளையாக
துறவு நிலை வந்தால்
முழுமையாகக் காவி உடை அணிவேன்.
அவரைப் போல
அதிசயப் பிறவியாகப்
பிரம்மச்சரியத்தில் கம்பு சுத்த வில்லை
இல்லறத்தில் கம்பு சுத்த வில்லை
வானப்பிரஸ்தத்தில் கம்பு சுத்தவில்லை
சன்னியாசியாக இருந்துகொண்டே கம்பு சுத்த வில்லை.
கம்பு சுத்தியதான குற்றச்சாட்டுகளை
என்னைப்பற்றி எவரும் எழுதவில்லை.
காலையில் பட்டிமன்றத்தில்
வாலி சிறந்தவன்
இராமன் அம்பு விட்டது பிழை
என்பார்.
மாலைப் பட்டிமன்றத்தில்
வாலி மோசமானவன்
இராமன் அம்பு எய்தது சரி
என்பார்.
அவரே கம்பவாரிதி.
கம்பன் கழகத்தின் பொறுப்பாளராக
நீதியரசர் விக்னேஸ்வரன் இருந்தார்.
இவர் தயவில்
இருந்ததாக நினைத்துக்கொண்டு
அவரை நீக்கினாரா?.
சிறுமைச் செருக்கர்
கம்பவாரிதி.
விக்னேஸ்வரன்
முதலமைச்சர் ஆக வேண்டும்
என்று முறியாய் முறிந்தார்.
விக்னேஸ்வரன்
தாடியும் திருநீறும் கொண்டவர்
என்று இப்பொழுது கிண்டல் செய்கிறார்.
இவர் அழைத்துக்
கம்பர் விழாவிற்கு
முதலமைச்சராக வரவில்லை
என்று ஒரே ஒரு கோபமே காரணமோ?
நான் அறிவியல் மாணவன்
தமிழையும் எழுதுவேன்
அறிவியலைத் தமிழில் எழுதுவேன்.
ஆங்கிலச்சொல் கலக்காமல் எழுதுவேன்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக
எட்டாம் ஒன்பதாம் வகுப்பு
இலங்கை மாணவர்கள்
எனது கட்டுரையைத்
தமிழ் மொழிப் பாட நூலில்
படித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டு மாணவர்களின் பாடநூலில்
திருமுறைகளுக்கான எனது பங்களிப்பு
எட்டாம் ஒன்பதாம் வகுப்பு
மாணவர்களுக்குப்
பாடநூல் வழி சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இவர் எழுத்தில் பேச்சில்
ஆங்கிலம் விரவி வரும்
வடமொழி விரவி வரும்
சீற் என்ற சொல் தமிழா?
நோபோல் தமிழா
அவற்றுக்குத் தமிழ் இல்லையா?
இவர் எழுதி
எந்தக் கட்டுரையானது
எவராவது
பாடநூலில் வைத்திருக்கிறார்களா?
சத்தில்லாத எழுத்தரே கம்பவாரிதி.
காலை ஒன்று பேசுவார்
மாலை ஒன்று பேசுவார்
முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவார்.
கிண்டலும் கேலியுமாகப் பேசுவார்.
சுவை இருக்கும்
ஆனால் சத்து இருக்காது.
குடிகாரன் பேச்சு எனத்
தொடங்கும் பழமொழியை
நினைவூட்டுபவர்.
பேசத் தொடங்கும் பொழுது
எதை நோக்கிப் பேசுவாரோ
அதே தலைப்பில்
பேச்சை முடிக்கத் தெரியாதாவர்.
தலைப்பை ஒட்டி பேசத் தெரியாதவன்
பேச்சாளனே அல்ல
எனப் பலமுறை
பேராசிரியர் அசஞா
என்னிடம் கூறியிருக்கிறார்
மெல்லத் தமிழினிச் சாகும்
என்று பேதை ஒருவன் பிதற்றினாள்
எனப் பாரதியார் சொல்லுவார்.
தொலைந்து போகும்
தமிழ்ச் சாதி
எனப் பிதற்றும் அந்தப் பேதையே
கம்பவாரிதி ஜெயராஜ்
அவரை விடுங்கள்
பெறுமதி அற்ற பேச்சாளர்.
காசுக்கும் காதுக்கும் அலைபவர்
காசு கிடைக்கும் இடத்தில்
குடி கொள்பவர்.
காசாசையால் கலைத்ததால்
கொழும்பில் ஊன்றியவர்.
சுமந்திரன் கம்பர் விழாவைக்
கொழும்பில் நடத்தக்
காசு கொடுத்து இருப்பாரோ?
நன்றிக் கடனாக
நாயாய்க் குரைக்கிறாரோ?
கம்பவாரிதி ஜெயராஜ்
காசேதான் கடவுளடா.
No comments:
Post a Comment