நெஞ்சம் பதைபதைத்தது
உள்ளம் உடைந்தது
மனம் புண்ணாயது
உடல் நடுங்கியது
செவிகளில் வேப்பெண்ணை
கண்களில் நீர்த் தாரை
மூக்குக்குள் சாக்கடை
கைவிரல்களில் படபடப்பு
கால்கள் தடுமாறின
உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தோராயமாகப் 10 கோடி சைவத் தமிழரின் மனோநிலையை உடல்நிலையை மேலே கூறினேன்.
ஏவிளம்பி ஆண்டின் மகா சிவராத்திரி நாளுக்கு முந்தைய நாள்களில் திருக்கேதீச்சரத்தில் நிகழ்ந்த கொடுமையைக் கேட்ட நேரிலும் காணொலிகளிலும் பார்த்த 10 கோடி சைவத் தமிழர்களின் மனோநிலையையும் உடல்நிலையையும் மேலே கூறினேன்.
மதமாற்றச் சபைகளே கொடுமையானவை கத்தோலிக்கர் சைவத் தமிழருக்கு இணக்கமானவர். கத்தோலிக்கம் வேறு அல்ல சைவம் வேறு அல்ல. இரண்டுமே தமிழருக்கு அடையாளங்கள்.
கத்தோலிக்கம் மீது குற்றம் சாட்டுபவர்கள் சைவத் தீவிரவாதிகள் சைவ மதவாதிகள் தமிழரிடையே இணக்கத்தைப் போக்கிப் பிணக்கை வளர்ப்போர் என்றெல்லாம் குற்றம் சாட்டிய சைவப் பெருமக்கள் பலர் ஏவிளம்பி மகா சிவராத்திரி காலத்தில் தங்கள் மனதில் இருந்த அக்கருத்தைப் புரட்டிப் போட்டனர்.
சைவத் தீவிரவாதிகள் சைவ மதவாதிகள் என்றெல்லாம் யாரைச் சுட்டினார்களோ அவர்கள் தங்களைத் தாங்களே சுட்டத் தொடங்கினர். அவர்களே சைவத் தமிழ்த் தீவிரவாதிகளாக மதவாதிகளாக மாறினார்
ஏவிளம்பி மகாசிவராத்திரி திருக்கேதீச்சர நிகழ்வு வன்னித் தேர்தல் மாவட்டச் சைவத் தமிழர்களைப் புரட்டிப்போட்டது.
யார் யாருக்கு வாக்களித்தோம். தமிழர் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்றுதானே வாக்களித்தோம். நாம் வாக்களித்துத் தேர்வாகி நாடாளுமன்றத்துக்கு சென்றவர்களே தமிழரைக் கூறு போடுவார்கள் சைவத்தையும் கத்தோலிக்கத்தையும் மோத விடுவார்கள் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை.
2020 மே மூன்றாம் நாள் திங்கட்கிழமை
கொழும்பில் அலரி மாளிகையில் கூட்டம்
பிரதமர் அழைத்துக் கூட்டம்.
தமிழர் தரப்பில் திரு சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகிப் பதவிக்காலம் முடிந்தவர்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் அக் கூட்டத்திற்குச் செல்கிறார்கள்.
மன்னார் மாவட்ட சைவத்தமிழ் வாக்காளர் வாக்களித்துத் தேர்வு ஆகியோரும் அக்கூட்டத்தில் பங்குபற்றுகிறார்கள்.
அரசியலமைப்பு பொருளாதாரம் மருத்துவம் காணாமல் போனோர் படை வைத்துள்ள வேளாண் நிலங்கள் கடவைகளில் மக்கள் படும் துயரம் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் படும் அவலங்கள் ஆளுநரின் விடுப்பு இவற்றையெல்லாம் அக்கூட்டத்தில் தமிழர் சார்பில் பேசுகிறார்கள்.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வாழ்கின்ற 160,000க்கும் கூடுதலான சைவ வாக்காளர் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நினைவிலும் நீங்காத திருக்கேதீச்சரம் ஏவிளம்பி மகா சிவராத்திரி நிகழ்வுகள், தொடர்ந்த அவலங்கள் இவற்றை யாராவது பேசினார்களா?
மன்னார் மாவட்டச் சைவத்தமிழ் வாக்காளரின் வாக்குகளைப்பெற்றுத் தேர்வான சைவ சமயம் சார்ந்தவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்களே!
வன்னியின் 160,000 சைவத் தமிழ் வாக்காளர்களின்
நெஞ்சம் பதைபதைத்த நிகழ்வு
உடல் நடுங்கிய நிகழ்வு
காதைப் பொத்திக்கொண்ட நிகழ்வு
கண்களைக் குளமாக்கிய நிகழ்வு.
எனினும் வன்னித் தேர்தல் மாவட்ட 160,000 சைவத் தமிழ் வாக்காளப் பெருமக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எவரும் அக்கூட்டத்தில் இல்லை.
இணக்கத்தை விரும்பி வாக்களித்தோர் இடையே பிணக்குகளை வளர்த்து ஊதிப் பெரிதாக்கிய கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அக்கூட்டத்தில் இருந்தார்கள். சைவத் தமிழ் வாக்காளர்களுக்காகப் பேசுமாறு அவர்களிடம் எதிர்பார்ப்பது பொருத்தமில்லை.
மன்னார் மாவட்டச் சைவத்தமிழ் வாக்குகளைப் பெற்றுத் தேர்வான சைவ சமயத்தவரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். வன்னித் தேர்தல் மாவட்டத்தின் 160,000 சைவத் தமிழ் நெஞ்சங்களின் பதைபதைப்பை அக் கூட்டத்தில் எடுத்துக் கூறுமாறு சைவத் தமிழர் அவரிடம் எதிர்பார்ப்பது தவறா?
மன்னார் மாவட்ட சைவத்தமிழ் வாக்காளரே சிந்தியுங்கள். சைவ தமிழருக்குக் குரல் கொடுக்கக்கூடிய ஒருவர் நாடாளுமன்றத்தில் இல்லாததாலேயே உலகின் 10 கோடி சைவத் தமிழ் நெஞ்சங்களை வன்னித் தேர்தல் மாவட்டத்தின்160,000 சைவத் தமிழ் வாக்காளரின் உள்ளங்களை உடைத்துச் சுக்குநூறாக்கிய நிகழ்வை இத்தகைய கூட்டங்களில் எடுத்துக் கூறலாம், தீர்வு காணலாம்.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சைவத் தமிழர்கள் செட்டிகுளத்தில் ஆயில் என்
புதுக்குடியிருப்பில்
சிதம்பரபுத்தில்
சிலாவத்துறையில்
மூன்றாம்பிட்டியில்
வண்ணான்குளத்தில்
முருங்கனில்
தலைமன்னாரில்
கற்குளத்தில்
கற்கடந்தகுளத்தில்
குஞ்சுக்குளத்தில்
வெள்ளாங்குளத்தில்
திருக்கேதீச்ரத்தில் ஆயில் என்
இன்னும் நான் சொல்லாத பற்பல ஊர்களில் ஆயில் என்
மத மாற்றிகளாலும்
மத மாற்றிகள் கையோங்கிய கட்சிகளாலும்
கத்தோலிக்கராலும் அடையும்
துன்பங்கள்
துயரங்கள்
தொல்லைகள்
சிக்கல்கள்
இவற்றை எடுத்துச் சொல்ல
சைவத்தமிழ் ஈடுபாடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்
வன்னித் தேர்தல் மாவட்டத்திற்குக் காலத்தின் கட்டாயம்.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 50,000 சைவத்தமிழ் வீடுகளுக்கும் செல்வோம்
அவர்கள் நெற்றியில் திருநீறு அணிவிப்போம்
தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சியின் சின்னமான கோடரிச் சின்னத்தின் படத்தைக் கொடுப்போம்
வேட்பாளர் பட்டியலைக் கொடுப்போம்
வாக்களிக்கும் முறையைச் சொல்லிக் கொடுப்போம்
வாக்குகளைச் சேகரிப்போம்
வெல்வோம் வெல்வோம்
நாளை நமதே
வெற்றி நமதே
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
No comments:
Post a Comment