கல் ஒன்று,
கல் இரண்டு,
கல் மூன்று
என வரிசையாகக் கற்கள்.
மெல்லிய குச்சியை நட்டனர். காலைச் சூரியனின் வெளிச்சத்தின் குச்சியின் நிழல் நீண்டு இருக்கும். கற்களை அடுக்கி நிழலின் நீளத்தை அளந்தனர்.
நீளம் குறைந்து குறைந்து சூரியன் உச்சத்தில் இருக்கும்போது நிழலே இருக்கவில்லை.
அடுக்கிய கற்களின் எண்ணிக்கைக் குறைவை அளவாகக் கொண்டு கணித்தனர்.
கல் கொண்டு கணித்ததால் காலம் என்றாயது.
காலத்தைக் கணிக்கச் சூரியன் உதவினான். நிலமும் உதவியது.
வளர்ச்சிக்கான முதல் பொருள்கள் இரண்டு. நிலம் முதலாவது காலம் இரண்டாவது.
2800 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியர் தமிழில் கூறிய செய்தி. நிலமும் காலமும் முதற்பொருள்கள். நானாக அந்தச் செய்தியைச் சொல்லவில்லை. இயற்பியலாளர் (physics) சொன்ன செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன் என்றார் தொல்காப்பியர்.
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே (சூ950).
சூரியனும் வானமும் காலக் கணிப்பின் தளங்கள். பகலில் சூரியன் இரவில் வானம்.
உலகம் சுழல்கிறது. சுழல்வது ஆயின் உருண்டையாக இருக்கவேண்டுமே. எனவே உலகம் உருண்டை. சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் என்றார் வள்ளுவர்.
அண்டத்தில் இருந்து சிதறிய உருண்டையான உலகம் என்றார் மாணிக்கவாசகர், அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்ற வரியில்.
தன்னைத்தானே சுற்ற 60 நாழிகைகள். சூரியனைச் சுற்றி வர 365.25 நாள்கள். சூரியன் தொடர்பான கணக்கு.
நிலத்திலிருந்து வானத்தைப் பார்த்தனர். இரவில் பார்த்தனர். விண்மீன் கூட்டங்கள். பூமி சுழலச் சுழலப் புதிய புதிய விண்மீன் கூட்டங்கள் தெரியவரும்.
உச்சிக்கு மேலே தெரியும் விண்மீன் கூட்டங்களை 12 பகுதிகளாக வகுத்தனர். ஒவ்வொரு பகுதியிலும் ஒளிரும் விண்மீன் வடிவத்தைக் கொண்டு 12 பகுதிகளுக்கும் 12 பெயர்களைக் கொடுத்தனர். 12 வீடுகள் என்றனர்.
ஆடு - மேடம்
விடை - இடபம்
இரட்டை- மிதுனம்
நண்டு - கர்க்கடகம்
அரி - சிங்கம்
மடந்தை - கன்னி
துலை - துலாம்
தேள் - விருச்சிகம்
சிலை - தனுசு
சுறா - மகரம்
குடம் - கும்பம்
மீன் - மீனம்
பூமியில் இருந்து சூரியனைப் பார்க்கிறோம் சூரியனுக்கு அப்பால் வானத்தில் உள்ள விண்மீன் கூட்டம் எது? அளப்பரும் காட்சி என்றார் மாணிக்கவாசகர். அளந்து கணிக்கக் கூடிய காட்சி என்றார்.
பகலில் தெரியாவிட்டாலும் இரவில் தெரியும் 12 பகுதிகளையும் அல்லது வீடுகளையும் கணித்து, சூரியனுக்கு அப்பால் எந்த வீடு தெரிகிறது என அறிந்தனர்.
சூரியன் நிலையாக உள்ளது. பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. அந்தச் சுற்றுப்பயணத்தில் சூரியனுக்கு அப்பால் உள்ள விண்மீன் கூட்டம் ஒவ்வொன்றாக மாறிக்கொண்டிருப்பது கண்களுக்குத் தெரியும்.
ஆடு வடிவக் கூட்டம் தெரிகிறதா?
விடை வடிவக் கூட்டம் தெரிகிறதா?
இரட்டை வடிவக் கூட்டம் தெரிகிறதா?
நண்டு வடிவக் கூட்டம் தெரிகிறதா?
அரி வடிவக் கூட்டம் தெரிகிறதா?
மடந்தை வடிவக் கூட்டம் தெரிகிறதா?
துலை வடிவக் கூட்டம் தெரிகிறதா?
தேள் வடிவக் கூட்டம் தெரிகிறதா?
சிலை வடிவக் கூட்டம் தெரிகிறதா?
சுறா வடிவக் கூட்டம் தெரிகிறதா?
குடம் வடிவக் கூட்டம் தெரிகிறதா?
குச்சியின் நிழலில் கற்களை அடுக்கி ஒரு நாளை 60 நாழிகை என்றனர்.
பூமியில் இருந்து நோக்கினர். சூரியனை நோக்கினர். அப்பால் எந்த வடிவ விண்மீன் கூட்டம் எனக் கண்டனர். துல்லியமாகக் கணித்துக் கண்டனர்.
திங்கள் முன்னிரவு 33ஆவது நாழிகை 20 விநாடியில் பூமியில் இருந்து பார்த்தால் ஆடு வடிவ விண்மீன் கூட்டத் தொடக்கத்தில் சூரியன் தெரியும்.
ஆடு வடிவ வீட்டுக்குள் சூரியன் புகுந்தது எனப் பஞ்சாங்கம் கூறும்.
தொல்காப்பியருக்கு முன்பு வாழ்ந்த இயற்பியலாளர் இவ்வாறு கணித்தனர்.
கணிப்பியல் இன்றி இயற்பியல் இல்லை.
இயற்பியல் இன்றி வானியல் இல்லை.
வானியல் இன்றிக் காலக் கணக்கு இல்லை.
காலக் கணிப்பு இன்றி வளர்ச்சி இல்லை.
இன்று திங்கள்கிழமை இரவு 33 நாழிகை 20 விநாடிக்குச் சமமான 13.04.2020 நாள் 1926 மணிக்குத் துல்லியமாக பூமியில் இருந்து சூரியனைப் பார்த்தால் ஆடு வடிவ விண்மீன் கூட்டத்தில் தெரியும்.
அந்த நேரம் ஆண்டுக் கணக்குத் தொடங்கும் நேரம். கணக்கியலும் இயற்பியலும் வானியலும் குறித்த நேரம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கணித்துக் குறித்த நேரம்.
திபெத்தியர் மங்கோலியர் சீனர் வியத்நாமியர் கொரியர், தெலுங்கர் மராத்தியர் கொங்கணர் சந்திரமான பஞ்சாங்கத்தைக் கொண்டு புத்தாண்டைக் கணிப்பர்.
தமிழர் மலையாளிகள் ஒடிசர் வங்காளியர் அசாமியர் நேபாளியர் விந்தியத்துக்கு அப்பால் இமயம் வரை சிந்து நதிக்கு கிழக்கிலிருந்து மீகங்கை நதி வரை இந்திய மாநிலத்தார், அடுத்து மியன்மார் தாய்லாந்து கம்போடியா இலாவோசு இந்தோனேசியாவின் பாலித் தீவு மக்கள் யாவரும் இன்று திங்கள்கிழமை இரவு தொடங்கும் சூரியமானம் கணிப்பில் புத்தாண்டைக் கொண்டாடுவர்.
புத்த சமயத்தவருக்குபப் புத்தர் பிறந்த நாளோ புத்தர் ஞானம் நிறைந்த நாளோ புத்தர் நிறைவான நாளோ புத்தாண்டுத் தொடக்க நாள் அல்ல.
கணிப்பியலும் இயற்பியலும் வானியலும் கலந்து தந்த அறிவியல் சார்ந்த நாளே தமிழரின் புத்தாண்டு நாள்.
ஆட்டு கொட்டிலில் ஒருவர் பிறந்தார். அந்த நாளிலிருந்து புத்தாண்டைக் கொண்டாடுவது தமிழர் மரபு அன்று. தமிழ்த்தேசிய மரபும் அன்று.
ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு ஒருவர் ஓடினார். அந்த நாளிலிருந்து புத்தாண்டைக் கொண்டாடுவது தமிழர் மரபு அன்று. தமிழ்த் தேசிய மரபும் அன்று.
பகுத்தறிவு சார்ந்த கணிப்பியல் சார்ந்த இயற்பியல் சார்ந்த வானியல் சார்ந்த அறிவியல் சார்ந்த நாளே தமிழருக்குப் புத்தாண்டு நாள்.
தமிழரின் சைவ மரபுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அறிவியல் சார்ந்த மரபுகளே. அவை காலத்துக்கு காலம் கூர்மையடைந்து வந்திருக்கின்றன.
அறிவை மழுங்கடித்து
அறிவியலை உடைத்தெறிந்து
தமிழருக்கு ஒவ்வாத நம்பிக்கைகளைப் புகுத்தி
ஆண்டுத் தொடக்க நாளைப் புகுத்தியும் திணித்தும்
சைவத் தமிழ் மரபுகளை அழிக்க முயலும்
மதமாற்றிகளை ஒடுக்குவது
தமிழ்த்தேசியத்தின் தலையாய கடமை.
சைவத் தமிழ் தேசியத்தை,
அறிவியல் சார்ந்த மரபுகளை முன்னெடுப்பதற்கு
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்
சைவத் தமிழ் மக்களுக்கு அரிய வாய்ப்பு.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக விழையும் வேட்பாளர்களுக்கு சைவத் தமிழர் வாக்களித்தால் அறிவியல் சார்ந்த தமிழ்ப் பண்பாடு மீளும்.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் வெற்றியே அறிவியலுக்கு வெற்றி கணிப்பியலுக்கு வெற்றி இயற்பியலுக்கு வெற்றி வானியலுக்கு வெற்றி. பகுத்தறிவும் அறிவியலும் சார்ந்த தமிழ் மரபுகளுக்கு வெற்றி.
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையை ஆதரிப்போம்.
தமிழ்தேசிய சைவ மக்கள் பேரவையின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம்.
வெல்வோம் வெல்வோம்.
தமிழ்த்தேசிய சைவப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நாளை நமதே
வெற்றி நமதே
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
No comments:
Post a Comment