சாதிச் சாக்கடைக்குள் ஆபிரகாமிய சமயங்கள்
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
மனிதனை மனிதன் விலைக்கு விற்றான். ஏலம் கூவி விற்றான்.
எந்த ஆண்டுக் காலம் தொடக்கம்?
இந்து மதம் சாதிச் சாக்கடையில் மாழ்கிறது. கிறித்தவத்திற்கு மதம் மாறினால் சாதிகளற்ற மனிதம் வளரும் எனக் கூறி, கிறித்துவத்திற்கு ஈழத்தமிழர்களை மதம் மாற்றத் தொடங்கிய அதே காலப்பகுதியில், மேற்கே அமெரிக்காவில் கிபி 1619 முதலாக மனிதனை மனிதன் அடிமை எனக்கூறி விலைக்கு விற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விற்றவன் வெள்ளையனான கிறித்தவன். விலை போனவன் இயற்கை வழிபாட்டினனாகிய மேற்கு ஆபிரிக்கக் கருப்பன்.
1964 குடியுரிமைச் சட்டம் 1965 வாக்குரிமை சட்டம் என்பன அமெரிக்காவில் இயற்றப்படும் வரை நாடற்ற மக்களாக அடிமைகளாக ஆப்பிரிக்கக் கருப்பின மக்கள் வாழ்ந்தனர்.
இன்று அமெரிக்காவில் 12.5% ஆப்பிரிக்கக் கருப்பினக் கிறித்தவரை, வேலைவாய்ப்பில் கல்வியில் உரிமைகளில் இரண்டாந்தரக் குடிமக்களாகவே வெள்ளையரான கிறித்தவர் கருதுவர்.
சாதிக் சாக்கடைக்குள் மூழ்கியோர் இந்துக்களா? கிறித்தவர்களா?
இந்துக்களுக்கிடையே சாதிக் கட்டமைப்பு. அதன் விளைவாகத் தீண்டாமை. வர்க்க பேதம், ஏற்றத்தாழ்வு எனவே இந்துக்களே கிறித்தவத்துக்கு மதம் மாறுங்கள். சாதிக்கட்டமைப்பு அங்கு இல்லை. அமெரிக்கக் கிறித்தவர் அனுப்பும் பணத்துக்கு விலைபோன மத மாற்றிகள் கூறுவர்.
300 ஆண்டுகளுக்கும் கூடுதலாக, கிறித்தவக் கருப்பின மக்களை அடிமைகளாக தீண்டத்தகாதவர்களாக விலைக்கு விற்கக் கூடியவர்களாக சம உரிமை அற்றவர்களாக வெள்ளையரான கிறித்தவர்கள் வைத்திருந்தார்களே?
வெட்கமில்லாமல், இந்துக்களிடை சாதிக் கொடுமை உள்ளது. கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினால் சாதி கொடுமையில் இருந்து விடுபடலாம் என்று கூறுகின்றார்களே!!
இத்தகையோர்களை 1400 ஆண்டுகளுக்கு முன்பு நெறியல்லா நெறியர், புனைதுகிலர், புறனுடையர், எத்தர், ஈனர் என்று திருஞானசம்பந்தப் பெருமான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் திருச்சி மதுரை-கேசவப்பட்டி, சென்னை-வேப்பேரி, திருநெல்வேலி-பாளையங்கோட்டை எனப் பற்பல ஊர்களில் கிறித்தவ தேவாலயங்களில் வேளாளருக்குத் தனித் தேவாலயம். ஆதிதிராவிடர்களுக்கு தனித் தேவாலயம்.
வடக்கன்குளத்தில் வேளாளரும் நாடாரும் சமகாலத்தில் திருப்பலி கொண்டாலும் தேவாலயத்தின் நடுவே ஒரு பெரிய சுவரைக் கட்டி ஒருவரை ஒருவர் காணாமலே திருப்பலி கொள்வார்கள். வேளாளருக்குத் தனி நுழைவாயில். நாடார்களுக்குத் தனி நுழைவாயில்.
சாதிச் சாக்கடைச் சழுக்கர் கிறித்தவர்களா? இந்துக்களா?
யாழ்ப்பாணக் கத்தோலிக்கரின் தலைவராக ஆயராகப் பதவி பெற வேண்டுமா? பதவி பெற்றவர்களின் பட்டியலைப் பாருங்கள். சுண்டி எடுத்த வேளாளர் பரம்பரையில் வந்தவர்கள் மட்டுமே பதவி பெற்று இருக்கிறார்கள். அதுவும் ஊர்காவற்றுறை நாரந்தனை ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்களே பெரும்பான்மை.
யாழ்பாணத்தில் கத்தோலிக்கர்களுள் கரையாரே பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள். ஆனாலும் அவர்களும் ஒருவரேனும் ஆயராக முடியுமா?
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமேற்குக் கரையில் உள்ள ஊர் இளவாலை. கத்தோலிக்கர் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஊர். சிறந்த கல்வியாளரை அறிஞரை அருட் தந்தையரை அருள் மங்கையரை ஈன்று பெருமை பெற்ற ஊர்.
இளவாலையில் கத்தோலிக்க தேவாலயம். வேளாளர் அல்லாத திருப்பலிக்காக நுழைகிறார் வழிபடுகிறார். வேளாளர் என்று சேர்ந்து அவரது மூக்கை அறுத்து மானபங்கம் செய்தார்கள். சாதி தடித்த வேளாளர் வாழ்கின்ற ஊர். இன்றும் அதே நிலை அங்கு தொடர்கிறது.
இந்து சமயத்தில் சீர்திருத்தம் வேண்டும் எனக் கூறுவோர், கிறித்தவ சமயத்தில் சீர்திருத்தம் வேண்டும் எனக் கூறுவதே இல்லை. கிறித்தவத்தில் சாதி ஒழிப்பு வேண்டும் எனக் கோருவதில்லை. மனிதனை மனிதன் விற்கும் அநீதி ஒழியவேண்டும் எனக் கோருவதில்லை.
குடிமக்கள் அனைவரும் ஒத்த உரிமை உடையோர். பாலினம் நம்பிக்கை இனம் கடந்து சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற கொள்கை சீனாவில்.
நடைமுறையில் 10இல் 9 சீனர்களுக்கு யப்பானியர் பேய் அல்லது பிசாசு அல்லது ஒதுக்க வேண்டியவர்(பிபிசி ஆய்வு). திபேத்தியர் உய்குர் கருப்பர் மற்றும் வெள்ளையர், சீனக் குடிமக்கள் ஆயினும் அவர்களை மக்கள் தொகையில் 90% ஆகிய ஆன் இனத்தவர் ஒதுக்குவர்.
ஆனானப்பட்ட சீனாவிலேயே சமூக ஏற்றத்தாழ்வு உண்டு.
Ashrafs, ajlafs and arzals ஆகியோர் உயர்சாதி முகமதியர். அவர்களுள் முதலாமவர் உயர்ந்தவர், இரண்டாமவர் அடுத்து உயர்ந்தவர், மூன்றாமவர் உயர்ந்தவர்களுள் கடைநிலை.
சாதி குறைந்த முகம்மதியர்களுள் 82 வகையான சாதிகள் உண்டு. இவர்களைப் பின்தங்கிய சாதியினர் என இந்திய மண்டல் ஆணைக் குழு கூறியது. முகம்மதியர்களுள் 41% இவ்வாறு பின்தங்கிய சாதியினர்.
2006 நவம்பர் 17ஆம் நாளிட்ட நீதிபதி ராஜேந்திர சச்சார் குழுவின் அறிக்கையில் முகமதியர் தொடர்பான மேற்காணும் விபரங்கள் உள்ளன.
இந்துக்களின் சாதி சாக்கடைக்குள் இருந்து விடுபட்டு முகமதியர் ஆகுங்கள் என அழைக்கும் மத மாற்றிகள் கண்ணாடியில் தங்களைப் பார்ப்பதில்லை.
காதல் வலை வீசி சைவப் பெண்களைத் தூண்டி இழுக்கும் முகமதியர், அப் பெண்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளில் ஒன்று, சைவத்தில் இருந்தால் சாதி, இங்கு வந்தால் சாதி இல்லை, என்பதே.
எத்துணை பொய். எத்துணை பித்தலாட்டம். எத்துணை ஏமாற்றுதல்? முகமதியரிடம் சாதிகள் இல்லை என்று கூறுவோர் சச்சார் அறிக்கை பார்க்க.
காபிலி quabili ஒரு சாதி. அசில் asil ஒரு சாதி. கதிரி khadiri ஒரு சாதி. எசாசி அதார் hejazhi hadar ஒரு சாதி.
எங்கே இச் சாதிப் பிரிவினைகள்? சாதியே தங்களுக்குள் இல்லை எனக் கூறும் முகமதியர்களின் தூய நாடான மண்ணான சவுதி அரேபியாவில்.
இப்பெயர்கள் சாதியை மட்டும் அல்ல சமூகத்தில் சாதி மதிப்பையும் குறிக்கின்றன. ஏற்றத்தாழ்வு மதிப்பீடுகள். ஒரு சாதியாருக்கும் மற்ற சாதியாருக்கும் இடையே திருமணம் எனில் இரு சமூகங்களுமே ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலை சவுதி அரேபியாவில்.
இந்துக்கள் சாதிச் சாக்கடைச் சழுக்கர் எனக் கூறும் முகமதியர், இந்தியாவிலும் முகமதிய நாடுகளிலும் தமக்குள்ளே உள்ள சாதிப் பிரிவினைகளை, அதனால் திணிக்கும் ஏற்றத்தாழ்வுகளை ஒடுக்குமுறைகள மறைத்துக் கொண்டே பொய் முகத்துடன் இந்துக்களைச் சாடுகின்றனர்.
இத்தகையோர்களை 1400 ஆண்டுகளுக்கு முன்பு நெறியல்லா நெறியர், புனைதுகிலர், புறனுடையர், எத்தர், ஈனர் என்று திருஞானசம்பந்தப் பெருமான் கூறியுள்ளார்.
ஏற்றத்தாழ்வுகள் ஒதுக்கீடுகள் தீண்டாமை என்பன இந்துக்களுக்கு மட்டுமே உள்ள இயல்பு. இந்துக்களைக் கிறித்தவத்திற்கும் முகமதியத்திற்கும் மதம் மாற்றிவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என கூறுவோரும் பொய்யரே.
பிறப்பினால் உயிர்கள் அனைத்தும் சமமானவை. எனினும் செய்யும் தொழிலால் உயர்வு நிலை உண்டு தாழ் நிலை உண்டு. பெருமை தரும் செயல்களை சிலர் செய்வர். சிறுமை தரும் செயல்களை சிலர் செய்வர்.
சைவ சமயிகள் இடையே இதைத் தவிர வேறுபாடு எதுவும் கிடையாது. சைவத் தமிழ்த் தெய்வப் புலவர் திருவள்ளுவர் 2051ஆண்டுகள் முன் கூறினார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972).
எனினும் மனித இயல்புக்கு ஏற்ப ஐரோப்பியர் சீனர் ஆபிரிக்கர் அரேபியர் என யாவரும் கொண்டிருக்கும் இயல்புகளே சாதி குலம் பிறப்பு. இந்துக்களும் மனிதரே. சாதி குலம் பிறப்பு என வேறுபாடுகளைக் கொண்டிருப்பது வியப்பல்ல.
இதையே தளமாக்கிச் சைவரை மதம் மாற்றமுயல்வோர் ஈனர், எத்தர். சாதி குலம் பிறப்பு ஆகிய வேறுபாடுகளைக் களைந்தால் சைவரும் மதம் மாற மாட்டார் எனக் கூறுவோரும் ஈனரே எத்தரே.
சைவர்கள் தங்களை மரபணுக் கூர்மை நிலைகொண்டு பிரித்து அறிவர்.
மரபணுக்களுள் ஆணவம் வினை மாயை ஆகிய மூன்று மலங்களும் பொதிந்திருந்தால் மும்மலத்தார் (சகலர்).
மரபணுக்களுள் மாயை நீங்க, ஆணவமும் வினையும் பொதிந்து இருந்தால் இருமலத்தார் (பிரளயாகலர்).
மரபணுக்களுள் மாயையும் வினையும் நீங்கி ஆணவம் பொதிந்து இருந்தால் ஒரு மலத்தர் (விஞ்ஞானகலர்).
உயிரி வளர்ச்சியில் அல்லது ஆன்மீக வளர்ச்சியில் மரபணுக்கள் மலங்களைப் படிப்படியாக் களைந்து சிவபெருமானின் திருவடி நீழலை அடைகின்ற முத்தி நிலையை நோக்கி நகர்கின்றமையே உயிர்க் கூர்மை.
'...
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்...'
என்பார் சிவபுராணத்தில் 1100 ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர்.
அறிவியல் சார்ந்த உயிர்க் கூர்மையின் வேறுபாடுகளையே 600 ஆண்டுகளுக்கு முன்பு உமாபதிசிவாசாரியார் பின்வருமாறு கூறினார்.
திரி மலத்தார் ஒன்று அதனிற் சென்றார்கள் அன்றி
ஒரு மலத்தார் ஆயும் உளர்.
மூன்று மலத்து உள்ளாரும் மூல மலத்து உள்ளார்
தோன்றலர் தொத்துள்ளார் துணை.
(திருவருட்பயன் உயிரவை நிலை குறள் 2, 3)
சாதி குலம் பிறப்பு என்ற முரண்களால் பூமிப்பந்து முழுவதுமே மனித இனம் அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீருடன் மனிதநேயத்தைத் துறந்து தீவினையை வளர்க்கிறது .
மூன்று மலத்தார் தொகை பெருகுகிறது. சாதி, குலம், பிறவி என்கின்ற சூழலிலே அகப்பட்டேன். அறிவு கலங்குகினேன். அன்பில்லாத நாய் போன்றவன் ஆனேன். இதனால் அழுது துன்புறுகிறேன். என் துன்பத்தினைக் களைவாய். மூன்று மலத்தானை ஒரு மலத்தானாக்குவாய.1100 ஆண்டுகளுக்கு முன்னே மாணிக்கவாகசர் வழி சைவ சமயம் கூறிய செய்தி.
சாதிகுலம் பிறப்பென்னுஞ்
சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை
அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம்
யானெனதென் னுரைமாய்த்துக்
கோதில்அமு தானானைக்
குலாவுதில்லை கண்டேனே. (08131005)
சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை
அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம்
யானெனதென் னுரைமாய்த்துக்
கோதில்அமு தானானைக்
குலாவுதில்லை கண்டேனே. (08131005)
சாதி குலம் பிறப்பு என்னும் தீமையிலிருந்து நாங்களே விடுபடுவதற்கு உரிய வழிகளை வைத்திருக்கிறோம்.
இழி நிலையிலிருந்து உயர் நிலைக்கு உயர விரும்புகிறோம்.
ஒரு மலத்தாராக உயர விரும்புகிறோம். உயிரியலை அறிவியலை பகுத்தறிவு சார்ந்த ஆன்மீக இயலை முன்னெடுக்கிறோம்.
சாதியைப் பிரித்து பிற தேசங்களில் நீ செய்கின்ற கொடுமைகளை நாங்கள் இங்கு செய்யவில்லை. ....பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?... என்கிறார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
மதம் மாற்றியே! உனக்கு இங்கு என்ன வேலை? நாங்கள் வளர்த்தெடுத்த வழமைகளை, மரபணு வளங்களை, பண்பாட்டு விழுமியங்களை மாற்ற வேண்டும் உடைத்தெறிய வேண்டும் சிதைத்து அழிக்க வேண்டுமென்று வருகின்றாயே பாரதியாரே உன்னைச் சாடுகிறார்.
ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி
No comments:
Post a Comment