சாவித்திரி யாரை வழிபடுகிறார்?
சுமந்திரனைத் தலைவனாகக் கொண்டதால் தலைப்பட்டதால் பெயர்த்தும் சுமந்திரனுக்கே பிச்சியானால், சுமந்திரனை வழிபட்டால்? அஃது அவரது உரிமை.
தந்தையையும் இறைத்தூதரையும் தூய ஆவியையும் சுமந்திரனும் சாவித்திரியும் வழிபட்டால் அது அவர்களுடைய தனி உரிமை.
சைவர்கள் சாத்தான்களை வழிபடுகிறார்கள் எனச் சொல்வது சாவித்திரியின் உரிமையா? சைவர்களே சாத்தான்களை வழிபடுவதை விடுங்கள் சைவ மாணவர்களே சாத்தான்கள் வழிகாட்டலில் இருந்து விடுபடுங்கள் இயேசுவின் வழிபாட்டுக்கு வாருங்கள் இயேசுவை நம்புங்கள் அவர் ஒருவரே இறைத்தூதர் என்ன சொல்வது சாவித்திரியின் உரிமையா?
பல்கலைக்கழகங்களில் சமயம் சார்ந்த மாணவர் மன்றங்கள் இருப்பது வழமை.
மதம் மாற்றுவதற்காக மாணவர் சங்கம் அமைப்பது வழமையா?
ஆண்டுக்கு 13 கோடி இலங்கை ரூபாய் அளவில் வருமானம் பெற்று 170 நாடுகளில் கிளைகளை அமைத்து 11 பிரதேசங்களாக உலகைப் பிரித்து ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு செயலாளரை நியமித்துள்ளது அனைத்துலக மதமாற்ற மாணவர் சங்கம் international fellowship of Evangelical students.
தெற்காசியாவின் 10 நாடுகளுக்காக பிரதேசப் பிரிவு ஒன்றை இச்சங்கம் அமைத்திருக்கிறது. இச்சங்கம் மத மாற்றிகளின் சங்கம் என்பதனாலேயே இந்தப் பத்து நாடுகளில் நான்கு நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் வரக்கூடாது என இந்த சங்கத்துக்கு தடைவிதித்து இருக்கின்றன.
இந்தியாவில் இச்சங்கம் மாணவர்களை மதம் மாற்றுவதற்காக 30,000 தொண்டர்களை மதமாற்றப் பணியில் ஈடுபடுத்துகிறது.
மதம் மாற்றத்திற்கான இச்சங்கத்தின் தெற்காசியச் செயலாளர் சாவித்திரி சுமந்திரன். இப்பிரிவின் பத்து நாடுகளில் நான்கு நாடுகளுக்கு இவர் நுழையவே முடியாது. தடை.
தெற்காசிய பிரதேசச் செயலாளர் பதவிக்கான சம்பளம் 1100 அமெரிக்க வெள்ளி எனச் சுமந்திரனே தனது சொத்து அறிக்கையில் இலங்கை நாடாளுமன்றத்திற்கு கூறியிருக்கிறார். சம்பளம் வழங்கும் இச்சங்கத்தின் பெயரையும் சுட்டி இருக்கிறார்.
வானூர்திப் பயணச்சீட்டு பயணப் படி, தங்கும் விடுதிப் படி, உணவு படி, போக்குவரத்து படி, எனச் சாவித்திரிக்கு மாதம்தோறும் அவர் பணிக்காக சம்பளத்துக்கு மேலாகக் கிம்பளம் கிடைக்கிறது.
பணி தொடர்பான முன்னெடுப்புகளுக்காக ஆண்டுதோறும் இச்சங்கம் சாவித்திரிக்குத் தோராயமாக இரண்டு கோடி ரூபாய் வரை கொடுக்கிறது.
பல்கலைக்கழகங்களில் சமயத்துக்கான மாணவர் சங்கங்கள் அமைப்பதைப் போன்ற சங்கங்களில் ஒன்றுதான் சாவித்திரியின் இச்சங்கம் என இப்பொழுது நீங்கள் சொல்வீர்களா?
இந்த தகவல்களை எல்லாம் ஆதாரங்களாக வைத்துக்கொண்டு சாவித்திரி சுமந்திரனை மதம் மாற்றி என இலங்கைச் சிவ சேனை அடையாளம் காண்கிறது. தெற்காசியாவின் நான்கு நாடுகளில் சாவித்திரியை நுழைய விடாது தடுத்தது போல இலங்கையில் சைவர்களுக்கு நடுவேயும் மாணவர்களுக்கு நடுவேயும் சாவித்திரியை நுழைய விடாது தடுக்க வேண்டும் என சிவ சேனை கூறுகிறது.
இந்த ஆதாரங்களை இணையத்தில் நீங்களே பார்த்துக் கொள்ளலாம் அல்லது இணையத்தில் உள்ள இச்சங்கத்தின் இலண்டன் முகவரியில் வெளியிடும் அச்சிட்ட அறிக்கைகளை வாங்கிப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
சுமந்திரன்
எந்தக் கடவுளை வழிபடுகிறார்
ஏன் வழிபடுகிறார்
எப்படி வழிபடுகிறார்
எங்கே வழிபடுகிறார்
எவ்வாறு வழிபடுகிறார்
என்பதெல்லாம் அவரது தனி நம்பிக்கை சார்ந்தது
அதில் யாராவது தலையிடுவது கொடுமை.
2014ஆம் ஆண்டு தென்னிந்திய திருச்சபையின் வலைப் பக்கத்தில் படத்தையும் வெளியிட்டு சுமந்திரன் மெதடிஸ்த திருச்சபையின் துணைத் தலைவராக deputy bishop பொறுப்பேற்றதை வரவேற்கிறோம் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.
அதே ஆண்டில் அதே வலப்பக்கத்தில் அவரை மதபோதகராகவும் கூறியிருக்கிறார்கள்.
சான்று:
2014 report of the Church of South India, Jaffna Diosece says
1. Preacher Mr. M.A. Sumanthiran BSc.,LLB
2. JDCSI Welcomes New Vice President of the Methodist Church Mr.M.A Sumanthiran was recently appointed as vice president of the Methodist Church.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையில் 54 பேர் முழுநேர ஊழியராக மதமாற்றம் செய்கிறார்கள்.
பார்க்க:
சமயம் மாற்றும் முயற்சிகள் கிறித்தவத்தின் அடித்தளம்
1999 நவம்பர் எட்டாம் நாள் இந்தியாவுக்கு வந்த பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் கத்தோலிக்கர் சமய மாற்றம் செய்வதை உரிமையாக கொள்வர் எனக் கூறினார்.
விவிலியத்தில் சொல்லியவாறு: உயிர்த்து எழுந்த பின் இயேசுபிரான் சொல்கிறார்: அனைத்து நாடுகளுக்கும் செல்க. சீடர்களை உருவாக்குக. ஞான நீராட்டுக. தந்தையின் பெயரால் மகனின் பேரால் தூய ஆவியின் பெயரால் கிறித்தவராக்குக. (மத்தேயு 28.19)
கல்வாரி மலையில் இயேசுபிரான் சொன்ன கட்டளையை ஏற்று, 54 மத மதமாற்றிகளுக்குச் சம்பளமும் கொடுத்து மெதடிசுத்த திருச்சபை எண்ணிக்கை இலக்கும் கொடுத்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஓராண்டு காலத்தில் இத்தனை பேரை மதம் மாற்றிக் கொண்டு வரவேண்டும் என்ற இலக்கைக் கொடுத்திருக்கிறது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 204 ஆண்டு கால வரலாற்றில் மதம் மாற்றம் ஒன்றே அவர்களது இலக்காக இருந்தது.
மதமாற்ற முயற்சிகள் மூலம்தான் இலங்கைத்தீவு எங்கணும் 72 தேவாலயங்களை இந்தக் கால வரலாற்றில் அவர்களால் அமைக்க முடிந்தது
35,000 இலங்கையர்களை உறுப்பினராகச் சேர்க்க முடிந்தது.
துணைத் தலைவராக deputy bishop இருந்த இருக்கின்ற சுமந்திரன் மத மாற்ற முயற்சிகளை முன்னெடுப்பதை வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்.
சாத்தான்களை வழிபடாதீர்கள் எனச் சைவரிடம் கூறிய 204 ஆண்டுகால வரலாறு மெதடிஸ்த திருச்சபைக்கு உண்டு.
சாத்தான்களை வழிபடாது இயேசுவை வழிபடுங்கள் இயேசுவின் நெறியில் செல்லுங்கள் எனச் சைவர்களை அழைப்பது இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பணிகளில் ஒன்று அதை அவர்கள் மீண்டும் மீண்டும் தமது ஆண்டு அறிக்கைகளில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தன் தனி நம்பிக்கையோடு நில்லாது மற்றவர்களின் சிறப்பாக சைவசமயிகளின் நம்பிக்கையைச் சிதறடித்து இயேசுவின் பின்னால் வாருங்கள் என அழைக்கின்ற மாபெரும் திருப்பணியில் தான் இருப்பதாகச் சுமந்திரன் மெதடிஸ்த திருச்சபையின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்ற அன்றே ஒப்பியிருக்கிறார்.
தனது தனி நம்பிக்கையைப் பேணுவதுடன் சைவர்களின் நம்பிக்கையைச் சிதறடிக்க முயல்கின்றதாலன்றோ சுமந்திரனையும் அவரது மதமாற்றக் கொள்கையையும் சைவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
மறவன்புலவு க சச்சிதானந்தன் சுமந்திரனின் தனிப்பட்ட எதிரியல்ல. மதம் மாற்றிகளின் எதிரியாகச் சிவ சேனையின் படை எழுந்துளதே!
No comments:
Post a Comment