Monday, May 25, 2020

மாந்தை மேற்கு பிரதேச யெலகம்


மன்னாரான் கட்டு. அந்தப் பெயரே மன்னார் தொடர்பான முதல் அறிமுகம்.

மறவன்புலவுக்கு வடக்கே நெடுஞ்சாலை தாண்டி தொடரித் தடத்தின் அருகே எங்களுக்குச் சொந்தமான வயல். பெயர் மன்னாரான் கட்டு. பல தலைமுறைகளூடாக அந்த வயலின் நெல் அறுவடை எம் முன்னோரின் பசியைத் தீர்த்துத் தொடர்கிறது.

எங்கள் பட்டியின் மாடுகளுக்குக் குறி கு. தோராயமாக 50 60 மாடுகள். அருள்மிகு பிள்ளையார் கோவிலில் ஆவணிச் சதுர்த்தி விழா முடிவடைந்ததும் கட்டற்று மேய்ந்த மாடுகள் பட்டிக்குள் அடைந்து நிற்கும். 

எனக்கு ஏழு அல்லது எட்டு வயது. அந்த மாடுகளை மாலையில் வயலில் கட்டுவதும் காலையில் அவிழ்த்து விடுவதும் எனக்கு விருப்பமான பணி.

ஆவணிச் சதுர்த்திக்குப் பின்னர் எங்களது மாடுகளையும் ஊரில் உள்ள பலரது பட்டி மாடுகளையும் ஒன்றாகச் சாய்ப்பார்கள். சாலையின் ஆலமரத்தடியில் அனைத்து மாடுகளும் வந்து நிற்கும்.

இரண்டு அல்லது மூன்று மாடுகளாகப் பிணைச்சலில் சேர்த்து விடுவார்கள். நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து மாடுகளைக் கிழக்கு நோக்கிச் சாய்ப்பார்கள். வெள்ளாங்குளத்துக்கும் மூன்றாம்பிட்டிக்கும் கொண்டு செல்வதாகச் சொல்வார்கள். 

சங்குப்பிட்டித் தரவைக் கடலைக் கடந்து, மண்டைக் கல்லாறு, பாலியாறு நீரோடைகளைக் கடந்து, காட்டு வழியாக (அக்காலமொழியில்) முப்பது கட்டை நடந்து வெள்ளங்குளத்தை அடைவார்களாம். மூன்றாம்பிட்டிக்கும் செல்வார்களாம்.

ஐந்து மாதங்கள் கடந்தபின் மாடுகள் திரும்பவும் அதே வழியாக மறவன்புலவு வந்து சேரும். குறிகளின் அடையாளம் கொண்டு அவரவர் தத்தம் மாடுகளைத் தத்தம் பட்டிக்கு அழைத்துச் செல்வர்.

மன்னாரான் கட்டு முதலாவது அறிமுகம். வெள்ளாங்குளமும் மூன்றாம்பிட்டியும் இரண்டாவது அறிமுகம்.

2018 பொங்கல் விழா நிகழ்ச்சிக்காக வண்ணான்குளம் போகிறேன். திரு தம்பா சந்திரன் அழைத்திருந்தார்.

வெள்ளாங்குளம் சந்தியில் தோராயமாக ஆறு அடி உயரமான சிலுவையை நிறுவி இருந்தார்கள். இறங்கி விசாரித்தேன் அன்று நிறுவியதாகச் சொன்னார்கள்.

பொங்கல் விழா முடிந்ததும் மறுநாள் பிரதேசச் செயலகம் சென்று முறையிட்டேன். பிரதேச சபையின் ஆட்சிக்குள் வருவதாகத் தெரிவித்தார்கள்.

பிரதேச சபைச் செயலாளர் திரு நாவலனைச் சந்திக்கச் சென்றேன். அவர் அங்கு இல்லை. வெள்ளாங்குளம் திரு விக்னேசுவரன் சார்பில் முறையீடு எழுதிக் கொடுத்து வந்தேன்.

திரு விக்னேசுவரன் சபரிமலை போய்விட்டார். என்னுடன் முறையிட வந்தவர் முருங்கன் திரு தினேசுவரன்.

வண்ணான்குளத்தில் வயலுக்கு நடுவே திருக்கோயில். அங்கு செல்லும் ஒழுங்கை வாயிலில் திருக்கோயிலின் பெயரிட்டு வழிகாட்டும் பெயர்ப் பலகை. சிலகாலமாகப் பெயர்ப்பலகையைக் காணவில்லை. கிறித்தவர்களே அகற்றினார்கள் எனக் குற்றம் சாட்டினர்.

வெள்ளாங்குளமும் வண்ணான்குளமும் சைவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்ற நிலதாரிப் பிரிவுகள்.

மாந்தை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முப்பத்தாறு பிரிவுகளுள் இவை இரண்டு.

மாந்தை மேற்கு பிரிவின் விடத்தல் தீவைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பலமுறை தேர்வான செல்வம் அடைக்கலநாதன். 

மூன்றாம்பிட்டியில் சைவக் கோயிலுக்குப் போகும் வேலியை அமைத்த பாதிரியார்,
வெள்ளாங்குளம் முச்சந்தியில் சிலுவையை நிறுவிய கத்தோலிக்கர் 
வண்ணான்குளத்தில் பெயர்ப்பலகையை அகற்றிய கிறித்தவர்கள் 
யாவருக்கும் ஆதரவு கொடுப்பவர் கத்தோலிக்கரான செல்வம் அடைக்கலநாதன்.

மாந்தை மேற்கில் சைவ கிறித்தவ முகம்மதிய மக்கள் தொகை தோராயமாகச் சரி சமமாக இருந்தாலும் கத்தோலிக்கரின் மேலாதிக்கம் செல்வம் அடைக்கலநாதனின் கைவண்ணம்.

முகமதியரின் நலம் பேணுபவர் இரிசாத் பதியுதீன்.

சைவர்களின் நலம் பேண யார் இருக்கிறார்கள்? மன்னார்ச் சைவர்களுக்கும் ஆதரவு கொடுக்க நலம் பேண குறைதீர்க்க சைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லை.

2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் ஐங்கரன் சர்மா தலைமையிலான வேட்பாளர் வெற்றி பெறுவார்கள் ஆயின்

வெள்ளாங்குளத்தில் சிலுவை எழும்பாது
வண்ணான்குளத்தில் சைவப் பெயர்ப்பலகை அகலாது
ஆட்காட்டிவெளியில் பிள்ளையார் சிலை உடையாது
மூன்றாம்பிட்டியில் சைவக்கோயிலை வழி மறித்து வேலி அமையாது.

மாந்தை மேற்கு குடும்பங்கள் மொத்தம் 7673
மாந்தை மேற்கு சைவக் குடும்பங்கள் 2596
மாந்தை மேற்கு கிறித்தவக் குடும்பங்கள் 2773
மாந்தை மேற்கு முகமதியக் குடும்பங்கள் 2299
மாந்தை மேற்கு புத்தக் குடும்பங்கள் 5

மாந்தை மேற்கு மக்கள் தொகை மொத்தம் 26,212
மாந்தை மேற்கு சைவ மக்கள் தொகை 8470
மாந்தை மேற்கு கிறித்தவக் மக்கள் தொகை 8359
மாந்தை மேற்கு முகமதிய மக்கள் தொகை 8863
மாந்தை மேற்கு புத்த மக்கள் தொகை 7

மாந்தை மேற்கு குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.4
மாந்தை மேற்கு சைவக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.2
மாந்தை மேற்கு கிறித்தவக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.0
மாந்தை மேற்கு முகமதியக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.8
மாந்தை மேற்கு புத்தக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 1.4

36 நிலதாரிப் பிரிவு ஒவ்வொன்றிலும் சைவக் குடும்பங்களின் எண்ணிக்கை

ம/01 வெள்ளாங்குளம் 226
ம/03 பாலியாறு 271
ம/04 இலுப்பைக்கடவை 186
ம/05 அந்தோணியார்புரம் 2
ம/06 கள்ளியடி 55
ம/07 கூரை 89
ம/08 ஆத்திமோட்டை 38
ம/09 கோயில்குளம் 115
ம/10 விடத்தல்தீவுமேற்கு 3
ம/12 விடத்தல்தீவுநடு 5
ம/13 விடத்தல்தீவுகிழக்கு 45
ம/14 பள்ளமடு 150
ம/15 காயாநகர் 137
ம/16 பெரியமடுமேற்கு 5
ம/17 பெரியமடுகிழக்கு 8
ம/18 பாப்பாமோட்டை 38
ம/19 வேட்டையாமுறிப்பு 114
ம/20 மினுக்கன் 32
ம/21 மாளிகைத்திடல் 116
ம/22 அடம்பன் 70
ம/23 பாலைக்குழி 72
ம/24 நெடுங்கண்டல் 39
ம/25 சொர்ணபுரி 89
ம/26 கருங்கண்டல் 44
ம/27 ஆண்டான்குளம் 43
ம/28 கண்ணாட்டி 55
ம/29 ஆள்காட்டிவெளி 94
ம/30 வண்ணான்குளம் 107
ம/31 காத்தான்குளம் 17
ம/32 வட்டக்கண்டல் 63
ம/33 பழையபெருமாள்காடு 166
ம/34 பளையடிபுதுக்குளம் 25
ம/35 பரப்புக்கடந்தான்மேற்கு 32
ம/36 பரப்புக்கடந்தான்கிழக்கு 45
மொத்தம் 2596

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை சார்பில் 
ஐங்கரன் சர்மா தலைமையிலான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்குமாறு கோரி

மாந்தை மேற்கில் உள்ள 2596 சைவ வீடுகளுக்கும் செல்வோம்
ஒவ்வொரு வீடாகச் செல்வோம்
கோடரிச் சின்னம் தாங்கிய படத்தைக் கொடுப்போம்
ஐங்கரன் சர்மா தலைமையிலான வேட்பாளர் பட்டியலைக் கொடுப்போம்
வாக்கு விருப்ப வாக்கு எவ்வாறு இட வேண்டும் என்பதை வழிகாட்டிச் சொல்லிக் கொடுப்போம்

வீடு வீடாகச் செல்வோம்
வாக்கு வாக்காக வெல்லுவோம்

நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

No comments: