Monday, May 25, 2020

செட்டிகுளம் பிரதேச செயலகம்

மூச்சுத் திணறல்.
திடீர் எனக் காலமானார்.

போருக்குப்பின் 
இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து 
துன்பங்களையும் துயரங்களையும் தாங்காது 
அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீருடன் 
இருந்த வேளையில் 
திடீரென்று வீட்டுத் தலைவர் மூச்சுத்திணறலால் காலமானார்.

வீட்டாருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
அயலவர் உதவ வருகிறார்கள்.
ஆறுதல் சொல்கிறார்கள்.

மறுநாள் ஈமக் கடன்களை ஆற்ற வேண்டும்.
சுடுகாட்டுக்கு உடலை எடுத்துச் செல்ல வேண்டும்.
அதற்கு முன் சமயச் சடங்குகளை நடத்த வேண்டும்.

சைவக் குருக்களைத் தேடுகிறார்கள்.
கண்டுபிடிக்கிறார்கள்.
அவர் பேரம் பேசுகிறார்.
கிலோமீட்டருக்குப் பயணிக்க 200 ரூபாய் 
சடங்குக்குப் பத்தாயிரம் ரூபாய்.

இல்லத்தவர் இல்லாதவராய்த் திணறுகிறார்கள். திடீர் நிகழ்வு.

படலையைத் திறந்து பாதிரியார் உள்ளே வருகிறார்.
ஆறுதல் சொல்கிறார். செபம் செய்கிறார். புறப்படுகிறார்.

ஒரு மணிநேரத்தின் பின் சவப்பெட்டியோடு அதே பாதிரியார் வருகிறார். சைவக் குருக்கள் வருவதற்குப் பல மணி நேரம் ஆகும் என்பதால் பாதிரியாரே செபம் செய்கிறார். 

உடலை சவப்பெட்டியில் வைக்கிறார்கள். சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். பாதிரியார் நிதி உதவியும் வழங்குகிறார். சுடுகாட்டிலும் செபம் சொல்கிறார்.

அடுத்து மூன்று நாள்களும் பாதிரியார் அந்த வீடு தேடி வருகிறார். நாள்தோறும் செபம் செய்கிறார்.

பாதிரியாரின் சேவை வீட்டாரை மட்டுமன்று, அயலவர் அனைவரையும் கவர்கிறது.

சில வாரங்களின் பின் வீட்டாருக்கும் அயலாருக்கும் அள்ளி அள்ளி வழங்கிய நிதி, உணவு, உடை பாதிரியாரை அந்த அயலுக்குத் தலைவர் ஆக்குகிறது, பாதிரியார் அனைவரையும் மதம் மாற்றுகிறார். ஊரே கிறித்தவர்கள் ஆயினர்.

இத்தகைய நிகழ்வுகள் வன்னி மாவட்டங்களில் இயல்பு என என்னிடம் சொன்னார்கள். அடுக்கடுக்காக நடந்த மூன்று கூட்டங்களில் சொன்னார்கள்.

வவுனியா மாவட்டம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில்17.9.2017, 25.9.2017, 19.8.2017 ஆகிய மூன்று நாள்களிலும் நடந்த கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன்.

செட்டிகுளம் தொடரி நிலையத்துக்கு முன்புள்ள கோயிலில் முதலாவது கூட்டம்
செட்டிகுளம் அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் இரண்டாவது கூட்டம்
செட்டிகுளத்தில் வாரிக்குட்டயூர் அருள்மிகு மலை முருகன் கோயில் மண்டபத்தில் மூன்றாவது கூட்டம்.

செட்டிகுளத்திற்கு அழைத்தவர் தொழில்நுட்பப் பொறிஞர் திரு சுதாகர்.

சென்னையிலிருந்து திருமதி உமா, மங்களூரில் இருந்து திரு செண்பக விநாயகர், கொழும்பிலிருந்து செல்வி மிதுனா மூவரும் செட்டிகுளத்திற்கு வந்து சைவ சமய ஆர்வலர்களையும் அறங்காவலர் களையும் 2018இல் சந்தித்தனர்.

வன்னி மாவட்டங்களில் கிறித்தவ மதமாற்ற முயற்சிகளின் கொடுமைகளையே செட்டிகுளத்தில் நடைபெற்ற 4 கூட்டங்களிலும் எடுத்து நோக்கினோம்.

பொங்கும் சைவ உணர்வு
பொலியும் திருநீற்று மகிமை
எங்கும் எதிலும் தமிழ்ச் சைவம்
மதமாற்றத்தை தடுக்க எதுவும் செய்யவும் எங்கேயும் வருவோம் எந்த நேரமும் அழையுங்கள் என்ற உற்சாகச் சொற்கள் என்னைச் செட்டிகுளத்திற்கு ஈர்த்தன.

மதமாற்றிகளை விரட்டும் வியூகங்கள்
சொரூபங்களை அகற்றும் சிந்தனைகள்
சொன்னதைச் செய்வோம் 
செய்வதைச் சொல்வோம் 
என்ற உறுதிமொழிகள்.

செட்டிகுளத்தில் 20 நிலதாரி பிரிவுகளிலும் சிவக் காவலர்கள்.

மீடியா தோட்டத்திலும் மாணிக்கம் தோட்டத்திலும் அயராது உழைக்கும் தொண்டர்கள்.

இன்று செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவு 
மத மாற்றிகள் செல்லமுடியாத 
சைவர்களின் அடங்காப் பிரிவாக 
சிவபூமியாக நிமிர்ந்து மாறியுள்ளமைக்கு 
2017 2018 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் 
ஆர்வலர்கள் தொண்டர்கள் சிவக் காவலர்கள் 
சளைக்காது சலியாது தளராது ஓயாது எடுத்த 
கடுமையான முயற்சிகள் காரணம்.

செட்டிகுளத்தில் வென்றோம் 
மத மாற்றிகள் இடமிருந்து துடைத்தோம் 
சிவபூமி ஆக்கினோம் 
நீங்கள் அழைத்தால் எங்கு நின்றாலும் வருவோம்
தொடர்ந்து பணி செய்வோம் 
எனச் செட்டிகுளத்தில் ஆர்வலர்கள் எனக்கு கூறிய உறுதிமொழிகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.

சைவ வீடுகள்தோறும் நந்திக்கொடி கட்டினோம்.

மத மாற்றிகள் நுழையாதீர் என ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளைச் செட்டிகுளம் எங்கும் ஒட்டினோம்.

சைவ வேட்பாளருக்கே சைவ வாக்காளர் வாக்களிப்போம் என்ற சுவரொட்டிகளையும் செட்டிகுளம் எங்கும் ஒட்டினோம்.

வெங்கலச் செட்டிகுளம் மொத்தச் சைவர் 15931
வெங்கலச் செட்டிகுளம் மொத்தக் கிறித்தவர் 3828
வெங்கலச் செட்டிகுளம் மொத்த முகமதியர் 8499
வெங்கலச் செட்டிகுளம் மொத்தப் புத்தர் 14

வெங்கலச் செட்டிகுளம் மொத்தச் சைவக் குடும்பம் 4433
வெங்கலச் செட்டிகுளம் மொத்தக் கிறித்தவக் குடும்பம் 1095  
வெங்கலச் செட்டிகுளம் மொத்த முகமதியக் குடும்பம் 2714 
வெங்கலச் செட்டிகுளம் மொத்தப் புத்தர் குடும்பம் 5

வெங்கலச் செட்டிகுளம் சைவக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் 3.6
வெங்கலச் செட்டிகுளம் கிறித்தவக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் 3.5
வெங்கலச் செட்டிகுளம் முகமதியக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் 3.1
வெங்கலச் செட்டிகுளம் புத்தக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் 2.8

 207 ஆண்டியாபுளியங்குளம் 543 சிவனேசுவரன் 777614745
207ஏ பெரியதம்பனை 295 சிவம் 771770801
207சீ கண்ணாட்டி 56 நவராசா 779674342
207டி பிரமனாலங்குளம் 157  
207பி பெரியகாடு 247 கிருசாந்தி
208 சூடுவைத்தபுலவு 41  
208ஏ குருக்கள்புதுக்குளம் 360 ஆறுமுகம் 776930575
208சீ பாவற்குளம்2 24  
208டி பாவற்குளம்4 243 பாலகுமார் 778413762
208பி கந்தசாமிநகர் 318 இராகவன் 771197301
210 முதலியார்குளம் 330 உதயசூரியன் 776743454
210ஏ சின்னசிப்பிக்குளம் 3  
210பி நேரியகுளம் 41 சசிகுமார் 773712334
211 பெரியபுளியங்குளம் 626 இராமு 779641994
211ஈ கங்கன்குளம் 205  
211ஏ செட்டிகுளம் 116 தவராசா 775810926
211சீ பாவற்குளம்5/6 403 சுரேந்திரராசா 772151521
211டி கிறித்தவக்குளம் 99  
211பி முத்தான்குளம் 156 திருநாவுக்கரசு 774802639
208சீ பாவற்குளம்9/10 170 இராமு 779641994

 மொத்தம் 4433  

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை வேட்பாளர் செட்டிகுளத்தில் சைவ வீடுதோறும் செல்வோம்.

அந்தந்த நிலதாரி பிரிவுச் சிவக் காவலருடன் செல்வோம்.
திருநீற்றுப் பையுடன் செல்வோம்.
திருநீறு அணிவிப்போம்.
கோடரிச் சின்னம் படம் கொடுப்போம்
வேட்பாளர் பட்டியலைக் கொடுப்போம்
வாக்கு விருப்பு வாக்கு பற்றிய விளக்கங்களைச் சொல்வோம்

வெங்கலச் செட்டிகுளத்தில் 4433 சைவ இல்லங்களுக்கும் செல்வோம்.

வீடு வீடாகச் செல்வோம்
வாக்கு வாக்காக வெல்வோம்

நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

No comments: