Monday, May 25, 2020

கரைதுறைப் பற்று பிரதேச செயலகம்

முல்லை வெண்மைக்கு எடுத்துக்காட்டு.
முல்லை ஐந்து நிலைகளில் காடும் காடு சார்ந்த நிலமும்.

முல்லை தமிழ் கொழிக்கும் வன்னி.
முல்லை தமிழ் செழிக்கும் வன்னி.

ஊர் பெயர்கள் யாவும் இயற்கை வனப்பின் பெயர்கள்.
ஊர்ப் பெயர்களில் கொஞ்சி விளையாடும் தமிழ்ச் சொற்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை.

1800 ஆண்டுகளுக்கு முன்பு கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் அமைத்த கோயில் வற்றாப்பளை அருள்மிகு கண்ணகை அம்மன் கோயில்.

கொக்குளாய் நாயாறு நந்திக்கடல் சுண்டிக்குளம் இவை முல்லைத்தீவு மாவட்டக் கடல் நீர் ஏரிகள்.

சுண்டிக்குளத்திலிருந்து கொக்குளாய் வரை நீண்ட கடற்கரை. அதனாலேயே முல்லைத்தீவின் 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒன்றுக்கு கரைதுறைப்பற்று என்ற பெயர்.

வரலாற்றுப் புகழ் பெற்ற முள்ளிவாய்க்கால் கரைதுறைப்பற்றின் தொல்லியல் சின்னம். தமிழ்த்தேசிய எழுச்சிக்கு அடையாளம்.

இலங்கை
வடக்கு மாகாணம்
முல்லைத்தீவு மாவட்டம்

2517 சகிமீ பரப்பளவு.
136,623 மக்கள் தொகை.
44120 குடும்பங்கள்

75% சைவர்
11% கிறித்தவர்
6% முகமதியர்
8% புத்தர்

633 ஊர்கள்
136 நிலதாரி பிரிவுகள் ,
6 பிரதேச செயலகப் பிரிவுகள்
4 பிரதேச சபைகள்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 46 நிலதாரிப் பிரிவுகள்.

2018 அறிக்கையில் 
42826 மக்கள் 
13890 குடும்பங்களாக 
கரைதுறைப்பற்று வட்டத்தில் வாழ்கின்றனர்.

66.5% சைவர்
14.2% கிறித்தவர் 
19.1% முகமதியர் 
0.2% புத்தர்

கரைதுறைப்பற்று 46 நிலதாரி பிரிவு ஒவ்வொன்றிலும் வாழ்கின்ற சைவக் குடும்பங்களின் எண்ணிக்கைப் பட்டியலைத் தருகிறேன்.

வற்றாப்பளை 425
முல்லைத்தீவு நகர்46
கள்ளப்பாடு வடக்கு120
கள்ளப்பாடு தெற்கு457
முள்ளியவளை நடு171
முள்ளியவளை தெற்கு252
வண்ணான்குளம்17
முள்ளியவளை மேற்கு635
முள்ளியவளை கிழக்கு442
புதரிக்குடா187
செல்வபுரம்234
உப்புமாவெளி299
மருதங்குடியிருப்பு5
முள்ளியவளை தெற்கு164
தண்ணியூற்று மேற்கு248
குமுழமுனை மேற்கு182
கணுக்கேணி கிழக்கு184
கணுக்கேணி மேற்கு210
முள்ளியவளை வடக்கு296
அலம்பில் வடக்கு156
அலம்பில் தெற்கு132
செம்மலை314
இச்சிராபுரம்30
கோயில்குடியிருப்பு38
சிலாவத்துறை267
முள்ளிவாய்க்கால் கிழக்கு439
கொக்குளாய் கிழக்கு81
கொக்குளாய் மேற்கு139
நீராவிப்பிட்டி கிழக்கு63
சிலாவத்துறை தெற்கு96
மதவலசிங்கன்குளம்203
நீராவிப்பிட்டி மேற்கு18
மாமூலை371
கருநாட்டுக்ககேணி239
குமுழமுனை கிழக்கு261
குமுழமுனை நடு237
தண்ணீரூற்று கிழக்கு18
செம்மலை கிழக்கு76
குமரபுரம்312
தண்ணிமுறிப்பு99
கொக்குத்தொடுவாய் தெற்கு79
கொக்குத்தொடுவாய் வடக்கு190
கொக்குத்தொடுவாய் நடு130
முள்ளிவாய்க்கால் மேற்கு327
அம்பலவன்பொக்கணை334
கேப்பாப்புலவு357
மொத்தம் 9580

ஒவ்வொரு வீடாகச் செல்வோம்
ஒவ்வொரு கதவாகத் தட்டுவோம்
ஒவ்வொரு வாக்காளரையும் சந்திப்போம்

ஒவ்வொரு வீட்டின் படியிலும் ஏறும் பொழுது
தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சியின் வாக்கு எண்ணிக்கையும் ஏறும்.

வீடு அடங்கலைத் தளத்தினர்
ஊர் அடங்கலைத் தளர்த்தினர்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள் குறித்தனர்

புறப்படுவோம் தேர்தல் களம் நோக்கி
புறப்படுவோம் கரைதுறைப்பற்று நோக்கி 
9580 வீடுகளுக்கும் செல்வோம் 

அனைத்து வாக்குகளையும் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சியின் வேட்பாளருக்குப் பெற்றுக் கொடுப்போம்.

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை

No comments: