Monday, May 25, 2020

வாச நிலைமை

இல்லத்துக்கு வாய்
இலக்கணப்போலி (இல் +  வாய்) வாயில்
வாயில் மருவி வாசல்
வாசலின் தொடர்ச்சி வசி, வசிப்பிடம்

திருக்கோயில் அருகே வசித்துத் திருக்கோயிலின் கடமைகளை நிலைபெறச் செய்பவர் வாச நிலைமை

இலங்கையில் உள்ள அனைத்துப் புத்தம் சார்ந்த சைவக் கோயில்கள் தமக்கென வாச நிலைமையைக் கொண்டுள. அவர்களே கோயில் அறங்காவலர்கள்.

புத்தம் சார்ந்த சைவக் கோயில்கள் எனச் சொல்கிறேன். ஏனெனில் இலங்கையில் உள்ள புத்தருடைய சிலை உள்ள திருக்கோயில்களில் சிவன் திருமால் பிள்ளையார் முருகன் வைரவர் அம்மன் கண்ணகை அம்மன் எனச் சைவக் கடவுளர் திருவுருவங்கள் உள்ளன. 

புத்தரை வழிபடுவோர் உருக்கத்தோடும் உணர்வோடும் சைவக் கடவுளரையும் வழிபடுவர் வரும் அனைவரும். போதனைக்குப் புத்தரையும் இறை நம்பிக்கைக்கும் சாதனைக்கும் சைவக் கடவுளரையும் வழிபடும் மரபு புத்தர் கோயில்களுக்குச் செல்வோருக்கு உண்டு.

வாச நிலைமை என்ற தமிழ்ச்சொல் சிங்களத்தில் வாச நிலமே என உருமாறும்.

மன்னார் மாவட்டம் திருக்கேதீச்சரம் திருக்கோயிலில் வாச நிலைமைகள் இல்லை. கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் இருக்கின்ற வாழ்கின்ற வசிக்கின்ற அறங்காவலர்கள் தம் பணியாளர்வழி திருக்கோயில் கடமைகளைச் செய்கின்றனர்.

திருக்கேதீச்சரத்தில் வாழ்கின்ற வசிக்கின்ற ஒருவரே அறங்காவலராக முடியும் என்ற நிலை வர வேண்டும். பிற மத ஊடுருவல்கள் கடுமையாகிப் போகின்ற இக்காலத்திலே திருக்கேதீச்சரம் கோயிலில் பணியாளர்களே அறப்பணிகளைச் செய்ய முடியுமா?

திருக்கேதீச்சரம் திருக்கோயில் அறங்காவலர் அலுவலகம் கொழும்பில். உறுப்பினர்களின் பொதுக் குழுக்கூட்டம் கொழும்பில்.

பகுதி நேரப் பணியாக அறங்காவலர்கள் தம் கடமைகளைச் செய்வதால் திருக்கோயிலில் அன்றாட சிக்கல்களுக்கு முகம்கொடுக்க எவருமில்லை இதுவே புறச் சமயத்தார் கொடுமைக்குக் கைகொடுக்கும் ஊன்றுகோலாக இருக்கிறது 

கைவிடப்பட்ட கோயில் என்ற கண்ணோட்டம் நெடுந்தொலைவில் இருந்து வந்து வழிபடுபவர்களுக்கும் அருள் வேண்டி இறைஞ்சுபவர்களுக்கும் உருக்கத்தோடும் உணர்வோடும் உள்ளத்தின் செம்மார்ந்த நோக்கத்தை நிறைவேற்ற வருவோருக்கும் தோன்றுகிறது

தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சிக் கொள்கைகளில் ஒன்றாகத் திருக்கேதீச்சரம் திருக்கோயில் வளாகம் முழுவதையும் புறச் சமயத்தவரிடமிருந்து மீட்டு வாச நிலைமையாக அறங்காவலர் வாழ்ந்து திருக்கோயிலின் செம்மாந்த சிறப்பைப் பெருக்கும் வழிகளைக் காணுவதே.

மன்னார் சைவர்களுக்கு மன்னாரில் சைவராக வாழ்கின்ற நாடாளுமன்றத் தலைமை கிட்டினால் திருக்கேதீச்சரம் பண்டைய சிறப்புக்கு மீளும்.

சைவர்கள் என்ற நம்பிக்கையோடு தத்தம் வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடித்தாலும் அரசியலில் சைவத்துக்கு முன்னுரிமை கொடுக்காத வேட்பாளர்களை

மத மாற்றிகள் கை ஓங்கிய கட்சியில் மத மாற்றிகள் சொல்லும் இடங்களில் கையொப்பம் இடுகின்ற சைவ சமயத்தைச் சேர்ந்தவர் ஆயினும் அத்தகைய வேட்பாளர்களை

மன்னார் மாவட்டத்தில் சைவர்களுக்கு இடுக்கண் வந்தபோதெல்லாம் துயர் துடைக்க வராத வேட்பாளர்களை

வன்னித் தேர்தல் மாவட்டச் சைவர்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பின் தங்கள் தலைகளில் தாமே கொள்ளி வைப்பவர் ஆவார்

மன்னார் மாவட்டச் சைவர்களின் வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றம் சென்றபின் மன்னார் மாவட்டச் சைவர்களுக்கு எதிராகவும் புறக்கணித்தும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய வேட்பாளர்களை மன்னார் மாவட்டச் சைவர்கள் மீண்டும் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப கூடாது.

தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் 

மன்னார் சிவபூமியாகத் தொடர வாக்களியுங்கள்

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

No comments: