Monday, May 25, 2020

மத மாற்றிகளை அகற்றுக

வன்னி மண் தந்த வாழ்வு
இந்த மண்இந்தக் காற்றுஇந்த வானம்இந்த நீரோடைஇதில் பூத்த மக்கள்மலர்த்து விரிந்த பண்புகள்சிறந்து முகிழ்ந்த இயல்புகள்காலம் காலமாகக் கூர்மையாகி வந்த கற்பனைகள்.
மண்ணோடு கலந்த நம்பிக்கைகள்மனத்தைச் செம்மையாக்கிய நெறிகள்வாழ்வுக்கு இனிமை சேர்த்த தோழமைகள்தோழமைகள் முகிழ்த்ததால் காதல் நெறி.
பிறந்தோம்தமிழ் மொழி பயின்றோம்பின்னெல்லாம் காதலில் சிறந்தோம்சிவன் சேவடியே சேர்ந்தோம். (காரைக்காலம்மை)
என்ன இல்லைஎன்ன வேண்டும்எது குறைஎல்லாமே பெற்றோம்எதுவுமே குறையில்லை.
புறத் திணிப்பு
நீ முட்டாள்நீ மடையன்நீ அறிவில்லாதவன்என்னைப் பார்என் வளர்ச்சி பார்என் உயர்ச்சி பார்.
உன் வாழ்வியலைக் கைவிடுபண்பாட்டைப் புறந்தள்ளுநெறிகளை ஒதுக்கி வைஎன் பின்னே வாஎன்னைப் பின்பற்றுநான் வாழ்வு தருவேன்ஒளி ஏற்றுவேன்நெறி காட்டுவேன்.
இவை கொடுமைகள்இந்த மண்ணின் மீது திணித்ததிணித்துக் கொண்டிருக்கிறதிணிக்கப் போகிற கொடுமைகள்.
சவால்
வாழ்வதாவீழ்வதாசவால்களாக எதிர்கொண்டனசந்திப்பதாபணிவதா?
செய்வதாசெத்து மடிவதாவினாக்களாக முன்னின்றனபதிலடி கொடுப்பதாபடுத்து உறங்குவதா?
இவை இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் முன்னுள்ள சவால்கள்தமிழும் சைவமும் காலம் காலமாக எதிர்கொள்ளும் சவால்கள்.
கல்லோடு கட்டிக் கடலில் தள்ளிய சவால்நீற்றறையில் அடைத்த சவால்யானையால் மிதித்த சவால். (அப்பர்)
திருமடத்தைத் தீயிட்டுக் கொளுத்திய சவால். (சம்பந்தர்)
ஈனர்எத்தர்
இவர்களை எத்தர் என்றோம்ஈனர் என்றோம் (சம்பந்தர்). இவர்கள் நெறிகள் இந்த மண்ணுக்கு ஏற்றதல்ல என்றோம்புறந்தள்ளினோம்.
புத்தராய்ச் சில புனைதுகில் அணிபவரை எத்தர் என்றோம்அல்லல் சேர் சமணரை ஈனர் என்றோம்நாத்தழும்பேற நாத்திகம் பேசியோரை விரட்டினோம்சவால்களைச் சந்தித்தோம்எத்தனைஈனனைநாத்தழும்பானை ஓட ஓட விரட்டினோம்அனைத்து முனைகளிலும் அரண் அமைத்தோம்.
சோழர்
இந்த மண் ஈந்த நெறிகள்இந்த மக்கள் செதுக்கிய நம்பிக்கைகள்இந்த இயற்கை தந்த கற்பனைகள் மீண்டும் நமக்காயினஅடுத்த ஓராயிரம் ஆண்டுகள் நாம் அமைத்த அரண் நமக்குக் காப்பாயதுநன்றி சோழர்கள்.
முகலாயர்
700 ஆண்டுகளின் முன்னர்முகலாயர் அனுப்பிய மாலிக் கபூர் தமிழையும் சைவத்தையும் சிதைத்தான்கோயில்களை இடித்தான்.கொள்ளையடித்தான்.
சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமான் கோயிலில் 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக வழிபடமுடியவில்லைமதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பல ஆண்டுகளாக அடியவர் போகமுடியவில்லை.
யாழ்ப்பாண அரசு
60 ஆண்டுகள் நீடித்த இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொணர்ந்தோம்மீண்டும் சைவம் நிலைபெற்றதுநெறிகள் மீளமைந்தனதமிழப் பண்பாடு தன் இயல்பான வழித்தடத்தில் பயணித்தது. (நன்றி நாயக்கர் அரசுயாழ்ப்பாண அரசு).
மேனாட்டார்
400ஆண்டுகளின் முன் திருக்கேதீச்சரம் கோயிலை அழித்து ஒழித்தனர்திருக்கோணேச்சரம் மண்ணோடு மண்ணாயதுஈழத்தின் பண்பாட்டுச் செல்வத்தைதமிழ்த் தேசியத்தைமொழி வளத்தைநம்பிக்கை நெறிகளைச் சிதைக்க மேனாட்டார் முயன்றனர்.
ஆடி அமாவாசை விரதம்வாழை இலையில் உணவருந்தி வெளியே வீசினால் தெரிந்துவிடும் எனவிரதமிருந்துவாழையிலை விரித்துச் சாப்பிட்டுக் கூரை இறப்பில் செருகிக் கைகழுவினோம்.
வீட்டுக்கு ஒரு மாடு இறைச்சிக்குக் கேட்டபொழுதுகொடுக்க மறுத்தோம்வீடுகளை விற்றுஇரவோடிரவாக அக்கரை சென்றோம்புலம்பெயர்ந்து பண்பாடு பேணினோம்போற்றினோம்.
ஆறுமுக நாவலர்
காரைக்காலம்மைஅப்பர்தமிழ் ஞானசம்பந்தர்மாணிக்கவாசகர்சேக்கிழார் எனக் காலம் தந்த வீரர்கள்போராளிகள் வரிசையில் மண் காக்கமண்ணின் மரபு பேணமொழி காக்கநெறி போற்ற வீறு கொண்டெழுந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலர்.
காரைக்காலம்மைக்குக் காடவர்கோன்தமிழ் ஞானசம்பந்தருக்கு ஆதித்த சோழன்மணிவாசகருக்கு அரிமர்த்தனன்சேக்கிழாருக்குக் குலோத்துங்கன்ஆறுமுக நாவலருக்கு இராமநாதன்.
இராமநாதன்
கல்வி கற்ற தமிழருக்கு இலங்கைச் சட்ட சபையில் பேராளர் யார்இராமநாதனை அனுப்புவோம் என்றார் ஆறுமுக நாவலர்கிறித்தோபர் பிரிட்டோவை அனுப்புவோம் என்றனர் ஆங்கில அரசின் அடிவருடிகள்.
1879 மே 22ஆம் நாள் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆறுமுக நாவலர் ஆற்றிய உரையே இராமநாதன் சட்ட சபைக்குத் தேர்வாகக் காரணம்.
கிறித்தவத் திணைப்பைக் கடுமையாக எதிர்த்தவர் ஆறுமுக நாவலர்அதனால் பிரிட்டோவை நிராகரித்தார்இராமநாதனை ஆதரித்தார்.
சிவ சேனையின் கோரிக்கை
2016 ஐப்பசியில் சிவ சேனையின் தொடக்க நிகழ்வுமூன்று முடிபுகளை எடுத்தோம்அவற்றுள் ஒன்று:
இலங்கையில் எந்த மூலையில் நடைபெறும் எந்த ஒரு தேர்தலிலும்ஊர்ச் சங்கமாயிலென்கிராம சபையாயிலென்உள்ளூராட்சிச் சபையாயிலென்மாகாண சபையாயிலென்நாடாளுமன்றத் தேர்தலாயிலென்குடியரசுத் தலைவர் தேர்தலாயினென்கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பாயிலென்தமிழ்ச் சைவ வாக்காளர்தமிழ்ச் சைவ வேட்பாளருக்கோதமிழ்ச் சைவ நன்மை பேணும் வேட்பாளருக்கோகட்சிக்கோ மட்டுமே எந்தச் சூழலிலும் எந்த நெருக்குவாரத்தையும் மீறிஎந்தக் கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி வாக்களிக்கவேண்டும் எனக் கோருவது என முடிபு செய்தோம்ஒரு மனதாக முடிபு செய்தோம்.
இலங்கையில் அகில இலங்கை இந்து மாமன்றம் தொடங்கிநூற்றுக் கணக்கான தமிழச் சைவ நலன் பேண் அமைப்புகள் உளஅவற்றுள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில அமைப்புகளே இத்தகைய கோரிக்கையை வைக்கும் முடிபுகள் கொண்டன.
இந்த மண் தமிழ்ச் சைவ மண்புத்தர் முதன் முதலாக இலங்கையில் கால்வைத்த நாள் தைப் பூச நாள்.
தமிழும் சைவமும் மணக்கும் விழா நாள்தமிழர் இலங்கையின் தென்கோடியில் கூடயிருந்த நாள்முருகனுக்கு விழா நாள். (மகாவமிசம் படிக்க)
புத்தம் வந்ததுபாளி வந்தது.
சமணம் வந்ததுபிராகிருதம் வந்தது.
நம்பூதிரிகள் வந்தனர்வடமொழி வந்தது.
இசுலாம் வந்ததுஅரபு வந்தது.
கிறித்தவம் வந்ததுஇலத்தீன்போர்த்துக்கேயம்ஒல்லாந்தம்ஆங்கிலேயம் வந்தன.
தமிழ்ச் சைவர் இந்த வந்தேறிகளின் இலக்குமதம் மாற்றுவதே இந்த வந்தேறிகளின் இலக்குதமிழரின் மரபுவழித் தாயகத்தைத் தமதாக்குவதே இந்த வந்தேறிகளின் இலக்கு.  இவர்களின் மேலாதிக்க முயற்சியை மீறிச் தமிழும் சைவமும் வாழ்கிறது.
தமிழும் சைவமும் தொடர்ந்து வாழவளரதேமதுரத் தமிழோசை பரவமேன்மை கொள் சைவ நீதி வழங்கஇவை பின்னிப்பிணைந்த தமிழ்த் தேசியம் செழிக்கதமிழ்ச் சைவ வேட்பாளர்களுக்கே தமிழ்ச் சைவ வாக்காளர் வாக்களிக்கவேண்டும்.  
வன்னித் தமிழர் தம் நலம் காக்க, வந்தேறிகளின் சவால்களைச் சந்திக்க, தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும்.
வெல்வோம் வெல்வோம்
நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை  


No comments: