மன்னார் மாவட்டம் முருங்கன் சார் நிலதாரிப் பிரிவுகளில் மதமாற்றம் செய்பவர்கள் மெதடிசுத்த திருச்சபையினர்.
அந்தப்பகுதியில் அவர்களுக்கு 40 ஏக்கர் பண்ணை உண்டு அந்தப் பண்ணையை நடுவணாகக் கொண்டு அயலில் உள்ள ஊர்களில் கடுமையான மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
நரிக்குண்டிலும் மெதடிஸ்த திருச்சபையின் மதம் மாற்றினார்களா? வேறு சபையினர் புகுந்தாரா? அல்லது கத்தோலிக்க பாதிரியார் மதம் மாற்றினாரா? விவரங்களை அறிந்து வெளியிடுங்கள்.
1 மத மாற்றிகள் நடவடிக்கை தொடர்பான விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்
2 மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும்
3 மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரக்கூடிய சூழலை உருவாக்கும் கட்சிக்கோ வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்
மன்னாரில் உள்ள சைவ அமைப்புகள் முதலாவது இரண்டாவது கோரிக்கைகளைத் தனித்தனியாகத் தீர்மானம் எழுதி வடமாகாண ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்ப வேண்டும் இதுவே என்னுடைய கோரிக்கை
மன்னார் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடர்பாக முன்பு நான் குறிப்புகள் எழுதி தகவல் தந்து சைவ அமைப்புகள் கடிதங்கள் எழுத வேண்டும் எனக் கேட்டிருந்தேன்.
என்னுடைய குறிப்புகளில் கடித வரைவுக்கான தகவல்கள் அமைந்திருந்தன அவற்றை எடுத்துப் பொருத்திக் கடிதத்தை அனுப்புமாறு மீண்டும் சைவ அமைப்புகளை கேட்கிறேன்
மன்னாரில் அடித்தள சைவ அமைப்புகள் 153 நிலதாரி பிரிவுகள் தோறும் சிவக் காவலர்களை அமைத்து அடித்தளப் பணிகளைச் செய்ய வேண்டும் என நீண்ட காலமாகவே கோரி வருகிறேன்
மன்னாரில் உள்ள ஒவ்வொரு சைவ இல்லத்திலும்
1 முற்றத்தில் நந்திக் கொடியை ஏற்றி வழிபடலாம்
2 மன்னார் சிவபூமி என்ற நூலை வீட்டில் புத்தக அடுக்கில் வைத்து நாள்தோறும் படித்து மன வலிமை பெறலாம்
3 மதமாற்றிகள் நுழையாதீர் என்ற சுவரொட்டியை இல்ல வாயிலில் ஒட்டி மத மாற்றிகளுக்கு எச்சரிக்கை விடுக்கலாம்
இப்பணிக்கு புலம்பெயர் அன்பர்களின் நன்கொடைகள் காத்திருக்கின்றன.
ஆர்வமுள்ள அடித்தளச் சைவத் தொண்டர்களை அழைக்கிறேன்
No comments:
Post a Comment