அருள்மிகு அம்மன் கோயில்.
வழிபடலாம் எனச் செல்கிறேன்.
சாலை வழியே செல்கிறேன்.
திருக்கோயிலுக்குப் போகுமுன் சாலைக்குக் குறுக்கே தடுப்பு.
முள்வேலித் தடுப்பு.
காட்டுக் கம்புகளை நட்டு முட்கம்பியால் வரிந்த தடுப்பு.
சாலையின் அகலம் 15 அடி அல்லது நான்கு மீட்டர்.
திருக்கோயிலுக்குப் போகும் சாலையை யார் அடைத்திருப்பார்? ஏன் அடைத்தனர்?
என்னை அழைத்துச் சென்றவர் உலகச் சைவப் பேரவைத் தலைவர் சுமுகலிங்கம்.
சாலையை அடைத்தவர் கத்தோலிக்கப் பாதிரியார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாகச் சாலையை அடைத்து வைத்திருக்கிறார்.
அருள்மிகு அம்மனை வழிபட வேண்டும்.
சாலை வழியே போக வேண்டும். தடுப்பு இருப்பதால் சுற்று வழியே 500 மீட்டர் கடற்கரை வழியாகப் போக வேண்டும். சுமுகலிங்கம் என்னிடம் சொன்னார்.
நான் இலங்கை குடிமகன். சைவ சமயத்தவன்.
இலங்கை அரசியலமைப்பின் மூன்றாவது அத்தியாயத்தில் பன்னிரண்டாவது பந்தியில் மூன்றாவது பிரிவில் சைவ சமயத்தவர் சைவக் கோவிலுக்குப் போவதை எவரும் தடுக்க முடியாது என அடிப்படை உரிமை.
Chapter III.12.3 No person shall... be subject to any..... restriction.... with regard to access to.... places of public worship of his own religion.
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் பொதுப்பாதையில் தடுப்பு வேலி அமைத்தார். நான்கரை ஆண்டுகளாக அந்தத் தடுப்பு வேலி தொடர்கிறது.
அதனால் அருள்மிகு அம்மன் கோயிலுக்குக் காவடி எடுப்பவர் போக முடிவதில்லை. திருப்பணி செய்வதற்குரிய கட்டடப் பொருட்களை கொண்டு போக முடியவில்லை.
வேலிக்கு அருகில் போனேன். முதல் வரி முட்கம்பியை அகற்ற முயன்றேன். நட்டு இருந்த காட்டுத்தடி ஒன்றைப் பிடுங்க முயன்றேன்.
அருள்மிகு அம்மன் கோயிலில் இருந்து ஒருவர் ஓடோடி வந்தார். முட்கம்பியை அகற்றாதீர்கள் காட்டுத் தடியைப் பிடுங்காதீர்கள், என நயமாக வேண்டினார்.
அருள்மிகு அம்மன் கோயிலுக்குப் போகவேண்டும் என்றேன்.
அக்கோயிலின் அறங்காவலர் நான் என்றார். நீங்கள் வேலியைப் பிடுங்கி விட்டுப் போய்விடுவீர்கள். நாளை இங்கு மதக்கலவரம் நடக்கும். யார் பொறுப்பு? எனக் கேட்டார்.
நிலதாரிப் பிரிவு விவரம் கேட்டேன். பாலியாறு என்றார். காவல் நிலைய விவரம் கேட்டேன். இலுப்பைக்கடவை என்றார். மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அடங்கும் சிற்றூர் என்றார்.
நிலதாரியின் தொலைபேசி எண் பெற்று அழைத்தேன். விடை இல்லை.
இலுப்பைக்கடவைக் காவல் நிலையத்தை அழைத்தேன். எனக்குள்ள வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட விரும்புகிறேன். வேலியைப் பிடுங்குகிறேன். சட்ட மீறல் எனில் நீங்கள் என்னை கைது செய்யலாம் என்று சொன்னேன்.
கேட்டவருக்கு நான் சொன்னது புரியவில்லை. அவர் சொன்ன பதில் எனக்கும் புரியவில்லை. மொழிகளின் இடைவெளி காரணம்.
மாந்தை மேற்குப் பிரதேசச் செயலரை அழைத்தேன். அருள்மிகு அம்மனின் அருளால் இணைப்புக் கிடைத்தது. வேலியைப் பிடுங்கப் போவதை அவருக்குத் தெரிவித்தேன்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அவரின் அலுவலகக் கடமை நாள் அன்று. நான்கரை ஆண்டுகளாகப் புரையோடிய சிக்கல். நீங்கள் வேலியைப் பிடுங்காதீர்கள். எனக்கு நான்கு நாள் கால இடைவெளி தாருங்கள். வியாழக்கிழமைக்கு முன் நானே வேலியைப் பிடுங்கிச் சாலையைத் திறந்து விடுகிறேன்.
வியாழக்கிழமை முற்பகல். இரண்டு வண்டிகளில் 12 அரசு ஊழியர் வந்தனர். வேலியைப் பிடுங்கினர். சாலையைத் திறந்தனர்.
அருள்மிகு அம்மன் கோயிலுக்கு யாரும் எவரும் வழிபடத் தடையின்றிப் போகும் சூழ்நிலை உருவானது. இன்று வரை தொடர்கிறது.
பாலியாறு நிலதாரிப் பிரிவில் 409 குடும்பங்கள் (2019). சைவக் குடும்பங்கள் 271. கிறித்தவக் குடும்பங்கள் 137. முகம்மதியக் குடும்பங்கள் இல்லை. புத்தக் குடும்பம் ஒன்று.
சிறுபான்மை எண்ணிக்கையில் கத்தோலிக்கர் அங்கு இருந்தாலும் கத்தோலிக்கப் பாதிரியார் நாட்டாண்மையாக நான்கரை ஆண்டுகள் அருள்மிகு அம்மன் கோயிலுக்குச் செல்லும் ஒரே ஒரு சாலையை மறைத்துத் தடுப்பு வேலி அமைத்தார் என்றால்...
478 ஆண்டுகளுக்கு முன்பு சைவர் மட்டுமே வாழ்ந்த மன்னார்த் தீவில் போர்த்துக்கேயப் படையுடன் வந்து நாட்டாமை காட்டிய சவேரியாரே, Mannar Inquisition நடத்திய சவேரியார் கொடுத்த துணிவே....
2009 போர் முடிவு கொடுத்த துணிவே...
கத்தோலிக்க ஆக்கிரமிப்பு மேலாண்மைக்குக் காரணம்.
தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பியும் சண்டப் பிரசண்டன்.
பாலியாறு நிலதாரி பிரிவில் வாழ்கின்ற 270 குடும்பங்களும் 2015ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு ஒற்றுமையாக வாக்களித்தார்கள்.
நான்கரை ஆண்டுகளாக வழிபாட்டு உரிமைத்தடை உள்ளதே ... சைவக் கோயிலுக்குச் சைவர்களே போக முடியவில்லையே.... தடையை நீக்குவோம் சாலையைத் திறப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எவராவது வந்தாரா.... விசாரித்தாரா... தடையை நீக்க முயற்சித்தாரா....
மன்னார் மாவட்டத்தில் வாழ்கின்ற சைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பேச எவரும் இல்லை. அவர்களுடைய அடிப்படை வழிபாட்டு உரிமையை நிலைநாட்டத் தலைவர் ஒருவரும் இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த செல்வம் அடைக்கலநாதன், சாரள்சு நிர்மலநாதன் இருவரும் கத்தோலிக்க பாதிரியாருக்குக் கொடுத்த துணிவே... ஆதரவே... சைவர்களின் அடிப்படை வழிபாட்டு உரிமையைத் தடுத்தது.
மன்னார் மாவட்டத்தில் சைவர்களுக்கு நாடாளுமன்றத் தலைமை வேண்டும். அந்தத் தலைமையைக் கொடுக்க வல்லோர் சைவத்திரு தருமகுமாரக் குருக்கள் அறிவித்த ஒன்பது வேட்பாளர்களே.
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை மன்னார்ச் சைவர்களுக்கு விடிவு தரும்.
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைப்போம். கடுமையாக உழைப்போம். உழைப்பின் வாரா உறுதிகள் உண்டோ?
சோர்வின்றி உழைக்க. தளர்வின்றி முயல்க. மன்னார் மாவட்டத்தில் சைவ நெறியை நசுக்க முயல்வோர் புறமுதுகு காட்டி ஓடுமாறு உழைக்க.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். குறள் 620.
தமிழ்தேசிய சைவ மக்கள் பேரவையின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியே இலங்கையின் சைவ சமய வரலாற்றில் திருப்புமுனை.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தோராயமாக 50,000 சைவக் குடும்பங்கள். அவர்களிடம் நீதி கேட்போம்.
செல்வோம் வீடு வீடாக. வெல்வோம் வாக்குகளை.
நாளை நமதே
வெற்றி நமதே
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
No comments:
Post a Comment