Monday, May 25, 2020

வன்னித் தேர்தல் மாவட்டம்

எவரெசிற்று (Everest) மலையின் உச்சியை அடைவேன்
விடாது முயல்வேன் வெற்றி எனக்கே
என்றவர் எட்மண்டு இல்லாரி (Hilary)

உச்சியை அடைந்தார் 
வெற்றியை அடைந்தார் 
வரலாற்றில் வாழ்கிறார்.

வண்டி மாவட்டத்தில் சைவர் வேட்பாளர் ஆவோம்
சைவத்தின் பெயரில் வெற்றி பெறுவோம்
தவத்திரு தருமராமக் குருக்கள் தலைமையில் சைவ குருமார் ஒன்றுகூடினர்

விளைவு 
சைவத்திற்கு வெற்றி முகம்
தமிழுக்கு வெற்றி முகம்

ஐங்கரன் சர்மா தலைமையில் 
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை 
வன்னி மாவட்டம் முழுவதற்கும் வேட்பாளர்.

எட்மண்டு இல்லாரிக்கும் ஐங்கரன் சர்மாவுக்கும் வேறுபாடில்லை. இருவரும் வரலாற்று நாயகர்.

வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் பேரவையின் எதிர்காலத்தைத் தொண்டர்களே தீர்மானிக்கின்றனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 
2015 நாடாளுமன்றத் தேர்தலில்

20,965 வாக்குகள் (13%) பெற்ற சுதந்திரக் கட்சி கூட்டணிக்கு ஓர் உறுப்பினர்
39,513 வாக்குகள் (24%) பெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு ஓர் உறுப்பினர்
89,886 வாக்குகள் (54%) பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நான்கு உறுப்பினர்கள்

13,535 வாக்குகள் (8%) பெற்று ஏனையோர் தோல்வி அடைந்தனர்
876 வாக்குகள் (0.5%) பெற்ற மக்கள் விடுதலை முன்னணி தோல்வியடைந்தது

229,205 வாக்காளர்களுள் 164,775 வாக்காளர்களே (71.89%) வாக்களித்திருந்தனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில்
2020 நாடாளுமன்றத் தேர்தலில்

287,013 வாக்காளர்கள்

119,811 வவுனியா மாவட்டத்தில் வாக்காளர் தொகை
88,842 மன்னார் மாவட்டத்தில் வாக்காளர் தொகை
78,360 முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர் தொகை

162,496 சைவ வாக்காளர் (58%) வன்னி தேர்தல் மாவட்டத்தில்

83,867 சைவ வாக்காளர் (70%) வவுனியா மாவட்டத்தில்
22,210 சைவ வாக்காளர் (24%) மன்னார் மாவட்டத்தில்
56,419 சைவ வாக்காளர்(72%) முல்லைத்தீவு மாவட்டத்தில்

வன்னி மாவட்டம் முழுவதும் தோராயமாக 50 ஆயிரம் சைவக் குடும்பங்கள்.

எட்மண்டு இல்லாரி எவரெசிற்றில் ஒவ்வொரு கல்லாக ஒவ்வொரு அடியாக ஏறத்தாழ 60 ஆயிரம் அடிகளை எடுத்து வைத்தார். பனி சறுக்கி அதல பாதாளத்தில் விழுந்த நேரங்கள் உண்டு. 

முன்பு விழுந்த பொழுதெல்லாம் மீண்டு எழுந்தவன் தானே நீ என மலைக் கற்கள் அவரை உற்சாகித்தன. 

கால்கள் கற்களில் இடறிய போதெல்லாம் கற்கள் அவரிடம் சொல்லின, நாங்கள் தடைக்கற்கள் அல்ல மலை ஏறுவதற்குப் படிக் கற்கள்.

தில்லியில் முதலமைச்சரான ஆம் ஆத்மிக் கட்சியின் தலைவர் அரவிந்தர் கெச்சிரவால் தேர்தலில் வேட்பாளராகி, தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றார் நடந்து சென்றார் கைகூப்பி வணங்கினார் வாக்களியுங்கள் எனக் கேட்டார்.

வன்னி மாவட்டத்தில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சத்தியலிங்கம் ஏறி இறங்காத வீடு இல்லை. அதனால் அவர் செருப்புகள் தேய்ந்தன. மூன்று நான்கு சோடிகள் செலவாயின.

வன்னி மாவட்டத்தில் ஒரு வீட்டில் இருந்து அடுத்த வீட்டுக்கு நடந்தால் செருப்புகள் தேயாதா. கூப்பிடு தூரத்தில் கூட அடுத்த வீடு இல்லை.

ஐம்பதினாயிரம் வீடுகளுக்கும் செல்லாமல் வெற்றி இலக்கை அடையலாமா?

ஒவ்வொரு கல்லாக ஏறாமல் எட்மண்டு இல்லாரி எவரெசிற்றை அடைந்திருக்க முடியுமா?

தொடர்ச்சியாக நான் தரும் தகவல்கள் 
அந்தத் தகவல்களை உங்கள் அறிவின் துணையுடன் திட்டமாக்குக. 
திட்டத்தைச் செயலாக்கத் தொண்டர்களை நிலதாரி பிரிவு தோறும் அமைக்க.

ஒவ்வொரு சைவரின் வீட்டுக்கும் சிவக் காவலர் ஒருவர் திருநீறு எடுத்துக்கொண்டு 
கோடரிச் சின்னத்தின் படத்தை எடுத்துக் கொண்டு வேட்பாளரின் படங்களை எடுத்துக்கொண்டு 
ஆகக் குறைந்தது மூன்று முறையாவது செல்லவேண்டும்
வீடுவீடாகச் செல்லவேண்டும் 
சைவ வேட்பாளருக்கு வாக்குக் கேட்க வேண்டும்

எட்மண்டு இல்லாரிக்கு எவரெசிற்றின் உச்சி எட்டும் உயரத்தில் இருந்தது.

அரவிந்தர் கெச்சரிவாலுக்குத் தில்லி முதலமைச்சர் பதவி எட்டும் தொலைவில் இருந்தது. நூறாண்டுப் பராம்பரியம் கொண்ட காங்கிரசுக் கட்சியை வீழ்த்தினார் வலிமைமிக்க பாரதிய சனதாக் கட்சியை வீழ்த்தினார் முதலமைச்சரானார்.

சிவக் காவலர்களே
சைவத் தொண்டர்களே
திருநீற்று நெற்றியர்களே

உங்களுக்காக ஐம்பதினாயிரம் சைவ வீடுகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன 

செல்லுங்கள் வெல்லுங்கள்

வெற்றி நமதே
நாளை நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை

No comments: