இலங்கை வட மாகாணம் மன்னார் மாவட்டம்,
54% கிறித்தவர்
29% சைவர்
17% முகமதியர்
மாவட்டச் செயலராகப் பணிபுரியும் திரு சி ஏ மோகன ராசன் 2020 யூலாய் ஆறாம் நாள் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இப்பொழுது வடமாகாணத்தின் வேளாண்மைத் திணைக்களத்தின் செயலாளர் திரு சிவபாதசுந்தரம்.
திரு மோகனராசு ஓய்வு பெற்றதும் திரு சிவபாதசுந்தரம் மன்னார் மாவட்டச் செயலாளராகப் பதவி ஏற்க அமைச்சரவை தீர்மானித்தது.
யாருடைய எந்தந் தலையீடும் இல்லாமல் மூப்பின் அடிப்படையிலும் பணித் திறமையின் அடிப்படையிலும் திரு சிவபாதசுந்தரம் அப்பதவிக்கு உரியவர் என அமைச்சரவை தீர்மானித்தது.
கத்தோலிக்கர் பெரும்பான்மையாக வாழும் மன்னார் மாவட்டத்திற்குச் சைவர் ஒருவர் மாவட்டச் செயலாளரா?
வங்காலையைச் சேர்ந்தவர் திருமதி அன்னம்மா குரூஸ் ஸ்டான்லி டிமெல். வடமாகாண சபையின் தலைமையகத்தில் பதவி.
திருமதி அன்னம்மா குரூஸ் முன்பு மன்னார் பிரதேச செயலாளராகப் பதவி வகித்தவர். 2010இல் அவர் காலத்தில் குகைக்கோயில் ஆக இருந்தது மாந்தைச் சந்தித் தேவாலயம். அக் குகைக்கோயிலை உலூர்தம்மாள் தேவாலயமாகக் கட்ட ஆவன செய்தவர்.
இதனால் சைவர்களுக்கும் கத்தோலிக்கருக்கும் இடையே முறுகல் நிலை உருவானது 2019 மகா சிவராத்திரி நாளன்று திருக்கேதீச்சர வளைவை உடைப்பதற்கு உலூர்தம்மாள் தேவாலய அமைப்பும் காரணம்.
அமைச்சரவை தீர்மானித்த திரு சிவபாதசுந்தரம், சைவ சமயத்தவர். மன்னார் மாவட்டத்திற்குச் சைவர் ஒருவர் செயலாளராக முடியாது. கத்தோலிக்கப் பெரும்பான்மை மாவட்டம். எனவே வங்காலையைச் சேர்ந்த திருமதி அன்னம்மா குரூஸ் தன்னை மாவட்டச் செயலாளராக நியமிக்குமாறு அரசுக்கு மன்னார் ஆயர் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் மூலம் அழுத்தங்களை கொடுத்து வருகிறார்.
இத்தகைய அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என அரசுக்குச் சொல்லவேண்டிய கடமைப்பாடு சைவர்களுக்கு உண்டு.
திருமதி அன்னம்மா குரூஸ் மாவட்டச் செயலாளர் ஆயின் திருக்கேதீச்சரம் கோயிலின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பார். மன்னாரின் ஏனைய சைவத் தளங்களை அழிப்பதற்கு உடந்தையாக இருப்பார் என்ற அச்சம் மன்னாரிலுள்ள சைவர்களுக்கு உண்டு.
83% சைவர்கள் வாழும் மாகாணம் வட மாகாணம். ஆளுநரோ கத்தோலிக்கரான திருமதி சார்ல்ஸ்.
75% சைவர் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக மாவட்டச் செயலாளராக இருந்தவர் கிறித்தவரான திருமதி கேதீசுவரன்.
இவருடைய கணவர் கிறித்தவ மத பிரசாரகர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காளான்கள் போல் முளைத்த சபைகள் மத மாற்றத்தில் ஈடுபடத் துணையாக இருந்தவர் திருமதி கேதீசுவரன்.
இந்துபுரத்தில் சிவன் கோயிலுக்குள் நடுவே கிறித்தவர் ஒருவர் வீடு கட்டுவதற்கு ஆதரவு கொடுத்தவர் திருமதி கேதீசுவரன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மாற்றலாகி, திருமதி கேதீஸ்வரன், 85% சைவர்கள் வாழும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் சைவர்கள் தலையில் அடித்துக்கொண்டு கவலையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
சைவப் பெரும்பான்மை மாகாணத்திற்குக் கத்தோலிக்கர் ஒருவர் ஆளுநர்.
சைவப் பெரும்பான்மை மாவட்டங்களுக்குக் கிறித்தவர் ஒருவர் மாவட்ட செயலாளர்.
வவுனியா சைவப் பெரும்பான்மை மாவட்டம். அங்கே மாவட்டச் செயலாளராக சைவர் கிறித்தவர் புத்தர் முகமதியர் என அனைத்துச் சமயத்தாரும் பதவியில் இருந்து இருக்கிறார்கள்.
சைவப் பெரும்பான்மைக் கிளிநொச்சிக்கு ஒரு நீதி யாழ்ப்பாணத்துக்கு ஒரு நீதி வவுனியாவுக்கு ஒரு நீதி முல்லைத்தீவுக்கு ஒரு நீதி என விதிகள்.
கிறித்தவப் பெரும்பான்மை மன்னாருக்குத் தனி நீதி அமையலாமா?
சிங்கள புத்த பெரும்பான்மை தமிழரை அடக்கி ஒடுக்குகிறது. தமிழர்மீது மேலாதிக்கம் செலுத்துகிறது என உலக அரங்குகளில் குரல் கொடுக்கும் மன்னார் ஆயர் இராயப்பு அவருடைய வழித்தோன்றல் யாவரும் பெரும்பான்மை அடக்குமுறையை எதிர்க்க வேண்டியவர்கள் மன்னாரில் பெரும்பான்மையின் அடக்குமுறையை ஆதரிக்கிறார்கள்.
இரட்டை வேடதாரிகள் அவர்கள். இயேசுபிரான் மலைப் பிரசங்கத்தில் சொன்னதுபோல ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் அவர்கள். அந்தோ பரிதாபம்.
கிறித்தவப் பெரும்பான்மை மாவட்டத்திற்குச் சைவர் ஒருவர் மாவட்டச் செயலாளராக முடியாது என்பது தவறான முன் உதாரணத்தை கொடுத்துவிடும்.
அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமையத் திரு சிவபாதசுந்தரம் அவர்களே மாவட்டச் செயலாளராகப் பதவி ஏற்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது சைவர்களின் தலையாய கடமை அல்லவா?
No comments:
Post a Comment