Monday, May 25, 2020

மடு பிரதேச செயலகம்

தாழ்வான பகுதி மடு 
நீர் நிலைகளான ஆற்றிலோ குளத்திலோ கோடையில் நீர் தேங்கி நிற்கின்ற பகுதியே மடு.

நீர் தேங்கிய குட்டைக்குள் முதலை 
குட்டையில் நீர் குடிக்கச் செல்லும் யானை 
யானையைக் கவ்விப் பிடித்து இழுக்கும் முதலை.

அருணகிரிநாதர் திருப்புகழில் மடு என்ற சொல்.
....மடு இடை போய்ப் பரு முதலையின் வாய்ப் படு மதகரி..

மருத மரங்கள் சூழ்ந்த மடு மருதமடு.
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்
1800 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணகிக்குக் கோயில் கட்டிய மருதமடு
500 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகேயர் திருக்கேதீச்சரத்தை இடித்தனர் 
கௌரி அம்பாளை எடுத்துச் சென்று மருத மடுவில் அடியார் பாதுகாப்பாக வைத்திருந்தனர் 
இன்றும் அங்கு இருப்பதாகக் கூறுவர்.

இன்றும் மருதமடு சிவபூமி
மடு பிரதேச சபை எல்லைக்குள் 40% சைவர்.
ஆனாலும் மடுவைக் கிறித்தவ நிலமாகவே கொள்வர் அங்கு வாழும் 32% கிறித்தவர். 
அருள்மிகு பிள்ளையார் கோவிலை அமைத்தாலும் அரசு ஆதரவுடன் அகற்றுவர்.

மடு சிவபூமியாகத் தொடர வேண்டும் 
அருள்மிகு கண்ணகை அம்மன் கோயிலைக் கட்ட வேண்டும் 
அங்கே கயவாகு மன்னனுக்குச் சிலை அமைக்க வேண்டும்
கயவாகு மன்னனைப் போற்றிய சேரன் செங்குட்டுவனுக்கும் சிலை அமைக்க வேண்டும்.
அருள்மிகு கௌரி அம்பாள் திருக்கோயில் வழிபாடு சிறக்க வேண்டும்.

இக்காலத்தில் மடு பிரதேச செயலகத்தில் 
40% சைவர்களுக்கு இல்லாத வசதி 
32% கிறிஸ்தவர்களுக்கு உண்டு 
சைவர்களுக்கு நாடாளுமன்றத் தலைமை இல்லை
கிறித்தவர்களுக்குச் செல்வம் அடைக்கலநாதன் சாள்ஸ் நிர்மலநாதன் உதவக் காத்திருக்கிறார்கள்.

முல்லைத்தீவு சைவர்களின் வாக்குகளைப்பெற்று தேர்வான சிவமோகனோ சாந்தியோ மடுவுக்கு வரார். இதுவரை வந்தார்களோ அறியேன். 

சைவ விவகார அமைச்சரான மனோ கணேசன் மன்னாருக்கு வருவதை 
மன்னார் ஆயர் 
செல்வம் அடைக்கலநாதன் 
சாள்ஸ் நிர்மலநாதன் 
ஆகியோர் தடுத்தார்கள் என மனோ கணேசன் சூசகமாககக் கூறியிருக்கிறார்.

சிவமோகனோ சாந்தியோ மனோ கணேசனை அழைத்து வந்தார்களா? 

செல்வம் அடைக்கலநாதனை நிர்மலநாதனை ஆயரை மீறி சிவமோகனால் சாந்தியால் மனோ கணேசனால் மன்னாரில் எதையும் செய்ய முடியாது.

நாடாளுமன்றத்தில் மன்னாருக்குச் சைவத் தலைமை வேண்டும் அத்தகைய தலைமையால் மன்னாரின் சைவ மக்கள் பயன்பெறுவார்கள் 
திருக்கேதீச்சர வளைவை நிலையாகக் கட்டலாம் 
மடுவில் அருள்மிகு பிள்ளையார் கோயிலைக் கட்டலாம்

மன்னார்ச் சைவர்கள் சிவமோகனுக்கோ சாந்திக்கோ வாக்களித்தால், மடுவில் அருள்மிகு பிள்ளையார் அமைந்தால் என்ன? அமையாவிட்டால் என்ன? என வாழா இருந்துவிடுவார்கள் திருக்கேதீச்சர வளைவு அமைந்தால் என்ன? அமையாவிட்டால் என்ன? என வாழா இருந்துவிடுவார்கள்.

ஐங்கரன் சர்மா தலைமையிலான தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பாளர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினாலே மன்னார் சைவ மக்களுக்கு விடிவு கிட்டும். 

மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலகப்பிரிவில் 13284 மக்கள். இவர்களுள் 5288 சைவர் 4224 கிருத்தவர் 3 ஆயிரத்து 332 முகமதியர் 540 புத்தர்.

மடு பிரதேச செயலகப் பிரிவில் 17 நிலதாரி பிரிவுகள் அவை ஒவ்வொன்றிலும் வாழ்கின்ற சைவக் குடும்பங்களின் எண்ணிக்கைப் பட்டியலைக் கீழே தந்துள்ளேன்.

மடு 16
பெரியபண்டிவிரிச்சான்மேற்கு 109
பெரியபண்டிவிரிச்சான்கிழக்கு 62
பாலம்பிட்டி 272
கீரிசுட்டான் 29
இரணைஇலுப்பைக்குளம் 362
விளாத்திகுளம் 115
பரசன்குளம் 173
காக்கையன்குளம்மேற்கு 0
காக்கையன்குளம்கிழக்கு 0
கல்மடு 124
மழவராயன்கட்டைஅடம்பன் 113
பனைவெட்டுவான் 69
பூமலர்ந்தன் 182
தேக்கம் 19
மதகிராமம் 0
பெரியமுறிப்பு 0
மொத்தம் 1645

 வீடு வீடாகச் செல்வோம் 
திருநீறு ஒவ்வொருவர் நெற்றியிலும் பூசுவோம் கோடரிச் சின்னம் கொண்ட படம் கொடுப்போம் 
வேட்பாளர் பட்டியலைக் கொடுப்போம் 
வாக்கு விருப்பு வாக்கு இடுவது தொடர்பான விளக்கங்களைக் கொடுப்போம் 
வாக்கு வாக்காகச் சேகரிப்போம்.

கனிவும் இனிமையும் பெருகுவதாக 
அன்பும் அறனும் செழிப்பதாக 
மன்னார் சிவபூமி 

வெல்வோம் வெல்வோம் 

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

No comments: