Monday, May 25, 2020

பாலாவியும் யாழ்ப்பாணத்தானும்

பாலாவி. 
எது பாலாவி?
இதன் பெயர் மாந்தைக் குளம்.

பாலாவி எங்கே இருக்கிறது எனத் தேடிக் கண்டுபிடியுங்கள்.
மாந்தை குளத்தைப் பாலாவி என உரிமை கோராதீர்கள்.

மன்னார்க் கத்தோலிக்கர் வெளியிட்ட சிறிய நூல்.
1962 இல் வெளியிட்ட நூல்.

கத்தோலிக்கருக்கு உரிய பிரதேசம் மாந்தை எனப் பொய்ச் செய்திகளைத் திரட்டி எழுதியுள்ளார்கள்.

மன்னாரில் மந்தையில் முசலியில் நானாட்டானில் மடுவில் வாழ்கின்ற கத்தோலிக்கரும் சைவரும் இணக்கமாக வாழ்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்களே 
சிறப்பாக மன்னார் அரச அலுவலகங்களில் பணிபுரிவோரே மாந்தைக் குளத்தைப் பாலாவி எனக் கூறுகிறார்கள்.

மாந்தைச் சந்தியில் பல்லாயிரம் ஆண்டுகளாக உலூர்தம்மாள் தேவாலயம் இருந்து வருகிறது.

திருக்கேதீச்சரம் என ஒரு கோயில் இருந்ததா? 
அவ்வாறு இருந்ததாயின் அது மாந்தையில் இருந்ததா?

இவ்வாறெல்லாம் கத்தோலிக்கர் கூறிவருகிறார்கள்.
வெளியீடுகளை அச்சிட்டு மன்னார் மக்களிடையே பொய்யையும் புரட்டையும் பரப்பி வருகிறார்கள்.

பெரியபுராணத்தில் திருக்கேதீச்சரம் என்ற தலைப்பில் சென்னையிலிருந்து வந்த கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன், தலைமன்னார் அரசுப் பள்ளியில்11.3.2020 அன்று காலை உரையாற்றுகிறார்.

மாந்தை உலூர்தம்மாள் தேவாலயத்துக்கு உரியது. திருக்கேதீச்சரம் கோயிலை அடாத்தாக அங்கு புதிதாகக் கட்டுகிறார்கள். இவ்வாறுதான் நாம் அறிகிறோம். எமக்கு வருகின்ற வெளியீடுகள், செய்திமடல்கள், அறிவிப்புகள் யாவும் இத்தகைய பின்னணியைக் கூறுகின்றன.

இன்றைய நடன இசை உரையைக் கேட்ட பின்னரே, இராவணன் காலத்தது திருகேதீச்சரம், வரலாற்றுப் புகழ் வாய்ந்தது திருக்கேதீச்சரம் என அறிகிறோம் என்றனர் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த கத்தோலிக்க அருள் நங்கையர், அருட் தந்தையர், கத்தோலிக்கரான ஆசிரியர் மற்றும் பெற்றோர்.

பொய்யான வரலாறு, புரட்டிய செய்திகள், தொடர்ச்சியாகப் பொய்யைச் சொல்லிக் கொண்டிருந்தால் அதுவே உண்மையாகிவிடும் என்ற நோக்கம், மூளைச்சலவை வழியாக, மன்னார்க் கத்தோலிக்கர்களை மன்னார்ச் சைவர்களுக்கு எதிராக, சிவபூமி வரலாற்றுக்கு எதிராகக் திருப்பிவிட்டு கொண்டிருக்கின்றன கத்தோலிக்கத் தலைமைகள்.

வவுனியாவின் தினப்புயல் ஆசிரியர் மன்னார் ஆயரைச் செவ்வி காண்கிறார். பலவகையான வினாக்களைத் தொடுக்கிறார்.

அவற்றுள் ஒரு வினா: சிவ சேனைத் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் மன்னார் சிவபூமி எனக் கூறி வருகிறார் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஆயரின் விடை: அவ்வாறான ஒரு வரலாறு இல்லை. எனக்குத் தெரியாது.

மன்னார் மாவட்டத்தின் ஆயர் தொடக்கம் அடிமட்டத் தொண்டன் வரை மன்னார் முழுவதுமே, ஐந்து பிரதேசச் செயலர் பிரிவுகளுமே கத்தோலிக்கரின் பூமி, கத்தோலிக்க மறைமாவட்டம் என்ற மாயையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

சைவ மக்களிடம் சொல்கிறார்கள்: நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளுங்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் அலுவலர்கள் மற்றவர்கள் சொல்வதை ஏற்காதீர்கள். மத நல்லிணக்கத்தைக் குலைப்பவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வருபவர்களே.

Mannar District Welfare Association மன்னார் மாவட்ட நன்மை பேண் சங்கம் 08.01.1963 திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்கள். அதில் வரும் ஒரு பந்தியில்:

You alien from Jaffna, keep your hands off our sacred soil. We Hindus, Saivaites, Catholics, Muslims and Buddhists of Mannar will preserve our sacred institutions without allowing any more of your bulldozing away the archeological treasures of or land... We are worried about you - for we know what happened to the poor Arab when the camel started butting in.

தமிழாக்கம்: யாழ்ப்பாணத்திலிருந்து வந்த வெளிநாட்டவனே. எங்களது இந்தப் புனித பூமியில் கை வைக்காதே. இந்துக்கள் சைவர்கள் கத்தோலிக்கர்கள் முகமதியர்கள் புத்தர்கள் யாவரும் இங்கே இந்த மண்ணில் நிலைகொண்டுள்ள எங்கள் புனித அமைப்புகளை நாங்கள் பாதுகாப்போம். மன்னாரின் தொன்மைச் செல்வக் களஞ்சியங்களை நீங்கள் உடைத்தெறிய அழித்தொழிக்க விடமாட்டோம்.
உன் ஊடுருவல் எங்களுக்குக் கவலை. ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த ஏழை அரபியின் கூடாரத்தில் ஊடுருவிய அந்த ஒட்டகம் போல் உன்னைப் பார்க்கிறோம்.

மன்னார் கத்தோலிக்கர் பிரதேச வாத வித்துகளை அன்றே இட்டார்கள். இன்றைய சைவர்களுள் மிகச் சிலர் அதை ஏற்று விழுங்கினார்கள்.

ஐங்கரன் சர்மா யாழ்ப்பாணத்தவர். பூசை செய்து பிழைக்க வந்தவர். மன்னாரில் தேர்தலில் அவர் நின்றால் அவரை யாழ்ப்பாணத்துக்கு ஓட ஓட விரட்டுவோம். இவ்வாறு சைவ அன்பர்கள் என்னிடம் கூறினார்கள்.

கத்தோலிக்கரின் முனைந்து பரப்பும் யாழ்ப்பாண எதிர்ப்புப் பிரதேசவாதம் சைவர்களையும் பாதித்திருக்கிறது.

நேற்றைய ஆயர் இராயப்பு யாழ்ப்பாணத்தவர்.நேற்றைய குருமுதல்வர் பாலசுந்தரம் யாழ்ப்பாணத்தவர். குருத்துவக் கல்லூரி முதல்வர் யாழ்ப்பாணத்தவர். இவர்கள் மன்னாருக்குப் பூசை செய்ய வந்தவர்கள்.

அவர்கள் மீது ஏறி விழ முடியாமல் அவர்களின் கால்களைக் கழுவிக் கொண்டு இருக்கும் சில சைவர்கள் இவ்வாறு பிரதேச வாதம் பேசுகிறார்கள்.

மன்னார் மாவட்டத்தின் பத்தாயிரம் ஆண்டு கால வரலாற்றில், சைவன் ஒருவன் (பாண்டியன் ஆயினென் சோழன் சேரன் யாழ்ப்பாணத்தான் ஆயினென் திருகோணமலையான் ஆயினென், பொலநறுவை தம்பதெனியா குருணாகலை சீதாவாக்கைச் சைவன் ஆயினென் மன்னன் ஆயினென் குடிமகன் ஆயினென் வணிகன் ஆயினென்), மன்னார் மாவட்டத்தின் தொன்மைச் செல்வக் களஞ்சியங்களை உடைத்தான் அழித்தான் என்ற வரலாறு எங்காவது உண்டா?

மோதகம் ஆறு தொடக்கம் பாலி ஆறு வரை நீண்ட மன்னார்க் கரையோரப் பரப்பில் உள்ள சைவத் திருக்கோயில்களை உடைத்தவர்கள் தொன்மைச் செல்வக் களஞ்சியங்களை அழித்தவர்கள் கத்தோலிக்கர் என வரலாற்றுப் பதிவுகள் உள. 

478 ஆண்டுகளாக இடைவிடாது சைவத் தொன்மங்களை அழிப்பதில் கத்தோலிக்கர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கேதீச்சரம் திருக்கோயிலை உடைத்து அழித்த மண்ணோடு மண்ணாக்கி மேடாக்கிய வரலாறு கத்தோலிக்கருக்குரியது. 

1700 ஆண்டுகளாகத் தொடர்ந்த கயவாகு மன்னன் கட்டிய அருள்மிகு கண்ணகை அம்மன் கோயிலை உடைத்தே மடுவில் கிறித்தவத் தேவாலயம் அமைத்தனர்.

வெளி நாட்டவரான யாழ்ப்பாணத்தான் மன்னார் வருகிறான். மன்னாரின் தொன்மைச் செல்வக் களஞ்சியங்கள் உடைக்கிறான் அழிக்கிறான் என வாய்கூசாமல் பொய்யும் புரட்டும் பேசுகிறார்களே கத்தோலிக்கர்.

மன்னார்ச் சைவர்களுக்கு நாடாளு மன்றத் தலைமை இருந்தால் இந்த கேடு சூழுமா?

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை நாடாளுமன்றத் தேர்தலில் ஐங்கரன் சர்மா தலைமையில் போட்டியிடுகிறார்கள்.

500 ஆண்டுகளுக்கு முன் ஊடுருவிய ஆபிரகாமிய அன்னியர்கள், ஏழை அரபியின் கூடாரத்துக்குள் ஊடுருவிய ஒட்டகம் ஆனவர்கள், மண்ணின் மக்களை மண்ணின் மரபுகளை மதிப்பார்ந்த தொன்மைச் செல்வங்களை உடைக்கவும் அழிக்கவும் முனைவதைத் தடுப்பதற்குச் சைவ நாடாளுமன்றத் தலைமை காலத்தின் கட்டாயம்.

விடுதலைக்குப் பின்னான இலங்கையின் வரலாற்றில் நாடாளுமன்றத் தேர்தலில் சைவ சமயக் கட்சியினராகப் போட்டியிடுவோர் ஐங்கரன் சர்மா தலைமையிலான வேட்பாளர்கள்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 50,000 சைவ வீடுகளில் வாழ்கின்ற வாக்காளர்களுக்கு மாபெரும் திருநீற்றுக் கடன் உண்டு.

சைவ வாக்காளர்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய கடமையும் தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவைக்கு உண்டு.

வீடு வீடாகச் செல்வோம்
வாக்கு வாக்காகச் சேகரிப்போம்.
வெல்வோம் வெல்வோம்

நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

No comments: