Monday, May 25, 2020

சைவ சமயத்துக்காக ஒன்று கூடுங்கள்

இந்தியாவின் பிரதமர் மோடி.
இந்து எழுச்சியின் வடிவமாக மோடி.

இந்தியாவில் இந்து இயக்கங்கள் கூறுகளாகப் பிரிந்து உள.
ஒலிக்கற்றையின் நிறக் கூறுகளைப் போல.
வானவில்லின் ஏழு வண்ணங்களை போல.

பல கூறுகளாகப் பிரிந்து இருந்தாலும் பிரதமர் மோடிக்குப் பின்னால் அவை கை கோர்த்து நிற்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியின் வெற்றிக்கு இந்து இயக்கங்களே அடித்தளம்.

மராட்டியத்தில் சிவ சேனை மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று மோடியிடம் பிரிந்து வேறு ஒரு கூட்டில் ஆட்சியமைத்தாலும் இந்துத்துவக் கொள்கையைக் கைவிடவில்லை. 

அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வேண்டும் 
முத்தலாக் சட்டம் ஒழியவேண்டும் 
காஷ்மீர் இந்தியாவுடன் வேறற இணையவேண்டும் 
இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான குடி சட்டம் கொண்டு வரவேண்டும் 

இத்தகைய இந்து எழுச்சிக் கோரிக்கைகளிலிருந்து சிவ சேனை விலகவில்லை.

இலங்கையில் முதல் முதலாகச் சைவ சமயத்தை முன்னெடுக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் தேசிய மக்கள் பேரவை எழுந்துள்ளது.

சைவர்களாகிய நாங்கள் பல்வேறு கூறுகளாகப் பிரிந்து இருக்கிறோம். ஒளிக்கற்றை நிறக் கூறுகள் போல, வானவில்லில் ஏழு வண்ணங்கள் போல.

சைவ சமயத்தவரின் கட்சி
இலங்கையின் வரலாற்றில் 
முதன்முதலாகச் சைவருக்குக் கட்சி.

எங்களிடை உள்ள 
பிளவுகள் அப்படியே இருக்க, 
பிரிவுகள் நீங்காது இருக்க 
உறவுகள் கெடாது இருக்க
சைவ சமயத்தின் பின்னால் நிற்பதானால்
சைவ சமயத்தை அழிப்பவரை எதிர்கொள்ள வேண்டுமானால்
இலங்கை சிவபூமி என்ற நோக்கம் இருக்குமானால்

வேற்றுமைகளை மறப்போம்
பிளவுகளைக் கை விடுவோம்
பிரிவுகளை ஒதுக்கி வைப்போம்

சைவ உணர்வு தலை தூக்க
சைவரின் இணைப்பு இறுக
சைவர்கள் ஒன்றாகவும் என்ற முழக்கத்துடன்

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையை ஆதரிப்போம்.
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை வேட்பாளர்கள் வெற்றி பெற உழைப்போம்.
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை வேட்பாளர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்து சைவத்துக்குக் குரல்கொடுக்க வாக்களிப்போம்.

வேட்பாளரின் குறை நிறைகளைச் சைவர்கள் எடுத்து நோக்கும் நேரம் இதுவல்ல.
அந்தப் பணியைச் சைவசமயத்தின் எதிரிகளுக்கு விட்டுவிடுவோம்.
மதமாற்றிகள், கிறித்தவ முகமதிய மேலாதிக்க வாதிகள் மேற்கொள்ளும் பணியைச் சைவர்களே செய்யலாமா?

வேம்பையும் பாம்பையும் வழிபடும் உங்களுக்கு விவேகானந்தர் சிலை எதற்கு? அந்தோனியார் சிலை அங்கேயே இருக்கட்டும் எனச் செட்டிகுளத்தில் சொன்னவர் கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்.

திருக்கேதீச்சர வளைவை உடைத்தவர்களைக் காவல்துறை தளையிட நீதிமன்றத்தில் பிணை எடுத்தவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்.

அத்தகைய வேட்பாளருக்கோ அத்தகைய வேட்பாளர்களின் செயல்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு அவர்களையே மீண்டும் தேர்தல் களத்தில் இறக்கி இருக்கும் கட்சிகளுக்கோ நீங்கள் வாக்களித்தால் 

காலப்போக்கில்  சைவர்கள் வன்னி மாவட்டங்களில் துன்புற்று துயருற்று அழுத கண்ணீருடன் அல்லலுற்று ஆற்றாது வெம்பி விதிர்விதிர்த்துப் புலம்புவார்கள்.

எங்களுக்குள் பிளவுகள் அப்படியே இருக்கட்டும். 
ஆனாலும் தேர்தல் களத்தில் சைவ வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம் என உறுதி எடுக்குமாறு கூறுகளாகப் பிரிந்து இருக்கும் சைவ உலகத்தை மன்றாடிக் கேட்கிறேன்.

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் சைவ உலகம் வெற்றி பெற்றதாகக் கருதுங்கள்.

கும்பிடும் நோக்கத்திற்காகக் கைகள் ஒன்றாவது போல்
நடக்கும் நோக்கிற்காகக் கால்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருவதுபோல்
சுவைக்கும் நோக்கிற்காக நாக்கைக் கடிக்காத பற்களைப் போல்
உண்பதற்காகச் சோற்றை அள்ள விரல்கள் ஒன்று கூடுவது போல்

வேறு வேறாக இருந்தாலும்
கூறு கூறாக இருந்தாலும்
மாறுபாடுகள் கொண்டு இருந்தாலும்

சைவ சமயத்துக்காக ஒன்று கூடுங்கள்.
இலங்கையின் பத்தாயிரம் ஆண்டு கால மரபை உடைக்க முயலும் ஆபிரகாமிய சமயங்களின் ஊடுருவலைத் தடுக்க ஒன்று கூடுங்கள்.

வரலாற்றுத் திருப்புமுனையில் சைவர்கள் ஆகிய நாங்கள் நிற்கிறோம்.

தமிழ்தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்
வரலாற்றைச் சைவ சமயத்துக்கு ஆதரவாகத் திருப்புங்கள்.

நாளை நமதே
வெற்றி நமதே 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

No comments: