Monday, May 25, 2020

தேசியத்துள் அடங்கார் கிறித்தவர்

நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் திரு சீலன் அவர்களே தமிழ்த் தேசியவாதி.

செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் ஆயர் குழுவைச் சேர்ந்தவர்.

தேஎம் = தேயம் = தேசம்.
ஈழத்தவர் இணைந்து உருவாக்கிய தமிழின் சங்க இலக்கியங்களில் 32 இடங்களில் தேஎம் என்ற சொல் வருகிறது. நாடு என்ற பொருளில் சங்கப் புலவர் சொன்னார்கள்.

56 தேசங்களைப் பட்டியலிடுவன இலக்கியங்கள்.

இலக்கியம் சொல்லும் தேசம் தரும் பொருள் வேறு.
இன்றைய அரசியலில் புழக்கத்தில் இருக்கும் தேசியம் அன்றைய தேசத்தின் மரூஉ அன்று.

ஒன்றரை நூற்றாண்டுக்கு முந்தைய ஐரோப்பாவின் பிரஞ்சுப் புரட்சி தந்த சொல்லே இன்றைய தேசியம்.

மொழி, மொழி சார்ந்த பண்பாடு, அந்தப் பண்பாடில் திளைக்கும் மக்கள், தொடர்ச்சியான வரையறுக்கக்கூடிய எல்லைக் கோடுகள் கொண்ட ஒரே நிலப்பகுதிக்குள் வாழ்வோர் தமக்கென ஆட்சியையும் கொண்டு இருப்பாராயின் அதுவே தேசியம் (nation-state, nationalism).

கிறித்தவமும் பிரெஞ்சு மொழி சார்ந்த பண்பாடுமே பிரான்சுத் தேசியத்தின் அக அடையாளங்கள். 

இன்று பிரான்சில் தேசியம் என யாரும் பேசுவதில்லை. அப்படிப் பேசுவோரும் கணிசமான தொகையில் அங்கு வாழும் முகமதியர்களைப் பிரான்சுத் தேசியர்களாகக் கொள்வதில்லை.

உருசியாவின் மொழி உருசியம். உருசியாவின் சமயம் கிருத்தவம். இவற்றை ஏற்றுக் கொண்டால் உருசியாவில் வாழலாம். முகமதிய அரபு மொழியையும் சாரியாச் சட்டங்களையும் கடைப்பிடிக்க வேண்டுமாயின், நீங்கள் அந்தச் சூழல் அந்தப் பண்பாடு அந்தத் தேசியம் உள்ள நாடுகளுக்கு செல்லுங்கள், என உருசியத் தலைவர் புட்டின், உடூமாசு என்ற உருசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். ஐந்து நிமிட நேரம் கைதட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள்.

ஆங்கிலம் இந்த நாட்டின் மொழி. கிருத்தவம் இந்த நாட்டின் சமயம். இந்த தேசியப் பண் பாட்டை ஏற்றுக்கொள்பவர்கள் இங்கே வாழலாம். ஏற்றுக் கொள்ளாதவர் வெளியேறலாம். ஆஸ்திரேலிய பிரதமர் ஓவார்டர் இக்கின்சர் நாடாளுமன்றத்தில் கூறியன இவை.

புத்த சமயத்துக்கு முன்னுரிமை என அரசியல் அமைப்புக் கூறுகிறது. இலங்கை கத்தோலிக்கக் கர்தினால் மல்கம் இரஞ்சித்தர் சொல்கிறார், நாங்கள் புத்த மதத்துக்கு இந்த நாட்டிலுள்ள முன்னுரிமையை ஏற்றுத்தான் இங்கு வாழ்வோம்.

பிரஞ்சுப் புரட்சியில் தோன்றிய தேசியம் என்ற சொல் உலகெங்கும் வழக்கு இழந்துவிட்டது. நாடுகள் பல்லினக் குழுக்களின் கூட்டாக அமைகின்றன. 

தேசியம் என்ற சொல் நாட்டு எல்லைகளுக்குள் இனங்களாக மொழிகளாக சமயங்களாகப் பிரிந்து வாழ்கின்ற மக்கள் அனைவரையும் இணைக்கின்ற சூழலையே இன்று காண்கின்றோம். 

இலங்கையில் தமிழ்த் தேசியம் இருக்கிறதா? இலக்கியத் தேசம் பிரஞ்சுத் தேசியம் எனும் சொற்களின் பொருள் கொள்ளாமல் இன்றைய நிலைமைக்கு ஏற்பப் புதிதாகப் பொருள் கொள்ள வேண்டிய சூழலில் நாங்கள் இருக்கிறோம்.

தமிழ் மொழி பேசுவோர் கொண்ட தேசியத்தை 1948இல் தந்தை செல்வா எடுத்துச் சொன்னார். சைவம் இசுலாம் கிறித்தவம் ஆகிய மூன்று சமயங்கள் தமிழ் பேசும் தேசியத்தில் அடங்கின என்றார்.

அவரது முயற்சி வரலாற்றில் புதிய முயற்சி. அதற்கு முன்பு அத்தகைய கோட்பாடோ கொள்கையோ பிரிவோ தேசியமோ இருக்கவில்லை.

மனிதம் மேலும் பிளவுபடாமல் இருக்க, பல் சமய மக்களை மொழியால் ஒன்றிணைக்க தமிழ்த்தேசியமாக்க அவர் முயன்றார். அவர் கொடுத்த தமிழ்த்தேசியப் போர்வைக்குள் அவருடைய தலைமையை ஏற்றுத் தேர்தல்களில் போட்டியிட்ட முகமதிய வேட்பாளர், வெற்றி பெற்ற பின் அவருடைய கட்சிக்குள் நிலைக்கவே இல்லை. காரியப்பர் தொடக்கம் மசூர் மௌலானா வரையில் நீண்ட வரலாறு படைத்தனர் முகமதியர்.

முகமதியர்கள் ஒருசிலர் இழைத்த தவறுகளுக்காக வடக்கு மாகாணத்தில் இருந்த அனைத்து முகமதியர்களையும் வெளியே அனுப்பினர். தமிழ்த் தேசியத்துக்கும் முகமதியருக்கும் தொடர்பு இல்லை என்ற நிலை.

1998இல் ஒலுமடுத் தீர்மானம் முகமதியர்கள் இலங்கையில் தனியான தேசியம் உடையவர்கள் என அறிவித்தது.

அவர்கள் பேசிய மொழி தமிழ். அவர்களின் வாழ்வியல் மொழி தமிழ். அவர்கள் பாட மொழி தமிழ். அவர்கள் படைத்த இலக்கிய மொழி தமிழ். அவர்களுடைய காதல் மொழியும் தமிழ். ஆனாலும் அவர்கள் தமிழர் அல்லர். தமிழ் பேசுபவர் அல்லர். 

தந்தை செல்வாவின் முயற்சிக்குக் காரியப்பரும் ஒப்பவில்லை. பிரபாகரனும் ஒப்பவில்ல. ஒலுமடு தீர்மானமும் ஒப்பவில்லை.

தமிழ் தேசியத்தில் எஞ்சி நின்றோர் சைவரும் கிறித்தவருமே.

முகமதியருக்கும் முன்பே கிறித்தவர்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து முற்றாக விலகிப்போன வரலாறு உண்டு.

நீர் கொழும்புக்கு வடக்கே வாய்க்கால் ஆறு தொடக்கம் வில்லுப்பற்று நடுவே முகத்துவாரம் ஆறு வரை நீண்ட நிலப் பகுதியில் முற்றுமுழுதாக வாழ்ந்தவர் தமிழர். சைவ சமயத்தவர். அந்த நிலத்தில் இன்றும் ஏராளமான சிவன் அம்மன் பிள்ளையார் முருகன் கோயில்கள் உள்ளன.

கிறித்தவ மதத்துக்கு இவர்களுட் பலர் மாறினர். மொழியால் தமிழராகத் தொடர்ந்தனர். கிறித்தவ தலைமை இவர்களைப் படிப்படியாகச் சிங்களவர் ஆக்கியது.

இவ்வாறு சிங்களவருக்கும் முயற்சியை முன்னெடுத்த பெருமகனார் சிலாபத்தில் கத்தோலிக்க ஆயராக இருந்த எட்மண்ட் பிரிஸ் என்பார். சிங்களத்திலேயே தேவாலய வழிபாடுகளை நடத்த ஆணையிட்டார் சிங்கள மொழியைப் பாட மொழியாகக் கொள்ள ஆணையிட்டார்.

வாய்க்கால் ஆறு தொடக்கம் முகத்துவாரம் ஆறு வரை நீண்ட நிலப்பகுதியில் தமிழ்த்தேசிய அடையாளங்களுடன் இன்றும் வாழ்பவர்கள், சைவக் கோயில்களைச் சுற்றி வாழும் சைவ சமயத்தவரே.

தந்தை செல்வாவின் தமிழ்த்தேசிய முயற்சிக்கு முன்பே தமிழ்த் தேசியத்தில் இருந்து வெளியேறியவர்கள் கிறித்தவர்கள்.

தந்தை செல்வாவின் தமிழ்த்தேசிய முயற்சிக் காலத்திலும் பின்பும் ஒலுமடு தீர்மான வழியும் முற்றாக வெளியேறியவர் முகமதியர்.

தமிழும் சைவமும் கலந்ததே தமிழ்த் தேசியம் என்பதே பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு. பின் வந்தோரையும் உள்ளடக்கி வாழலாம் என்ற முயற்சி படுதோல்வி கண்டது.

தேம்பாவணியைத் தமிழில் தந்தார் என்பதற்காக இத்தாலியரான வீரமாமுனிவர் தமிழ்த் தேசியத்துள் அடங்குவாரா?

சாகும்போதும் தமிழ் மணந்து சாக வேண்டும் என் தன் கல்லறையில் தன்னைத் தமிழ் மாணவன் என எழுதிய திருவாசகத்தை மொழிபெயர்த்த ஜி யு போப் தமிழ்த் தேசியத்துள் அடங்குவாரா?

விட்டகன்ற கிறித்தவரும் முகமதியரும் தமிழ்த்தேசியத்துள் அடங்காதவர்.

நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் திரு சீலன் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கிறார் எனக் குற்றம் சாட்டுபவர் தமிழ்த் தேசியத்துள் அடங்காதவர்.

இன்றைய இலங்கையில் தமிழ்த் தேசியக் கொள்கையர் சைவ சமயத்தவரே.

தமிழ்த்தேசியத்தை முற்றுமுழுதாகப் பேணக்கூடிய ஒரே ஒரு அமைப்பு தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை. 

தமிழ்த்தேசியத்தை மீண்டும் வென்றெடுக்க, தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.

வன்னித் தேர்தல் மாவட்டம் சைவத் தமிழரின் சிவபூமி.

ஐம்பதினாயிரம் சைவத் தமிழ் வீடுகள்.
ஒவ்வொரு வீடாகச் செல்வோம் 
திருநீற்றுப் பையுடன் செல்வோம்
வீட்டில் உள்ளவர்களுக்குத் திருநீறு அணிவிப்போம்
கோடரிச் சின்னம் படம் கொடுப்போம் 
வேட்பாளர் பட்டியல் கொடுப்போம் 
வாக்கு விருப்ப வாக்குகள் என வாக்களிக்கும் முறை சொல்வோம் 

வீடு வீடாகச் செல்வோம் 
வாக்கு வாக்காக வெல்வோம்

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

No comments: