Monday, May 25, 2020

கண்ணகியை வழிபடும் புத்தர்

மாதரார் தொழுதேத்தும் மாண்பினள்
காதலால் பெரும் குணத்துக் கண்ணகி.

நாகநாடு என்னும் ஈழத்தில் புகழ்பெற்ற
புகார் நகரில் மாநாய்கன் குலக்கொழுந்து.

தமிழ் வரம்புள் சோழநாடு ஈன்ற தலைமகள்
பாண்டி நன்னாட்டுத் தீதுதீர் மதுரையைத் தீக்கிரையாக்கி
சேர நாட்டில் பத்தினிக் கோட்டமாய் அமைந்தவள்.

கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்
சேரன் இமயவரம்பனின் நாள் அணி வேள்வியில்
கலந்து கொண்டான் 
கண்ணகி சிலையுடன் இலங்கை மீண்டான்.

வற்றாப்பளையிலும் மருதமடுவிலும் கண்ணகிக் கோட்டம் அமைத்தான். அநுராதபுரத்தில் கண்ணகிக்குப் பெருவிழா எடுத்தான். 

ஆடித் திங்கள் தோறும் 
பாடி விழாக்கள் பன்முறை எடுப்ப 
மழை வீற்றிருந்து வளம்பலபெருகிப் 
பிழையா விளையுள் நாடாயிற்று இலங்கை. 
சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறிய வரிகள் இவை.

கண்ணகி தமிழ்ப்பெண்.
கயவாகு வேந்தன் கண்டெடுத்த பெருவிழா
ஆடி முழுநிலா நாளில் எடுத்த பெருவிழா
அன்று தொடக்கம் இன்றுவரை கலையாமல் குலையாமல்
பெருவிழாவாகப் பெரகராவாகத் தொடர்கிறது.

கண்ணகித் திருவுருவம் பத்தினித் திருவுருவமாக
கண்டியில் நடக்கும் பெருவிழாவில் யானை மீது அமர்ந்து
தமிழ்ப் பெண் ஒருத்தி சிங்கள புத்த மக்களால் போற்றும் காட்சி 1800 ஆண்டு காலத் தொடர்ச்சி.

தமிழ் பெண்ணைப் போற்றிப் பாராட்டித் தெலுங்கரோ கன்னடரோ மலையாளிகளோ கொங்கரோ கங்கரோ வடநாட்டவர் எவருமோ விழா எடுப்பதில்லை. 

சிங்கள மக்களே விழா எடுக்கிறார்கள்.

தமிழருக்குக் கண்ணகி தெய்வம். வியப்பு என்ன? தமிழ்நாட்டில் ஈழநாட்டில் புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் கண்ணகி தெய்வம் ஆகி நிற்கிறாள்.

தமிழர் அல்லாத ஒரே ஒரு இனம் 
சிங்கள மொழி - புத்த சமய மக்களினம் 
கண்ணகியைப் போற்றுகின்றார்கள் 
பாராட்டு விழா எடுக்கின்றார்கள் 
ஆண்டுதோறும் பத்தினி விழாக் கொண்டாடுகின்றார்கள்
ஊர்கள் தோறும் பத்தினித் தெய்வத்திற்குக் கோயில் வைத்திருக்கிறார்கள்.

கண்ணகியின் கோயிலைச் சாத்தான் கோயில் எனச் சிங்கள புத்த மக்கள் கூறுவார்களா?
கண்ணகியின் திருவுருவத்தை வழிபடுவது தவறு என சிங்கள புத்த மக்கள் கூறுவார்களா?

கண்ணகியைத் தெய்வ மாக்கினர் 
புத்த விகாரங்கள் தோறும் பிள்ளையாரை வணங்கினர் 
திருமாலைத் தெய்வம் ஆக்கினர் 
சிவனையும் அம்மனையும் போற்றினர் பார்க்குமிடமெங்கும் நீக்கமற அவர்களுக்குத் தெரிவது கதிர்காமக் கந்தனின் திருவுருவமே.  புத்தபிக்குகள் பலர் கதிர்காமக் கந்தனை வழிபட வரிசையில் காத்து நிற்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்.
செல்லகதிர்காமத்தில் சிங்கள மொழியில் பிள்ளையார் மீது கூட்டு வழிபாடு நடத்தும் சிங்கள மக்களை கண்டிருக்கிறேன்.

இலங்கையைச் சிவபூமி எனப் புத்த சமயத்தவரும் கருதுவதால்
சைவ சமயக் கடவுள் திருவுருவங்கள் புத்த விகாரங்களில் வழிபாட்டுக்கு உரியன. 

புத்தரின் போதனை மீது சிங்கள மக்களுக்கு உள்ள நம்பிக்கை போன்றே வாழ்க்கையின் சாதனைகளுக்கான நம்பிக்கையாகச் சைவ சமயக் கடவுள்களை அவர்களை வழிபடுகிறார்கள்.

கிறித்தவர்கள் தங்களைத் தமிழர் என்று சொல்கிறார்கள்.
காப்பியத் தலைவி, 
மாதரார் போற்றும் காதலாள், 
தமிழ் வரம்பு நாடுகளின் தலைமகள் தமிழ் மகள் கண்ணகி கிறிஸ்தவர்களுக்குச் சாத்தான்.

தமிழரின் தலைமகள் கண்ணகி
காபீர்களின் உருவ வழிபாட்டுக்குரியவள்
என்பர் முகமதியர். உருவ வழிபாட்டை மறுக்கும் அவர்கள் தம்புள்ளையில் புத்தர் சிலையை உடைத்தது போல் பத்தினித் தெய்வச் சிலைகளை உடைக்கும் நோக்கமுடைய  தீவிரவாதிகளைக் கொண்டவர்.

1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த
கயவாகு வேந்தன் கட்டிய
கண்ணகிக் கோட்டத்தை உடைத்து 
அங்கே தேவாலயத்தை அமைத்தவர்கள் 
போர்த்துக்கேயரின் அடிவருடிகளான 
மேலை நாட்டின் ஊடுருவல்கள் ஆன கத்தோலிக்கர்.

கிறித்தவ மத மாற்றிகள், முகம்மதிய சிகாதிகள், தமிழரின் காப்பிய வரலாற்று அடையாளங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டவர்.

மருதமடுவில் கண்ணகிக் கோட்டத்தை அழித்தது போல்
திருக்கேதீச்சரத்தில் சிவன் கோயிலை இடித்தது போல்
தென்னாவரத்தில் சிவன் கோவிலை இடித்தது போல்
திருக்கோணேச்சரத்தில் சிவன் கோயிலை இடித்தது போல்
நல்லூரில் முருகன் கோயிலை இடித்தது போல்

வன்னித் தேர்தல் மாவட்டம் எங்கும் சைவக் கோயில்களை இடிக்க வேண்டும் சைவர்களின் அடையாளங்களை அழிக்க வேண்டும் என மத மாற்றிகள் முனைந்து விடா முயற்சியில் உள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் விசுவமடு அருகே தொட்டியடியில் வீட்டுக்குள் புகுந்த காடையரான மதமாற்றிகள் இருவர், போரில் கணவரை இழந்த செபமணியும்  மகளும் வழிபட்ட சைவக் கடவுளர்களின் திருவுருவப் படங்களை உடைத்து எரித்து நாசமாக்கினார்கள் எனக் கடந்த 10 நாள்களின் (20.03.2020) முன் புதுக்குடியிருப்புக் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

வீட்டுக்குள் அடாத்தாகப் புகுந்து சைவக் கடவுளர் படங்களை உடைத்து எரித்தோர் வன்னித் தேர்தல் மாவட்டம் முழுவதும் சைவக் கோயில்களை உடைத்தெறியக் காத்திருக்கிறார்கள் போலும்.

வேம்பையும் பாம்பையும் வழிபடும் உங்களுக்குக் கோயில்கள் எதற்கு எனக் கேட்க நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திருக்கிறார்கள்.

திருக்கேதீச்சர வளைவு உடைப்பை நேரில் கண்டறிந்து உசாவி மீட்புப் பணியில் ஈடுபட இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன் வருவதாக இருந்தார். அவரை மன்னாருக்கு வர விடாமல் தடுத்தவர்கள் நீங்கள் தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

சைவ அடையாளங்களை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் வேட்பாளர்களை வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அதே கட்சிகள் அறிவித்துள்ளன.

ஆபிரகாமிய சமய ஆக்கிரமிப்பு ஊடுருவலில் இருந்து வன்னித் தேர்தல் மாவட்டத்தைக் காக்க வேண்டுமாயின் தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை வேட்பாளர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.

சைவ அழிவின் விளிம்பில் நின்று கொண்டு அழைக்கிறேன்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலான மரபுகளின் வழிவந்த நெறிகளைக் காக்க உங்களை அழைக்கிறேன்.

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் 

அவர்களுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களியுங்கள். 

அவர்களின் வெற்றியே சைவசமயத்தின் வெற்றி அவர்களின் வெற்றியே பத்தாயிரம் ஆண்டுகளான மரபு அடையாளங்களின் வெற்றி 
அவர்களின் வெற்றியே ஆபிரகாமிய ஊடுருவலைத் தடுப்பதில் வெற்றி.

நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

No comments: