மன்னார் மாவட்டம் முருங்கனில் சீவோதயம் பண்ணை. இலங்கை மெதடிசுத்த திருச்சபைக்குச் சொந்தமான பண்ணை.
இந்தப் பண்ணையில் இருக்கும் மெதடிசுத்த மத மாற்றிகள் சுற்றியுள்ள ஊர்களில் மதமாற்ற முயற்சிகளில் கடுமையாக ஈடுபடுகிறார்கள்.
சைவ ஊராக இருந்த முருங்கன்பிட்டி இன்று கிறித்தவ ஊர். இந்த ஊர் சார்ந்த முருங்கன் நிலதாரிப் பிரிவில் 310 சைவக் குடும்பங்கள் இருந்தன. இன்று 60 குடும்பங்களே சைவமாக எஞ்சியுள்ளன.
சீவோதயம் பண்ணை அமைந்திருக்கும் பரியாரிகண்டல் நிலதாரிப் பிரிவில் 300 சைவக் குடும்பங்கள். அங்கும் 60 குடும்பங்களே சைவக் குடும்பங்களாக இன்று உள்ளன.
செட்டியார் கட்டையடம்பன் நிலதாரிப் பிரிவில் 92 சைவ குடும்பங்கள். இன்று 42 குடும்பங்களே சைவக் குடும்பங்களாகத் தொடர்கின்றன.
மெதடிசுத்த திருச்சபையின் முழுநேர ஊழியர் 144. போதகர் 95, மத மாற்றிகள் 54, உதவியாளர் 20.
மதம் மாற்றுவதற்காகச் சம்பளம் பெறும் ஊழியர் 54 பேர்! வியப்பாக இருக்கிறதா?
விவிலியத்தில் சொல்லியவாறு: உயிர்த்து எழுந்த பின் இயேசுபிரான் சொல்கிறார்: அனைத்து நாடுகளுக்கும் செல்க. சீடர்களை உருவாக்குக. ஞான நீராட்டுக. தந்தையின் பெயரால் மகனின் பேரால் தூய ஆவியின் பெயரால் கிறித்தவராக்குக.
கலிலேயா மலையில் இயேசுபிரான் சொன்ன கட்டளையை ஏற்று, 54 மத மதமாற்றிகளுக்குச் சம்பளமும் கொடுத்து மெதடிசுத்த திருச்சபை எண்ணிக்கை இலக்கும் கொடுத்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஓராண்டு காலத்தில் இத்தனை பேரை மதம் மாற்றிக் கொண்டு வரவேண்டும் என்ற இலக்கைக் கொடுத்திருக்கிறது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் ஆயரா bishop? அவரை ஆயர் என்றும் அழைக்கலாம் என்கின்றனர் திருச்சபையினர்.
அவ்வாறாயின் 204 ஆண்டு வரலாறு கண்ட இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் துணைத் தலைவர் துணை ஆயர் deputy bishop ஆகிறார்.
ஆயரும் துணை ஆயரும் ஆட்சிக் குழுவும் 144 ஊழியர்களும் 35,000 உறுப்பினரும் (55% சிங்களவர்; 45%தமிழர்) 30-40 புதிய ஊர்களை ஒவ்வோர் ஆண்டும் சென்றடைகிறார்கள். புதிய வழிபாட்டு முறைகளை, சிறப்பாகச் சைவ சமயம் சார்ந்த வழிபாட்டு முறைகளை, கிறித்தவ வழிபாட்டு முறைகளாக மாற்றி, கிறித்தவத்துக்கு மதம் மாற்றுகிறார்கள்.
ஏற்கனவே மதம் மாறியவர்களுக்காகத் தேவாலயங்களைக் கட்டிக் கொடுக்கிறார்கள். போதகர்களுக்குத் தமிழிலோ சிங்களத்திலோ பயிற்சி கொடுத்துத் தேவாலயங்களுக்கு அனுப்புகிறார்கள். பிலிமத்தலாவையில் போதகர் பயிற்சி நிலையம்.
முன்பள்ளி, மழலையர் பள்ளி, குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஆகியன 150க்கும் கூடுதலாக இவர்களிடம் உள. கொழும்பில் ஆண்களுக்கு ஒரு பாடசாலை, பெண்களுக்கு ஒரு பாடசாலை இவர்கள் முகாமையில்.
கட்டுகோப்பான, பாரிய நிதி வளமுள்ள, 204 ஆண்டு பழமையான மெதடிசுத்த திருச்சபையின் துணைத்தலைவர் அல்லது துணை ஆயர் deputy bishop மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்.
மெதடிசுத்த திருச்சபையின் மத மாற்ற முயற்சிகளைச் சிங்களவரும் கடுமையாக எதிர்க்கிறார்கள், தமிழரும் கடுமையாக எதிர்க்கிறார்கள் என அச்சபையின் ஆண்டறிக்கைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். துணைத் தலைவரான ஆபிரகாம் சுமந்திரனின் ஒப்புதலின்றி ஆண்டறிக்கைகளோ கணக்கறிக்கைகளோ வெளிவரா.
இறைவனின் திருக்கூட்ட நிறுவனர் இலயனல் செயசிங்காவைக் கொன்றனர். மதமாற்ற முயற்சிகளில் ஈடுபட்டமை குற்றம் எனக் கூறிக் கொன்றனர். இடம்: திசமகாரகமம். நாள்: 25 மார்ச்சு 1988.
இறைவனின் திருக்கூட்டத் தேவாலயம். புத்த பிக்குகள் தலைமையில் வந்த கூட்டம் தாக்கியது. தேவாலயத்துக்குக் கடுமையான சேதம். இடம்: மாத்துறை. காலம்: திசம்பர் 1997.
இறைவனின் திருக்கூட்டம் கட்டிக்கொண்டிருந்த வழிபாட்டுக் கூடம். வெடிகுண்டுகள் இரண்டை வைத்தார்கள். ஒன்று வெடித்தது. கூடம் சேதமடைந்தது. இடம்: திசமகாரகமம். நாள்: 2 ஏப்ரல் 1999.
சைவக் கோயிலில் திருவிழா அன்று ஞாயிற்றுக்கிழமை அருகிலுள்ள மெதடிஸ்த திருச்சபையின் தேவாலயத்தில் ஒலிபெருக்கிகள் அலறுகின்றன. சத்தத்தை குறைக்குமாறு சைவர்கள் கேட்கிறார்கள். தேவாலயத்தில் மறுக்கிறார்கள். விளைவாகத் தேவாலயத்திற்குக் கடும் சேதம். அங்கிருந்த 6 பேருக்குக் கடும் காயம். நடந்த நாள் 16 ஜூன் 2013.
மட்டக்களப்பில் தேவாலயப் பாதிரியாரும் அவருடைய இல்லத்தவரும் உதவியாளரும் முகமூடி அணிந்த ஆண்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நாள் 31 ஆகஸ்ட் 2014.
குண்டிச்சான்குளம் அநுராதபுரத்திற்கு அருகில் ஊர். அங்கே தேவாலயம் ஒன்றை அமைத்து வழிபாடுகள் நடத்தி வந்ததை அறிந்த உள்ளூர் மக்கள், தமிழ் சிங்கள புத்தாண்டான ஏப்ரல் 14 2019 அன்று, வழிபாடும் ஊர்வலமும் நடத்த முற்பட்ட மெதடிசுத்த திருச்சபையினரைக் கல்லெறிந்து கலைத்தனர். ஓட ஓட விரட்டினர்.
திருவிழாக்களை நடத்த விடக்கூடாது, சைவ சமய புத்த சமய புத்தாண்டு கொண்டாடக் கூடாது இவையே மெதடிசுத்த திருச்சபையின் நோக்கம். ஏனைய மதமாற்றச் சபையினரின் நோக்கம்.
செட்டியார் மகன், முருங்கன்பிட்டி, கட்டையடம்பன், பரியாரிகண்டல் என, சுற்றிவர உள்ள ஊர்களில் எல்லாம் புற்றுநோயாய் மெதடிசுத்த திருச்சபையின் மத மாற்றிகள் நுழைவர். சைவத்தையும் தமிழையும் உடைத்து நொறுக்கி அழிக்க முயல்வர். மெதடிஸ்த திருச்சபையின் துணைத் தலைவர் deputy bishop மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்.
அதே deputy bishop of Methodist Church of Sri Lanka சைவத்தின் தலைமையகங்களுள் ஒன்றான திருக்கேதீச்சரத்திற்கு, திருக்கோயிலுக்கு வழக்குரைஞர்.
மன்னார் வாழ் சைவர்களைப் புறந்தள்ளுவர். கொழும்பை மையமாகக் கொண்டு திருக்கேதீச்சரம் திருக்கோயில் நடத்த விழைவர்.
திருக்கோணேச்சரத் திருக்கோயில் அறங்காவலர் திருக்கோணமலையார்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் அறங்காவலர் மட்டக்களப்பார்.
நல்லூர்க் கந்தசாமி கோயில் அறங்காவலர் நல்லூரார்.
மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் அறங்காவலர் மாவிட்டபுரத்தார்.
கீரிமலை நகுலேச்சரர் திருக்கோயில் அறங்காவலர் கீரிமலையார்.
உடைப்பு திரவுபதி அம்மன் கோயில் அறங்காவலர் உடைப்பார்.
மாதம்பை முருகன் கோயில் அறங்காவலர் மாதம்பையர்.
திருக்கேதீச்சரம் திருக்கோயில் அறங்காவலர் கொழும்பில் இருக்கிறார் அல்லது மன்னாரில் இருக்கிறார். பணியாளர்களைக் கொண்டு கோயிலை நடத்துகிறார்.
காகத்தின் கூட்டில் குயில் முட்டை இடுகிறது. சிங்கத்தின் உணவை ஓநாய் திருடுகிறது.
திருக்கேதீச்சரத் திருக்கோயில் வளாகத்தில் வாழ முடியாதவர்கள் திருக்கோயில் அறங்காவலர்களாக வரவே கூடாது. திருக்கேதீச்சரத்திலேயே வாழக்கூடிய அறங்காவலரே திருக்கேதீச்சரத் திருக்கோயிலின் அருள் ஆட்சியைச் செவ்வனே நடத்த முடியும்.
கொழும்பிலும் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்துகொண்டு திருக்கேதீச்சரத் திருக்கோயில் அறங்காவலர்கள் ஆக இருப்பவர்கள், மன்னார்ச் சைவர்களைப் படிப்படியாகக் கிறித்தவர்கள் ஆக்கி ஊர்கள் தோறும் புற்றுநோய் ஆகி நுழையும் மத மாற்றிகளின் தலைவர் மெதடிஸ்த திருச்சபையின் துணைத் தலைவர் deputy bishop of Methodist Church - a proclimed evangelist ஆபிரகாம் சுமந்திரனைத் திருக்கேதீச்சரம் திருக்கோயிலுக்கு வழக்குரைஞராகக் கொண்டுவருவர்.
மன்னார் சிவபூமி.
சவேரியார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னாரில் தொடங்கிய மத மாற்ற முயற்சிகளை ஒழிக்க வேண்டுமானால் தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் வேட்பாளர் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.
மன்னார்ச் சைவ மக்களுக்கு முன்னுள்ள கடும் சவால், மதமாற்றப் புற்றுநோய்க்கு ஆளாவதா?
மதமாற்றத் தீநுண்மியின் தாக்குதலுக்கு ஆளாகி அழிவதா?
மன்னாரைச் சிவபூமி ஆக்குவதா?
மன்னார்ச் சைவர்களே விழித்தெழுங்கள்.
2020 நாடாளுமன்றத் தேர்தல் உங்களுக்கு அரிய வாய்ப்பு.
சைவத்தின் பெயரால்
திருநீற்றின் பெயரால்
சைவ எழுச்சிக்காக
மன்னாரைச் சிவபூமி ஆக்குவதற்காக
தமிழ்த்தேசிய சைவமக்கள் பேரவையினர்
உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள்.
அவர்களை ஆதரியுங்கள்
அவர்களுக்காக வாக்கு சேகரியுங்கள்
வெல்வோம் வெல்வோம்
நாளை நமதே
வெற்றி நமதே
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
No comments:
Post a Comment