Monday, May 25, 2020

திருச்சி-இராமேச்சரம்-காத்தான்குடி-கொழும்பு

திருச்சி-இராமேச்சரம்-காத்தான்குடி-கொழும்பு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை


2018 அக்டோபர் 16, திருச்சியில் மாநாடு.

மனித நேய மக்கள் கட்சி
செல்வாக்குடையோர் முன்னணி என்கிற பாப்புலர் புரண்ட் ஆஃப் இந்தியா
தவ்கீத்து சமாது
தப்லீக்கு சமாது
என முகமதிய அமைப்புகள்
பேராயக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள்
மாநாட்டில் பங்கு பற்றினர்.

2018 நவம்பர் 13 
இராமேச்சரத்திலிருந்து முகமதியர் ஒருவரின் படத்தைப் புலனத்தில் எனது நண்பர் எனக்கு அனுப்பினார். அனுப்பியவர் தந்தி தொக்காவின் இராமேச்சர ஊடகர். நீண்டகாலமாக எனக்கு அன்பர்.

தாடியும் தொப்பியும் ஆக இருந்த அந்த முகமதியரின் விவரங்கள் இலங்கையில் கிடைக்குமா? அவர் இலங்கைக்கு வந்துள்ளார்? என என்னிடம் கேட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள புலனாய்வுப் பிரிவு அன்பருக்கு நான் அந்தப் படத்தைப் 14.11.2018இல் அனுப்பினேன். இராமேச்சரம் அன்பர் கேட்ட தகவல்களைக் கேட்டேன். இராமேச்சரம் அன்பரின் தொலைப்பேசி எண்ணையும் புலனத் தொடர்புகளையும் கொடுத்தேன்.

ஒரு வாரம் சென்றது. இராமேச்சரம் அன்பர் என்னிடம் கேட்கிறார், விவரம் கிடைத்ததா? என.

புலனாய்வுப் பிரிவு அன்பரிடம் கேட்டேன். படத்தவர் காத்தான்குடியில் இருக்கிறார். காத்தான்குடியில் நடப்பவற்றைக் கண்டறிவது சிக்கல். அவ்வளவே நமக்குக் கிடைத்த தகவல், என்கிறார் புலனாய்வுப் பிரிவு அன்பர்.

இந்தச் செய்தியை அப்படியே இராமேச்சரம் தந்தி தொக்கா ஊடக அன்பருக்குத் தெரிவித்ததோடு என் பணி நிறைவானது.

21 4 2019 நண்பகல் புலனாய்வுப் பிரிவு அன்பரிடமிருந்து அழைப்பு. 14 11 2018 ல் நீங்கள் அனுப்பிய படத்தில் உள்ளவர்தான் சகரான். கொழும்பில் இன்றைய குண்டுவெடிப்புகளை நடாத்திய தலைமகன் அவரே என்றார் புலனாய்வுப் பிரிவு அன்பர்.

உலகையே உலுக்கிய நிகழ்வை நடாத்திய தலைமகனின் படத்தை ஐந்தரை மாதங்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுக்குத் தெரிவித்து இருந்தேன். அப்பொழுது அந்தப் படத்துக்கு உரியவர் யார்?  என எனக்கு தெரியாது. அனுப்பியவர் சொல்லவில்லை. பெற்றவரும் சொல்லவில்லை.

திருச்சி மாநாடு, இராமேச்சுரம், காத்தான்குடி என என் ஊகம். கொழும்பு குண்டு வெடிப்புக்கான திட்டமிடல் திருச்சி மாநாட்டில் நிகழ்ந்ததா? என நானே என்னைக் கேட்டுக் கொண்டேன்.

மதுரையில் கோயம்புத்தூரில் கும்பகோணத்தில் வேலூரில் இந்துத் தொண்டர்கள் தொடர்ச்சியாகக் கொலையாகி வருகிறார்கள். 

செல்வாக்காளர் முன்னணி என்ற பப்புலர் புரண்ட் ஆஃப் இந்தியா, தவ்கீத்து சமாது, தப்லீக்கு சமாது ஆகிய அமைப்புகள் மீது தமிழ்நாட்டின் இந்து அமைப்புகள் கொலைக் குற்றம் சாட்டி வந்துள்ளனர்.

எனவேயே திருச்சி இராமேச்சரம் காத்தான்குடி கொழும்பு என்ற தொடர் ஊகம் எனக்குள் நிழல் ஆடியது. ஊகங்கள் வருவது இயற்கை. அவற்றை வெளிப்படுத்தினால் வதந்தி ஆகிவிடும். சான்றுகள் இல்லாத ஊகத்தை வெளிப்படுத்துவது சமுதாயக் குற்றம். சட்டத்தின் முன்னும் குற்றம்.

2020 மார்ச்சு தில்லி நிசாமுதீன் தப்லீக்கு மாநாட்டிற்கும் கொழும்புக் குண்டுவெடிப்புத் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தில்லி ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் இலங்கை அரசை மேற்கோள்காட்டிச் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

பிரவீன் சுவாமி அனைவருக்கும் தெரிந்த பாதுகாப்பு ஆய்வாளர், கட்டுரையாளர். இலங்கையின் முகமதிய தீவிரவாதிகள் குறித்து அவர் தன் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். The road to Sri Lanka Carnage, Praveen Swami, rediff.com.

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தப்லீக்கு சமாத்தினர் இலங்கைக்குள் ஊடுருவினர்.

ஒசாமா பின் லேடனின் குருவான அப்துல்லா ஆசாம் ஒருகாலத்தில் கற்பித்த அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த நிலாம் கல்வி கற்றார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அந்த பல்கலைக்கழகம் இருக்கிறது. சாரியாச் சட்டங்களை நிலாம் அங்கு பயின்றார்.

தப்லீக்கு சமாத்துடன் நிலாமுக்குத் தொடர்பு அங்கே தொடங்கியது.

2011ல் நிலாம் தன் சொந்த ஊரான கண்டிக்குத் திரும்பினார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சிலகாலம் பகுதி நேர ஆசிரியராக உருது மொழி கற்பித்தார்.

கல்வெளியில் (கலேவெல) பாடசாலை முதல்வராக நிலாம் பணிபுரிந்த காலங்களில் நிலாமும் சகரான் குழுவினரும் பழகத் தொடங்கினர்.

தன் பெற்றோர், தன் பேறுகால மனைவி, ஆறு குழந்தைகள் யாவரையும் அழைத்துக்கொண்டு யாத்திரைக்காக 2014இல் நிலாம் புறப்பட்டார். துருக்கி சென்றார். அங்கிருந்து சிரியா நாட்டு எல்லைக்குள் மறைந்தார்.

ஐ எஸ் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அமைப்பில் சேர்ந்தார். இலங்கையிலிருந்து முப்பத்தாறு பேரை அழைத்துச் சென்றார். அந்த எண்ணிக்கை 100 ஆகவும் இருக்கலாம் என்கிறார் பிரவீன் சுவாமி.

அந்த 36 பேருள் நிலாமின் நெருங்கிய நண்பர் தவுக்கீர் அகமது தாசூதீன் ஒருவர்.

தவ்கீத்து சமாத்துக்கு இலங்கை இந்தியா மட்டுமே தளங்கள். வேறு எந்த நாட்டிலும் இந்த அமைப்பு இல்லை. உலகின் 80 நாடுகளில் தப்லீக்கு சமாத்து செயற்படுகிறது.

இலங்கையின் தவ்கீத்து சமாத்துக்கு வழிகாட்டி தமிழ்நாட்டின் தவ்கீத்து சமாத்து. கொழும்புக் குண்டுவெடிப்புகளில் சூத்திரதாரிகள் இலங்கையின் தவ்கீத்து சமாத்து அமைப்பினர் என்கிறார் பிரவீன் சுவாமி.

கொழும்புக் குண்டு வெடிப்புகளின்  பின்னர், திருச்சி இராமேச்சரம் காத்தான்குடி கொழும்பு என நான் அன்று ஊகித்தேன். அன்றைய என் ஊகம் தவறானது அல்ல என இன்று உணர்கிறேன்.

80 நாடுகளில் இறுக்கமான கட்டமைப்புக் கொண்ட வலைப் பின்னலே தப்லீக்கு சமாத்து என நான் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.

தில்லியில் நிசாமுதீன் மேற்கில் தப்லீக்கு சமாத்தின் உலகத் தலைமையகம். ஒவ்வோராண்டும் அங்கு மாபெரும் மாநாடு நடக்கும். பல நாடுகளில் இருந்து பேராளர் வருவர்.

2020 மார்ச் 13 தொடக்கம் நடந்த மாநாட்டில் இலங்கையில் இருந்து 33 பேர் பங்குபற்றினார்களாம். தமிழ்நாட்டில் இருந்து 1500 பேர் பங்கேற்றார்களாம். 

தில்லி நிசாமுதீன் மாநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிய 360 பேருக்கு இதுவரை தீநுண்மித் தொற்று. 

நிசாமுதீன் மாநாட்டில் இருந்து தத்தம் ஊர்களுக்குத் திரும்பியோரால் இந்தியாவின் 19 மாநிலங்களில் பரவியது தீநுண்மித் தொற்று.

தில்லி நிசாமுதீன் மாநாட்டால் இலங்கைக்கு இருவகையான பேரிடர். தீநுண்மித் தொற்று ஒருபுறம். தப்லீக்கு சமாத்தின் குண்டுவெடிப்புத் தீவிரம் மறுபுறம்.

போர் முரசு கேட்கிறதா? நான் அவ்வாறு ஊகிக்கவில்லை.

No comments: