Tuesday, May 26, 2020

ஆறுமுகம் தொண்டமான்

அஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
சிவ சேனை

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அலுவலகம் கொள்ளுப்பிட்டியில். 1973-1975 காலப் பகுதியில் திரு பேரின்பநாயகமும் நானும் அங்கு வாரம் ஒரு முறையாவது செல்வோம்.

தலைவர் திரு சௌமியமூர்த்தி தொண்டமான், செயலாளர் திரு செல்லச்சாமி இருவரையுமோ அல்லது ஒருவரையோ சந்தித்து வருவோம். அக்காலங்களில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர்.

திரு சௌமியமூர்த்தி தொண்டமான் வாழ்ந்த காலங்களில் அவர் வழிவந்த திரு ஆறுமுகம் தொண்டமான் எனக்கு அறிமுகமானார். 

1994 இல் சந்திரிகாவின் அமைச்சரவையில் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் அமைச்சராக இருந்தார்.

சென்னைக்கு வந்திருந்தார். அவருக்கு மருத்துவராக இருந்த என் அருமை நண்பர் என்னை அழைத்தார். அமைச்சர் தொண்டமான் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் எனச் சொன்னார். 

மருத்துவர் கீழ்ப்பாக்கத்தில் இருந்தார். எனவே அவரிடம் நேரே போனேன். அங்கே திரு ஆறுமுகம் தொண்டமான் இருந்தார்.

சென்னை புரசைவாக்கத்தில் மேனாள் காங்கிரசு அமைச்சர் திருமதி அனந்தநாயகி அவர்கள் இல்லத்தில் அமைச்சர் திரு சௌமியமூர்த்தி தொண்டமான் தங்கியிருப்பதாகவும் அங்கு வர முடியுமா? எனவும் திரு ஆறுமுகம் என்னிடம் கேட்டார்.

இருவருமாகச் சென்றோம். சீனா - பிரித்தானியா அரசுகள் பேசிக் கொண்டிருந்த காலம்.  ஒங்கொங்கு தீவின் எதிர்காலம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன சீனாவின் பகுதியாக ஒங்கொங்கு மாறும். ஆனால் ஒங்கொங்கு தனது தனித்துவத்தைப் பேணும் என்ற வகையில் தீர்வுகளை நோக்கி வரைவுகள் தயாரிக்கப்படுவதாக அமைச்சர் தொண்டமான் என்னிடம் கூறினார்.

அதை ஒத்த தீர்வு ஒன்றினை இலங்கையிலும் ஏற்படுத்தலாம் எனத் திருமதி சந்திரிகாவுடன் பேசிக் கொண்டிருப்பதாக என்னிடம் அமைச்சர் தொண்டமான் கூறினார். 

பிரபாகரனின் ஒப்புதலைப் பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அமைச்சர் தொண்டமான் கருதினார். 

பிரபாகரன் இதற்கு ஒப்புவாரா? அல்லது இத்தகைய பேச்சுவார்த்தையை நோக்கித் தாம் முன்னெடுத்தால் பிரபாகரன் சார்பில் கலந்து கொள்வார்களா? என்றெல்லாம் அமைச்சர் தொண்டமான் என்னிடம் கேட்டார்.

வெளியே வந்த நான் திரு பழ நெடுமாறன் கவிஞர் காசி ஆனந்தன் இருவரையும் சந்தித்துத் திரு தொண்டமான் சொன்ன முன்மொழிவுகளை எடுத்துக் கூறினேன்.

அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று திரு தொண்டமான் உடன் பேசலாமா? என கேட்டேன்.

திரு பழ நெடுமாறன் வருவதற்கு ஒப்புக்கொண்டார். அவரை அழைத்துக் கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் பிரீசு விடுதியில் அமைச்சர் தொண்டமானைச் சந்தித்தோம். திரு ஆறுமுகம் தொண்டமான் உடனிருந்தார்.

என்னிடம் கூறிய அதே செய்தியை அமைச்சர் தொண்டமான் திரு பழ நெடுமாறனிடம் கூறினார். தனது முன்மொழிவுகள் தொடர்பாக ஆதரவான கடிதமொன்றைத் திரு பிரபாகரனிடம் பெற்றுத் தர முடியுமா என அமைச்சர் தொண்டமான் கேட்டார்.

முயற்சிக்கலாம் எனக் கூறித் திரு பழ நெடுமாறனும் நானும் வெளியே வந்தோம். திரு பிரபாகரனிடம் இது தொடர்பாகப் பேசும் பொறுப்பைத் திரு பழ நெடுமாறன் ஏற்றுக்கொண்டார். 

சில வாரங்களின் பின் திரு பிரபாகரனிடம் இருந்து கடிதம் ஒன்றைக் கொண்டுவந்து திரு பழ நெடுமாறன் என்னிடம் கொடுத்தார். அமைச்சர் தொண்டமானிடம் சேர்க்குமாறுகூறினார்.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை அமைச்சரவையில் தொடருங்கள். அமைச்சரவையில் ஈழத் தமிழர் நலனுக்காக குரல் கொடுங்கள் என்ற கருத்து அந்த ஆறு வரிக் கடிதத்தில் இருந்தது.

கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவரிடம் நேரில் சென்று செய்தி சொன்னேன்.

1991 க்குப் பின் தமிழகம், ஈழத்தமிழர் தொடர்பாக வெளிப்படையாக ஆதரவு அளிக்க முடியாத நிலையில் இருந்தது. இந்திய அளவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் சட்டம் இருந்தது.

1991 இராசீவரைச் சந்திக்கச் சென்றமை தொடர்பாக மல்லிகையில் என்னையும் சேர்த்து விசாரித்துக் கொண்டிருந்த காலம்.

விடுதலைப்புலிகள் தலைவர் திரு பிரபாகரன் தந்த கடிதம் என் இல்லத்தில் இருந்தது. மருத்துவருக்கு மட்டுமே விவரம் தெரியும். திரு பழ நெடுமாறனுக்கும் விவரம் தெரியும்.

ஒரு வாரம் கழித்து மருத்துவர் என்னை அழைத்தார். மருத்துவமனைக்கு வாருங்கள் என்றார். கடிதத்துடன் சென்றேன். அங்கு திரு ஆறுமுகம் தொண்டமான் இருந்தார் அவரிடம் கடிதத்தைக் கையளித்தேன்.

அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை அறியேன்.

1996ஆம் ஆண்டு மொரிசியசு நாட்டுத் துணைப் பிரதமர், எனக்கு அருமை நண்பர் திரு பெரஞ்சே என்னை அழைத்தார். தனது கட்சியின் வெள்ளிவிழா அந்த ஆண்டு நடைபெறுவதாகவும் இலங்கையிலிருந்து தமிழ்த் தலைவர் ஒருவரை அழைக்க விரும்புவதாகவும் என்னிடம் கூறினார்.

அடுத்த வாரம் கொழும்பு செல்ல உள்ளேன். வேறு ஒரு பணிக்காகச் செல்கிறேன் அங்கு உள்ளோரிடம் உசாவிப் பதில் சொல்கிறேன் என அவரிடம் கூறினேன்.

கொழும்பு சென்றேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமை அலுவலகக் கட்டடப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அமைச்சர் தொண்டமான் சிறிய அலுவலகத்தில் இருந்தார். திரு ஆறுமுகம் தொண்டமான் உடனிருந்தார்.

மொரிசியசுத் துணைப் பிரதமரின் செய்தியைக் கூறினேன். போய் வருவீர்களா? எனக் கேட்டேன். நாடு, அங்குள்ள அரசியல் நிலைமை, கட்சியின் கொள்கை, விழாவின் இயல்பு, என என்னிடம் விவரங்கள் கேட்டார்.

அங்கிருந்தே மொரிசியசுத் துணை பிரதமருக்கு அழைப்பு எடுத்து இருவரையும் இணைத்தேன்.

கட்சியின் பெயர் Mauritius Militant Movement. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர் அங்கு இருந்தார். Militant என்ற பெயர் இருப்பதால் அதுவும் விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்பாக இருக்குமோ என என்னிடம் வினவினார். 

ஆட்சியில் உள்ள கட்சியினர் அழைக்கிறார்கள் என திரு ஆறுமுகம் தொண்டமான் எடுத்துச் சொன்னார்.

திரு பிரஞ்சே அழைப்பை ஏற்ற திரு தொண்டமான் மொரிசியசு சென்றார். வெள்ளி விழாவில் கலந்துகொண்டார். சிங்கப்பூர் வழியாகச் சென்று மீண்டார்.

நேற்று இரவு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார் என்ற செய்தி அறிந்ததும் என் கண்கள் பனித்தன. மூத்த தொண்டைமானைப் போலவே இவரும் ஈழத் தமிழர் நலனில் மிக்க ஈடுபாடு உடையவர்.

அவரோடு பழகிய நாள்கள் நெஞ்சில் நினைவு அலைகளாக மோதுகின்றன. இனிமையான பொறுப்பு வாய்ந்த மனிதநேயமிக்க ஒருவரை இழந்து வாடும் இல்லத்தார், செந்திலார், சீவகனார், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசார், மலையக மக்கள் யாவருக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, May 25, 2020

இராசீவ் காந்தி தில்லி

1. இந்து மாலினி பார்த்தசாரதியைக் காசி ஆனந்தன் 1991 பெப்ருவரி முதல் வாரத்தில் சந்திக்கச் சென்றார். காந்தளகத்தில் இருந்தே இந்து அலுவலகத்துக்கு நடந்து சென்று மீண்டார்.
2. மீண்டதும் என்னிடம் சொன்னார் இராசீவ் காந்தி விடுதலைப் புலிகளின் சார்பாளர் ஒருவரைச் சந்திக்க விழைவதாக மாலினியிடம் கேட்டதாக. சந்திப்புக்குக் காசி ஆன்ந்தன் ஒத்துக்கொண்டதாக. என் வழி தொடர்புகளை வைப்பதாக.
3. பெப்ருவரி நடுப்பகுதியில் மாலினி என்னை அழைத்தார். காசி ஆனந்தனைச் சந்திக்கவேண்டும் என்றார். மாலினியின் இல்லத்திற்குக் காசி ஆனந்தன் சென்றார்.
4. மறுநாள் என்னிடம் வந்தார். 5.3.1991இல் தில்லியில் இராசிவைச் சந்திக்க ஏற்பாடு. கடிதம் எழுதுவோம், நீங்களும் நானும் சந்திப்போம் என்றார் காசி ஆனந்தன்.
5. அதற்கு அடுத்த ஞாயிறு நானும் கவிஞர் காசி ஆனந்தனும் காந்தளகத்தில் அமர்ந்து கடிதம் தயாரித்தோம். தமிழீழமே தீர்வு என்பதே கடிதத்தின் சாரம்.
6. தில்லிக்கு என்னை அழைத்தார் காசி ஆனந்தன். நான் மறுத்தேன். விடுதலைப் புலிகளின் சார்பாளனாக வர முடியாதே என்றேன். உதவியாளராக ஒருங்கிணைப்பாளராக வாருங்கள் என்றார்.
7. பயணச்சீட்டுகள் வாங்கினோம் எனக்கு என் பெயரில். அவருக்கு மாற்றுப் பெயரில். தில்லி சென்றோம். இராசீவர் அலுவலகத்தில் இருந்து வண்டியும் வரவேற்பாளரும் வானூர்தி நிலையம் வந்தனர். தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். உணவு, தங்கும் செலவை ஏற்றனர்.
8. மாலினியிடம் தில்லி இந்து அலுலவலகத்துக்குக் காசி ஆனந்தன் சென்று சந்தித்து வந்தார். நான் மாலினியிடம் போகவில்லை. பின்னர் இராசீவர் வீடுவரை நடந்து சென்று இடம் வலம் பார்த்தோம்.
9. 5.3.1991 மாலை 1630 சந்திப்பு நேரம். வண்டியில் அழைத்துச் சென்றனர். வரவேற்பறையில் பலர் இருந்தனர். எம் இருவரையும் ஒதுக்கில் தனி அறையில் விட்டனர். அந்தச் சந்திப்புக் கமுக்கச் சந்திப்பு என முதலிலேயே மாலினி சொல்லியிருந்தார். அன்று சந்திரசேகர் அரசை விட்டுக் காங்கிரசு விலகிய நாள். சந்திசேகர் அரசு காலையில கவிழ்ந்தது. எனவே மூத்த அரசியல்வாதிகள் பலர், ஊடகத்தார் பலர் வரவேற்பறையில். நாம் இருந்த அறை கமுக்க அறை. அவர்களுக்குத் தெரியாது.
10. 1625க்கு இராசீவின் செயலாளர் யோரச்சர் வந்தார். கடிதத்துடன் கவிஞர் அவருடன் போனார். நான் அறையிலேயே இருந்தேன். 1510 மணி அளவில் கவிஞர் மீண்டார். கண்கள் சிவந்திருந்தன. சந்திப்பில் அழுதேன் என்றார். மகிழ்ச்சியாகச் சொன்னார். ஐந்து செய்திகளைச் சொன்னார். நேரே மாலினியிடம் சென்றார் கவிஞர். நான் போகவில்லை.
11. மீண்டு வந்ததும் அவரும் நானும் பொதுத் தொலைப்பேசி ஒன்றிற்குப் போனோம். இலண்டனுக்குப் பேசினார், கிட்டுவிடம் பேசியதாகச் சொன்னார். என்னிடம் மாலினியிடம் சொன்ன ஐந்து செய்திகளையும் கிட்டுவிடம் சொன்னார்.
12. 24(?).5.1991 இந்து நாளிதலில் மாலினி செய்தி எழுதினார். இராசீவைப் புலிகள் கொன்றிருக்க முடியாது. 5.3இல் கமுக்கச் சந்திப்பு நட்ந்தது. இராசீவர் பின் வருவனவற்றைக் காசி ஆனந்தனிடம் கூறினார் என ஐந்து செய்திகளையும் எழுதினார். அவ்வாறு சந்திப்பு நடைபெறவில்லை எனப் பிரணாப் முகர்சி மறுத்ததான செய்தியும் மறுநாளும் சநதிப்பை உறுதிசெய்வதாக மறுநாள் மாலினியின் செய்தி மூன்றாவது நாளும் வந்தன.
13. ஓராண்டு காலம் 1991இல் தொடர்ச்சியாக மல்லிகையில் என்னை விசாரித்தனர். 2000இல் என் கடவுச் சீட்டை சென்னைத் தடா நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். யாவும் அச்சந்திப்பின் விளைவு. இன்றும் வழக்கில் நான்.

மன்னாரில் அட்டூழியப் பட்டியல்

கண்ணுக்குக் கண்  பல்லுக்குப் பல் எனச் சொல்லியிருக்கிறார்கள் 

நான் சொல்கிறேன் 
ஒரு கன்னத்தில் உனக்கு அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு, 
உன் அங்கியை ஒருவர் கேட்டால் உன் மேலங்கியையும் சேர்த்து அவருக்குக் கொடு

மலைப் பிரசங்கத்தில் இயேசு பெருமான் கூறிய தொடர்கள்

மனித குல வரலாற்றை அறம் நோக்கி மாற்றிய செம்மையான சுருக்கமான அமைதிக்கான அருள் வழிகள்.

இந்த வழிகளைக் கடைப்பிடியுங்கள் 
இயேசு பிரானைப் பின்பற்றுங்கள் 
என்று சொல்லவேண்டிய ஆயர் 

மன்னார் மாவட்டத்தில் மதநல்லிணக்கத்தைக் குலைத்துக் கத்தோலிக்க மத மேலாதிக்கத்தை முன்னெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மன்னார் மாவட்டத்தை மதத்தால் பிளவுபடுத்த வேண்டும் தமிழர் ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் மன்னார் ஆயர் செயற்படுவது வேதனையைத் தருகிறது.

அழகுக்கோன் ஏசுதாசன் அடைக்கலநாதன் நிர்மலநாதன் எனத் தொடர்ச்சியாகச் சைவ மக்கள் வாக்களித்தது கத்தோலிக்க வேட்பாளர்களுக்கே.

சைவர்களுக்காக வாதிட்ட கந்தையா வைத்தியநாதன் தேர்தலில் நின்ற போதும் கூட சைவமக்கள் கத்தோலிக்கரை ஆதரித்தனர்.

சைவர்களுடைய நோக்கம் மத நல்லிணக்கமே அன்றி வேறல்ல.

இத்தகைய சைவ கத்தோலிக்க மத நல்லிணக்கத்தை குறைக்கவேண்டும் என்ற கண்ணோட்டம் விடுதலைப்புலிகள் மேலாட்சிக் காலத்திலேயே கத்தோலிக்கருக்கு இருந்தது.

1998இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயில்  முன்பு கத்தோலிக்கர் மரியாள் சிலை வைத்தார்கள் சைவர்களின் எதிர்ப்பையும் மீறி கத்தோலிக்கர்கள் நிறுவினார்கள்.

சைவர்கள் விடுதலைப்புலிகளிடம் முறையிட்டதால் மரியாள் சிலை நீங்கியது அடாத்துக் கத்தோலிக்கரை விடுதலைப்புலிகள் விரட்டினர் தலைமை தாங்கிய பாதிரியாரைக் காணவில்லை.

எனக்குத் தெரிந்த கத்தோலிக்க அத்துமீறல்களை மேலாதிக்க முன்னெடுப்புகளை பட்டியலிடுகிறேன் மன்னார் ஆயர் மறுப்பாரா? நல்லிணக்கத்தை வளர்க்கிறேனே எனத் தன்வாயால் சொல்லுவாரா?

அடாவடித்தனம் அத்துமீறல் ஆக்கிரமிப்பு ஆதிக்க நோக்கம் இவையே மன்னார் ஆயரின் நோக்கமா அல்லது அறம் அன்பு அருள் என இயேசு பிரான் காட்டிய வழிகள் மன்னார் ஆயரின் நோக்கமா?

ஊழியப் பட்டியல் அன்று 
அட்டூழியப் பட்டியல்

1.   நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் உருவாக்கியுள்ளார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

2.   திருக்கேதீச்சரக் கற் கோயிலை உடைத்து மன்னார்க் கோட்டையையும் ஊர்காவற்துறைக் கடல் கோட்டையையும் கட்டிய போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் நேற்று அருவி ஆற்றங் கரையில் மரியாள் சிலையை வைத்த காலம் வரை மன்னார் மாவட்டம் முழுவதையும் கத்தோலிக்க மயமாக்கும் முயற்சியில் வெற்றிபெற்றே வருகின்றனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

3.   திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில் 1964 வைத்தியநாதன் - எமிலினியாசுப்பிள்ளை உடன்பாட்டை மீறி 2010 தொடக்கம் உலூர்தம்மாள் தேவாலயத்தைக் கட்டினர். சைவர்களின் மனத்தில் ஆறாப் புண் தந்ததே இந்த நிகழ்வு. சிங்களவர் ஒப்பந்தங்களை மீறுகிறார்கள் என ஆயர் இராயப்பு மதகுரு இம்மானுவேல் போன்றோர் செனீவா உள்ளிட்ட உலக அரங்குகளில் கூறுவர். மன்னாரில் ஆயரே உடன்பாடுகளை அப்பட்டமாக மீறுவர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

4.   கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டார். பின் கல்வி வலயத்தார் தலையிட்டனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

5.   மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் ஆதரவுடன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்தார். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. சைவ அன்பர் தலையிட்டு நான்கே நாள்களில் பாதையைத் திறந்தார்.

6.   முழுக்க முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. களத்துக்கு வந்தவர், சைவருக்கு ஆறுதல் கூறியவர் சைவ அன்பரும் தமிழகச் சைவ அன்பர்களுமே.

7.   வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றினர் கிறித்தவர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

8.   சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்கக் கோயில் ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச்சென்றாரே காணொளி ஆதாரம் உண்டே. சைவர்களைக்கு ஆறுதல் சொல்ல யார் வந்தார்கள்? சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

9.   அரசின் நிதி பெற்று, எந்த அநுமதியும் பெறாமல் சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அந்தத் தேவாலயத்தையும் சைவர்களுக்காக ஒதுக்கிய நிலப் பகுதியையும் இணைத்து மதில் கட்டக் கத்தோலிக்கர் முயன்றபோது தடுக்கச் சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

10.               ஆள்காட்டிவெளி, தள்ளாடி என சைவக் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும், சைவர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பதுமாக மதவெறியர் நல்லிணக்கத்தைக் குலைக்க முற்படுகையில் சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

11.               சைவர்களின் நந்திக்கொடியைக் காலால் மிதித்தார்கள். மகாசிவராத்திரிக்கான வளைவை உடைத்தார்கள். வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கண்டிக்கவிலலை, நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லை. உடைத்த குண்டர்களுக்கு மறைமுகமாக அளித்த ஆதரவும் தமிழர் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் அவர்களைப் பிணையில் எடுத்த சோக நிகழ்வும் மன்னார் மாவட்டச் சைவர்களை, உங்களுக்கு வாக்களித்த சைவர்களைத் துயரத்தில் சோகத்தில் துன்பத்தில் மீறாத அழுகையில் ஆழ்த்தியுள்ளது. சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

12.               தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்ட முயன்றார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. வழக்கு நீதிமன்றத்தில்.

13.               திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு ஏ32 வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை வைத்துள்ளார்கள். சைவர்களை அவமதிக்கிறார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

14.               கற்கடந்த குளம் கற்குளம் எனப் பல ஊர்களில் சைவர்கள் கணிசமாக வாழ்ந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி பெற்று ஏ32 சந்திப்புச் சாலைகளில் கிறித்தவச் சின்ன வளைவுகள் கட்டி உள்ளார்களே. சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

15.               செட்டியார்மகன், அருகிலுள்ள கிராமம். 100 சைவக் குடிகள். நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் துணைத்தலைவராக உள்ள மெதடிஸ்த திருச்சபையினர் 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர். செபக் கூடங்களை அமைத்தனர். சைவக் கோயில்களை இடித்தனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

16.               கத்தோலிக்கரும் முகமதியரும் மன்னார் மாவட்டச் சைவர்களைக் குறிவைத்து மதம் மாற்றுகிறார்கள். சைவர்கள் தமக்காகப் பேச, குரல் கொடுக்கத் தலைமை இன்றித் தவிக்கிறார்கள்.   

17.               வெற்றி பெற்றபின் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மன்னார் மாவட்டச் சைவர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இழைத்து வரும் கொடுமைகளை அநீதிகளை குற்றங்களை தீமைகளை சைவ வாக்காளர் இப்பொழுது அடுக்கடுக்காகச் சொல்கிறார்

சைவ மக்கள் கட்சிக்கு வாழ்த்து

மன்னார் மாவட்டத்தில் 

1 சைவ வாக்கு வங்கியை உருவாக்கி

2 மன்னாரில் பிறந்து வளர்ந்த சைவ வேட்பாளர் ஒருவர் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன்

3 மன்னாரின் சைவர்களின் குரல் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன்

4 மன்னார் மாவட்டம் வவுனியாவுக்கும் முல்லைத்தீவுக்கும் வழிகாட்டியாகி அங்கெல்லாம் சைவ வாக்கு வங்கிகளை உருவாக்க வேண்டும் என்ற பரந்த பார்வையுடன்

ஆதரவு நல்கி வரும் அன்பர்கள்
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற உழைக்கின்ற தொண்டர்கள்
யாவரையும் போற்றுகிறேன் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்

மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவில் 103 சைவக் குடும்பங்கள்
ம/134 அரிப்புமேற்கு 4
ம/135 அரிப்புகிழக்கு 1
ம/139 மருதமடு 12
ம/141 பொற்கேணிசப 7
ம/144 சிலாவத்துறை 6
ம/145 சவேரியார்புரம் 26
ம/148 கொக்குப்படையான் 45
ம/149 கொண்டச்சி 2

அவர்களைச் சென்றடைந்து ஒவ்வொரு வீடாகத் தேடித் தேடிச் சென்று அவர்களுக்கு உற்சாகம் கொடுங்கள் 

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் வேட்பாளர் பெயர்களை அறிமுகம் செய்யுங்கள் 

மூன்று வாக்குகளை அளிக்கலாம் என்ற செய்தியைச் சொல்லி யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என வழிகாட்டுங்கள்

ஈருருளி உந்தில் இருவர் சென்றாலே காலை முதல் மாலை வரை பணி புரிந்தால் போதும் 103 இல்லங்களுக்கும் சென்று செய்தி சொல்லி விட்டு வரலாம் 

உடனடியாகச் செல்க.

ஒவ்வொரு நிலதாரி பிரிவுக்கும் ஒருவரைப் பொறுப்பாளர் ஆக்கி அவருடைய பெயர் தொலைபேசி எண் என்பவற்றைப் பெற்று வாருங்கள் 

அவரோடு தொடர்பு கொண்டு அடுத்த கட்டப் பிரச்சாரத்துக்கு செல்ல ஆயத்தம் ஆகுங்கள்

சைவச் செயல் வீரர்களை 
சிவக் காவலர்களை 
ஆர்வத்துடன் அழைக்கிறேன் 

வெற்றி நமதே 
நாளை நமதே

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை

முசலி பிரதேச செயலகம்

வெற்றிக்காக உழையுங்கள் 
உழைப்பு இன்றி வெற்றி இல்லை

திட்டமிடாத உழைப்பு வெற்றியைத் தராது
தகவல்களும் அறிவும் இணைந்தே திட்டமிடலாம்

தகவல் > அறிவு > திட்டம் > உழைப்பு > வெற்றி

தியாகம் இன்றி வெற்றி இல்லை
நேரத்தைத் தியாகம் செய்க

தனது நலத்துக்கான நேரத்தைப்
பொது நலத்திற்காக ஒதுக்குவதே தியாகம்

தனது நலத்துக்கான நிதியைப்
பொது நலத்துக்காக ஒதுக்குவதே தியாகம்

தனது நலத்துக்கான உழைப்பைப்
பொது நலத்திற்காக ஒதுக்குவதே தியாகம்

திட்டம் இடுவோம் வெற்றி அடைவோம்
தியாகத் தீயில் வெற்றி திண்ணம்
உழைப்பின் உயர்வில் வெற்றி உறுதி.

இளம் தொண்டர்களே
வெற்றி நோக்கிப் புறப்படுவீர்.

பாலற்ற தேனீரும் பஞ்சுப் பாணும்
உணவாகுக
ஈர் உருளி உந்துகளில் இருவர் இருவராகப் 
பயணமாகுக

வீடு வீடாகச் செல்க
திருநீறு எடுத்துச் செல்க

இல்லத்தவர் ஒவ்வொருவருக்கும்நெற்றியில் திருநீறு பூசி வாழ்த்துக
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் நோக்கங்களைக் கூறுக
வேட்பாளர் விவரங்களையும் சின்னத்தின் அடையாளங்களையும் காட்டுக
முதல் வாக்கு விருப்பு வாக்கு என மூன்று வாக்குகள் உள்ளதைக் கூறுக
வாக்களிக்கும் நிலையத்துக்குச் செல்லும் சாலைகள் வழி சொல்க

ஐங்கரன் சர்மா வெல்வார்
அவரது பட்டியலில் உள்ள ஒன்பதின்மரும் வெல்வர்
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை வெல்லும்

இவ் வெற்றிகள் 
தமிழுக்கான வெற்றிகள்
சைவத்துக்கான வெற்றிகள்

இன்றைய தகவல்
முசலி குடும்பங்களின் மொத்தம் 8631
முசலி சைவக் குடும்பங்கள் 103
முசலி கிறித்தவக் குடும்பங்கள் 1336
முசலி முகமதியக் குடும்பங்கள் 7022
முசலி புத்தக் குடும்பங்கள் 170

முசலி மக்கள் தொகை மொத்தம் 29,420 
முசலி சைவ மக்கள் தொகை 338
முசலி கிறித்தவக் மக்கள் தொகை 4400
முசலி முகமதிய மக்கள் தொகை 24468
முசலி புத்த மக்கள் தொகை 214

முசலி குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.4 
முசலி சைவக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.3
முசலி கிறித்தவக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.3
முசலி முகமதியக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.4
முசலி புத்தக் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 1.3

வெற்றி நமதே
நாளை நமதே

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
சிவ சேனை

சிவன் கொடுத்த கோடரிச் சின்னம்

சோதனைகள் சுருங்கும் 
வேதனைகள் விலகும் 
போதனைகள் பெருகும் 
சாதனைகள் செழிக்கும்

திருமாலின் ஆறாவது தோன்றல் பரசுராமர்
பெருமான் சிவன் பரசுராமருக்குக் கோடரி கொடுத்தார்

அறம் குன்றும் அதர்மம் பெருகும்
பரசுராமா கோடரியை எடு.
பரசுராமரிடம் சிவன் கூறினார்.

இலங்கை சிவபூமி
ஆதிக்குடிகள் வேடர்
சிவ வழிபாட்டிநர்
சிவன் கொடுத்த கோடரி
பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக 
வேடர்களின் தோள்களில் இன்றும் தொடர்கிறது
சிவபூமியின் ஆதிப் படைக்கலன் கோடரி

பரசுராமருக்கு சிவனே கோடரி தந்தார்
வேடர்களுக்குச் சிவனே கோடரி தந்தார்
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவைக்கும்
சிவனே கோடரி தந்துள்ளார்

அலங்கார வளைவுகளை அழித்தார்கள்
ஆதி மரபுகளைத் துடைத்தார்கள்
அன்பையும் அறனையும் அருளையும் தொலைத்தார்கள்
ஆக்கிரமிப்பாளர்களாக மாறினர் வந்தேறிகள்

அறம் குன்றியது அதர்மம் தலைதூக்கியது
கோடரி ஒரு சின்னமே ஓர் எடுத்துக்காட்டே
சிவன் தன் அடியார்களை இணைக்கும் சின்னம் கோடரி

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை
கோடரிச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகிறது
சிவன் கொடுத்தார் சைவர்கள் மகிழ்ந்தனர்

தமிழ்த்தேசிய மக்கள் பேரவையின் 
வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் 
சிவன் கொடுத்த சின்னத்துடன்

சோதனைகள் சுருங்கும் 
வேதனைகள் விலகும் 
போதனைகள் பெருகும் 
சாதனைகள் செழிக்கும்

வெற்றி நமதே
நாளை நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை

வன்னித் தேர்தல் மாவட்டம்

எவரெசிற்று (Everest) மலையின் உச்சியை அடைவேன்
விடாது முயல்வேன் வெற்றி எனக்கே
என்றவர் எட்மண்டு இல்லாரி (Hilary)

உச்சியை அடைந்தார் 
வெற்றியை அடைந்தார் 
வரலாற்றில் வாழ்கிறார்.

வண்டி மாவட்டத்தில் சைவர் வேட்பாளர் ஆவோம்
சைவத்தின் பெயரில் வெற்றி பெறுவோம்
தவத்திரு தருமராமக் குருக்கள் தலைமையில் சைவ குருமார் ஒன்றுகூடினர்

விளைவு 
சைவத்திற்கு வெற்றி முகம்
தமிழுக்கு வெற்றி முகம்

ஐங்கரன் சர்மா தலைமையில் 
தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை 
வன்னி மாவட்டம் முழுவதற்கும் வேட்பாளர்.

எட்மண்டு இல்லாரிக்கும் ஐங்கரன் சர்மாவுக்கும் வேறுபாடில்லை. இருவரும் வரலாற்று நாயகர்.

வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் பேரவையின் எதிர்காலத்தைத் தொண்டர்களே தீர்மானிக்கின்றனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 
2015 நாடாளுமன்றத் தேர்தலில்

20,965 வாக்குகள் (13%) பெற்ற சுதந்திரக் கட்சி கூட்டணிக்கு ஓர் உறுப்பினர்
39,513 வாக்குகள் (24%) பெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு ஓர் உறுப்பினர்
89,886 வாக்குகள் (54%) பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நான்கு உறுப்பினர்கள்

13,535 வாக்குகள் (8%) பெற்று ஏனையோர் தோல்வி அடைந்தனர்
876 வாக்குகள் (0.5%) பெற்ற மக்கள் விடுதலை முன்னணி தோல்வியடைந்தது

229,205 வாக்காளர்களுள் 164,775 வாக்காளர்களே (71.89%) வாக்களித்திருந்தனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில்
2020 நாடாளுமன்றத் தேர்தலில்

287,013 வாக்காளர்கள்

119,811 வவுனியா மாவட்டத்தில் வாக்காளர் தொகை
88,842 மன்னார் மாவட்டத்தில் வாக்காளர் தொகை
78,360 முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர் தொகை

162,496 சைவ வாக்காளர் (58%) வன்னி தேர்தல் மாவட்டத்தில்

83,867 சைவ வாக்காளர் (70%) வவுனியா மாவட்டத்தில்
22,210 சைவ வாக்காளர் (24%) மன்னார் மாவட்டத்தில்
56,419 சைவ வாக்காளர்(72%) முல்லைத்தீவு மாவட்டத்தில்

வன்னி மாவட்டம் முழுவதும் தோராயமாக 50 ஆயிரம் சைவக் குடும்பங்கள்.

எட்மண்டு இல்லாரி எவரெசிற்றில் ஒவ்வொரு கல்லாக ஒவ்வொரு அடியாக ஏறத்தாழ 60 ஆயிரம் அடிகளை எடுத்து வைத்தார். பனி சறுக்கி அதல பாதாளத்தில் விழுந்த நேரங்கள் உண்டு. 

முன்பு விழுந்த பொழுதெல்லாம் மீண்டு எழுந்தவன் தானே நீ என மலைக் கற்கள் அவரை உற்சாகித்தன. 

கால்கள் கற்களில் இடறிய போதெல்லாம் கற்கள் அவரிடம் சொல்லின, நாங்கள் தடைக்கற்கள் அல்ல மலை ஏறுவதற்குப் படிக் கற்கள்.

தில்லியில் முதலமைச்சரான ஆம் ஆத்மிக் கட்சியின் தலைவர் அரவிந்தர் கெச்சிரவால் தேர்தலில் வேட்பாளராகி, தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றார் நடந்து சென்றார் கைகூப்பி வணங்கினார் வாக்களியுங்கள் எனக் கேட்டார்.

வன்னி மாவட்டத்தில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சத்தியலிங்கம் ஏறி இறங்காத வீடு இல்லை. அதனால் அவர் செருப்புகள் தேய்ந்தன. மூன்று நான்கு சோடிகள் செலவாயின.

வன்னி மாவட்டத்தில் ஒரு வீட்டில் இருந்து அடுத்த வீட்டுக்கு நடந்தால் செருப்புகள் தேயாதா. கூப்பிடு தூரத்தில் கூட அடுத்த வீடு இல்லை.

ஐம்பதினாயிரம் வீடுகளுக்கும் செல்லாமல் வெற்றி இலக்கை அடையலாமா?

ஒவ்வொரு கல்லாக ஏறாமல் எட்மண்டு இல்லாரி எவரெசிற்றை அடைந்திருக்க முடியுமா?

தொடர்ச்சியாக நான் தரும் தகவல்கள் 
அந்தத் தகவல்களை உங்கள் அறிவின் துணையுடன் திட்டமாக்குக. 
திட்டத்தைச் செயலாக்கத் தொண்டர்களை நிலதாரி பிரிவு தோறும் அமைக்க.

ஒவ்வொரு சைவரின் வீட்டுக்கும் சிவக் காவலர் ஒருவர் திருநீறு எடுத்துக்கொண்டு 
கோடரிச் சின்னத்தின் படத்தை எடுத்துக் கொண்டு வேட்பாளரின் படங்களை எடுத்துக்கொண்டு 
ஆகக் குறைந்தது மூன்று முறையாவது செல்லவேண்டும்
வீடுவீடாகச் செல்லவேண்டும் 
சைவ வேட்பாளருக்கு வாக்குக் கேட்க வேண்டும்

எட்மண்டு இல்லாரிக்கு எவரெசிற்றின் உச்சி எட்டும் உயரத்தில் இருந்தது.

அரவிந்தர் கெச்சரிவாலுக்குத் தில்லி முதலமைச்சர் பதவி எட்டும் தொலைவில் இருந்தது. நூறாண்டுப் பராம்பரியம் கொண்ட காங்கிரசுக் கட்சியை வீழ்த்தினார் வலிமைமிக்க பாரதிய சனதாக் கட்சியை வீழ்த்தினார் முதலமைச்சரானார்.

சிவக் காவலர்களே
சைவத் தொண்டர்களே
திருநீற்று நெற்றியர்களே

உங்களுக்காக ஐம்பதினாயிரம் சைவ வீடுகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன 

செல்லுங்கள் வெல்லுங்கள்

வெற்றி நமதே
நாளை நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை

நானாட்டான் பிரதேச செயலகம்

வெட்டுக பள்ளங்கள்
கட்டுக கரைகள்

ஆழத் தோண்டுக
அகல விரிக்க

ஒருவர் அன்று, இருவர் அல்லர்.
பல்லாயிரவர் 
பல ஆண்டுக் காலம்

வெட்டினார்கள் வெட்டினார்கள்
தோண்டினார்கள் தோண்டினார்கள்
கட்டினார்கள் கட்டினார்கள்

கட்டுக்கரை குளம் கட்டினார்கள்.
இலங்கையின் இரண்டாவது பெரிய குளம்

விசயன் வரும்பொழுது கட்டுக்கரைக் குளம் இருந்தது
விசயனுக்காக வந்த பாண்டிய இளவரசி
மாந்தை துறையில் இறங்கினாள் 
கட்டுக்கரைக் குளக் கட்டில் நடந்தாள்
அருவி ஆற்றின் ஓரமாகச் சென்றாள்

சிவ பூமியில் கட்டிய குளம்
சைவ மக்கள் இணைந்து கட்டிய குளம்

கரையான் ஒவ்வொரு மண்ணாக எடுத்துக் கட்டிய புற்று
இன்று நச்சு நாகங்கள் வாழும் புற்று

கட்டுக்கரைக் குளம் சைவ மக்களின் சாதனை
இன்றோ கட்டுக்கரைக் குளத்தால் சைவருக்கு வேதனை

நானாட்டான் பிரதேசச் செயலக நிலங்கள்
கட்டுக்கரைக் குள நீர்ப்பாசனத்தில் வளமாகுமவன

100% சைவராக இருந்த நானாட்டான் பிரிவில்
இன்று 
18% சைவர்கள்
68% கிறித்தவர்கள்
14% முகம்மதியர்
மிகச் சிலர் புத்தர்

கரையான் புற்றெடுக்க நச்சுப் பாம்பு குடி வந்தது.

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவை
நானாட்டானைச் சைவர்களுக்கு மீட்கச் சிவபெருமான் அனுப்பிய கோடரி.

நானாட்டான் குடும்பங்களின் மொத்தம் 6988
நானாட்டான் சைவக் குடும்பங்கள் 1267
நானாட்டான் கிறித்தவக் குடும்பங்கள் 4845
நானாட்டான் முகமதியக் குடும்பங்கள் 829
நானாட்டான் புத்தக் குடும்பங்கள் 47

நானாட்டான் மக்கள் தொகை மொத்தம் 21,767
நானாட்டான் சைவ மக்கள் தொகை 3899 = 18%
நானாட்டான் கிறித்தவக் மக்கள் தொகை 14776 = 68%
நானாட்டான் முகமதிய மக்கள் தொகை 3006 = 14%
நானாட்டான் புத்த மக்கள் தொகை 86

நானாட்டான் குடும்பத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.1
நானாட்டான் சைவத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.1
நானாட்டான் கிறித்தவத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.0
நானாட்டான் முகமதியத்தில் சராசரி உறுப்பினர் எண் 3.6
நானாட்டான் புத்தத்தில் சராசரி உறுப்பினர் எண் 1.8

சைவ மக்கள் இணைந்தால் முடியாதது முடியும்
சைவ மக்கள் இணைந்தால் சாதிக்கலாம்

2020 நாடாளுமன்றதேர்தல் சைவ மக்களுக்குச் சவால்
நானாட்டானில் 1267 குடும்பங்களுக்கும் செல்லவேண்டிய சவால் தமிழ்தேசிய சைவ மக்கள் பேரவைக்கு.

நானாட்டான் நிலதாரி பிரிவுகளையும் சைவக் குடும்பங்களின் எண்ணிக்கையும் கீழே தந்துள்ளேன்

ம/111 இலகடிப்பிட்டி 36
ம/112 இலந்தைமோட்டை 50
ம/113 புதிர்கண்டான் 37
ம/114 இராசூல்புதுவெளி 1
ம/115 கஞ்சித்தாழ்வு 13
ம/116 ஆத்திகுழி 55
ம/117 செம்மண்தீவு 153
ம/118 முருங்கன் 54
ம/119 சுண்டுக்குழி 19
ம/120 சிறுகண்டல் 33
ம/121 பொன்தீவுக்கண்டல் 8
ம/122 காளிமோட்டைப்புளியங்குளம் 4
ம/123 பரியாரிகண்டல் 60
ம/124 கற்கடந்தகுளம் 7
ம/125 இரட்டைக்குளம் 30
ம/126 செட்டியார்கட்டைஅடம்பன் 52
ம/127 இசைமாலைத்தாழ்வு 18
1267

ஒவ்வொரு வீடாகச் செல்வோம்
திருநீற்றுப் பையுடன் செல்வோம்
சைவர்களுக்குத் திருநீறு நெற்றியில் அணிவிப்போம்
கோடரிச் சின்னத்தின் படம் கொடுப்போம்
ஐங்கரன் சர்மா தலைமையிலான வேட்பாளர் பட்டியலைக் கொடுப்போம்
வாக்கு விருப்பு வாக்கு என மூன்று வாக்குகளும் எவ்வாறு இடவேண்டும் என்ற செய்தியை விளக்கமாகச் சொல்லுவோம்.

வீடு வீடாகச் செல்வோம்
வாக்கு வாக்காகக் குவிப்போம்

நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

திருக்கேதீச்சரம் குகைக் கோயில்

1963 கார்த்திகை மாதத்தின் தொடக்க வாரம்.

மாந்தை சந்தியில் உள்ள குகைக் கோயிலை முற்றாக நீக்கி விடுகிறேன். இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன்.

மன்னார் மாவட்டத்துக்கும் சேர்ந்து பொறுப்பாக அக்காலத்தில் ஆயராக இருந்த எமிலினியாசுப் பிள்ளை கூறிய வரிகள் இவை.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைத் தலைவர் கந்தையா வைத்தியநாதனிடமும் கிழக்கிலங்கைக் கடதாசிக் கூட்டுத்தாபனத் தலைவர் தங்கராசாவிடமும் ஆயர் எலுமினியாசுப் பிள்ளை கூறிய வரிகள் இவை.

குகைக்கோயிலை அகற்றுகிறேன் 
ஈடாகக் கத்தோலிக்கர் மீதான வழக்குகளை மீளப் பெறுங்கள்.

ஆயர் கேட்கிறார் 
வைத்தியநாதனும் தங்கராசாவும் உடன்பட்டனர்

வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. வைத்தியநாதன் அனுப்பவிருந்த மூத்த வழக்குரைஞரை வைத்தியநாதன் அனுப்பவில்லை.

வழக்காளி வரவில்லை எனவே குற்றவாளிகளை விடுதலை செய்யுங்கள் என்றனர் கத்தோலிக்கர் சார்பில் வந்த மூத்த வழக்குரைஞர்கள்.

இருசாராரும் வழக்கை மீளப்பெறுவது என ஆயர் உடன்பட்டார்.

தந்திரமாகத் தன் சார்பில் மூத்த வழக்குரைஞர்களை அனுப்பிக் குற்றவாளிகளை விடுவித்தார் ஆயர்.

குகைக் கோயிலையும் ஆயர் உடன்பட்டவாறு அகற்றவில்லை.

மன்னார்ச் சைவர்களே புரிந்துகொள்ளுங்கள்.
கிறித்தவர்கள் அனைத்து வழிகளையும் கையாண்டு தங்கள் மேலாதிக்கத்தைச் சைவர்கள் மீது செலுத்த விரும்புகிறார்கள்.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைக்குள் கிறித்தவர்கள் ஊடுருவியுள்ளார்கள். விளைவாகக் கிறித்தவ மதமாற்றச்  சபையின் துணைத் தலைவர் ஆபிரகாம் சுமந்திரன், கிறித்தவத்துக்கு மதமாற்றத்தை முன்னெடுப்பதற்காக கிறித்தவ அமைப்பிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் மாதச் சம்பளம் பெறும் சாவித்திரியின் கணவர் ஆபிரகாம் சுமந்திரன் திருப்பணிச் சபைக்கு வழக்கறிஞர்.

ஆபிரகாம் சுமந்திரனை வழக்குரைஞராக ஆக்குவதைக் கடுமையாகச் சாடுபவர் தவத்திரு தருமராமக் குருக்கள்.

முந்தைய வழக்கில் கத்தோலிக்கர் விடுதலையானமை தந்திரமாகவே எனக் கந்தையா வைத்தியநாதன் எழுதிவைத்துள்ளார்.

ஆபிரகாம் சுமந்திரன் வழக்குரைஞர் ஆவதில் கிறித்தவர்களின் தந்திரம் உள்ளடங்கியது. புரிந்து கொள்ளுங்கள் மன்னார்ச் சைவர்களே!

அகற்றவேண்டிய குகைக்கோயில் உலூர்தம்மாள் தேவாலயமாக வளர்ந்துள்ளது.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் ஒப்புதலுடன் உலூர்தம்மாள் தேவாலயத்தை அமைத்தோம் என உலகுக்குக் காட்டக் கத்தோலிக்கர் விழைந்தனர்.

கத்தோலிக்கரின் தந்திர வலைக்குள் விழுந்தவர் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் செயலாளர் இராமகிருட்டிணன். 

வலைக்குள் விழுந்தாரா அல்லது தாமாகவே விரும்பிச் சென்றாரா என அவரைத் தான் கேட்கவேண்டும். 

உலூர்தம்மாள் தேவாலயத் திறப்பு விழாவில் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைச் செயலாளருக்குப் பாதிரியார் பொன்னாடை போர்த்துகிறார்.

இந்துக்களின் உணர்வை மதிக்கக் குகைக்கோயிலை அகற்றுவோம் என்று உடன்பட்ட கத்தோலிக்கர். அகற்றுமாறு நெடுங்காலமாக கூறிவந்த திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை.

2020 நாடாளுமன்றத் தேர்தல் மன்னார்ச் சைவர்களின் விழிப்புணர்வுக்கு ஊடகம்.

தமிழ்த்தேசிய சைவ மக்கள் பேரவையின் வேட்பாளர் மன்னார்ச் சைவர்கள் ஆதரவுடன் வெற்றிபெறுவார்களாயின் 

சைவர்கள் மீது மேலாதிக்கம் கொள்ள விழையும் கத்தோலிக்கரின் தந்திரத்தை முறியடிக்கலாம்.

வன்னித் தேர்தல் மாவட்டச் சைவ வேட்பாளர்கள் வெற்றியைச் சைவர்களின் வாக்குகளே தீர்மானிக்கும்.

நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை