Tuesday, December 30, 2025

வண்ணாரில் காற்றாலை குடியரசுத் தலைவருக்கு நன்றி

 ஊடகத்தாருக்கு 


புரட்டாதி 9 வியாழன் (25 9 2025) 


குடியரசுத் தலைவருக்கு நன்றி 


அ. மாதவன்

சிவ சேனை 

மன்னார் - வவுனியா


வடக்கின் வளர்ச்சியை முடக்குக என்ற முழக்கத்துடன் மன்னார் ஆயரும் அடிவருடிகளும் அரசு சாரா நிறுவனங்களின் நிதி வழங்கலுடன் கடந்த 47 நாள்களாக நடத்திவரும் தேவையற்ற போராட்டம் முடிவுக்கு வரவேண்டும்.


மன்னார் மாவட்டத்தின் 35,000 சைவ மக்களின் வேண்டுகோளை இலங்கைக் குடியரசுத் தலைவர் ஏற்றுள்ளார்.


மன்னாரில் காற்றாலைத் திட்டம் நிறைவேறும். வடக்கு வளரும். மன்னார் மக்கள் மாற்று ஆற்றல் காற்றாலைகளின் பயனைப் பெறுவார்கள் என்ற குடியரசுத் தலைவரின் அறிவிப்பைச் சிவ பூமி ஆன மன்னாரின் சைவ மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.


இலங்கையில் தமிழரின் வளர்ச்சியை முடக்க வேண்டும். அவர்கள் ஏழைகளாகத் தொடர வேண்டும். அவர்களை மதம் மாற்றிக் கிறித்தவர்கள் ஆக்க வேண்டும். அதற்குரிய ஏழ்மைச் சூழ்நிலை தொடர வேண்டும். 


திருக்கேதீச்சரத்தை உடைக்க வேண்டும். அங்கே உலூர்தம்மாள் கோயிலைக் கட்ட வேண்டும். முதற்கட்டமாக மாந்தைச் சந்தியில் அடாத்தாகக் கிறித்தவக் கோயில். அடுத்துத் திருக்கேதீச்சர வளைவு உடைப்பு. என மன்னார் ஆயர் இராயப்புவும் அவருக்குப் பின் வந்த ஆயரும்  திட்டமிடுகின்றனர்.


மாற்று ஆற்றல் காற்றாலைகள் வந்தால் மன்னார் வளம் கொழிக்கும் சிவ பூமி ஆகும். எனவே மாற்று ஆற்றல் காற்றாலைகளைக் கொண்டு வராதீர்கள் எனப் பணம் கொடுத்து மக்களை அழைத்து வந்து போராட்டம் நடத்தின கத்தோலிக்க ஏவல் அரசு சாரா நிறுவனங்கள்.


மேதகு குடியரசுத் தலைவர் அநுர திசைநாயக்கா கத்தோலிக்கரின் கள்ள நோக்கத் திட்டத்தை உடைத்தார். மாற்று ஆற்றல் காற்றாலைகளை மன்னாரில் அமைக்க ஆணையிட்டுள்ளார். அவருக்கு இலங்கை வாழ் சைவ மக்களின் நெஞ்சார்ந்த நன்றி.

No comments: