ஊடகத்தாருக்கு
புரட்டாதி 22, புதன் (8 10 2025)
சிவ சேனை
பாலசிங்கம் செயமாறன்
எழுதுகிறேன்
கடமையே உடைமையான பாலித செனவரத்தினர்
2025ஆம் ஆண்டில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு எதுவும் அற்ற சாவகச்சேரிக் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு வாழ்த்துகள்.
சாவகச்சேரிக் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடந்த நான்கு ஆண்டுகள் பணி.
போதைப் பொருள் கடத்தல், சட்டமீறலான மணல் அகழ்வு, கால்நடைக் களவுகள், திருட்டு, தனியார் ஒழுக்க மீறல், யாவையும் சாவகச்சேரியில் கட்டுக்குள் வைத்திருந்தவரே பாலித செனவிரத்தினர்.
அவரது கடமை உணர்வுக்காகச் சிவ சேனை அமைப்பினர் பலமுறை நேரில் சென்று பாராட்டி உள்ளனர்.
யாழ்ப்பாணம் காவல் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரியாக இன்று 8.10.2025 முதல் பாலித செனவரத்தினர்.
சாவகச்சேரியில் வாழ்த்தினோம். யாழ்ப்பாணத்துக்குச் சென்று வாழ்த்துவோம்.
சிவ சேனையின் பாராட்டுகளும் போற்றுதல்களும் வாழ்த்துக்களும் பாலித செனவரத்தினருக்கு எப்பொழுதும் உள.
No comments:
Post a Comment