மார்கழி 11, வெள்ளி (26 12 2025)
எனது அருமை அன்பர்கள், நண்பர்கள், படித்து மகிழ்ச்சி அடையும் இணைப்பை அனுப்பியிருக்கிறேன்.
வரலாற்றில் வாழ்கிறார், உங்கள் அன்பர் என அந்த அறிக்கை சொல்கிறது. நான் வாழ்கின்ற காலத்திலே இவ்வாறான அறிக்கை எனக்குக் கிடைத்த பேறு.
வாஷிங்டனில் ஓர் அமைப்பு.
வெறுப்பை உமிழ்வோரை ஆராயும் அமைப்பு (think tank)
The centre for study of organised hate.
கடந்த 9 ஆண்டுகளாக மறவன்புலவு சச்சிதானந்தன் இலங்கையில் என்ன செய்கிறார்?
இலங்கையின் சமூக சமய கலாச்சார பண்பாட்டு வரைபடத்தை மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
வரலாற்று ஒழுங்குகளை மாற்றுகிறார். புதிய கோணத்தில் அணுகுகிறார். அதற்காக அவர் என்னென்ன எல்லாம் செய்திருக்கிறார் 9 ஆண்டில் அவருடைய சாதனை என்ன?
கடந்த சில ஆண்டுகளாகவே முயன்று படித்து ஆராய்ந்து
அறிவு சார்ந்து தொகுத்துத் தந்திருக்கின்றவர்கள்
திட்டமிட்டு வெறுப்பை உமிழ்பவர்களை ஆய்வோர். சிந்தனைக் குழுமத்தார். ஆய்வு அரங்கத்தார். புலத்துறை முற்றியோர். குழுவாக ஆராய்ந்து இருக்கிறார்கள். இதற்காக தமிழ் தெரிந்தவர்களையும் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வுக்காக நூறாயிரம் அமெரிக்க வெள்ளி ($100,000) வரை செலவு செய்திருக்கிறார்கள்.
32 பக்க அறிக்கையைப் படித்தால் இலங்கையில் மாற்றத்திற்கான விதையை விதைத்து இருக்கிறேன், சங்கிலியன் வழியில் ஆறுமுகநாவலர் வழியில் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.
எனது முயற்சியைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் தடுக்காவிட்டால் முறியடிக்காத விட்டால் இலங்கை வரலாறே திசை மாறும் என எச்சரிக்கிறார்கள்.
என் அருமை அன்பர்களே படியுங்கள்
உங்கள் அன்பர் பணிகளால் நீங்கள் பெருமை அடைவீர்கள். மகிழ்ச்சி அடைவீர்கள்.
உங்கள் அன்பர்களுடன் இந்த அறிக்கையைப் பகிருங்கள்.
பின்வரும் இணைய இணைப்பைச் சொடுக்குங்கள். மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்
https://www.csohate.org/wp-content/uploads/2025/12/Contours-of-Emerging-Hate-in-Sri-Lanka.pdf
நன்றி
No comments:
Post a Comment