Tuesday, December 30, 2025

வீடு வழிபாட்டிடம் ஆகலாமா?

 https://www.facebook.com/share/1BCxFt1Gi8/


புரட்டாதி 19 ஞாயிறு (5 10 2025)


சிவ சேனை 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 

எழுதுகிறேன் 


வீடு கட்ட உரிமம் வழங்குவதோடு 

பிரதேச சபைகளும் 

நகர வளர்ச்சி வாரியங்களும் தங்கள் கடமையை முடித்துக் கொள்கின்றனர்.


கட்டிய வீட்டை வழிபாட்டிடமாக மாற்ற முடியுமா? 


தனி ஒருவர் பூட்டிய அறைக்குளோ 

பூட்டிய வீட்டுக்குள்ளேயோ இருந்து வழிபடுவது விவிலியம் சொல்லும் வழி (மத்தியூ 6.6)


"...நீயோ வழிபட விழைகிறாயா?

உன் வீட்டிற்குள் செல். 

தனி அறைக்குள் அமர்.

கதவைச் சாற்று, 

மறைவிடத்திலிருக்கும் உன் தந்தையை இறைவனை நோக்கி வழிபடு; 

அப்பொழுது மறைவிடத்திலிருந்து பார்க்கும் உன் தந்தை இறைவன் வெளியரங்கமாக உன் வேண்டுதல்களை முழுதும் தருவார்...."


வீட்டைப் பொது வழிபாட்டு இடமாக மாற்றவே முடியாது. 

பொது வழிபாட்டிடம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு

1 பிரதேச சபைகளும் 

2 நகர வளர்ச்சி வாரியமும் 

3 புத்த சாசன அமைப்பும் 

விதிகளை வகுத்துள்ளனர்.


இந்த விதிகளைப் பின்பற்றாமல் 

போருக்குப் பிந்தைய வடக்கு, கிழக்கு மலையகத் தமிழ் சமூகத்தினர் நடுவே

விவிலிய போதனையாளர்களும்

முகமதிய போதனையாளர்களும்

அமைத்துவரும் வழிபாட்டு இடங்கள் தொடர்பாக 

1 உள்ளூராட்சி அமைச்சுகள், 

2 நகர வளர்ச்சி வாரியம் மற்றும் 

3 புத்த சாசன அமைச்சு 

கண்களை மூடிக்கொண்டு இருப்பது 

சைவ சமயத்தவரின் மனித உரிமைகளை, அரசியல் அமைப்பு வழங்கிய மனித உரிமைகளை, மீறுவதும் சைவ சமயத்தவரின் இனப்படுகொலைக்கு வழி கோலுவதுமாவதே

வேதனையிலும் வேதனை

No comments: