Tuesday, December 30, 2025

அரியாலையில் அந்நிய மதமாற்றி

 ஊடகத்தாருக்கு 


புரட்டாதி ஐந்து ஞாயிறு (21 9 2025)


பாலிசிங்கம் செயமாறன்

சிவசேனை 

எழுதுகிறேன். 


அந்நியன் நுழைந்துள்ளான். கட்டுக்கட்டாகப் பணத்தோடு நுழைந்துள்ளான். அரிசிப் பொதிகளோடு நுழைந்துள்ளான். ஆடை அடுக்குகளோடு நுழைந்துள்ளான். விளம்பரத் துண்டுகளோடு நுழைந்துள்ளான். 


சுவரொட்டிகளை ஒட்டி மக்களை அழைத்து நுழைந்துள்ளான். யாழ்ப்பாணம் எங்கும் சுவரொட்டிகள். காந்தி விடுதலை தருகிறார் என்ற பொருளில் பொய்ச் சுவரொட்டிகள். 


காந்தியின் பெயரைப் பயன்படுத்தும் அடாவாடி அன்னியன் வந்துள்ளான். கர்த்தரை நம்புங்கள் கர்த்தரிடம் வாருங்கள் மதம் மாறுங்கள் என்று கூச்சலிட வந்துள்ளான். அரியாலைக்கு வந்துள்ளான். 


450 ஆண்டுகளுக்கு முன்பு வரத் தொடங்கிய அன்றைய பரங்கி அந்நியனின் இன்றைய பரங்கி அடிவருடி வந்துள்ளான். 


அன்றும் சைவத்தமிழரை மதம் மாற்ற வந்தான் திருக்கேதீச்சரத்தை உடைக்க வந்தான். இன்றும் மதம் மாற்ற வந்துள்ளான். சைவக் கோயில்களைச் சாத்தானின் கோயில்கள் என்று கூறி உடைக்க வந்துள்ளான். 


அன்று போர்த்துக்கேயப் படையின் துணையுடன் வந்தான். இன்று சோற்றுக்காக மதம் மாறிய படையுடன் வந்துள்ளான்.


சுற்றுலாவுக்கு வந்தேன் என்கிறான். மற்ற எல்லா மதங்களும் கொடியன என்கின்றான். கர்த்தரை நம்புங்கள் என்கிறான். சுவரொட்டி வழியாக அழைக்கிறான்.


சைவத் தமிழர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அன்று அந்த அந்நியனைச் சங்கிலியன் விரட்டியது போல் இன்றும் இந்த அந்நியனையும் நாங்கள் விரட்டுவோம். காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளோம். கடிதம் எழுதிக் கொடுத்துள்ளோம். 


அந்நியனின் சுவரொட்டிகளுக்கு மாற்றாக நாங்களும் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளோம். 


எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே? சுற்றுலா நுழைவு உரிமத்தில் வந்த அந்நியனே ஓடு. மதம் மாற்றியே ஓடு. உன்னைப் போன்றவர்களை விரட்டவே சிவபெருமான் எங்களுக்கு இந்தப் பிறவியை தந்தார். 


காவல்துறை உன்னைப் பிடிக்க வேண்டும் சுற்றுலா நுழைவு அனுமதி உரிமத்தை மீறிய உன்னை தளையிட வேண்டும். வானூர்தி நிலையம் அழைத்துச் செல்ல வேண்டும் மீண்டும் வர முடியாத அளவு உன்னை நாட்டை விட்டு அகற்ற வேண்டும் 


பால் தினகரனையும் குடும்பத்தையும் அகற்றினோம். 

மோகன் இலாசரசையும் குடும்பத்தையும் அகற்றினோம். 


வன்னிக்கு வந்த மலையகத்துக்கு வந்த கிழக்குக்கு வந்த அத்தனை வெளிநாட்டு மதம் மாற்றிகளையும் அகற்றினோம், விரட்டினோம். 


மத்தியூ இசுற்றாமரே உன்னையும் அகற்றுவோம், ஓட ஓட விரட்டுவோம், ஓய மாட்டோம்.

No comments: