தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய
மதமாற்றிகள் அமைப்பைத் தடை செய்க
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை
பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மணிகள். பயில வந்தனர். ஈருருளி யில் வந்தனர். பள்ளி வளாகத்துள் வழமையான ஈருருளி நிறுத்தத்தில் நிறுத்தினர்.
அரக்க குணத்துடன் உரத்த குரலுடன் தடித்த பொல்லுடன் பெண். ஒருவரன்று, இரு பெண்கள். கிறித்தவப் பெண்கள். அப்பாவி மாணவரைத் தாக்கினர். அப்பெண்களுக்கு இயேசு பிரானின் கொள்கையைக் கற்பித்தாரா? வன்முறையைக் கற்பித்தாரா? அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (American Ceylon Mission, ACM) கிறித்தவ பாதிரியார்.
பிஞ்சுகளின் கால் தோல்கள் வெடித்தன. இரத்தம் பாய்ந்தது. அடிக்கு மேல் அடி. அம்மா ஓலம் அப்பா ஓலம் எனக் கதறினர், கன்றனைய மாணவர். எடு ஈருருளியை. கொண்டுபோ வெளியே. பெண்கள் மிரட்டினர்.
ஏப்பிரல் 9ஆம் நாள். வெள்ளிக்கிழமை, காலை 0800 மணியளவில் நிகழ்ந்தது. தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்துள் நிகழ்ந்தது.
அடித்தவர்கள் கிறித்தவர்கள். அடி வாங்கியவர் சைவ மாணவர். அடி வாங்கியோரில் மூவருக்குக் கடுங் காயங்கள். மருத்துவ மனையில் ஒரு நாள் தங்கி மருத்துவம் பார்த்த காயங்கள்.
படிக்க வந்தோர் துடித்தனர். பாடப் புத்தகங்கள் சிதறின. பள்ளிக் கூடத்துக்குள் இரக்கமற்ற அரக்கிகளின் வெறியாட்டம். சாத்தானின் வெறியாட்டம்.
அப்பாவிகள், ஒன்றும் அறியாதோர், தலைவாரி, நீறிட்ட நெற்றியராய், நிறைவான சீருடையில் வந்தனர். அடி வாங்கி அழுதனர்.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற அறவழிப் பெருந்தகையின் வரிகளை, இயேசு பிரானின் வரிகளை, மனப்பாடம் செய்தவர் பாதிரியார்.
எவரையும் அடிக்கும் நோக்குடன் வராதவர், பாடம் படிக்கும் நோக்குடன் வந்தவர், பால் மணம் மறந்த வளர்பருவச் சிறுவர். திருப்பி அடிக்கத் தெரியாதவர். அவர்களை அடி என்கிறார், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற வரிகளை மனப்பாடமாக்கிய பாதிரியார்.
இயேசு பிரானின் மலை உரை வரிகள் மனப்பாடத்துக்கு மட்டுமே. கூசாது நிலைமாறி வன்முறையில் ஈடுபடுவது கிறித்தவத் திணிப்புக்கு.
வரலாறு
அருள்மிகு அம்பாளின் திருக்கோயில். திருக்கோயிலின் திருமரம் நாகலிங்க மரம். நாகலிங்கப்பூ மரம். அம்பாளின் திருவடிகளை நாகலிங்கப் பூக்களால் நிறைக்கும் மரம்
சங்கிலியன் போரில் தோற்றான். அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலில் வெற்றி முரசு கொட்டினான் தளபதி பிலிப்பு இடிலிவரா. அக் கோயிலை இடித்தான்.
வடக்கே படைகளை அனுப்பினான். கான்சுடன்டைன் தலைமையில் வந்த படைகள் தெல்லிப்பளையில் நாகலிங்கப் பூக்கள் சொரிந்து நல்ல அருள்பாலித்த அம்பாள் திருக்கோயிலைத் தரைமட்டமாக்கின.
தோராயமாக 500 கோயில்களை ஒரு சில வாரங்களில் பிலிப்பு இடிலிவேராவின் படைகள் தரைமட்டமாகின எனப் போர்த்துக்கேய வரலாற்று ஏடுகள் கூறுவதாக எமர்சன் தெனந்து கூறுவார்.
தரைமட்டமாக்கிய கோயில்களின் மேலே எழுந்தன கிறித்தவத் தேவாலயங்கள். துப்பாக்கி முனையில் மிரட்டினர். மதுவும் சோறும் கொடுத்து மருட்டினர். மதம் மாறாவிட்டால் விரட்டினர்.
அங்கியைக் கேட்டவனுக்கு மேலங்கியையும் கொடு என்ற அறத்தை, அயலானை நேசி என்ற அன்பை, கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற அருளைப் போதித்த கிறித்துவின் பெயரால், போர்த்துக்கேயரின் வன்முறையே 400 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு.
அங்கியைக் கேட்டவனுக்கு மேலங்கியையும் கொடு என்ற அறத்தை, அயலானை நேசி என்ற அன்பை, கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற அருளைப் போதித்த கிறித்துவின் பெயரால் தெல்லிப்பளையில் மாணவச் செல்வங்கள் மீது வன்முறையே இன்றைய வரலாறு.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களையும் மன்னியும் என்பது தேவாலயத்தில் வழிபாடு. அயலானைத் தூசிக்க. எதிர்ப்போரை வன்முறையால் அழித்தொழிக்க. இவை போர்த்துக்கேயரின் அன்றைய கூப்பாட்டு வரலாறு.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களையும் மன்னியும் என்பது தெல்லிப்பளைத் தேவாலயத்தில் வழிபாடு. அயலானைத் தூசிக்க.எதிர்ப்போரை வன்முறையால் அழிக்க. இவை தெல்லிப்பளையில் அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) இன்றைய கூப்பாட்டு வரலாறு.
ஒல்லாந்தர் வந்தார்கள். கத்தோலிக்கப் பாதிரிகளை ஓட ஓடக் கலைத்தார்கள். தெல்லிப்பளையில் போர்த்துக்கேயத் தேவாலயத்தை ஒல்லாந்தர் மடமாக்கித் (Dutch Hall) தங்கினார்கள். கிருத்தவப் பெயருடையோருக்கே முன்னுரிமை என்றார்கள். கிறித்தவப் போர்வை ஆட்சியாளர் முன்பு. சைவ வாழ்வு உள்ளத் தேவைக்கு. தெல்லிப்பளையார் சைவர்களாகத் தொடர்ந்தார்கள். சைவத் தமிழரின் கொடுமைகாண் வரலாறு.
ஆங்கிலேயர் வந்தனர். அருள்மிகு அம்மன் கோயிலை இடித்துக் கட்டிய தேவாலயத்தைத் தமதாக்கினர். 1813ஆம் ஆண்டு தெல்லிப்பளை வந்தவர் அமெரிக்க இலங்கை மதமாற்ற அமைப்பினைத் தொடக்கிய நியூவெல் இணையர்.
அறியாமை இருளில், சாத்தானின் நம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்கள் சைவர்கள். அவர்களை மதம் மாற்ற வேண்டும் அறிவிலிகளாக இருப்பவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். நியூவெல் இணையரை அனுப்பிய அமெரிக்கரின் நோக்கம்.
சைவர்கள் கீழானவர். ஐரோப்பியர் மேலானவர். சைவர்கள் நாகரீகம் அற்றவர். கிறித்தவர் நாகரிகர். அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் கற்பனை. (Christian missionaries portrayed the native populations and their beliefs as inferior to European ways of being and living).
சித்த மருத்துவம் போலியானது. மேலை மருத்துவம் மேலானது. திருக்குறளைத் தந்த திண்ணைக் கல்வி மோசமானது. குறுந்தொகை தந்த குருகுலக் கல்வி கீழானது. சுழலும் பூமி எனச் சொல்லும் திருக்குறள் பொய்.
தட்டையானது பூமி எனச் சொல்லும் விவிலியம் மெய். சுழியத் தையும் (0) பின்னங்களையும் ஈந்த தமிழ் கீழானது. சுழியமே தெரியாத உரோம X எனும் எண் வடிவமே மேலானது.
1816இல் தெல்லிப்பளையில் கல வன் பாடசாலையைத் தொடங்கியதன் நோக்கம் படிப்படியாகச் சைவத் தமி ழரை ஆங்கில மொழியாளராக்குக, நாகரீகமுற்றவராக்குக, கிறித்தவராக் குக. (Gradually make the whole Saiva Tamil race in Sri Lanka and South India, English in language, civilized in habits, and Christian in religion). கலவன் பாடசாலையைத் தொடங்கிய இடானியேல் பூர் மற்றும் எட்வடர் வாரனின் நோக்கம் அவையே.
கலவன் பாடசாலை வெற்றி பெறவில்லை. 1823இல் தொடங்கிய உடுவில் பெண்கள் பாடசாலைக்குப் பெண்பிள்ளைகளை மாற்றுகிறார்கள். தொழில்நுட்பக் கல்லூரியாக மாற்றுகிறார்கள். வெற்றி பெறவில்லை. தொடக்கநிலைப் பாடசாலை தனியாகவும் மேல்நிலைப் பாடசாலை தனியா கவும் அமைக்கிறார்கள். வெற்றி பெறவில்லை. கிறித்தவ ஊடுருவல் முயற்சியின் தோல்விகளுக்குக் காரணர், பல்லாயிரம் ஆண்டு கால, வரலாற்றுப் புகழ் மிக்க, சைவத் தமிழப் பராம்பரியத்தைக் காக்க முனைந்த மண்ணின் மரபினரே.
1940இல் இரண்டையும் இணைத்து யூனியன் கல்லூரி என்கிறார்கள்.
ஆங்கியேலயராகுக. சுழலும் பூமியைத் தட்டை என்க. சுழியத்தை விட்டு உரோம X எழுதுக. விளக்கேற்றி வழிபடுவதை விட்டு விளக்கணைத்து விழாக் காண்க. நாகரீகராகுக, பதி, பசு, பாசம் என்னும் அறிவியல் சார்பை விடுக. அப்பமும் மதுவும் அருந்தும் கிருத்துவ மதத்தவராகுக. இவற்றை நடைமுறையாக்க, இலங்கையின் சைவத் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளை உடைக்க, அமெரிக்க இலங்கை மதமாற்றிகள் (ACM) விதைத்த விதைகளே, யூனியன் கல்லூரியும் உடுவில் மகளிர் கல்லூரியும் மானிப்பாய் மருத்துவ மனையும் வட்டுக்கோட்டைப் பயிலகமும்.
அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) சைவத் தமிழ் இன அழிப்பு முயற்சிக்குக் கல்விசார் கருவிகளாயின, தெல்லிப்பளை, உடுவில், மானிப்பாய், வட்டுக்கோட்டை முன்னெடுப்புகள்.
இத்தகைய நச்சு விதைகள், மண்ணின் மரபுகளை முடக்கும். நாகரீக வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும். புற்று நோய் போலப் படிப்படியாக இனத்தின் இறப்பை உறுதிசெய்யும். (Gradually make the whole Saiva Tamil race non-existant).
கல்வியைக் கிறித்தவ மேலாதிக்கத்திலிருந்து அகற்றுவதற்கு முதற்படி கன்னங்காராவின் அனைவருக்கும் இலவயக் கல்வி. அடுத்து நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா. அனைத்துப் பள்ளிகளும் நாட்டுடமை ஆகலாம் என அறிவித்தார்.
அமெரிக்க இலங்கை மதமாற்றிகள் (ACU), தாம் 1940இல் தொடங்கிய தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை அரசுக்குக் கையளித்தனர்.
122 அடி நீளம் 122 அடி அகலம் கொண்ட, கிறித்தவத் தேவாலயம் சார்ந்த நிலம், தெல்லிப்பளைச் சந்தி மூலை நிலம் தவிர்ந்த, பூர்விகத்தில் வரலாற்றுக்கூடாக அருள்மிகு அம்மன் கோயில் நிலங்களாயிருந்து, அடாத்தாகப் போர்த்துக்கேயர் கைப்பற்றிய அனைத்துச் சைவத் தமிழர் நிலங்களும் அரசுக்குரியதாயிற்று, மக்களுக்குரியதாயிற்று.
இன்றைய நிலை
09.04.21இல் இரக்கமற்ற அரக்க குணம் கொண்டோர், மாணவச் செல்வங்களைத் தாக்கிய இடம் மக்களின் சொத்து, அரசின் சொத்து. யூனியன் கல்லூரிச் சொத்து.
இயேசு பிரானின் அறச் செய்தியை மீறி, அடாத்தாகப் போர்த்துக்கேயர், அருள்மிகு அம்மன் கோயிலை இடித்தது போன்ற வரலாற்றுத் தவறை, அமெரிக்க இலங்கை மதமாற்றிகள் (ACU) 09.04.2021 காலை செய்தனர்.
நிலத்தின் உரிமைக்குக் குடியியல் நீதி மன்றத்தை நாடுவதே நாகரீகம், சைவத் தமிழ் நாகரீகம்.
1. மூன்றாம்பிட்டியில் கோயில் வீதியை நான்கரை ஆண்டுகளாக அடைத்த கிறித்தவ பாதிரியார்,
2. திருக்கேதீச்சர வளைவை உடைத்ததாகக் குற்ற உசாவலில் உள்ள கிறித்தவ பாதிரியார்,
3. முசலி, புதுக்குடியிருப்புச் சைவர்களைத் தாக்கக் கம்புகளுடன் கும்பலாகச் சென்ற கிறித்தவ பாதிரியார்,
4. வலம்புரி நாளிதழைத் தாக்க முயன்ற கும்பலின் மூளையான கிறித்தவர்,
5. கேரதீவில் அரச காணியை ஆயரின் காணி என அடாத்தாகப் பெயர்ப்பலகை அமைத்த யாழ்ப்பாணக் கிறித்தவ ஆயர்,
இத்தகைய எண்ணற்ற அடக்குமுறைகள், அட்டூழியங்கள், அடாத்துகள் யாவும்:
அங்கியைக் கேட்டவனுக்கு மேலங்கியையும் கொடு என்ற அறத்தை, அயலானை நேசி என்ற அன்பை, கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற அருளைப் போதித்த கிறித்துவின் பெயரால், 400 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய போர்த்துக்கேயரின் வன்முறை, வரலாறாகாமல் வாழ்வியலாகத் தொடர்கிறது, தீவிரவாதக் கிறித்தவர்களிடையே.
தெல்லிப்பளையில் அப்பாவி மாணவர்களைத் தாக்குவதற்குப் பதிலாக, வன்முறை வெறியே வாழ்வியலாக் கொண்டோர், கல்லூரி முதல்வரை அல்லவா தாக்கியிருக்க வேண்டும். அவரது அறிவுரையோடு ஈருருளிகளை நிறுத்திய மாணவரைத் தாக்குவது, எய்தவன் இருக்க அம்பை நோகும் பேடித்தனம், கோழைத்தனம்.
பாணந்துறையில் உரிமைக் கோயிலில் ஐயரை எரித்த நிகழ்ச்சியே, பதிலடி கொடுக்கும் மனப் பாங்கைத் தன் பிஞ்சு உள்ளத்தில் உருவாக்கியதாகப் பிரபாகரன் கூறியதை எவரும் மறக்கக் கூடாது.
அடியும் உதையும் பிஞ்சு உள்ளங்களில் எதிர்வினை உணர்வை உண்டாக்கும் என, நாகரீகத்தைப் போதிக்க வந்த, கொல்லன் தெருவில் மொட்டை ஊசி விற்க வந்த, அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) அறிவுக்கு எட்டவில்லையா?
இலங்கைச் சைவர்களாகிய நாங்கள், இலங்கையில் மனித உரிமை ஆணைக்குழு முன் முறையிடுவோம். தீவிரவாதக் கிறித்தவரைத் தண்டிக்கும் நிலை வராவிட்டால், ஐநா மனித உரிமை ஆணையம் வரை எடுத்துச் செல்வோம்.
அமெரிக்க இலங்கை மதமாற்றிகள் (ACM) தம் உறுப்பினர்களின் பொதுச் சபையைக் கூட்டி,
1. இயேசு பிரானின் கொள்கைளுக்கு எதிரான தீவிரவாதக் கிறித்தவர்களை அமைப்பில் இருந்து நீக்காவிட்டால்,
2. அமைப்பின் உயர் பதவிகளில் இருப்போர், ஆயர் நிலையில், குருமுதல்வர் நிலையில் உள்ளோர், இயேசு பிரானிடமும் மாணவர்களிடமும் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோராவிட்டால்,
3. அமைப்பின் உயர் பதவிகளில் இருப்போர், தவறுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகாவிட்டால்,
அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) அமைப்பை, வன்முறையைத் தூண்டும் தீவிரவாத அமைப்பாகக் கருதித் தடைசெய்யுமாறு இலங்கை அரசை வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment