Tuesday, June 15, 2021

இராமேச்சரத்துக்குப் பசுப்பால்

இராமேச்சரத்துக்குக் குடமுழுக்குப் பசுப்பால் அனுப்பும் உரிமையை மீட்போம்


மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

பறுவதம் வீடு எது? என வினவும் பலர் இலங்கையில் உள்ளார்கள். 

பர்வதம் என்ற பெயர் அருள்மிகு இராமேச்சரர் திருக்கோயிலில் உடனுறை அம்பாளை குறிக்கும்.

பர்வதவத்தினி அம்பாள் 
இராமேச்சரர் அல்லது இராமநாதர் சிவபெருமான்.

பெண்களுக்குப் பர்வதம் என்ற பெயரைப் போலவே இராமநாதன் என்ற பெயரும் இலங்கையில் பரவலாக ஆண்களுக்கு உரிய பெயர்.

இலங்கைச் சைவர்களுக்கும் இராமேச்சரம் திருக்கோயிலுக்கும் உள்ள தொடர்பு பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலான தொடர்பு.

இலங்கைச் சைவ மன்னர்கள் சிறப்பாக தமிழராக ஆண்ட நாக மன்னர்கள் தொடர்ந்த  தமிழ் அரசுகளின் தலைவர்கள் இராமேச்சரம் திருக்கோயில் திருப்பணிகளை இயற்றியதற்கான கல்வெட்டு இலக்கிய வாய்வழிச் சான்றுகள் ஏராளம் ஏராளம்.

இராமேச்சரம் திருக்கோவிலில் நீராட்ட குடமுழுக்காட்ட பசுப்பால் அனுப்பும் தீவு பசுத்தீவு என்ற நெடுந்தீவு என்ற கல்வெட்டு இலக்கிய வாய்வழிச் சான்றுகள் ஏராளம் ஏராளம்.

இராமேச்சரம் திருக்கோயிலுக்கு நெடுந்தீவில் இருந்து பசுப்பால் அனுப்பும் வழமை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலான வழமை.

மேலை நாட்டார் காலத்தில் இந்த வழமை குறைந்தது எனினும் அவ்வப்போது தொடர்ந்தது 

மேலைநாட்டார் நெடுந்தீவின் பெயரை Delft என மாற்றினார்கள். நெடுந்தீவுக்கும் இராமேச்சரத்துக்கும் உள்ள தொடர்பைத் துண்டித்தார்கள்.

இலங்கையில் சைவர்கள் தொன்றுதொட்டுப் பசும்பாலை அனுப்பி வந்த வழமை குன்றியதால் இலங்கைச் சைவத் தமிழர்கள் வாழ்வில் இன்னல்கள் பெருகின. இராமநாதன் பர்வதம் என்ற பெயர்கள் நீடித்தன. பசுப்பால் அனுப்பும் வழமை அற்றுப்போயிற்று.

நெடுந்தீவிலும் சார்ந்த ஏழு தீவுகளிலும் கால்நடை வளம் பெருக வேண்டும்  ஆடு மாடுகள் பண்ணைகள் பெருகவேண்டும். 

பசுப்பால் இராமேச்சரத்துக்குக் குட முழுக்காற்ற அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புவோம். நிறைவேறும் வரை போராடுவோம்.

 சிவ சேனை
சிவபெருமானையும் முருகப்பெருமானையும் அம்பாளையும் பிள்ளையாரையும் கடவுளர்களாகச் சைவர்கள் கொள்வார்கள்

பரமண்டலத்தில் இருக்கும் பிதாவையும் அல்லாவையும் முறையே கிருத்துவர்களும் முகமதியர்களும் கடவுளாகக் கொள்வார்கள்

சைவர்களின் கடவுளர்களையே புத்தர்களும் கடவுளர்களாக் கொள்வார்கள்

வினைவழி தாயின் வயிற்றில் கருவுற்று பிறவி எடுத்த அனைவரும் மனிதர்களே 
அவர்களுள் சைவர்களுக்கு அருளாளர்கள் இருந்திருக்கிறார்கள்
அருளாளர்கள் காலத்துக்கு காலம் சைவர் இடையே தோன்றி அன்பையும் அறத்தையும் அருளையும் உழைத்திருக்கிறார்கள் சைவக் கடவுளர்களைப் பாடிப் போற்றியிருக்கிறார்கள்

புத்தரும் இயேசுவும் முகமது நபியும் தாயின் வயிற்றில் கருவுற்றுப் பிறவி எடுத்த அருளாளர்கள்.

இலங்கையில் கடவுளை வழிபடுவோர் கடவுள்களின் படங்களை வைத்து வழிபடுவார்கள் உருவங்களை வைத்து வழிபடுவார்கள்

வினைவழி பிறவி எடுத்தோர் கடவுளர்கள் அல்ல என்பதால் அவர்களை கடவுள் உருவங்களுக்கோ படங்களுக்கும் சமமாகச் சைவர்கள் வைக்க மாட்டார்கள்

இலங்கையில் சைவக் கடவுளர்களுக்குச் சமமாகப் புத்தரையும் இயேசுவையும் மக்காவின் படத்தையும் வைத்து வழிபடுவது அலுவலகங்கள் பள்ளிக்கூடங்கள் பேருந்துகள் முதலான இடங்களில் நோயாகப் பரவி வருகிறது.

புத்தரையும் இயேசுவையும் படமாக வழிபட விரும்புபவர்கள் சைவ சமயத்தில் வினைவழி பிறவி எடுத்த அருளாளர்களின் படங்களை சமமாக வைத்து வழிபட வேண்டுமே அன்றி சைவக் கடவுளர்களைச் சமமாக வைத்து வழிபடக் கூடாது என்ற இயக்கத்தைத் தொடங்க வேண்டிய கடமை சிவ சேனைக்கு உண்டு.

இந்தக் கருத்தை எவ்வளவு பரவலாக சொல்ல முடியுமோ அவ்வளவு பரவலாக திரு அருட்செல்வன் அவர்களும் திரு மதி அவர்களும் மற்றும் சைவ அன்பர்களும் எடுத்துச்சொல்ல இயக்கம் ஆக்க வேண்டிய கடமையில் உள்ளார்கள்

No comments: