Tuesday, June 15, 2021

குருந்தம் குன்று

 பொய் சொல்லுகிறேனா? இலாபம் தேடுகிறேனா?

நம்பகத்தன்மையே எனக்கு இறைவன் தந்த பெரிய சொத்து.

குருந்த மரம் மாணிக்கவாசகருக்கு அருளுரை வழங்கிய மரம்

ன்றைப் பார்த்தேன். இக்காலத்தில் இல்லாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அக்காலத்தில் கட்டியிருக்கிறார்கள்.

பல இடங்களில் குழிகள் தோண்டி இருக்கிறார்கள். சில குழிகள் மிக ஆழமானவை. புதையலைத் தேடித் தோண்டிய குழிகள் எனச் சைவ அடியவர்கள் கருதுகிறார்கள்.

நேர்த்திக்கடனை ஒட்டிக் கடந்த பல ஆண்டுகளாக (நூற்றாண்டுகளாக இருக்கலாம்) சைவர்கள் குருந்தம் குன்றில் ஏறி உச்சியில் கோயில் இடிபாடுகள் இடையே சூலம் ஒன்றை வைத்துப் பொங்கல் பொங்குவதும் ஆதி சிவனாருக்குப் படைகள் செய்வதும் வழமை.

பொய் சொல்லுகிறேனா? இலாபம் தேடுகிறேனா?
நம்பகத்தன்மையே எனக்கு இறைவன் தந்த பெரிய சொத்து.

அந்த வழமையைத் தொடர்ந்து போருக்குப் பின்னரும் மக்கள் சென்று பொங்கி வருகிறார்கள் கடந்த 6 மாதத்துக்கு முன்பு அங்கிருந்த சூலத்தை அகற்றினார்கள்.

அகற்றியதைக் கேட்டறிந்த கடந்த சில வாரங்களுக்கு முன்பு நானும் கொடிகாமம் திரு மோகன் அவர்களும் குருந்தம் குன்றுக்குச் சென்றிருந்தோம் 

குமிழமுனையிலிருந்து செல்கின்ற குண்டும் குழியுமான சாலையில் பயணித்தோம். 

வயல்களுக்கு நடுவே உழவு எந்திரப் பணியகம் மற்றும் பண்ணை ஒன்றில் பணிபுரிந்த ஒருவரிடம் குன்றுக்கு வழி கேட்டோம்.

அவர் எங்களுடன் வந்தார். தனது ஈருருளியில் வந்தார். எங்களை மலை உச்சி வரை அழைத்துச் சென்றார் 

சறுக்கும் சாய்வுகளில் வழுக்கும் குறுணிக் கற்றரையில் 79 வயதான எனக்குக் கை கொடுத்தார். குருந்த மர வேர்களைப பிடித்தும் மரக்கிளைகளைப் பிடித்தும் சறுக்கும் சாய்வுகளைச் சமாளித்தோம். 

உச்சியை அடைந்தோம். சூலம் இருந்த இடத்தைக் காட்டினார்.

எத்தனை முறை சூலத்தை வைத்தோம்.
எத்தனை முறை அகற்றினார்கள்! என்ற செய்தியைச் சொன்னார்.

சூலம் இருந்த இடம் திருக்கோயில் அமைந்த இடம். வழிபாட்டிடம். கருங்கல் தூண்கள் நின்றன. அடித்தளம் கருங்கல்லினால் ஆனது. முன்னே படிக்கட்டுகள் உடைந்த நிலையில்.

சுவர்கள் இல்லை. கூரை இல்லை. முகடு இல்லை. திருக்கோயிலாக அங்கு இல்லை. இடிபாடுகளின் நடுவே பீடம். அந்தப் பீடத்தில் சூலத்தை வைத்து வணங்குவதாக அந்த அடியவர் கூறினார்.

பின்னே சிறிய சமவெளி. அச் சமவெளியில் அரசரும் அரசியரும் வந்து தங்கிப் போனார்களாம்!.

திருக்கோயில் இருந்த இடத்திற்கு எதிரே ஆழமான குழி. வட்டவடிவமான குழி. அங்கே போவதற்குப் படிக்கட்டுகள். உடைந்து மண்மூடி இருந்தன. முழங்காலை மடித்து ஏற முடியாத உயரமான படிக்கட்டுகள். அக் குழியையும் சென்று பார்த்தோம்.

ஏறிய வழி ஒன்று. இறங்கிய வழி மற்றொன்று. இறங்கிய வழியில் கிணறு. நீர் இல்லை. நெடுங் காலத்துக்கு முந்தைய கட்டுமானம்.

எதிர்ப் புறத்தில் அன்மையில் கட்டி உடைந்த கட்டடம். அருகில் புதிதாக அடித்தளம் கட்டுவதற்கான பள்ளங்கள்.

அடித்தளத்துக்காகப் பள்ளத்தை அமைக்கும்போது நீதிமன்றத்தில் வழக்கு. கட்டுமானத்துக்குத் தடை. சைவசமய வழிபாட்டுக்கு தடையில்லை என்ற தீர்ப்பு.

நானும் திரு மோகன் அவர்களும்  வேறு எவரையும் சந்திக்க முடியவில்லை. 79 வயதில் குன்றில் ஏறி இறங்கிய களைப்பு ஒருபுறம். குண்டும் குழியுமான சாலையில் வண்டியை நான் ஓட்டினேன். முதுகை முறிக்கக் கூடிய களைப்பு மறுபுறம். குமிழமுனை வந்து சேர்ந்தோம்.

பொய் சொல்லுகிறேனா? இலாபம் தேடுகிறேனா?
நம்பகத்தன்மையே எனக்கு இறைவன் தந்த பெரிய சொத்து.

நாங்கள் சென்று மீண்டபின்  மீண்டும் அங்கே சூலத்தை வைத்து பொங்கிப் படைத்தார்களாம். அந்தச் சூலத்தையும் அகற்றினார்களாம்.

மார்கழி திருவெம்பாவைக் காலத்தில் சூலம் ஒன்றை வைத்து பொங்கிப் படைத்தார்கள். பழைய சூலங்களுக்கு நேர்ந்ததே இந்தச் சூலத்துக்கும் நேர்ந்தது. இந்தச் சூலமும் மறைந்தது.

அரசு குழு வந்த நாள் 18 1 2021.

அதற்கு முந்தைய நாள்களுள் ஒருநாள் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் குழு, குன்றின் மேல் ஏறிச் சென்று பார்த்தார்கள்.

அவர்களைக் கேட்க வேண்டும். அங்கு சூலம் இருந்ததா என? 

எனக்கு தெரிந்தவரையில் நாடாளுமன்றக் குழு குன்றின் உச்சிக்குப் போய் இருந்தால், அவர்கள் சூலத்தைப் பார்த்திருக்க முடியாது. ஏன் என்றால் சூலம் அங்கே இருக்கவில்லை.

பொய் சொல்லுகிறேனா? இலாபம் தேடுகிறேனா?
நம்பகத்தன்மையே எனக்கு இறைவன் தந்த பெரிய சொத்து.

சூலத்தை அகற்றினார்கள். திருக்கோயிலை இடித்தார்கள். அந்த இடத்தில் புத்தர் சிலையை நாட்டினார்கள் என அரசுக் குழு அங்கு சென்று மீண்ட பின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

எனக்கு வியப்பு 
இல்லாத சூலத்தை எப்படி அகற்றுவார்கள்?
இல்லாத திருக்கோயிலை எப்படி இடிப்பார்கள்?

அரசுக் குழு சிறிய புத்தர் சிலை ஒன்றைக் கொண்டுசென்று மேசையின் மீது வைத்து வழிபட்டுப் பின் அச் சிலையைதா திருப்பிக் கொண்டு வந்து விட்டார்கள் என்ற செய்தியையும் படித்தேன் 
வைக்காத புத்தர் சிலையை எப்படி வைத்ததாக் கூறுவார்கள்?

சூலத்தை அகற்றினார்கள்.
திருக்கோயிலை இடித்தார்கள்.
புத்தர் சிலையை வைத்தார்கள்.
என்ற செய்தி சென்னையில் தில்லியில் அமெரிக்காவில் ஆத்திரேலியாவில் என உலகெங்கும் ஊடகங்களில் வெளிவந்தது அறிந்தவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு கேட்டார்கள்.

சைவத் திருக்கோயிலை இடிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? எனக் கேட்டார்கள் 
சூலத்தை அகற்ற்ப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? எனக் கேட்டார்கள்
சைவத் திருக் கோயில் இருந்த இடத்தில் புத்தர் சிலையை வைக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? எனக் கேட்டார்கள்.

குமிழமுனையில் வாழ்கின்ற சைவ அன்பர்களின் பெயர்களையும் தொலைப்பேசி எண்களையும் எம் இருவரையும் அழைத்துச் சென்ற அடியவர் தந்திருந்தார்.

அத் தொலைப்பேசி எண்களில் உள்ளவர்களை அழைத்தேன். அவர்களிடம் விசாரித்தேன்.

பொய் சொல்லுகிறேனா? இலாபம் தேடுகிறேனா?
நம்பகத்தன்மையே எனக்கு இறைவன் தந்த பெரிய சொத்து.

சூலம் அங்கு இல்லாததால் அதை அகற்றவில்லை. 
திருக்கோயில் அங்கு இல்லாததால் அதை இடிக்கவில்லை.
புத்தர் சிலையை மீள எடுத்துக் கொண்டு போனதால் அதை அங்கு வைக்கவில்லை. 

என்ற செய்திகளைத் திரட்டாகத் தந்தார்கள்.

நீதிமன்ற ஆணையை மீறி குன்றில் ஏறும் வழியைச் செப்பனிட மரங்களை அழித்துள்ளார்கள். 

ஏறும் வழியைச் செப்பனிடுவது கட்டுமானம் என்று நான் கூறினேன்.
நீதிமன்ற அவமதிப்பு உண்டு என்றும் கூறினேன்.

உலகம் முழுவதும் இருந்து உணர்ச்சியுடன், சினத்துடன் பேசிய சைவ அன்பர்களுக்கு நான் நிலையை விளக்கி எழுதினேன். அதுவே என் அறிக்கையாக ஊடகத்தில் வெளிவந்தது.

பொய் சொல்லுகிறேனா? இலாபம் தேடுகிறேனா?
நம்பகத்தன்மையே எனக்கு இறைவன் தந்த பெரிய சொத்து.

1961ஆம் ஆண்டு எனக்கு 20 வயது.

தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பாக என் முதல் நடவடிக்கைகள் தொடங்கிய காலம். கடந்த 60 ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றின் அரசுகளுடன் பேசி நான் சார்ந்த மக்களுக்காக நாட்டுக்காக ஆதரவு பெற்று உரிமை மீட்கும் பணியில் இருக்கிறேன்.

1973இல் இருந்து இலங்கைப் புலனாய்வு அமைப்பினர் என்னை விசாரித்து வருவார்கள். அடிக்கடி விசாரித்து வருவார்கள். அக்காலத்தில் அரசியல் உரிமையற்ற ஆட்சித் தகுதி அரசு அலுவலராக இருந்தேன்.

2010 யாழ்ப்பாணம் வந்து வீட்டைத் திருத்தி வாழலாம் எனக் கருதி இங்கு வந்த பொழுது படையினர் என்னை விசாரிக்க அழைக்க நான் சென்னைக்குத் தப்பி ஓடினேன். அடுத்த ஈராண்டுகள் யாழ்ப்பாணம் வரவே முடியவில்லை.

2012-ல் யாழ்ப்பாணம் வந்தேன். போரில் சின்னாபின்னமாகிய என் வீட்டைத் திருத்தி வாழ்ந்து வருகிறேன்.

கடந்த எட்டு ஆண்டுகளில் ஆகக்குறைந்தது நூறுமுறை புலனாய்வுப் பிரிவினர் என்னை விசாரிக்க வந்திருப்பார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடக்கத்திலும் இடையிலும் என்னை விசாரித்திருக்கிறார்கள்.

சென்னையில் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் அவதியுறும் என் மக்களுக்காக மருந்துகளைக் கடத்த முயன்றேன் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் ஒருமாத காலம் இருந்தேன்.

சென்னை நீதிமன்றம் என் கடவுச்சீட்டை முடக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொரு முறை நான் பயணிக்கும் போதும் சென்னையில் பயங்கரவாதத் தடைச் சட்ட நீதிமன்றத்தில் என் கடவுச் சீட்டை எடுக்க விண்ணப்பித்து இரு மாதங்கள் காத்திருந்த பின்பே பயணிப்பேன்

சென்னையில் வாழ்ந்த காலத்தில் அந்தந்த நடுவன் அரசின் மாநில அரசின் புலனாய்வுப் பிரிவினர் மாறி மாறி என்னை விசாரித்து இருக்கிறார்கள். அச்சுறுத்தி இருக்கிறார்கள்.

 2000 ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஆணையும் எனக்கு தந்தார்கள். நீதிமன்றம் சென்று அந்த ஆணைக்கு இடைக்காலத் தடை பெற்றேன். ஆனாலும் அந்த ஆணை இன்னும் உயிரோடு இருக்கிறது.

சிங்கப்பூருக்குள் நான் செல்ல இப்பொழுதும் தடை. விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பிவிடுவார்கள். விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்து அந்தத் தடைகளை நீக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றும் இருக்கிறேன்.

பொய் சொல்லுகிறேனா? இலாபம் தேடுகிறேனா?
நம்பகத்தன்மையே எனக்கு இறைவன் தந்த பெரிய சொத்து.

கடந்த 60 ஆண்டுகளாக நான் சந்தித்து வரும் தொல்லைகளைத் தொல்லைகள் எனக் கொள்ளேன்.

என்னைவிடக் கூடுதலான தொல்லைகள் துயரங்கள் துன்பங்கள் இழப்புகள் கண்டோரை எண்ணிப் பார்ப்பேன்.

கடந்த 60 ஆண்டுகளில் ஒருமுறையேனும் அரசியல் பதவியை நாடியவனல்லன். பொது நிதியைக் கையாண்டவல்லன். மக்களின் வரிப்பணத்தில் அரசியல் நடத்தி வாழ்வாதார வசதிகள் கிஞ்சித்தேனும் பெற்றவன் அல்ல.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருக்கேதீச்சரம் சென்றிருந்தேன். புத்த பிக்கு ஒருவரின் சைவ நில ஆக்கிரமிப்புக் கண்டேன். அவரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.

நான் அங்கு நின்றதையும் அவர் ஆக்கிரமித்த நிலத்தை பார்த்ததையும் படையினர் காணொளியாக பதிந்தனர் போலும்!

மன்னார் காவல் நிலையத்தில் அந்த காணொளியை காட்டி புத்தபிக்கு என் மீது புகார் அளித்திருக்கிறார். புகார் அளிக்கும் போது அங்கு நின்ற என் நண்பர் உடனடியாக எனக்குத் தொலைப்பேசியில் அழைத்து எனக்கு விவரம் சொல்லி ஆறுதலாக இருங்கள் என்றார்.

பொய் சொல்லுகிறேனா? இலாபம் தேடுகிறேனா?
நம்பகத்தன்மையே எனக்கு இறைவன் தந்த பெரிய சொத்து.

No comments: