Tuesday, June 15, 2021

உயிர்ப் பலித் தடைப் போர் 2014

 திருக்கோயில்களில் உயிர்ப்பலி வேண்டாம்.

கொல்லாமை சைவ சமய வாழ்வியல். மனத்தை வழிப்படுத்த வழிபாடு. வழிபாட்டுக்கு வன்முறை வழியல்ல என்கின்றன உலகச் சமயங்கள் சைவ சமயம் உட்படக் கூறுவன.
தொண்டு மனத்தை வழிப்படுத்தும்.
பூசனை மனத்தை வழிப்படுத்தும்.
ஒடுக்கம் மனத்தை வழிப்படுத்தும்
தெளிவு மனத்தை வழிப்படுத்தும்.
நான்கு நிலைகள் வழிபாட்டுக்கு.
இவ்வழிகள் அறிவு சார்ந்தன, அன்பு சார்ந்தன, அறம் சார்ந்தன. அருள் சார்ந்தன.
அறிவுக் குறைவால், அன்புத் தளர்ச்சியால், அறம் தவிர்ந்ததால், நம்பிக்கைச் சிதறலால் திருக்கோயில்களிலே உயிர்ப்பலி கொடுக்க முனைகிறார்கள்.
அன்பை வளர்க்க, அறத்தைப் பெருக்க. அருளில் திளைக்க விழைவோர் திருக்கோயிலில் உயிர்ப்பலிக்கு ஒவ்வார்.
வன்முறை வாழ்வாகாது. உயிர்க்கொலை வழிபாடாகாது. அறிவுக் குறைவாலும் நம்பிக்கைத் தளர்ச்சியாலும் சமூகம் திசை திரும்புகையில் அறத்தை வலியுறுத்துவது எம் கடன். அன்பை வலியுறித்துவது எம் கடன். அருளைப் பெருக்கும் வழிகளை நாடுவது எம் கடன்.
சமூகம் வழிதவறிப் போவதாகக் கருதும் நாம், அச்சமூகம் நன் நெறிகளைக் கைக்கொள்ள வலியுறுத்துவது எம் கடன்.
புன்மையான நெறியில் செல்வோரின் போக்கை விலக்க வேண்டும். மேலான நன்னெறியில் வாழ்வதற்குரிய வழியைக் காட்டவேண்டும்.
இந்தக் கடமைகளை அறவழியில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய சமூகம் அமைதியான வழியில் எடுத்துக்கூறவேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. (திருக்குறள் 324)
இந்த நோக்குடன் 13.6.14 காலை 0600 மணி முதலாக, மாலை 1800 மணிவரை தெல்லிப்பளை, துர்ககை அம்மன் கோயில் படலைக்கு எதிரே, சாலை ஓரமாக அறவழிப் போராட்டக் குழுவினராகிய நாம் உண்ணாநேன்பிருந்தோம்.
படங்கள் பார்க்க
Jataayu B'luru, Navaratnavel Sangarappillai மற்றும் 3 பே2 கருத்துகள்
ர்
விரும்பு
கருத்துத் தெரிவி

No comments: