Tuesday, June 15, 2021

திருக்கேதீச்சரம் மாந்தைச் சந்தி

 அன்புடையீர் 

வணக்கம் 
கையொப்பம் அற்ற பெயரற்ற கடிதமாக என்னை விழித்துக் குறிப்பு அனுப்பினீர்கள்.

1. மதமாற்றத் தடை 
2. சைவக் கோயில்கள் பிற மதத்தவரின் ஆக்கிரமிப்பு
 3. சைவ வாக்குவங்கி உருவாக்குதல் 
ஆகிய மூன்று நோக்கங்களை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமை புரட்டாதி 30, 2047 (16 10 2016)இல் வவுனியாவில் சிவசேனை என்ற அமைப்பைத் தொடங்கினோம்.

இலங்கையிலுள்ள திருக்கோயில்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றும் அவற்றில் உள்ளூர்ச் சைவ சமய அமைப்புகள் கவனம் கொள்ள வேண்டும் என்றும் கருதினோம்.

திருக்கேதீச்சரம் திருக்கோயிளுள் பிற மதத்தவர் ஊடுருவல் தொடர்பாக நீங்கள் எழுப்பிய குரலையும் குறிப்பையும் மன்னாரில் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் பொறுப்பாளர்களுள் ஒருவரான திரு நடேசானந்தன் அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்.

இதற்கு முன்பு இத்தகைய குறிப்பு ஒன்றை இரணை இலுப்பைக்குளத்திலிருந்து சிவக்காவலர் திரு கேதீச்சரன் எனக்கு அனுப்பி இருந்தார்கள். அதையும் திரு நடேசானந்தன் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.

மன்னார் யாழ்பாணம் ஏ32 நெடுஞ்சாலையில் மாந்தைச் சந்தியிலிருந்து மேற்குப் புறமாகக் கடற்கரை வரை உள்ள நிலப்பகுதியில் சைவர்களைத் தவிர வேறு எவரும் உரிமை கோரக் கூடாது, சைவர்களைத் தவிர வேறு எவரும் பணிகளில் ஈடுபடக்கூடாது, 

இத்தகைய ஆழ்ந்த எதிர்கால நோக்குடையவர்களாக திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைத் தலைவர் ஆக இருந்த திரு சிவபாதசுந்தரம் அவர்களும் செயலாளராக இருந்த திரு சிவசுப்பிரமணியம் அவர்களும் இருந்தார்கள்.

எனது தாய்வழிப் பாட்டனாரின் உடன்பிறவாத் தமையனார்களான திரு நாகலிங்கம் திரு குமாரசாமி இருவரும் ஏ32 நெடுஞ்சாலைக்கு மேற்குப் புறமாக உள்ள நிலம் முழுவதும் திருக்கேதீச்சரத்திற்கு சொந்தமாக வேண்டும் என அப்போதிருந்த ஆளுநருடன் அரசாங்க அதிபருடன் பேசி ஏலத்தில் நிலம் வந்தபொழுது திருக்கேதீச்சரம் திருக்கோயிலுக்கு உடமை ஆக்குவதில் முன்னின்று உழைத்தவர்கள். (15.11.1893இல் திரு குமாரசாமி அவர்கள் திரு நாகலிங்கத்துக்கு எழுதிய கடிதம் பார்க்க)

எனக்குப் பாட்டனார் முறையான திரு நாகலிங்கம் அவர்களின் துணைவியார் ஐரோப்பியர். திரு பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் துணைவியாரும் ஐரோப்பியர். எனினும் அவர்கள் இருவரும் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் தம்முடைய துணைவியாரையும் சைவ சமயப் பணிகளுக்கு உள்வாங்கியவர்கள்.

அவர்கள் மன்னாரில் வாழ்ந்து சைவ சமயத் துணைவியாரையும் கத்தோலிக்க வைப்பாட்டிகளையும் வைத்திருந்தால் திருக்கேதீச்சர நிலம் இன்று கத்தோலிக்கர் வயமாக இருக்கும்.

அதுவும் அந்த வைப்பாட்டிகள் மூலம் குழந்தைகளைப் பெற்று இருந்தால் அக்குழந்தைகள் ஞானநீராட்டல் பெற்று இருந்தால் திருக்கேதீச்சர நிலத்தைக் கத்தோலிக்கர் தம்வயமாக்கி இருப்பர்.

மன்னார் ஆயரின் ஆணைகளை ஏற்று நடக்கும் கத்தோலிக்க வைப்பாட்டிகள் அவர்களைத் துணையாக வைத்திருப்பவர்களைக் கத்தோலிக்கம் சார்ந்து செயற்படுமாறு தூண்டுவது இயற்கையே. 

இன்றைய திருக்கேதீச்சரம் திருக்கோயிலில் அலுவலக அறைக்குள்ளேயே சிலுவை தொங்கும் அளவுக்கு கத்தோலிக்கம் ஊடுருவியுள்ளது. சிலுவையைத் தொழுத பின்பே அர்ச்சனை சீட்டு வழங்குகின்ற பணியாளர்கள் அங்கு இருந்தார்கள் என எனக்குச் சொல்கிறார்கள்.

மாந்தைச் சந்திக்கு மேற்கே நிலம் முழுவதையும் சைவர்களே வைத்திருக்க வேண்டுமென்ற எனக்குப் பாட்டனார் முறையான திரு நாகலிங்கம், எனக்குப் பாட்டனார் முறையான திரு குமாரசாமி, எனக்கு உறவினரான திரு சிவசுப்பிரமணியம், இவர்கள் வலிந்து வலிந்து அரசுக்கும் மக்களுக்கும் எடுத்துக் கூறி அதற்கான நிலைப்பாட்டிலிருந்து மாறவே இல்லை.

அவர்களின் மரபணுக்கள் என்னுள்ளும் புதைந்து இருப்பதால் அந்த மரபணுத் தொடர்ச்சியின் பேறான விளைவான வழி வழி வந்த அடியவனான எனக்கு மாந்தைச் சந்திக்கு மேற்கே உள்ள நிலம் அனைத்தும் சைவர்களுக்கே சொந்தமானது என நிலைப்பாடு கொண்டுளேன்.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைச் செயலாளராக நான் கடமையாற்றியிருந்தாரல் மாந்தையில் பாலாவியின் கரைமேல் அத்துமீறி அமைத்திருக்கும் உலூர்தம்மாள் தேவாலயத் திறப்பு விழாவுக்குச் சென்று அதைக் கட்டிய பாதிரியாரிடம் பொன்னாடை பெற்றிருக்க மாட்டேன்.

திருக்கேதீச்சர ஆலய அருள் வரவேற்பு வளைவுக்கு மன்னார்ப் பிரதேச சபை உரிமம் வழங்கிய பின்னும் நெடுஞ்சாலை வளர்ச்சி ஆட்சியம் உரிமை வழங்கிய பின்பும் பல்லாண்டுகளாக அந்த வரவேற்பு வளைவைக் கட்டாமலே செயலாளராக நான் தொடர்ந்து இருக்க மாட்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு மன்னார்ப் பிரதேச சபை வரவேற்பு வளைவு கட்ட உரிமம் வழங்கிய பொழுது அனைத்து தடைகளையும் மீறி ஓரிரு நாட்களுள் அங்கே வளைவுக்கான கட்டுமானத்தை எழுப்பி இருப்பேன். அலங்காரப் பணிகளைத் தொடர்ந்து செய்ய முயன்று இருப்பேன். ஒருவார காலத்தில் அந்த உரிமத்தை மன்னார் பிரதேச சபை மீளப் பெறும்வரை காத்திருந்திரேன்.

மன்னார் ஆயரின் ஆணைக்குள் செயல்படக்கூடிய வைப்பாட்டிகளை என் முன்னோர் எவரும் வைத்திருக்கவில்லை. 

ஒவ்வொரு களிமண்ணாக வரிசை வரிசையாகச் சென்று சேர்த்துத் தனது உமிழ்நீரைப் பசையாக்கிக் கரையான் தனக்கு வீடு அமைக்கிறது. புற்று எடுக்கிறது. அந்தப் புற்று நச்சுப் பாம்புகளின் வாழ்விடம் ஆனால் கரையான்களின் நோக்கம் நிறைவேறுமா?

திருக்கேதீச்சரத்தில் பிற மதத்தவர் திருவிழாக்காலங்களில் கடைகளை அமைக்கிறார்கள் எனச் சொல்கிறீர்கள்.

வற்றாப்பளையிலும் திருவிழாக் காலங்களில் ஏனைய திருக்கோயில் திருவிழாக்களிலும் இத்தகைய குறைபாடுகள் இருப்பதாக என் கவனத்திற்கும் சைவ மக்கள் கவனத்திற்கு முன்பு கொண்டு வந்திருக்கிறார்கள்.

பெயரைக் குறிப்பிடாமல் கையொப்பம் இடாமல் நீங்கள் குறிப்பு அனுப்பி இருந்தாலும் அந்தக் குறிப்பில் சொல்லியவை சைவ மக்களின் கவனத்துக்கு உரியன.

சைவக் கோயில்களில் பிற மதத்தவரின் ஆக்கிரமிப்பு என்ற வரப்புக்குள் சிவசேனையின் பணிகளாகவும் கொள்ளக் கூடியன.

நான் உங்களுக்கு அனுப்புகின்ற இந்த குறிப்பை திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைப் பொறுப்பாளர்களுள் ஒருவரான திரு நடேசன் அவர்களுக்கும் அனுப்புகிறேன். 

இரணை இலுப்பைக்குளம் சிவக்காவலர் திரு கேதீச்சரன் அவர்களின் குறிப்பையும் பெயரற்ற உங்களது குறிப்பையும் அவற்றுக்குரிய எனது பதில் குறிப்பையும் திரு நடேசானந்தன் அவர்கள் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையாரின் கவனத்துக்குக் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு

நன்றி

No comments: