Friday, June 18, 2021

Mandaitheevu

 

Mandaitheevu

Maravanpulavu K. Sachithanathan

Saenthan Maaran (சேந்தன் மாறன்)

Saenthan Maaran (சேந்தன் மாறன்) ruled from Mandaitheevu. He had a brother who aspired to be the King. A fight broke out. At that time Buddha was in Sri Lanka. He taught them of knowledge-based values of life and of the foolishness of fighting for a throne.

Saenthan Maaran issued coins that had the ancient Tamizhi script around the Pandya fish symbol. An image of the coin is below. Mahavamsam (in Chapter 15 verses 127 to 131) mentions the ruler Saenthan Maaran from Mandaitheevu having ruled around 500 years before Thiruvalluvar.

Mandaitheevu has had a continuous Tamil legacy. It has been peopled by Tamils from pre-historic times.

Yoga Swaami

My father was a teacher at Mandaitheevu for few months, just after he completed his Teachers Certificate course. He travelled by bicycle from Maravanpulavu daily to Jaffna. He took a boat to cross the shallow lagoon, reached the Mandaitheevu coast to walk to the school.



Being a vegetarian, he ate with the temple priest. On his return, he will eat a thalisai - a cup of rice pongal at the Chathiram in Jaffna Town before cycling back 16 km to Maravanpulavu. The walls of the Chathiram are there even now.

It was on one of these cycling trips he was hailed to be halted near Navatkuli by Yoga Swaami, who was on his way to Poonakari. My father, being the only son of his widowed mother was never addressed in singular tense either at home or around.

Yoga Swaami called him, Adei, the worst form in the singular tense. My father had not met Yoga Swaami before. My father stopped. ‘Adei Kanapathipillai, I am coming to Arulmiku Vallaikulam Pillayar Koil. Will you be there?’ asked Yoga Swaami. My father replied in the affirmative.

My father enquired about the identity of the person from the passers-by. They told him that he was Yoga Swaami. My father cycled back, stood before Yoga Swaami with his folded-ironed-shawl tied to his waist, arms folding at chest level, humbly asked the Swaami for the date.

Eventually, Yoga Swaami was a regular visitor to Arulmiku Vallaikulam Pillayar Koil.

Bullock cart

Thus Mandaitheevu had some significance to my father. Later when he married my mother, she came with the landed property at Mandaitheevu, given to her by her father.

When I and my sister were studying in the 4th standard at Sakalakalaa Vidhyaasaalai, Maravanpulavu, my father decided to shift us to the school in Jaffna, where he was teaching then. It was Jaffna Hindu College Tamil Mixed School at Vannaarpannai, Jaffna town.

Initially, we three, I, my elder sister, and my father walked to the Thachchanthoppu station 1.5 km away to take the suburban train to Jaffna station. From there we walked to the school another 1.5 km away.

It was during these morning walks to the station, or during the return walk from the station to Maravanpulavu, that we sometimes saw Kesavan’s father Mr. Sandrasegaram as a student standing in front of his house wearing a sarong, with one foot on the ground and the other bent to rest on the wall, smiling at us. 

A few weeks later my father acquired a cart and two bulls. We had a sincere dedicated person in Aiyampillai who was assigned to drive the cart to take us to the station every morning and pick us back in the evening.



Once my grandmother fell sick. I remember accompanying her in the cart all the way to a doctor in Jaffna town for treatment.

Vannaarpannai

Not happy with this arrangement, a few months later my parents decided to move to the house of my maternal grandparents in Jaffna town at Vannaarpannai. We walked a km of distance to the school from this house. My father moved between Maravanpulavu and Jaffna as he could not give up his responsibilities to my grandmother who continued at Maravanpulavu. He was a cultivator. He was an elected (unopposed) member of the local Grama Sabai. He was the secretary of the local Cooperative society. He had responsibilities at Arulmiku Vallaikulam Pillaiyaar Koil.

The house where we lived in Jaffna was where I was born, at dawn on Kaarthikai Mirukaseeridam, two days after the full moon deepam day, eight years earlier. The house is still there in the form and shape it had when we were there. Thick mud-walled rooms, roofed with dried palmyrah leaves woven on palmyrah beams. We had a broad long verandah connecting the three rooms. A tiled roof shed was in front. The kitchen was a separate unit. 

I was shifted to Jaffna Hindu College for the fifth standard. My sister went to Jaffna Hindu Ladies College. 

I went sitting on the front bar of the cycle with my father to Maravanpulavu for the weekends.

Mandaitheevu land sold

My father found this arrangement convenient. However, the house where we were in was not very comfortable.

A year later, Mandaitheevu landed property was sold to buy land, four lachams in extent, one residence away from where we were living. My father started building a new house.

At Maravanpulavu, we were living under a low cadjan thatched roof, with mud walled rooms and a verandah. Kitchen was in another hut. For drinking water, there was a well in the nearby paddy field. For bathing we went to Vallaikulam.

At Vannaarpannai, it was again a mud walled house as described before.

The new house had four rooms, attached chimneyed kitchen, a back verandah, a front verandah, cemented walls and floor, neem timber doors and windows, tiled roof on palmyrah beams, a well, and a toilet. We were at the construction site during evenings and weekends.

When I was in the sixth standard, we moved to the new house which had no electricity.

Proceeds from the sale of my mother’s land at Mandaitheevu and loans from my mother’s relatives, changed our living standard. I missed, the mud-walled spaces, the fresh air, the gentleness of the wind, baths at Vallakkulam, prayers at the temple, endless walks in the paddy fields, chasing the calves, the moon-lit nights, the respectful love and care of the neighbours, and most of all my paternal grandmother’s lap.  

Tuesday, June 15, 2021

American Ceylon Mission

Attacks on Hindus by American Ceylon Mission

Maravanpulavu K. Sachithananthan,

Siva Senai, Sri Lanka 

It is as though three white markings of sacred ash (Vibhuthi or ThiruNeeru) have been pasted on the students’ foreheads. This holy ash, symbol of Saiva Hindu faith, proudly adorns every forehead as the children enter the Thellipalai Union College, a school in northernmost Sri Lanka. 

Of them, only around a 100 are non-Hindus. The majority of students, around 900, are Saivaite Hindus. They come to school, early in the morning adorning the three white bands of sacred ash in their forehead. 

Most of them come in bicycles. The school Principal has allotted an area for the bicycle park. That area is around an unused old depleted building, which was once the residence of the school principal. 

In 1813 CE when the Christian Reverend Samuel Newell arrived at Thellipalai in Jaffna (in northern Ceylon), his point of irritation was seeing these triple-lined holy ash on the foreheads of every one he saw. “They were Satan infested”, he raged within. Colonial Governor Sir Robert Brownrigg encouraged him to formulate ways of erasing these triple markings of sacred ash adorning the foreheads most Hindu people in Jaffna. Thus the American Ceylon Mission (ACM) came into existence. 

The word “Mission” is defined thus - “Christian Mission is an organised effort to spread Christianity. Missions often involve sending individuals and groups, called missionaries, across boundaries, most commonly geographical boundaries, for the purpose of proselytise (conversion to Christianity, or from one Christian tradition to another); this involves evangelism (preaching a set of beliefs for the purpose of conversion), and humanitarian work, especially among the poor and disadvantaged.” (Lawrence Loresio, Christian mission Christianity, page 1)

“Go and make disciples of all nations, baptising them in the name of the Father and of the Son and of the Holy Spirit, and teaching them to obey everything that I have commanded you.” (Matthew 28: 16–20)

“We must at present do our best to form a class, who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect”. … “A single shelf of good European library was worth the whole native literature of India and Arabia” - Lord Macaulay’s Minutes on Indian Education, 2nd February 1835.

Thus the overriding intention of the American Ceylon Mission in the Jaffna peninsula, was evangelization among Hindu Saivaites. Education was a tool and a prelude to evangelization. Their cunning tactics were:

- Recruit Saiva Hindu children in the guise of educating them. 

- Restrict and allow entry only to those students who agree to discard the holy ash. 

- Restrict and allow entry to those with European names (converts). 

- The Tamil Hindu sacred scripture “Thirukkural” says that the earth is a globe. Bible says that the earth is flat. So, Discard Thirukkural to accept the Bible. 

- Saivaite Hindu invention was cipher (numerical zero in the Hindu decimal system). Cipher is a phonetic derivative of Saiva. Discard cipher to accept Romanised numerals. Don’t use 10. Use X. 

- Hindu New Year is born on an astronomically calculated date. Discard that to accept the non-scientific date which coincides with Jesus era.

- Discard the home grown scientific concepts to accept the stagnant unscientific alien dogma.

The “Educate to evangelise” mission was a big failure at Thellipalai. Numerous missionaries followed the lead missionary Rev. Edward Warren. All failed to make any impact. 

The 1810 CE USA Massachusetts formulation, American Board of Commissioners for Foreign Mission’s vision (to convert and make every Jaffna man into a Christian) failed miserably.

There were only a few rice-bowl Christians. These rice-bowl converts were brainwashed and told that Saivaite Hindu population and their beliefs are inferior to European ways. Dr. Samuel Green proclaimed, “I’ll go to a land of darkness and heal the bodies and enlighten the minds of some error bound people”.

When the two arrogant Christian women at Thellipalai, slapped the cheeks of the innocent post-primary Saiva Hindu students (adorned with the triple lined holy ash in their foreheads) and beat them with wooden logs on the prime of the morning of 9th April 2021, they were echoing the USA Massachusetts formulation of 1810 CE. 

‘Slapping on the face is violence’ ostensibly according to Jesus Christ. “You have heard that it was said, ‘An eye for an eye and a tooth for a tooth.’ But I say to you, do not resist the one who is evil. But if anyone slaps you on the right cheek, turn to him the other also.” (Mathew 5-38, 39).

However, for the American Ceylon Mission, if Hindu students park their bicycles in their rightful parking area, then the Christians can slap them on their faces, and break their bones with sticks until they are hospitalised. 

They justify their deviation from their own scriptures because the holy ash triple lined forehead is “satanic”. An eye for an eye and a tooth for a tooth is the norm for ACM?

Two bigoted Christian women, tools in the hands of a few malicious Christian clerics, beat Hindu students with wooden logs to the point of hospitalisation, courting arrest by the Jaffna police, all in the name of Christ.

Knowing very well, attacking the Principal for allocating the bicycle park in an area inside the school could have been disastrous, they attacked the innocent students.. They could have been booked also for preventing a government official from doing his duty in addition to the criminal charges on the violent attack. The clerics who master-minded the attack knew very well the consequences of violently attacking a public servant while on duty.

Unprovoked manifestation of violence in the formative minds of innocent students could prove disastrous in the long run. Many decades ago, when a frail Hindu priest was kerosene-doused and burnt alive inside a Hindu temple by a mob in southern Sri Lanka, a formative young mind (located hundreds of kilometres away in the distant north) promised to take revenge. Consequently, this beautiful island was pushed into four decades-long cycle of revenge killings.

“Come what may, the supposed trespasser deserves kicks and beatings”, told the Christian clerics to the two Christian women attackers while ostensibly saying the following at the pulpit: “If you forgive others their trespasses, your heavenly Father will also forgive you, but if you do not forgive others their trespasses, neither will your Father forgive your trespasses”.

Ruthless violence, encouraging mayhem towards rioting has been part of Portuguese, Dutch and English invaders’ pogromed program of Christian colonisation. “Reduce your oppressor to ashes” was their motto. What happened at Thellipalai on 9th April 2021 was reminiscent of this Christian invaders’ legacy. 

How can one in the name of Christ, slap the tender soft innocent lovely cheeks of those post-primary kids. These tender Hindu children came to learn. Their parents had high hopes on the future of these kids. Unprovoked, the two Satanic Christian women abused, kicked, and thrashed these innocent children with wooden logs with the full backing of Christian clerics. That shock will remain in the subconscious minds of these kids for a long time to come. Revenge may be an unavoidable consequence.

All in the name of retrieving a piece of land with a depleted building inside the school premises. Except for the 122 ft. by 125 ft. area with the church, all remaining land (once property of the Arulmiku Amman Shakti Hindu temple under the sacred Nagalinga tree (Couroupita guianensis), which was destroyed by the invading Christian Portuguese), was handed to the state, the Government gazette notification says.

The best way to settle the dispute would have been to follow Jesus, who said, “If someone wants to sue you and take your tunic, let him have your cloak as well”. (Mathew 5-40), and give away even the 122 ft. by 125 ft. area with the church. On the contrary if you disobey everything that Jesus have commanded you (as in Matthew 28: 16–20) then bring the dispute before the civil court. 

A Christian nun was seen carrying a placard at a procession in Jaffna. It read, “Did Buddha preach you to encroach into other peoples lands?” She was pointing her finger at the post-independent Sri Lankan Buddhist hegemony. She conveniently forgot the 400 years Christian encroachment into Hindu lands. Hypocrisy inadequately described!

Post-war violence by organised Christianity is on the rise in the Hindu heartland of Sri Lanka. To cite a few of the many instances:

1. A Christian cleric had the audacity to block the procession pathway, public road, of a Hindu temple continuously for 4 years at Moontraampiddy, in Mannar District, until I intervened to remove the block. 

2. A Christian cleric led a gang of thugs armed with wooden logs to beat Hindu neighbours at a village in Musali in Mannar district. The village has been renamed forcibly as Xavierpuram (after the Mannar Inquisiton’s infamous Francis Xavier). On seeing the video clipping of this horror, I rushed to Musali to be with the Hindus.

3. Media freedom was threatened when Christian hooligans threatened the “Valampuri” Tamil Newspaper office in Jaffna for publishing a news on renaming of Hindu-named roads in a Hindu-majority area with Christian names. I protested by observing a dawn-to-dusk fast in front of the Bishops House, Jaffna.

4. Government land in a Saivaite Hindu-majority Niladhari division, Thanakalappu, (with no other religionists) is being encroached by the Christian Bishop of Jaffna. When I wrote to the Divisional Secretary, she wrote to the Bishop to vacate forthwith and remove the falsely-claiming name board. 

5. A Christian cleric is among the accused who led the mob and demolished the Maha Shivarathri arch at the historical Thiru Ketheeshwaram Shiva temple, (erased to the ground by Christian Portuguese invaders 400 years ago). 

Institutionalised Christian groups are engaged in pre-planned organised violence on Hindus. Very many instances could be cited in recent years. This recent Thellipalai incident is not out of sudden provocation. It has been on the anvil for few months. 

In almost all cases of planned institutionalised Christian violence against Hindus, Hindus never retaliated. We Hindus protested non-violently. We also took these violent provocations to the attention of the police and through them to the courts.

American Ceylon Mission is on a war path on Hindus. They are behaving as though this sacred Shiva Bhoomi is a Christian colony of the West. They are invoking the Biblical directive, followed by the directives of the American Board of Commissioners for Foreign Missions established in 1810 CE. ACM is funded by a trust in the US. With foreign funding, American Ceylon Mission is promoting violence in Sri Lanka.

If only they, “obey everything that Jesus have commanded” (Matthew 28: 16–20) and live as Christians, then that will promote inter-faith peace, harmony and understanding not only with Hindus but also with Buddhists and Mohamedans in Sri Lanka .

If they do not apologize for these violent provocations at Thellipalai, and seek pardon from those innocent students, I strongly appeal to the Government of Sri Lanka to ban the American Ceylon Mission in Sri Lanka.

PS: Video of the two Christian women (backed by Christian clerics) attacking the Thellipalai Union College students can be seen in short clip below: 

https://youtu.be/l1xpVk8Qn4k


அமெரிக்க இலங்கை மதமாற்றிகள்

 தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய 

மதமாற்றிகள் அமைப்பைத் தடை செய்க

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிவ சேனை

பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மணிகள். பயில வந்தனர். ஈருருளி யில் வந்தனர். பள்ளி வளாகத்துள் வழமையான ஈருருளி நிறுத்தத்தில் நிறுத்தினர். 

அரக்க குணத்துடன் உரத்த குரலுடன் தடித்த பொல்லுடன் பெண். ஒருவரன்று, இரு பெண்கள். கிறித்தவப் பெண்கள். அப்பாவி மாணவரைத் தாக்கினர். அப்பெண்களுக்கு இயேசு பிரானின் கொள்கையைக் கற்பித்தாரா? வன்முறையைக் கற்பித்தாரா? அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (American Ceylon Mission, ACM) கிறித்தவ பாதிரியார். 

பிஞ்சுகளின் கால் தோல்கள் வெடித்தன. இரத்தம் பாய்ந்தது. அடிக்கு மேல் அடி. அம்மா ஓலம் அப்பா ஓலம் எனக் கதறினர், கன்றனைய மாணவர். எடு ஈருருளியை. கொண்டுபோ வெளியே. பெண்கள் மிரட்டினர். 

ஏப்பிரல் 9ஆம் நாள். வெள்ளிக்கிழமை, காலை 0800 மணியளவில் நிகழ்ந்தது. தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்துள் நிகழ்ந்தது. 

அடித்தவர்கள் கிறித்தவர்கள். அடி வாங்கியவர் சைவ மாணவர். அடி வாங்கியோரில் மூவருக்குக் கடுங் காயங்கள். மருத்துவ மனையில் ஒரு நாள் தங்கி மருத்துவம் பார்த்த காயங்கள்.

படிக்க வந்தோர் துடித்தனர். பாடப் புத்தகங்கள் சிதறின. பள்ளிக் கூடத்துக்குள் இரக்கமற்ற அரக்கிகளின் வெறியாட்டம். சாத்தானின் வெறியாட்டம். 

அப்பாவிகள், ஒன்றும் அறியாதோர், தலைவாரி, நீறிட்ட நெற்றியராய், நிறைவான சீருடையில் வந்தனர். அடி வாங்கி அழுதனர்.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற அறவழிப் பெருந்தகையின் வரிகளை, இயேசு பிரானின் வரிகளை, மனப்பாடம் செய்தவர் பாதிரியார். 

எவரையும் அடிக்கும் நோக்குடன் வராதவர், பாடம் படிக்கும் நோக்குடன் வந்தவர், பால் மணம் மறந்த வளர்பருவச் சிறுவர். திருப்பி அடிக்கத் தெரியாதவர். அவர்களை அடி என்கிறார், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற வரிகளை மனப்பாடமாக்கிய பாதிரியார்.

இயேசு பிரானின் மலை உரை வரிகள் மனப்பாடத்துக்கு மட்டுமே. கூசாது நிலைமாறி வன்முறையில் ஈடுபடுவது கிறித்தவத் திணிப்புக்கு.

வரலாறு 

அருள்மிகு அம்பாளின் திருக்கோயில். திருக்கோயிலின் திருமரம் நாகலிங்க மரம். நாகலிங்கப்பூ மரம். அம்பாளின் திருவடிகளை நாகலிங்கப் பூக்களால் நிறைக்கும் மரம் 

சங்கிலியன் போரில் தோற்றான். அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலில் வெற்றி முரசு கொட்டினான் தளபதி பிலிப்பு இடிலிவரா. அக் கோயிலை இடித்தான். 

வடக்கே படைகளை அனுப்பினான். கான்சுடன்டைன் தலைமையில் வந்த படைகள் தெல்லிப்பளையில் நாகலிங்கப் பூக்கள் சொரிந்து நல்ல அருள்பாலித்த அம்பாள் திருக்கோயிலைத் தரைமட்டமாக்கின.

தோராயமாக 500 கோயில்களை ஒரு சில வாரங்களில் பிலிப்பு இடிலிவேராவின் படைகள் தரைமட்டமாகின எனப் போர்த்துக்கேய வரலாற்று ஏடுகள் கூறுவதாக எமர்சன் தெனந்து கூறுவார். 

தரைமட்டமாக்கிய கோயில்களின் மேலே எழுந்தன கிறித்தவத் தேவாலயங்கள். துப்பாக்கி முனையில் மிரட்டினர். மதுவும் சோறும் கொடுத்து மருட்டினர். மதம் மாறாவிட்டால் விரட்டினர்.

அங்கியைக் கேட்டவனுக்கு மேலங்கியையும் கொடு என்ற அறத்தை, அயலானை நேசி என்ற அன்பை, கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற அருளைப் போதித்த கிறித்துவின் பெயரால், போர்த்துக்கேயரின் வன்முறையே 400 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. 

அங்கியைக் கேட்டவனுக்கு மேலங்கியையும் கொடு என்ற அறத்தை, அயலானை நேசி என்ற அன்பை, கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற அருளைப் போதித்த கிறித்துவின் பெயரால் தெல்லிப்பளையில் மாணவச் செல்வங்கள் மீது வன்முறையே இன்றைய வரலாறு.

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களையும் மன்னியும் என்பது தேவாலயத்தில் வழிபாடு. அயலானைத் தூசிக்க. எதிர்ப்போரை வன்முறையால் அழித்தொழிக்க. இவை போர்த்துக்கேயரின் அன்றைய கூப்பாட்டு வரலாறு.

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களையும் மன்னியும் என்பது தெல்லிப்பளைத் தேவாலயத்தில் வழிபாடு. அயலானைத் தூசிக்க.எதிர்ப்போரை வன்முறையால் அழிக்க. இவை தெல்லிப்பளையில் அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) இன்றைய கூப்பாட்டு வரலாறு.

ஒல்லாந்தர் வந்தார்கள். கத்தோலிக்கப் பாதிரிகளை ஓட ஓடக் கலைத்தார்கள். தெல்லிப்பளையில் போர்த்துக்கேயத் தேவாலயத்தை ஒல்லாந்தர் மடமாக்கித் (Dutch Hall) தங்கினார்கள். கிருத்தவப் பெயருடையோருக்கே முன்னுரிமை என்றார்கள். கிறித்தவப் போர்வை ஆட்சியாளர் முன்பு. சைவ வாழ்வு உள்ளத் தேவைக்கு. தெல்லிப்பளையார் சைவர்களாகத் தொடர்ந்தார்கள். சைவத் தமிழரின் கொடுமைகாண் வரலாறு. 

ஆங்கிலேயர் வந்தனர். அருள்மிகு அம்மன் கோயிலை இடித்துக் கட்டிய தேவாலயத்தைத் தமதாக்கினர். 1813ஆம் ஆண்டு தெல்லிப்பளை வந்தவர் அமெரிக்க இலங்கை மதமாற்ற அமைப்பினைத் தொடக்கிய நியூவெல் இணையர்.

அறியாமை இருளில், சாத்தானின் நம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்கள் சைவர்கள். அவர்களை மதம் மாற்ற வேண்டும் அறிவிலிகளாக இருப்பவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். நியூவெல் இணையரை அனுப்பிய அமெரிக்கரின் நோக்கம்.

சைவர்கள் கீழானவர். ஐரோப்பியர் மேலானவர். சைவர்கள் நாகரீகம் அற்றவர். கிறித்தவர் நாகரிகர். அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் கற்பனை. (Christian missionaries portrayed the native populations and their beliefs as inferior to European ways of being and living).

சித்த மருத்துவம் போலியானது. மேலை மருத்துவம் மேலானது. திருக்குறளைத் தந்த திண்ணைக் கல்வி மோசமானது. குறுந்தொகை தந்த குருகுலக் கல்வி கீழானது. சுழலும் பூமி எனச் சொல்லும் திருக்குறள் பொய். 

தட்டையானது பூமி எனச் சொல்லும் விவிலியம் மெய். சுழியத் தையும் (0) பின்னங்களையும் ஈந்த தமிழ் கீழானது. சுழியமே தெரியாத உரோம X எனும் எண் வடிவமே மேலானது.

1816இல் தெல்லிப்பளையில் கல வன் பாடசாலையைத் தொடங்கியதன் நோக்கம் படிப்படியாகச் சைவத் தமி ழரை ஆங்கில மொழியாளராக்குக, நாகரீகமுற்றவராக்குக, கிறித்தவராக் குக. (Gradually make the whole Saiva Tamil race in Sri Lanka and South India, English in language, civilized in habits, and Christian in religion). கலவன் பாடசாலையைத் தொடங்கிய இடானியேல் பூர் மற்றும் எட்வடர் வாரனின் நோக்கம் அவையே.

கலவன் பாடசாலை வெற்றி பெறவில்லை. 1823இல் தொடங்கிய உடுவில் பெண்கள் பாடசாலைக்குப் பெண்பிள்ளைகளை மாற்றுகிறார்கள். தொழில்நுட்பக் கல்லூரியாக மாற்றுகிறார்கள். வெற்றி பெறவில்லை. தொடக்கநிலைப் பாடசாலை தனியாகவும் மேல்நிலைப் பாடசாலை தனியா கவும் அமைக்கிறார்கள். வெற்றி பெறவில்லை. கிறித்தவ ஊடுருவல் முயற்சியின் தோல்விகளுக்குக் காரணர், பல்லாயிரம் ஆண்டு கால, வரலாற்றுப் புகழ்  மிக்க, சைவத் தமிழப் பராம்பரியத்தைக் காக்க முனைந்த மண்ணின் மரபினரே. 

1940இல் இரண்டையும் இணைத்து யூனியன் கல்லூரி என்கிறார்கள்.

ஆங்கியேலயராகுக. சுழலும் பூமியைத் தட்டை என்க. சுழியத்தை விட்டு உரோம X எழுதுக. விளக்கேற்றி வழிபடுவதை விட்டு விளக்கணைத்து விழாக் காண்க. நாகரீகராகுக, பதி, பசு, பாசம் என்னும் அறிவியல் சார்பை விடுக. அப்பமும் மதுவும் அருந்தும் கிருத்துவ மதத்தவராகுக. இவற்றை நடைமுறையாக்க, இலங்கையின் சைவத் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளை உடைக்க, அமெரிக்க இலங்கை மதமாற்றிகள் (ACM) விதைத்த விதைகளே, யூனியன் கல்லூரியும் உடுவில் மகளிர் கல்லூரியும் மானிப்பாய் மருத்துவ மனையும் வட்டுக்கோட்டைப் பயிலகமும்.

அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) சைவத் தமிழ் இன அழிப்பு முயற்சிக்குக் கல்விசார் கருவிகளாயின, தெல்லிப்பளை, உடுவில், மானிப்பாய், வட்டுக்கோட்டை முன்னெடுப்புகள்.

இத்தகைய நச்சு விதைகள், மண்ணின் மரபுகளை முடக்கும். நாகரீக வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும். புற்று நோய் போலப் படிப்படியாக இனத்தின் இறப்பை உறுதிசெய்யும். (Gradually make the whole Saiva Tamil race non-existant).

கல்வியைக் கிறித்தவ மேலாதிக்கத்திலிருந்து அகற்றுவதற்கு முதற்படி கன்னங்காராவின் அனைவருக்கும் இலவயக் கல்வி. அடுத்து நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா. அனைத்துப் பள்ளிகளும் நாட்டுடமை ஆகலாம் என அறிவித்தார்.

அமெரிக்க இலங்கை மதமாற்றிகள் (ACU), தாம் 1940இல் தொடங்கிய தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை அரசுக்குக் கையளித்தனர்.

122 அடி நீளம் 122 அடி அகலம் கொண்ட, கிறித்தவத் தேவாலயம் சார்ந்த நிலம், தெல்லிப்பளைச் சந்தி மூலை நிலம் தவிர்ந்த, பூர்விகத்தில் வரலாற்றுக்கூடாக அருள்மிகு அம்மன் கோயில் நிலங்களாயிருந்து, அடாத்தாகப் போர்த்துக்கேயர் கைப்பற்றிய அனைத்துச் சைவத் தமிழர் நிலங்களும் அரசுக்குரியதாயிற்று, மக்களுக்குரியதாயிற்று.

இன்றைய நிலை

09.04.21இல் இரக்கமற்ற அரக்க குணம் கொண்டோர், மாணவச் செல்வங்களைத் தாக்கிய இடம் மக்களின் சொத்து, அரசின் சொத்து. யூனியன் கல்லூரிச் சொத்து. 

இயேசு பிரானின் அறச் செய்தியை மீறி, அடாத்தாகப் போர்த்துக்கேயர், அருள்மிகு அம்மன் கோயிலை இடித்தது போன்ற வரலாற்றுத் தவறை, அமெரிக்க இலங்கை மதமாற்றிகள் (ACU) 09.04.2021 காலை செய்தனர்.

நிலத்தின் உரிமைக்குக் குடியியல் நீதி மன்றத்தை நாடுவதே நாகரீகம், சைவத் தமிழ் நாகரீகம்.

1. மூன்றாம்பிட்டியில் கோயில் வீதியை நான்கரை ஆண்டுகளாக அடைத்த கிறித்தவ பாதிரியார், 

2. திருக்கேதீச்சர வளைவை உடைத்ததாகக் குற்ற உசாவலில் உள்ள கிறித்தவ பாதிரியார், 

3. முசலி, புதுக்குடியிருப்புச் சைவர்களைத் தாக்கக் கம்புகளுடன் கும்பலாகச் சென்ற கிறித்தவ பாதிரியார், 

4. வலம்புரி நாளிதழைத் தாக்க முயன்ற கும்பலின் மூளையான கிறித்தவர், 

5. கேரதீவில் அரச காணியை ஆயரின் காணி என அடாத்தாகப் பெயர்ப்பலகை அமைத்த யாழ்ப்பாணக் கிறித்தவ ஆயர், 

இத்தகைய எண்ணற்ற அடக்குமுறைகள், அட்டூழியங்கள், அடாத்துகள் யாவும்: 

அங்கியைக் கேட்டவனுக்கு மேலங்கியையும் கொடு என்ற அறத்தை, அயலானை நேசி என்ற அன்பை, கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற அருளைப் போதித்த கிறித்துவின் பெயரால், 400 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய போர்த்துக்கேயரின் வன்முறை, வரலாறாகாமல் வாழ்வியலாகத் தொடர்கிறது, தீவிரவாதக் கிறித்தவர்களிடையே.

தெல்லிப்பளையில் அப்பாவி மாணவர்களைத் தாக்குவதற்குப் பதிலாக, வன்முறை வெறியே வாழ்வியலாக் கொண்டோர், கல்லூரி முதல்வரை அல்லவா தாக்கியிருக்க வேண்டும். அவரது அறிவுரையோடு ஈருருளிகளை நிறுத்திய மாணவரைத் தாக்குவது, எய்தவன் இருக்க அம்பை நோகும் பேடித்தனம், கோழைத்தனம்.

பாணந்துறையில் உரிமைக் கோயிலில் ஐயரை எரித்த நிகழ்ச்சியே, பதிலடி கொடுக்கும் மனப் பாங்கைத் தன் பிஞ்சு உள்ளத்தில் உருவாக்கியதாகப் பிரபாகரன் கூறியதை எவரும் மறக்கக் கூடாது.

அடியும் உதையும் பிஞ்சு உள்ளங்களில் எதிர்வினை உணர்வை உண்டாக்கும் என, நாகரீகத்தைப் போதிக்க வந்த, கொல்லன் தெருவில் மொட்டை ஊசி விற்க வந்த, அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) அறிவுக்கு எட்டவில்லையா?

இலங்கைச் சைவர்களாகிய நாங்கள், இலங்கையில் மனித உரிமை ஆணைக்குழு முன் முறையிடுவோம். தீவிரவாதக் கிறித்தவரைத் தண்டிக்கும் நிலை வராவிட்டால், ஐநா மனித உரிமை ஆணையம் வரை எடுத்துச் செல்வோம்.

அமெரிக்க இலங்கை மதமாற்றிகள் (ACM) தம் உறுப்பினர்களின் பொதுச் சபையைக் கூட்டி, 

1. இயேசு பிரானின் கொள்கைளுக்கு எதிரான தீவிரவாதக் கிறித்தவர்களை அமைப்பில் இருந்து நீக்காவிட்டால்,

2. அமைப்பின் உயர் பதவிகளில் இருப்போர், ஆயர் நிலையில், குருமுதல்வர் நிலையில் உள்ளோர், இயேசு பிரானிடமும் மாணவர்களிடமும் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோராவிட்டால், 

3. அமைப்பின் உயர் பதவிகளில் இருப்போர், தவறுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகாவிட்டால், 

அமெரிக்க இலங்கை மதமாற்றிகளின் (ACM) அமைப்பை, வன்முறையைத் தூண்டும் தீவிரவாத அமைப்பாகக் கருதித் தடைசெய்யுமாறு இலங்கை அரசை வேண்டுகிறேன்.


உயிர்ப் பலித் தடைப் போர் 2014

 திருக்கோயில்களில் உயிர்ப்பலி வேண்டாம்.

கொல்லாமை சைவ சமய வாழ்வியல். மனத்தை வழிப்படுத்த வழிபாடு. வழிபாட்டுக்கு வன்முறை வழியல்ல என்கின்றன உலகச் சமயங்கள் சைவ சமயம் உட்படக் கூறுவன.
தொண்டு மனத்தை வழிப்படுத்தும்.
பூசனை மனத்தை வழிப்படுத்தும்.
ஒடுக்கம் மனத்தை வழிப்படுத்தும்
தெளிவு மனத்தை வழிப்படுத்தும்.
நான்கு நிலைகள் வழிபாட்டுக்கு.
இவ்வழிகள் அறிவு சார்ந்தன, அன்பு சார்ந்தன, அறம் சார்ந்தன. அருள் சார்ந்தன.
அறிவுக் குறைவால், அன்புத் தளர்ச்சியால், அறம் தவிர்ந்ததால், நம்பிக்கைச் சிதறலால் திருக்கோயில்களிலே உயிர்ப்பலி கொடுக்க முனைகிறார்கள்.
அன்பை வளர்க்க, அறத்தைப் பெருக்க. அருளில் திளைக்க விழைவோர் திருக்கோயிலில் உயிர்ப்பலிக்கு ஒவ்வார்.
வன்முறை வாழ்வாகாது. உயிர்க்கொலை வழிபாடாகாது. அறிவுக் குறைவாலும் நம்பிக்கைத் தளர்ச்சியாலும் சமூகம் திசை திரும்புகையில் அறத்தை வலியுறுத்துவது எம் கடன். அன்பை வலியுறித்துவது எம் கடன். அருளைப் பெருக்கும் வழிகளை நாடுவது எம் கடன்.
சமூகம் வழிதவறிப் போவதாகக் கருதும் நாம், அச்சமூகம் நன் நெறிகளைக் கைக்கொள்ள வலியுறுத்துவது எம் கடன்.
புன்மையான நெறியில் செல்வோரின் போக்கை விலக்க வேண்டும். மேலான நன்னெறியில் வாழ்வதற்குரிய வழியைக் காட்டவேண்டும்.
இந்தக் கடமைகளை அறவழியில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய சமூகம் அமைதியான வழியில் எடுத்துக்கூறவேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. (திருக்குறள் 324)
இந்த நோக்குடன் 13.6.14 காலை 0600 மணி முதலாக, மாலை 1800 மணிவரை தெல்லிப்பளை, துர்ககை அம்மன் கோயில் படலைக்கு எதிரே, சாலை ஓரமாக அறவழிப் போராட்டக் குழுவினராகிய நாம் உண்ணாநேன்பிருந்தோம்.
படங்கள் பார்க்க
Jataayu B'luru, Navaratnavel Sangarappillai மற்றும் 3 பே2 கருத்துகள்
ர்
விரும்பு
கருத்துத் தெரிவி

Bouquets, brickbats, vilification and slander

1 கிழட்டு சச்சிதானந்தா 

எட விசர் கிழட்டு ச்ச்சிதானந்தா சிங்களவன் ஊர் ஊராக புத்தர் சிலை வைக்கின்றான் நீ இந்தியாவின்  காலை நக்குவதற்காக ஒற்றுமையாக இருக்கும் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் அடிபட வைக்கின்றாய நாயே. கிழட்டு நாயே அறளை பேந்தால் வீட்டில சும்மா இருட பரதேசி

டேய் சச்சிதானந்தா விசர் புனாமவனே. கவனமாக இருந்து கொள்.

.•எச்சரிக்கை!கோராணா வைரஸைவிட கொடிய சிவசேனா வைரஸ்வன்னியில் வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது!

இந்திய உளவுப்படையால் அனுப்பி வைக்கப்பட்ட ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தமக்கு வழங்கப்பட்ட பணியை வேகமாக செய்து வருகிறார்.

இந்தியாவில் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து பல அப்பாவி முஸ்லிம்களை கொன்ற பாஜக எம்.பி யான ராம் விலாஸ் வேதாந்தி மகாராஜை வன்னிக்கு அழைத்து வந்துள்ளார்.

இவர்கள் மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலைய வளைவு , ஊர்காவற்துறையில் வீதிகளுக்கு கிருத்தவ பெயர் வைப்பு போன்ற விடயங்களை கையில் எடுத்துள்ளனர்.

மிக விரைவில் மன்னார் மற்றும் தீவுப் பகுதிகளில் தமிழ் மக்களிடையே  இந்து கிருத்தவ மோதல்களை உருவாக்க நன்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

இந்த பாஜக (ஆ)சாமிகளுக்கு இந்தியாவில் இருக்கும் இந்து தமிழ் அகதிகள் மீது அக்கறை இல்லை. அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க மறுக்கின்றனர்.

ஆனால் ஈழத்திற்கு வந்து இந்து மக்கள் மீது அக்கறை இருப்பதாக காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்.

இந்த சிவசேனைத் தலைவர் கிழவர் சச்சிதானந்தம் இலங்கை அரசின் புத்த மத ஆக்கிரமிப்பைக் கண்டு கொள்ளமாட்டார். மாறாக புத்த பிக்குகளுக்கு தன் வேட்டியை உரிஞ்சு கொடுப்பார்.

ஆனால் கிருத்தவ மதத்திற்கு எதிராக என்றால் அவரது அனைத்து உறுப்புகளும் பொங்கி எழும்.

ஏனெனில் அவருக்கு இந்திய உளவுப்படை வழங்கிய அசைமென்டே தமிழ் மக்களிடையே ஒற்றுமையை குழப்பி இந்து கிருத்தவ கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதே.

அதை அவர் நன்கு திட்டமிட்டு மிக வேகமாக செய்து வருகிறார்.

2 முழு ஆதரவு 
https://www.youtube.com/watch?v=FT4HBkI6cbQ

3. செயலலிதா சொன்னவை

I’ve had to face so many brickbats, so much vilification and slander. It hasn’t been easy. If I had been a lawyer, no one would have said such things about me…. But when it comes to a politician, the questions are so downright demeaning, insulting, humiliating…people who know nothing about you ask the most vile questions. And you have to take it. It is very difficult. : Jayalalitha

4 செயராமன் குமரன்

https://www.facebook.com/jayaraman.kumaran

After Aarumuka Naavalar (1822-1879) here is a fighter for us and our folks in the island. Naavalar waged the war from 1840 to 1879 during his 20s, 30s, 40s and 50s, whereas Maravanpulavu Sachi iyya (b. 1941) is waging the crusade/ashade (post war) in his 70s. He should inspire Tamil folks this side of the brine here in the continent too.

 

5. தமிழர் விழிப்புணர்வு இயக்கம்

கிறிஸ்தவரே நீங்கள் வெளியேறுங்கள் என்று சொன்னால் தான் தவறு.

கிறிஷ்தவரே உங்கள் வீடுதேடி நாம் உம்மை தூற்றினால் தான் தவறு.

நீங்கள் உண்டு;உங்கள் வேலையுண்டு என்று நீங்கள் இருந்தால் இவரும் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்திருப்பார்.

எம் வீடு தேடி வந்து நாமும் எம் மூதாதாரையும் பல்லாயிரம் வருடமாக வணங்கும் தெய்வத்தை சாத்தான் என்று சொல்லும் மதமாற்றிகளை எம் ஊருக்கு வராதே எம் வீட்டிற்கு வராதே என்று கூறுவதில் தவறோதுமில்லை. இப்படியானவர்களை மரத்தில் கட்டிவைத்து அடிப்பதே சிறந்த முறை.இருப்பினும் குடும்ப வறுமையால் ஜேசுவை விற்று வயிறு கழுவும் அவர்களை அவ்வாறு செய்ய அன்பே சிவம் என்று வாழும் எம்மால் முடியவில்லை. இவரை இந்திய கைக்கூலி; Rss,தமிழினத்தை பிரிக்கிறார் என்று கூறுபவர்கள் வேறுயாருமில்லை சோத்துக்கு மதமாறியவர்களேள் நடுநிலை நக்கிகள் என்ற பெயரில் கிறிஸ்தவனிடம் நல்ல பெயர் வாங்க அலையும் நாய்கள் அடிப்பவனை தடுக்கும் எம்மை மதவாதிகள் என்று கூறினால் அதை நாம் பொருட்படுத்த போவதில்லை. எம்மை விமர்சிக்கும் முட்டாள் கூட்டமே கிறிஸ்தவரை விமசித்து பார் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியும்

 

6 ஈழத்து திருநாவுக்கரசு நாயனார் அல்லது, மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனார்!

63 நாயன்மார்களின் வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் எனக்குள் இரண்டு கேள்விகள் எழுவதுண்டு.

அதாவது முதலாவது கேள்வி , இப்போதெல்லாம் ஏன் நாயன்மார் தோன்றுவதில்லை?

இரண்டாவது, இந்த 63 பேரில் ஏன் ஒருவர்கூட ஈழத்தில் பிறக்கவில்லை?

என் மனதிற்குள் இந்தக் கேள்விகள் இருப்பது எமது எல்லாம் வல்ல ஆண்டவருக்கு தெரிந்து விட்டதுபோலும்.

அதனால்தான் அதற்கு விடையாக மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனாரை அனுப்பி வைத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

3வயதில் பிராமனரான ஞானசம்பந்த நாயனாரை ஆட்கொண்ட எமது ஆண்டவர் 80 வயதிலும் திருநாவுக்கரசு நாயனாரை ஆட்கொள்ளாமல் சோதித்ததாக கூறுகின்றார்கள்.

அதுபோல் எமது மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனாரையும் எமது ஆண்டவர் இந்த 80 வயதிலும் அவரை ஆட்கொள்ளாமல் மிகவும் சோதிக்கிறார்.

ஆனாலும் எமது ஆண்டவர் இப்போது மிகவும் இரக்கமானவராக இருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஏனெனில் திருநாவுக்கரசு நாயனாருக்கு சூலநோயைக் கொடுத்து சோதித்த ஆண்டவர் சச்சிதானந்தம் நாயனாருக்கு கொரோனா நோயைக் கொடுத்து சோதிக்க முனையவில்லை அல்லவா?

எல்லோரும் கொரோனோவுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கியிருக்கும்வேளையில், கொரோனோவினால் இந்து மத மக்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அல்லது அக்கறை கொள்ளாமல் மத மாற்றம் குறித்து எமது சச்சிதானந்தம் நாயனாரை போராட வைத்த எமது ஆண்டவரை எப்படி புரிந்து கொள்வது?

எனக்கு ஒருவிடயம் புரியமாட்டேங்குது!

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எல்லாம் மதமாற்றம் செய்தபோதெல்லாம் அஞ்சாத எமது ஆண்டவர் இப்போது இந்த சுவிஸ் அலுலோயாக் கூறுப்புக்கு மட்டும் ஏன் அஞ்சுகிறார்? எதற்காக இந்த தள்ளாத வயதிலும் எமது சச்சிதானந்தம் நாயனாரை இந்த அலுலோயாக் கூறுப்புக்கு எதிராக போராட வைக்கிறார்? இந்த அலுலோயக் குறூப் 2 லட்சம் கொடுத்து மதமாற்றம் செய்வதாக சச்சிதானந்தம் நாயனார் கூறகிறார். அப்படியென்றால் இவர் 5 லட்சம் கொடுத்து தடுக்க வேண்டியதுதானே?

அதாவது கடவுள் இயேசுவுக்கு 2 லட்சம் கொடுக்கும் சக்தி இருக்குமாயின் எமது எல்லாம் வல்ல ஆண்டவருக்கு 5 லட்சம் கொடுக்கும் சக்தி இல்லையா?

அதைவிட முக்கியம், இந்த பணம் வரும் விடயத்தை விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று சச்சிதானந்தம் நாயனார் அடம் பிடிக்கிறார்.

இவர் கேட்டக்கொள்கின்றபடி கமிஷன் அமைத்தால் அது இவருக்கு இந்திய தூதரிடம் இருந்து பணம் வருவதையும் விசாரிக்கும் அல்லவா? இதுதான் பொல்லைக் கொடுத்து அடி வாங்குவது என்பது.

இறுதியாக எமது ஆண்டவரிடம் நாம் தயவாக கேட்டுக்கொள்வது, எமது சச்சிதானந்தம் நாயனாரை சோதித்தது போதும். அவரை விரைந்து ஆட்கொள்ளுங்கள்.

64வது நாயனாராக வரலாற்றில் இடம்பிடித்து ஈழத் தமிழருக்கு பெருமை சேர்க்கப்போகும்; சச்சிதானந்தம் நாயனார் புகழ் ஓங்குக!


வள்ளைக்குளம் பிள்ளையார்

மறவன்புலவு அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் திருக்கோயில் 

மறவன்புலவு சச்சிதானந்தன் 

மாளாப்பிறப்பு எத்தனையோ எடுத்தேன். 
மதி மயங்கினேன். 
நாள்தோறும் நலிந்தேன். 
மாய வலையில் அகப்பட்டேன்.
அன்பிலனாய் உழன்றேன். 
நரகிடை விழுந்து விடுவேனோ? 
மீண்டு பிறப்பெடுக்க வரமாட்டேனோ?
அருள்மிகு வள்ளைக்குளப் பிள்ளையாரே.
அருள்மிகு வீரகத்திப் பிள்ளையாரே 
நரகிடை வீழாது என்னைக் காத்தருள்வாய்.

விதிர்விதிர்த்து உடல்.
வெதும்பியது உள்ளம். 
தலைவைத்தன கைகள்.
ததும்பியது கண்ணீர். 
அருள் வேண்டிப் போற்றினார்.
நெஞ்சம் நினைத்ததால் பாடல் பிறக்கவில்லை.
நெஞ்சம் கனத்ததால் கவிதை பிறந்தது.
இசையோடு பாடல் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பிறந்தது.
திரு சு. பொ.ப குழந்தைவடிவேலு அவர்களுக்குப் பிறந்தது.
மறவன்புலவைச் சேர்ந்தவர். கோயிலாக்கண்டியில் வாழ்ந்தவர். 
மறவன்புலவு அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் அருள் வேண்டி அந்தாதித் தொடையில் 101 பாடல்களை யாத்துள்ளார்.

ஆளாய் இம்மாய வலையில் அகப்பட்டு உழலன்பினாலய்
மாளாப் பிறப்பு எத்தனையோ எடுத்து மதிமயங்கி
நாளாக நலிந்தனன் வள்ளைக் குளப்பதி நாயகனே
மீளா நரகிடை வீழாது காத்திட வேண்டினனே.

என்றார் அவர் யாத்த அந்தாதியின் நான்காவது பாடலில்.

எவரும் எள்ளி நகையாட முடியாத வீர மறவர் வாழும் புலம் மறவன்புலவு.
போரில் படை வரிசையில் முன்னே நிற்கின்ற மறவர் வாழும் மறவன்புலவு 
அங்கே வள்ளைக் கொடிகள் பூத்துக் குலுங்கும் குளம் வள்ளைக்குளம்.
செந்நெல் இனிது விளைவிக்கின்ற நாயகன் அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் என்கிறார் அந்தாதியின் ஆசிரியர்.

அருள்மிகு வள்ளளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் கோயிலின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள் நீண்டது.

இலங்கையை ஆண்ட அரசன் சிவ நந்தி. அவன் காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர் திருநாவுக்கரசு நாயனார். அதே காலத்தில் மறவன்புலவில் வாழ்ந்தவர் ஞானியார் சுவாமிகள்.

தன் முன்னோர் விட்டுச் சென்ற திருக்கோயில் பொறுப்புகளை மிகச் சிறப்பாகத் தொடர்ந்தார் ஞானியார் சுவாமிகள்.

பெரும் பரப்பு அளவிலான நிலங்கள் புலங்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அக்காலச் சமூகக் கட்டமைப்பில் அவருக்கென அவருடைய நிலங்களில் பணிபுரிவதற்கு என்றே உதவியாளர் இருந்தனர்.

திருக்கோயிலில் பூசைக்குச் சிவாச்சாரியார்கள், மாலை கட்டுவோர்,  ஓதுவார், மேளம் கொட்டுவோர், விழாக்காலப் பந்தலிட்டு வெள்ளை கட்டுவோர் எனப் பன்முகக் குடிகள் அவரோடிருந்தனர்.

ஆண்டுதோறும் அவர்களுக்கு நெல் மூடைகளைப் படி அளப்பார். அக்குடிகள் மறவன்புலவிலேயே  தங்களுடைய எதிர்காலத்தை அமைத்துக் கொண்டார்கள்.

ஞானியார் சுவாமிகள் வழிவந்தவர்களுள் என் நினைவுக்கு வருபவர் தந்தையாரின் பூட்டனார் இராமநாதர்.

பின்னர் அவரின் மகன் தந்தையாரின் பாட்டனார் வேலுப்பிள்ளை - அவர் துணைவியார் சிவகாமிப் பிள்ளை.

வேலுப்பிள்ளை இணையரின் மக்கள் இராமநாதர், சுப்பையா, சின்னப்பிள்ளை, குழந்தைநாச்சன், கண்ணாத்தைப்பிள்ளை, குஞ்சுப் பிள்ளை, மயில்வாகனம்.

மூத்த மகள் சின்னப் பிள்ளையின் அருமைக் கணவரே அந்தாதி பாடிய சு. பொ. குழந்தை வடிவேலு அவர்கள்.

குழந்தைநாச்சன் புத்தூரில் முருகேசுவைத் திருமணம் செய்தார். இருவருக்கும் பிறந்தவர் என் தந்தையார் கணபதிப்பிள்ளை.

பல்லாயிரம் ஆண்டுகள் மறவன்புலவில் தொடர்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தில் நானும் பிறந்தேன். அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் கோயிலின் பரம்பரை அறங்காவலராக உள்ளேன்.

திருக்கோயிலுக்கு சிவாச்சாரியார் தொடர்ச்சியாக இல்லையே என்ற குறையைப் போக்க என் பூட்டி சிவகாமிப் பிள்ளை தனது நிலத்தைச் சிவாச்சாரியார் குடும்பத்துக்குக் கொடுத்து அங்கேயே தங்குமாறு பணித்த காலங்கள் 95 ஆண்டுகளுக்கு முன்பு.

என் பாட்டனார் சுப்பையா திருமணம் செய்யவில்லை. திருக்கோவிலை அவரே பார்த்துக் கொண்டு வருவாராம். ஆண்டுதோறும் அவர் கதிர்காமம் தொடக்கம் இமயமலை வரை வழிபாட்டுப் பயணம் மேற்கொள்வாராம்.

திரு சுப்பையா அவர்கள் அறங்காவலராக இருந்த காலத்தில் திரு சங்கரப்பிள்ளை அவர்கள் விழாக்காலங்களில் புராணபடனம் செய்வார்கள். சிவராத்திரிக்குச் சிவராத்திரி புராணம், கந்த சஷ்டிக்கு திருச்செந்தூர்ப் புராணம் திருவம்பாவைக்குத் திருவாதவூரடிகள் புராணம் என்பன படனமாகும்.

பாடல்களை ஒருவர் படித்து பின்னர் பதம் பிரித்துக் கொடுக்க, கொண்டு கூட்டிக் கொடுக்க, எதிரே மற்றொருவர் பயன் சொல்வார். அடியார்கள் புராணங்களைக் கேட்டுச் சிவ கதைகளைத் தெரிந்து கொள்வார்கள்.

ஆடி அமாவாசைக்கு வள்ளைக்குளக் கரையில் பிதிர்க்கடன் செய்வதற்காகத் திருமறைக் காட்டிலிருந்து சைவக் குருக்கள் வருவார். அவர் பின்னர் அடியவர்களுக்கு சிவ தீட்சை கொடுப்பார்.

திருக்கோயிலின் திருக்குளம் என்பதால் துடக்கு உள்ளவர்கள் நோயாளிகள் குளத்திற்குக் குளிக்கவோ வேறு தேவைக்கோ வரமாட்டார்கள். ஞானியார் சுவாமிகள் காலத்திற்கு முன்பிருந்தே இந்த நடைமுறை தொடர்கிறது.

வேலம்பராய் அருள்மிகு கண்ணகை அம்மன் திருக்கோயிலுக்கும்  அருள்மிகு வள்ளைக்குப் பிள்ளையார் திருக்கோயிலுக்கும் இடையே மடை அமைத்தல்  படையல் விழாத் தொடர்புகள் இருந்ததால் அருள்மிகு அம்மன் எழுந்தருளி மறவன்புலவு வரும் வழமையும் இருந்தது.

என் தந்தையார் காலத்திலேயே போர்ச்சூழல் தொடங்கியதால் திருக்கோயிலின் விழாக்கள் நிகழ்ச்சிகள் குன்றின.

அடியவர்கள் புலம்பெயர்ந்தனர். கோயில் இடிபாடடைந்தது. கவனிப்பாரற்று இருந்தது. 

என் தந்தையாரும் தாயாரும் போர்க்காலத்தில் சிவபதம் அடைந்தார். திருக்கோயில் பொறுப்புகளைச் சுமக்குமாறு அருள்மிகு பிள்ளையார் எனக்கு ஆணையிட்டார்.

ஞானியார் சுவாமிகளும் முன்னோரும் விட்டுச்சென்ற நிலைக்கு திருக்கோயிலின் சிறப்புகளைக் கொண்டுவர என்னாலான திருப்பணி முயற்சிகளைச் செய்து வருகிறேன். 

அருள்மிகு வள்ளைக்குளப் பிள்ளையார்  திருவருள் எனக்கு உண்டு.