புரட்டாதி 25 வியாழக்கிழமை (12 10 2023)
நாகப்பட்டினம் - காங்கேயன்துறை சரக்குக் கப்பல்
நாகப்பட்டினம் இந்திய வர்த்தகத் தொழில் குழுமத் தலைவர் (2011-2013), இப்பொழுது இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் நாகப்பட்டினம் துறைமுக வளர்ச்சி குழுத் தலைவர். திரு ந. சந்திரசேகரம்.
திரு சந்திரசேகரம் தலைமையில் நால்வர் கொண்ட ஏற்றுமதியாளர் குழுவினர், நாகப்பட்டினம் காங்கேயன்துறை முதலாவது கப்பலில் யாழ்ப்பாணம் வருகின்றனர்.
நாகப்பட்டினத்தின் செல்வந்தர்களும் செல்வாக்கு மிக்கவர்களுமானோர் இந்நால்வர்.
புரட்டாதி 23, செவ்வாய்க்கிழமை (10 10 2023) அன்று மறவன்புலவு க. சச்சிதானந்தன் இவர்களைச் சந்தித்தார். இலங்கையிலிருந்து உற்பத்திப் பொருள்களை இறக்குமதி செய்யுமாறும் இந்தியாவிலிருந்து உணவு சார் நுகர்ச்சிப் பொருள்களை ஏற்றுமதி செய்யுமாறும் இவர்களிடம் கேட்டார்.
நாட்டுப் படகு, வத்தை, சிறிய கப்பல் என யாவும் எம்மிடம் உள. எதையும் கடலில் விடுவோம். நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேயன்துறைக்கு விடுவோம்.
அங்கிருந்து புகையிலை, பாக்கு முதலியன கொண்டு வருவோம். இங்கிருந்து யாழ்ப்பாண வணிகர்கள் கேட்பதைக் காங்கேயன்துறைக்கு அனுப்புவோம் என்றனர் நால்வரும்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன் உடனேயே இலங்கை அமைச்சர் மாண்புமிகு தேவானந்தாவைத் தொடர்புகொண்டார். நாகப்பட்டினத்தில் இருந்து உடனே சரக்கு கப்பல் காங்கேயன்துறைக்கு விட வேண்டும் எனக் கேட்டார். இஃது உங்களின் கனவுத் திட்டம். உங்களுக்காக நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன் என அமைச்சரிடம் கூறினார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.
பேசிய விவரங்களைக் கடிதமாகவும் அமைச்சருக்கு அனுப்பினார். இந்தியத் துணைத் தூதரகத்துக்கும் படி அனுப்பினார்.
மாண்புமிகு அமைச்சரும் நாகப்பட்டினம் சந்திரசேகரும் ஒருவரோடு ஒருவர் தொலைப்பேசியில் பேசினர்.
அஃதை அடுத்து நாகப்பட்டினம் இந்திய வர்த்தகத் தொழில் குழுமத் துறைமுக வளர்ச்சிக் குழுத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நால்வர் குழு யாழ்ப்பாணம் வருகிறது.
யாழ்ப்பாணத்துக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே இறக்குமதி / ஏற்றுமதி வாய்ப்பு. பயணிகள் கப்பல் போன்றே சரக்குக் கப்பலும் பயணிக்கும் வாய்ப்பு.
யாழ்ப்பாண வணிகர் இறக்குமதியாளராக ஏற்றுமதியாளராக மாறுவதற்கு வாய்ப்பு.
நாகப்பட்டினத்தில் இருந்து வரும் நால்வர்களும் நான்கு நாள்களுக்கு யாழ்ப்பாணத்தில் தங்குவார்கள். திரு சந்திரசேகரன் அவர்களின் தொலைபேசி வாட்ஸ்அப் எண் +91 98424 43365.
ஏற்றுமதி இறக்குமதி மற்றும் பயணிகள் சுற்றுலா தொடர்பில் ஆர்வம் உள்ளவர்கள் திரு சந்திரசேகரனை முன்கூட்டியே தொடர்பு கொண்டு நியமனம் பெற்று அமைச்சர் வழியாகவோ இந்தியத் துணைத் தூதர் அலுவலகம் வழியாகவோ நேரேயோ சந்திக்கலாம். வணிக வாய்ப்புகளைப் பெருக்கலாம்
No comments:
Post a Comment