புரட்டாதி 23, செவ்வாய்க்கிழமை (10 10 2023)
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம்.
பங்கு பற்றினேன்.
நாகப்பட்டினத்தில் வந்து இறங்கும் இலங்கைப் பயணிகளுக்கு 11 வசதிகளைக் கோரினேன்.
மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியரைத் தனியே சந்தித்தேன். வசதிகள் தேவை எனச் சொன்னேன்.
எழுதிக் கொண்டு வாருங்கள். மாலை 0630 மணிக்கு உங்களுக்காகவே அனைத்துத் துறை மூத்தவர்களையும் கூப்பிடுகிறேன் என்றார்.
மாலை 0630 மணிக்குத் துறைத் தலைவர்கள் 30 பேர் கூடினர். ஒரு சிலர் காணொளி மூலம் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கோரிக்கையாக எடுத்து நோக்கினர். ஒவ்வொன்றிலும் சரியான முடிவை எடுத்தனர்.
மாவட்ட ஆட்சியருக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன்.
No comments:
Post a Comment