கார்த்திகை 01 வெள்ளிக்கிழமை (17 11 2023)
இலங்கையில் சட்டம் ஒழுங்கு சைவ சமயத்தவருக்கு எதிரானதா?
புத்த முகமதிய கிருத்துவ தாக்குதல்கள் சைவர்கள் மீது அடாவடியாகத் தொடர்கின்றன. சட்டம் காக்கத் தவறியதே!
மயிலத்தமடுவில் சைவத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டம். புத்த பிக்கு ஒருவர் சைவத் தமிழர்களை வெட்டுவோம் என்கிறார்.
அவ்வாறு சொல்பவரைக் காவல்துறையினர் வேடிக்கை பார்க்கும் காணொளிக் காட்சிகள் சைவர்களின் நெஞ்சைப் புண்ணாக்கின. சட்டம் செத்து விட்டதா? எனச் சைவர்கள் கேட்கிறார்கள்.
அக்கரைப்பற்றில் முகமதிய மௌலவி ஒருவர் அருள்மிகு நடராசப் பெருமானின் நடனத்தைக் கொச்சையாக்கிப் பேசுகிறார். சைவ மக்கள் குமுறுகிறார்கள். காவல்துறை கைகட்டி வாய் பொத்தி நிற்கிறது.
சைவக் கடவுள்களில் தோற்றத்தைக் கொச்சையாகப் பேசிய கிறித்தவப் போதகர் செரோம் பர்ணாந்து நாட்டுக்குள் வந்தால் தளையிடாதீர்கள் என முறையீட்டு நீதிமன்றமே கூறியுள்ளது.
புத்தபிக்குவும் முகமதிய மௌலவியும் கிறித்தவப் பாதிரியாரும் சைவர்களை இகழ்கிறார்கள். சைவ வாழ்வியலைப் பழிக்கிறார்கள். வாழ்வுரிமை பறிக்கிறார்கள். மிரட்டுகிறார்கள்.
2007இன் ICCPR சட்டம் மூன்றாவது பிரிவின் முதலாவது இரண்டாவது மூன்றாவது விதிகள் முறையீட்டு நீதிமன்றத்துக்கோ காவல்துறைக்கோ தெரியாதா?
பிணையில் வெளிவர முடியாத பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனைக்குரிய சட்டங்கள் அவை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 2(1)h பிரிவின் விதிகளைக் குற்றவியல் நீதிமன்றமோ காவல்துறையோ படிக்கவில்லையா?
குற்றவியல் சட்டம் penal code sections 290, 291, 292 விதிகளைக் காவல்துறையோ நீதிமன்றமோ படிக்கவில்லையா?
இலங்கையில் சைவ சமயத்தவரை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்ற கண்ணோட்டம் அரசின் கொள்கையா? எனவே காவல்துறையும் நீதிமன்றமும் கண்மூடிக் கொண்டிருக்கிறார்களா?
புத்த பிக்குவின் கொச்சைப் பேச்சு
முகமது மௌலவியின் கொச்சைப் பேச்சு
கிறித்தவப் போதகரின் கொச்சைப் பேச்சு
மூன்றும் இலங்கையின் நான்காவது சமயமாகிய சைவ சமயத்தை நோக்கியன அல்லவா.
ஆங்கிலேயர் விட்டகன்றபோது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினராகச் சைவ சமயத்தனர் இலங்கையில் இருந்தோம்.
இலங்கை நிலப்பரப்பில் மூன்று ஒரு பங்கு நிலம் சைவர்களிடம் இருந்தது.
சைவ மக்கள் தொகை 30% ஆக இருந்தது 13% ஆகக் குறைந்தது. சைவ மக்களின் மரபு வழி நிலப்பரப்பு 30% ஆக இருந்தது 15% ஆகக் குறைந்துள்ளது.
எஞ்சிய சைவர்களையும் அழித்து ஒழித்து அவர்கள் நிலங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற மேலாதிக்க உணர்வுடன் புத்தரும் முகமதியரும் கிறித்தவர்களும் கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடந்து வருகிறார்கள்.
சைவர்களே விழித்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment