ஆவணி 20 புதன்கிழமை (06.09.2023)
பிரதேச சபைச் செயலாளரை கைது செய்க
ஊர்காவற்துறைப் பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்யுமாறு நூற்றுக்குக்கும் கூடுதலான அப் பிரதேச சபை வாக்காளர் கையெழுத்திட்டு ஊர்காவற்துறைக் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
தமிழிலும் சிங்களத்திலும் கொடுத்த முறையீட்டில், தமிழருக்கும் புனிதமானவள், சிங்களவருக்கும் புனிதமானவள், கண்ணகி என்ற பத்தினி.
பிரான்சில் பிறந்த செபத்தியானுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு?
1 கண்ணகிக்குக் களங்கம் தருகின்ற செபத்தியான் கண்ணகி தெரு என்ற பெயர்ப்பலகையை உடனே அகற்றுக.
2 இன மத முரண்களை மோதல்களை உருவாக்கிய பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்க எனச் சட்டங்களை மேற்கோள்காட்டி வாக்காளர் முறையிட்டுள்ளனர்.
தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் பிரதேச சபைச் செயலாளர் நேற்றைய 5.9.23 விசாரணைக்குக் காவல் நிலையம் வரவில்லை.
வாக்காளரின் முறையீட்டுப் படிகள் இணைப்பில்.
No comments:
Post a Comment